இருதய நோய்க்கான வாய்ப்புக்களை அதிகரிக்கக் கூடிய அல்ட்ரா பேட் (ultra bad) கொலஸ்ட்ரோலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சாதாரணமாக இரத்தத்தில் காணப்படும் பேட் கொலஸ்ட்ரோலை விட இது தடிப்பானது.
இது இருதயத்துக்கான இரத்த நாளங்களைப் பெரிதும் பாதிக்கக் கூடியது. இரண்டாம் நிலை நீரிழிவு நோயின் பாதிப்புக்கு ஆளாகியுள்ள முதியவர்கள் மத்தியிலேயே இது பெரிதும் காணப்படுகின்றது. ஏற்கனவே இது வருடாந்தம் ஆயிரக்கணக்கான மரணங்களை ஏற்படுத்துகின்றது.
வேர்விக் பல்கலைக்கழக ஆய்வாளர்களே இந்தப் புதிய கொலஸ்ட்ரோல் வகையைக் கண்டுபிடித்துள்ளனர். பல்வேறு வகையான கெட்ட கொலஸ்ட்ரோல் அல்லது LDL பற்றிய விரிவான ஆய்வின் போதே இது தெரியவந்துள்ளது.
இந்தப் புதிய கொலஸ்ட்ரோலை MGmin-LDL எனக் குறியிடுகின்றனர். சாதாரண LDL ல் உள்ளதிலும் பார்க்க சிறிய ஆனால் அடர்த்தியான சர்க்கரை துணிக்கைகள் இதில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதயத்துக்கான இரத்த நாளங்களில் ஆபத்தான கொழுப்புப் படிவுகள் ஏற்பட இது காரணமாகின்றது. இவற்றின் படிவுகள் அதிகரிக்க அதிகரிக்க இரத்த நாளங்கள் சுருங்கி இரத்த ஓட்டமும் தடைப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
29 மே 2011
24 மே 2011
ஆஸ்த்மாவிற்கு மருந்து சூரிய ஒளி.
மனித வாழ்க்கையுடன் இயற்கை எவ்வாறு பின்னி பிணைந்துள்ளது என்பது வியப்பை ஏற்படுத்துகின்றது. அந்த வகையில் இயற்கையின் அற்புதமான கொடை நோய் நிவாரணியாகவும் திகழ்கின்றது. சிறுவயதில் ஏற்படும் ஆஸ்துமா(மூச்சுத்தடை) நோய்க்கு சூரிய ஒளி அரிய மருந்தாக அமைகின்றதென ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உயிர்ச்சத்து டி பொதுவாக சூரிய ஒளியிலிருந்து பெற்றுக் கொள்ளப்படுகின்றது. வெலன்சியன் ஆய்வாளர்களினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் சூரிய ஒளிக்கும் ஆஸ்துமா நோய்க்கும் இடையிலான தொடர்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவில் சூரிய ஒளி உடலில் பட்டால் புற்று நோயைக் கூட ஏற்படுத்தக் கூடிய ஆபத்து காணப்படுகின்றது.
எனினும் முற்று முழுதாக சூரிய ஒளியை நிராகரிப்பதும் ஆபத்துக்களை ஏற்படுத்தும். சூரிய ஒளியினால் ஏற்படும் நன்மை தீமைகளை ஆராய்ந்து சமநிலையாக பேணுவதே புத்திசாதூரியமானது என ஆஸ்துமா நோய் தொடர்பான முன்னணி ஆய்வாளர் அல்பர்ட்டோ அர்னிடொ பென்னா தெரிவித்துள்ளார். மனித உடலுக்கு தேவையான 90 வீதமான உயிர்ச்சத்து டி சூரிய ஒளியின் மூலம் உடலுக்கு கிடைக்கப்பெறுகின்றது.
ஆஸ்துமா நோயாளிகளின் உடலில் உயிர்ச்சத்து டி குறைந்தளவிலேயே காணப்படும். வடக்கு ஸ்பெய்ன் போன்ற குளிரான பிரதேசங்களைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் ஆஸ்துமா நோயினால் அதிகம் அவதியுறுகின்றனர். ஸ்பெய்னின் முக்கியமான ஒன்பது நகரங்களில் 45,000 சிறுவர் மற்றும் இளைஞர்களிடம் ஆஸ்துமா தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு தொடர்பான தரவுகள் சர்வசே பயோமெட்ரியல் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆஸ்துமா நோய் ஏற்படுவதற்கு பிரதான காரணியாக காலநிலை மாற்றத்தை குறிப்பிடுகின்றனர். போதியளவு உயிர்ச்சத்து டி கிடைப்பதற்கு சூரிய ஒளி மிகவும் அவசியமானது.
ஆஸ்துமா, கசம் போன்ற தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த உயிர்ச்சத்து டி மிகவும் இன்றியமையாதது என ஆய்வாளர் அர்னிடொ பென்னா தெரிவித்துள்ளார். நாள்தோறும் 20 முதல் 30 நிமிடங்கள் சூரிய ஒளியை பெற்றுக் கொள்வது போதியளவு உயிர்ச்சத்து டி யைப் பெற்றுக்கொள்ள வழிகோலும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
குளிர்காலங்களில் சில நாடுகளில் போதியளவு சூரிய வெளிச்சம் கிடைக்காது. எனவே இவ்வாறானவர்கள் செயற்கை உயிர்ச்சத்து டி பெற்றுக்கொள்ள வேண்டுமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

20 மே 2011
மனதை இளமையாக வைத்திருங்கள்.
மனதை எப்போதும் உற்சாகமாக வைத்துக் கொண்டால் நாம் எப்போதுமே இளமையாக இருக்கலாம். அதெப்படி பிரச்சினைகள் வரும் போது மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள முடியும் என்று நீங்கள் கேட்கலாம்.
முடியும். எதையும் நேர்மறையாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் நம்மால் எந்த சூழ்நிலையிலும் உடைந்து போகாமல் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
ஒரு நகைச்சுவை இருக்கிறது. அதாவது நீங்கள் வாழ்க்கையில் ஏன் கவலைப்பட வேண்டும்? எல்லாவற்றிற்குமே இரண்டு வாய்ப்புகள்தான் உள்ளன.
வாழ்க்கையில் ஒன்று நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள் அல்லது நோய்வாய்ப்படுவீர்கள்.
முதலில் நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?
இல்லை,
உடல் நலக் குறைவு ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
அதற்கும் இரண்டு வாய்ப்புகள்தான்.
ஒன்று நீங்கள் குணமடைவீர்கள். இல்லையென்றால் இறந்துவிடுவீர்கள்.
நீங்கள் குணமடைவீர்கள் என்றால் ஏன் அதைப் பற்றி கவலைப்பட வேண்டும்.
இல்லை இறந்து விட்டால்
ஒன்று நீங்கள் சொர்க்கத்திற்கு செல்வீர்கள் இல்லை நரகத்திற்கு செல்வீர்கள்.
சொர்க்கத்திற்குச் சென்றால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டுமா என்ன?
இல்லை நரகத்திற்குச் செல்வீர்கள் என்றால்...
அங்குதான் உங்களது ஏராளமான நண்பர்கள் இருப்பார்களே.. அவர்களுடன் அரட்டை அடித்தே காலத்தை கழிக்கலாமே பிறகு ஏன் கவலைப்பட வேண்டும்.. இதுதான் அந்த நகைச்சுவை.
ஆனால் இது நகைச்சுவை மட்டுமல்ல.. வாழ்க்கையின் சுவையை அறியும் வழியும் கூட..
எதிலும் ஒன்று நல்லது அல்லது கெட்டது நடக்கும். நல்லது நடந்தால் கவலைப்பட ஒன்றுமில்லை, கெட்டது நடந்தால் அதிலும் இரண்டு விஷயங்கள். இப்படி இருக்க, உங்கள் வாழ்க்கைப் பற்றிய கவலையை தூக்கி எறிந்து விட்டு, வாழ்க்கை என்பது பூங்காவனம் அல்ல போராட்டக்களம் என்பதை உணருங்கள்.
போராட்டக்களத்தில் இழப்புகளும், வெற்றிகளும் சாதாரணம். எதற்கும் கலங்காமல் வாழ பழகிக் கொள்ளுங்கள். எப்போதும் நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று அதன் போக்கில் உங்களது வாழ்க்கையை சிறப்பாக வாழ பழகிக் கொள்ளுங்கள்.
நீங்கள் எந்த பிரச்சினையையும் சந்திக்காமல் வாழ்க்கையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் தவறானப் பாதையில் பயணிக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ளுங்கள். முதலில் உங்கள் பாதையை மாற்றுங்கள். சில சமயங்களில் இது பெரிய அளவில் முன்னேற்றத்தை அளிக்கும்.
புதிதாக செய்யும் போதுதான் உற்சாகம் அதிகரிக்கும். அரைத்த மாவையே அரைத்து நீங்கள் எதையும் சாதிக்க முடியாது என்பதை உணருங்கள்.
உற்சாகம் உங்களுக்குள்தான் இருக்கிறது. அதை வெளியில் தேடாதீர்கள். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டுங்கள்.

14 மே 2011
வெய்யில் கால குழந்தை பராமரிப்பு.
முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு, கடுமையான வெயில் வாட்டி வதைப்பதை நாம் நன்கு உணர்வோம். பெரியவர்களாக இருப்பவர்கள் எந்த வகையிலாவது வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள, பல வழிகளை அறிந்து வைத்திருப்போம். ஆனால், குழந்தைகள் அப்படி அல்ல. அவர்களுக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை நாம் மட்டுமே அறிந்து உணர்ந்து அவர்களுக்கு ஏற்றதை செய்ய முற்பட வேண்டும்.
குழந்தைப் பராமரிப்பு என்றதும் இது மகளிருக்கான பகுதி நமக்கெதுக்கு என்று நினைத்துவிட வேண்டாம். குழந்தைப் பராமரிப்பைப் பொறுத்தவரையில், தாயை விட அதிக அக்கறை எடுத்து கவனிக்கும் தந்தைகளும் இல்லாமல் இல்லை!
இந்த கோடை காலத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளை எப்படி பராமரிப்பது என்பது குறித்த சில உதவிக்குறிப்புகள் இதோ:
* வெயில் காலத்தில் கட்டிலின் மேல் உஷ்ணம் அதிகம் இருக்கும் காரணத்தினால் உங்கள் குழந்தைகளை கட்டிலில் படுக்க வைப்பதற்குப் பதில், பாயை விரித்து, அதன் மேல் பருத்திப் புடவையை அடர்த்தியாக மடித்து தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க விடலாம்.
* வெயில் காலத்தில் பொதுவாக தண்ணீர் சத்து பற்றாக்குறை ஏற்படும் என்பதால், குழந்தை மருத்துவரின் அனுமதி பெற்று, பால் குடிக்கும் குழந்தைக்கு, சுட வைத்து ஆற வைத்த தண்ணீரையும் அவ்வப்போது கொடுக்கலாம்.
* குழந்தைக்கு வியர்த்துப் போகும் என்பதால், அதிகப்படியான காற்று குழந்தையின் முகத்திற்கு நேரே படும்படி படுக்க வைத்து, குழந்தைக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்திவிடக்கூடாது. காற்றின் வேகம் மிதமானதாக இருப்பதே சிறந்தது.
* ஒரே இடத்தில் படுத்துக்கொண்டிருப்பதால், குழந்தை உடலின் பின்பகுதி சீக்கிரம் உஷ்ணமாகிவிடும் என்பதால், குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஒருதடவை, குழந்தையை இடம்மாற்றி படுக்க வைக்க வேண்டும். அவ்வாறு தரையில் படுக்க வைக்கும்போது குழந்தைக்கு அருகில் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கப்பட்ட கனமான பொருட்கள் எதுவும் இருக்ககூடாது.

09 மே 2011
அழகே அருகில் வா.
தலை முதல் கால் வரை அழகாகத் தோன்ற கீழே உள்ள குறிப்புகள் உங்களுக்கு உதவும்.
கூந்தல்: எண்ணெய் மசாஜ் கூந்தலின் பளபளப்பை அதிகரிக்க உதவும்.
வாரம் ஒரு முறை: எண்ணெயை லேசாக சூடாக்கி கூந்தலின் வேர்களில் ஆரம்பித்து நுனிவரை தடவவும். விரல் நுனியால் வேர்களை நன்றாக தேய்த்து விடவும்.
மாதம் ஒரு முறை: மேலே உள்ளது போல் எண்ணெயை தடவவும். பிறகு வெந்நீரில் ஒரு துணியை நனைத்து, அதை நன்றாக பிழிந்து விடவும். சூடான துணியை தலையில் கட்டவும். 15 நிமிடம் கழித்து கூந்தலை சீயக்காய் அல்லது ஷாம்பூவால் கழுவவும். வேர்களுக்குள் எண்ணெய் ஊடுறுவ இது உதவும்.
முகம்: வாழைப்பழத்தை நன்றாக மசித்து முகத்தில் தடவவும். 10 நிமிடம் கழித்து கழுவி விடவும். இது முகத்திற்கு பட்டுப்போன்ற மென்மையும், பளபளப்பும் தரும். இனி அளவுக்கு அதிகமாக பழுத்த வாழைப்பழங்களை எறிய வேண்டிய அவசியமும் இல்லை!
அழுக்கும், எண்ணெய் பசையும் ஒன்று சேர்ந்தால் விளைவு, பருக்கள்தான்! இதை தடுக்க ஒரே வழி முகத்தை சுத்தமாக வைப்பது. இதற்காக முகத்தை அடிக்கடி கழுவவும்.
கண்கள்: கண்களைச் சுற்றி கருவளயங்கள் இருந்தால், சோர்ந்த தோற்றத்தை உங்களுக்கு தரும். இதை தவிர்க்க சரியான தூக்கம் தேவை. கருவளயங்களை போக்க உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரித் துண்டை கண்கள் மீது 15 முதல் 20 நிமிடம் வைத்திருப்பது நல்லது.
உதடுகள்: மென்மையான உதடுகளின் ரகசியம் ஈரப்பதம். நெய், வாசலீன் ஆகியவற்றை தடவுவதால் உதடுகளில் வெடிப்பு வருவதை தவிர்க்கலாம்.
உதடுகள் இளஞ்சிவப்பு நிறத்தைப் பெற தூங்குவதற்கு முன் பீட்ரூட் சாறு தடவவும்.
பற்கள்: மஞ்சள் கறைபடிந்த பற்கள் அழகான புன்னகையின் எதிரிகள்! டீ, காபி, புகையிலை போன்றவை பற்களில் கறைபடிய வைக்கும். இவற்றை முழுமையாக தவிர்க்க முடியவில்லை என்றால் அதன்பிறகு பற்களை தேய்ப்பது நல்லது. அதுவும் முடியவில்லை என்றால் தண்ணீரால் வாயை சுத்தம் செய்ய வேண்டும்.
சருமம்: உடலின் சருமத்தை ஆரோக்கியமாக வைப்பதற்கு உயிரிழந்த சருமத்தை அகற்றுவது மிகவும் அவசியம். 2 தேக்கரண்டி சர்க்கரையை, 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயுடன் அல்லது மோருடன் சேர்க்கவும். இந்த கலவையால் உடலை தேய்த்து கழுவவும். இது சருமத்திற்கு புது பொலிவு தரும்.
கைகள்: கைகளை மிருதுவாக வைக்க கை கழுவியவுடன் க்ரீம் தடவவும். வீட்டு வேலை அல்லது தோட்ட வேலை செய்யும் போது மறக்காமல் கையுறை அணியவும்.
கால்கள்: கால்களில் வெடிப்பு வருவதை தவிர்க்க, கால்களை தேய்த்து கழுவ வேண்டும். இது சொரசொரப்பான தோலை நீக்கும். அதன் பிறகு காலில் க்ரீம் தடவினால் மெண்மையான கால்களைப் பெறலாம்.

05 மே 2011
எடையைக் குறைக்க சில வழிகள்.
உங்கள் எடை கூடிவிட்டதா? எப்படிக் குறைப்பது? எந்த முறையைப் பின்பற்றுவது? இப்படி யோசனையிலேயே நேரம் வீணாகிக் கொண்டு இருக்கிறதா?
இதோ, உங்களுக்காக எடையை குறைக்கும் 7 எளிய வழிகள்:
1. உடற்பயிற்சி:
வாரம் 5 முறையாவது தவறாமல் செய்ய வேண்டும். உடற்பயிற்சியால் கொழுப்பு கறைகிறது. இதனால் எடை குறைவதோடு, பல நோய்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது.
2. பசித்தால் மட்டுமே சாப்பிடவும்:
"அப்படித்தான் செய்கிறேன்" என்று கூறுவதற்கு, முன் யோசிக்கவும். எத்தனை முறை வயிறு நிறைய சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீம், இனிப்பு என்று சாப்பிட்டிருப்பீர்கள்? எடையை மேலும் கூட்டவே இது உதவுகிறது!
3. எதைச் சாப்பிடலாம் என்று தெரிந்து கொள்ளவும்:
"நான் 4 பிஸ்கெட்டும் ஒரு கிளாஸ் ஜூஸ் மட்டும் குடிச்சேன்" என்று நீங்கள் சொல்லலாம். நீங்கள் சாப்பிட்ட பிஸ்கெட்டுகளிலும் ஜூஸிலும் எத்தனைக் கலோரிகள் இருந்தன என்று தெரியுமா? எதைச் சாப்பிட்டால் நல்லது என்பதை அறிந்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
4. தண்ணீர் தண்ணீர்:
ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் சாப்பிடும் அளவும் குறையும். அத்தோடு உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும் இது சுத்தம் செய்கிறது.
5. உட்கொள்ளும் அளவு:
மதியம் அதிகமாக சாப்பிட்டுவிட்டால், இரவில் உட்கொள்ளும் அளவை குறைக்கவும். காலையில் சாப்பிட்டதைவிட, மதியம் சற்று குறைவாகவும், இரவில் அதைவிட குறைவாகவும் சாப்பிடுவது நல்லது.
6. ரிலாக்ஸ் ப்ளீஸ்:
தினமும் நாம் சந்திக்கும் பிரச்சனைகள், சில சமயங்களில் நம்மை அளவுக்கு அதிகமாக சாப்பிடத் தூண்டலாம். அதனால் தினமும் 15 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்ய எடுத்துக் கொள்ளவும்.
7. "நான் குண்டு" என்று யோசிப்பதை தவிர்க்கவும்:
நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பற்றிய நினைப்பை விட்டு, மேற்கண்ட வழிகளைப் பின்பற்றினால் எப்படி மாறுவீர்கள் என்பதை யோசிக்கவும்.
இன்னும் என்ன தாமதம்? உங்கள் எடைக் குறைப்பை இப்போதே ஆரம்பியுங்கள்!

01 மே 2011
முதுகு வலிக்கு வீட்டு மருந்து.
இன்றைய அவசர யுக வாழ்க்கையில் முதுகுவலி பிரச்சனை என்பது அநேகமாக பெரும்பாலானோர் சந்திக்க கூடியதாகவே உள்ளது.
வயதானவர்கள் மட்டுமல்லாது நடுத்தர, அவ்வளவு ஏன் நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்யும் இளவயதினர் கூட இந்த முதுகுவலிககு தப்புவதில்லை.
நமது உடலின் பெரும்பாலான எடையை முதுகுதான் தாங்குகிறது என்பதால், அதிக உடல் பருமன உடையவர்களுக்கு இப்பிரச்சனையின் தாக்கம் மிக அதிகமாகவே இருக்கும்.
சரியான நிலையில் உட்காரமல் இருப்பது, உடற் பயிறசி இல்லாமை, அளவுக்கு அதிகமான மன அழுத்தம், தசை இறுக்கம் போன்றவை முதுகுவலிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
ஆனாலும் இந்த முதுகுவலிக்கான நிவாரணமும், அதிலிருந்து விடுபடவுமான சில எளிய வீட்டு வைத்திய குறிப்புகள் இங்கே:
நீங்கள் அதிக உடல் பருமன் உடையவராக இருந்தால், முதலில் உங்களது அதிகப்படியான எடையை குறையுங்கள்.அப்படி செய்தால்தான் உங்களது முதுகிற்கு கூடுதல் அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
முதுகுவலி ஏற்படும் சமயங்களில் பூண்டு போட்டு காய்ச்சிய எண்ணெய் அல்லது யூக்கலிப்ட்ஸ் தைலம் போட்டு நன்கு மசாஜ் செய்யுங்கள்.
ஒரு மேஜைக்கரண்டி தேனை வெது வெதுப்பான நீரில் கலந்து குடித்தாலும் முதுகுவலி குறையும்.
வைட்டமின் சி பற்றாக்குறையும் முதுகுவலிக்கு ஒரு முக்கிய காரணமாகும். எனவே உங்களது உணவில் வைட்டமின் சி சத்து அடங்கிய பால், முட்டை, கீரை போன்ற உணவுகளை கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
உப்பு கலந்த சுடு நீரில் ஒரு டவலை நனைத்து பிழிந்து, அதனை முதுகில் ஒத்தடம் கொடுக்க வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
ஒரே நிலையில் (position) தொடர்ந்து பல மணி நேரம் இருப்பதை தவிருங்கள். நேராக நிமிர்ந்து உட்காருங்கள்.கூன் போட்டு உட்காராதீர்கள்.சரியான நிலையில் உட்காராமல் இருப்பதும் முதுகுவலியை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)