பக்கங்கள்

13 பிப்ரவரி 2011

உங்கள் முகம் அழகுடன் மிளிர சிறு ஆலோசனை!

நான் உங்களுக்கு அதிக செலவுயில்லாமல் உங்கள் முகம் கண்ணாடி போல பளபளக்க மாற எளிமையான அட்வைஸ் தருகின்றேன் பாருங்கள்.
ஒரு தக்காளி பழத்தை எடுத்து ரொம்ப சின்னதாக வெட்டி அதை முகம் முழுவதும் தடவிக் கொள்ளுங்கள்.
* பின் சிறிது நேரம் கழித்து ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து சாறு பிழிந்து அதனுடன் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து முகம் முழுவதும் தடவிக் கொள்ளுங்கள். இருபது நிமிடம் அப்படியே காயவிடுங்கள் அதன் பிறகு நல்ல குளிர்ந்த தண்ணிரில் முகத்தை கழுவுங்கள். இப்போது பாருங்கள் உங்கள் முகத்தை நீங்களே வியந்து விடுவீர்கள்.
* முகத்தை முதலில் பால் வைத்து நன்கு துடைக்கவேண்டும். பிறகு கட்டி தயிரில் உப்பு கலந்து முகத்தில் அழுத்தி தேய்க்க வேண்டும். இப்படி தேய்த்தால் முகத்திலும் மூக்குக்கு மேல் இருக்கும் பொடிப்புகள் போகும் இதை வாரத்திற்கு ஒருமுறை செய்து வர பலன் கிடைப்பது உறுதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக