பக்கங்கள்

19 செப்டம்பர் 2013

முகச்சுருக்கம் நீங்க சில ஆலோசனைகள்!

முகச்சுருக்கம் மறைய:
காய்ச்சாத பசும் பால் - 50 மி.லி.
எலுமிச்சம் பழச்சாறு - 10 மி.லி எடுத்து ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து, இளம் சூடானநீரில் முகத்தை கழுவி, மென்மையான பருத்தியினாலான துண்டு வைத்து துடைத்துவர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 3 வாரங்கள் செய்து வந்தால் முகச்சுருக்கம் நீங்கி பளபளப்பாகும். காரட்டை மிக்ஸியில் போட்டு நன்றாக பசைபோல் அரைத்து முகத்தில் தடவிகாய்ந்த பின் இளம் சூடான நீரில் கழுவி வந்தால் முகச் சுருக்கம் மறையும். காரட், கோஸ், தக்காளி இவற்றை பச்சையாக அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் காணாமல் போகும்.சிறிது தேன், வாழைப்பழம், முட்டைக்கரு ஆகியவற்றை நன்கு கலக்கி முகத்திலும் கைகளிலும் தடவிப் பதினைந்து நிமிடம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் அலசி விடவும். இம்மாதிரி தொடர்ந்து செய்து வந்தால் முகச் சுருக்கம் நீங்கிப் புதுப் பொலிவு பெறுவீர்கள். பப்பாளி அல்லது வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூசிக் கொள்வது நல்லது. தக்காளிச் சாற்றை முகத்தில் தடவ வேண்டும்.இது தோலில் உள்ள செல்களை புதுப்பிக்கிறது மேலும் முகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுகிறது. எப்போதும் இனிமையான சிந்தனைகள் இருந்தால் முகம் அழகாக இருக்கும். முகச் சுருக்கம் மறைந்து விடும். பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும் அல்லது பழச்சாறு குடிக்க வேண்டும். மேலும் தண்ணீரையும் நிறைய குடிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக