பக்கங்கள்

23 ஜூலை 2010

சாந்தி,படுக்கையறை காட்சி வெளியானதால் அதிர்ச்சி!


'ஏ ஒன் என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் சார்பாக தயாரிக்கப்பட்டு வரும் படம் 'சாந்தி'. எதார்த்தமான கதையம்சம் கொண்ட படமாகவும், அதே சமயம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாகவும் உருவாகிவரும் இப்படத்தை முரளி விஷ்வா இயக்குகிறார்.கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் நாயகி அர்ச்சனா, கதாநாயகன் மஹா ஆதித்யாவுடன் இணைந்து நடித்த படுக்கையறை காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது லிப் கிஸ் கொடுக்க மறுத்த அர்ச்சனாவிடம், இயக்குநர் அந்த காட்சியின் முக்கியத்துவத்தை விளக்கி எப்படியோ சம்மதிக்க வைத்து அந்த காட்சியை படமாக்கினார். இந்த நிலையில் பரபரப்பான அந்த காட்சியை படக்குழுவை சேர்ந்த யாரோ சிலர் அனுமதியில்லாமல் 'யூ ட்யூப்' இணையதளத்தில் (youtube.com) வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.இன்னும் ரீரெக்கார்டிங் செய்யப்படாத நிலையில், வெளியிடப்பட்டிருக்கும் அந்த காட்சிகளில் குறிப்பிட்ட இரண்டு நிமிடக் காட்சி மட்டும் வெளியானதால் படத்தின் இயக்குநரும், தயாரிப்பு நிறுவனமும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள். ஆனால் யூ ட்யூப்பில் இந்த காட்சியை பார்த்த சிலர், 'படம் எப்போது வெளிவரும்' என்று படத்தின் மீது உள்ள தங்களது ஆவலை கமெண்டாக தெரிவித்திருப்பது ஆச்சர்யமளித்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக