பக்கங்கள்

30 ஏப்ரல் 2010

பெண்ணே உன்னைத்தான்!!!


பெண்ணே உன் காதல் பேச்சு உண்மைதானா?-இல்லை

பித்தர்களாய் எமை மாற்றும் மாயைதானா?

வாழ்வினுக்கு வழி காட்டும் பெண்மைதானா?-இல்லை

சாவினுக்கே அழைத்து செல்லும்

மது போதைதானா?

காதல் மட்டும் போதும் என்றுஇருந்திடுவாயா?-இல்லை

மனைவி என்ற குல விளக்காய் வந்திடுவாயா?

என் காதல்!


உன் மீது நான் கொண்ட பாசம்,இந்த ஜென்மத்தில் மாறாத நேசம்,நீயே நான் வாங்கும் சுவாசம்,மலர்களில் கூட உன் வாசம்,தென்றலும் உனக்கென்றே வீசும்,எமை பிரித்திட போடுறார் கோஷம்,என்றென்றும் அவர் திட்டம் நாஷம்,எம் இணைவிற்கு இல்லை ஒரு தோஷம்,நாம் போடுவதில்லை இங்கு வேஷம்,காதலி நீயே நான் வாழும் தேசம்,இனி யார் செய்ய முடியும் மோசம்?.

சோதனையில் ஏன் வேதனை?


சோதனைக்காக படிக்கும்

காலம்வேதனைக்கென்றே

விட்ட கோலம்,

புத்தகம் கையில்எடுத்த நேரம்

தலையில் ஏதோ பெரிய பாரம்,

விடை தேடி போகும்

வேளைகுறுக்கு

வழியை நாடும் மூளை,

கல்வி ஒன்றையேஎண்ணிப்

படியும்நாளைய பொழுது

நன்கே விடியும்.

தீருமா துன்பம்!

துன்பம் மறப்பதற்கு

குடிக்கின்றாராம்,

வேதாந்தம் பேசுகின்றார்,

மதிகெட்டு தெருவில்

இவர் கிடக்கின்றார்,

பட்டினியால் வீட்டில்

பலர் வாடுகின்றார்,

இவர் துன்பம்

தீர்ப்பதற்கு

யாருளரோ ?

கூறுங்கள்

குடி கெடுத்த குடியாரே!

துணிந்திடு!



கையிலே


பணம் இல்லை இன்று,


என்றாலும்


மனம் உண்டு நன்று,


துன்பங்கள்


பலவற்றை கண்டு


உளம் சோர்வுற்று


போனதுமுண்டு,


வாடுவதால்


பலனில்லை என்று


பகன்றார் பலர்


அன்று சான்று,


துணிந்திடு மகனே நீயும்


விலகிடும் துன்பம் யாவும்,


வருங்காலம் நமக்கென்று எழு,


எப்போதும் எமக்கில்லை பளு.

24 ஏப்ரல் 2010

தமிழ் கன்னி தோற்றம்!




எத்தனை எத்தனை இன்பக் கனவுகள்... என்ன புதுமையடா! - அடபுத்தம் புதுக்கிளி சோலைப் புறத்திலேபோடும் ஒலியிவளோ? - வந்துகத்துங் குயிலின் இசையோ? கலைமயில்காட்டும் புதுக்கூத்தோ? - அடமுத்தமிழ்க் கன்னியின் பேரெழிலை ஒரு மொழியில் உரைப்பதோடா?மன்னர் வளர்த்த புகழுடையாள்! இவள்மக்கள் உறவுடையாள்! - நல்லசெந்நெல் வளர்க்கும் உழவ ரிசையில்சிரிக்கும் அழகுடையாள்! - சிறுகன்னி வயதின் நடையுடையாள்! - உயர்காதல் வடிவுடையாள்! - தமிழ்என்னு மினிய பெயருடையாள்! - இவள்என்றும் உயிருடையாள்!முந்திப் பிறந்தவள் செந்தமி ழாயினும்மூப்பு வரவில்லையே! - மணச்சந்தனக் காட்டுப் பொதிகை மகளுக்குச் சாயல் கெடவில்லையோ! - அடவிந்தை மகளிவள் சிந்தும் எழில்தனில்விழிகள் சுழலுதடா! - கவிதந்து சிரிக்கும் அழகன் எனக்கிவள்தன்னைத் தரவந்ததோ?தொள்ளு தமிழ்மகள் வண்ண முகத்திலேசெம்மை கொலுவிருக்கும்! - ஒளிகொள்ளும் இதழில் மலர்நகை யொன்று குழைந்து குழைந்திருக்கும்! - உயிர்அள்ளும் விழிகள் இரண்டிலு மாயிரம்ஆற்றல் நிறைந்திருக்கும்! - இவள்உள்ள மிருக்கும் இடத்திலே காதலும்ஒளிந்து மறைந்திருக்கும்!தேனுங் கனியும் மதுவுங் கலந்தொன்று சேர்ந்த உடலுடையாள்! - கன்னிமானமெனு மெழில் ஆடையணிந்துமயக்கப் பிறந்தவளோ? - அடநானு மிவளும் இருக்கு முலகிலேநாணம் இருக்குமோடா? - நாங்கள்வான மளவு பறந்துவிட் டோமிந்தவையம் தெரியவில்லை!காலின் சிலம்பும் வளையும் இசையொலிகாட்டப் பறந்து வந்தாள்! - அந்தநூலின் இடையிலே கை கொடுத்தும் விழிநோக்கில் உயிர் கொடுத்தும் - ஒருவேலின் விரைவில் பறந்து வந்தேன்! - அவள்வெள்ளை மனந் திறந்து... - புதுப்பாலின் சுவையும் வெறியுங் கலந்தொருபாடம் நடத்துகின்றாள்....
(காசி ஆனந்தன்)

21 ஏப்ரல் 2010

பொங்கி வாடா!

தீயெழுந்து அடுப்பினிலே பாலைச்
சுட்டால்சினந்தெழுந்து
பால்பொங்கித் தீயணைக்கும்!
நீ உவந்து செய்கின்ற
பொங்கல் வெற்றுநிகழ்வன்று....
வீரத்தின் பாடம் கண்டாய்!
தாயிழந்த சேயர்போல்
தமிழர் ஈழம்தனையிழந்து
சினங்கொண்டு பொங்குகின்றார்!
பாய்! சிவந்து களமாடு!
பொங்கி வாடா!
பகைநொறுக்கித்
தமிழீழ மண்ணை மீட்போம்!
திரைப்படத்தின் மார்புகளைத்
தின்னும் கண்ணால்தீந்தமிழ்த்தாய்
ஈழத்தில் சாவின்
வாயில்இரைப்படப்போய்
விழும்புலிகள் களத்தின்
புண்கள்இருந்த
மலை மார்புகளைப் பார்ப்பாய்!
ஆங்கேநிரைப்பட நாளும்
களத்தை நிறைத்தார் வீரர்!
நீ என்னடா இங்கே கிழித்தாய்?
வீழ்ந்துதரைப்பட நீ கிடக்கின்றாய்!
பொங்கி வாடா!
தமிழீழம் மலர உடன் ஆணை ஏற்போம்!
நேற்றுவரை உனக்குதவி நின்ற
மாட்டைநேர்நின்று மோதுகிறாய்....
தமிழீழத்தில்நாற்றிசையும்
குண்டுகளால் உன்இனத்தை
நாளும் அழிக்கின்றார்....
நீ மோதினாயா?
போற்று தமிழ் இனமானம்!
தமிழனாய் நீபொங்கல் செய்!
விழித்தெழுவாய்!
வீறுகொண்டுகாற்றெழுந்தால்
புயலாகும்!
பொங்கி வாடா!
களம் காண்போம்!
தமிழீழம் காப்போம்! காப்போம்!
(காசி ஆனந்தன் )

20 ஏப்ரல் 2010

கவிதைப்பெண்ணே!


கவிதைப்பெண்ணே -நீ

கவிதையாய் வடிகிறாய்,

கவிதையும் வடிக்கிறாய்,

காதல் நோய்க்கு

மருந்துண்டேன்

சுகம்தான் இல்லை

என்கின்றாய்,

காதல் புனிதமென்றும்

சொல்கின்றாய்-உனக்கு

காதல் ஏனடி

நஞ்சாய் போனது?

உள்ளம் ஏனடி

புண்ணாய் போனது?

புனிதம் ஏனடி

கசந்து போனது?

வாழ்க்கை ஏனடி

இடிந்து போனது?

காதலில் ஏனடி

சுகமின்றி போனது?

காதல் உன்னை

வெறுத்ததா?

காதலை நீ வெறுத்தாயா?

சொல்லடி கவிதைப் பெண்ணே,

இதயத்தை வதைத்து,

உடலை உருக்கி,

உயிரை பிழிந்து,

சுடர்விடும் காதல்,

உனக்கு ஏனடி

கசந்து போனது?

சொல்லடி கவிதைப்

பெண்ணே!

ஒருமை!



சட்டம் கவனித்த


கொலைகாரனை


தண்டித்தது


நீதிபதி,


சட்டம் கவனிக்காத


கொலைகாரனை


தண்டித்தது


போராளி.


(கவிஞர்: காசி ஆனந்தன்)

கனவு!



என் கனவுகளுக்கும் நிறமிருப்பதாய்ச் சொன்ன போதுகுறுக்கும் நெடுக்குமாய்கல்லறைகள் எழும்பின
கர்ப்பம் சுமக்க மட்டுமேகனவுகள்... என்றாகிபிரசவிக்க முடியாதுபிதற்றிக் கொண்டு முக்கோடி வருடங்கள்கடந்து வந்த சகோதரிகளுக்கு
இரத்தமும் சதையுமாய்உங்கள் குறைமாத்துக் குழந்தை போலாகாமல் விதைத்தவர்கள் தோட்டத்திலேயேநடக்க மறுத்தது என் கனவுகளின் கால்கள்
நான் பிடுங்கப்பட வேண்டிய களைதான்என்று ஆற்றாதவர்அரிவாளோடும் அவர்களுக்கேயான பகற்கனவோடும்...
பயத்தின் சிரத்தைக்கொய்து எடுத்த பின் எனது கைவிலங்குகள்உடைக்கப்பட்டனசிறைக் கதவுகள்திறக்கப்பட்டன
ஒவ்வொரு விடியலிலும்திணிக்கப்படும் கனவை தின்று தணிக்கிறதுஎனது விழி
என் கனவின் நிறங்கள்கோர்த்தெடுத்துவானவில்லைத் தரையிறக்கிப்பரந்து வாழப்பாலம் கட்ட...இதோ எனது முதற் கல்.
நான் இதுதான்இப்படித்தான்என்றால் மட்டுமேசாத்தியமாகிறது.என் கனவு
ஆக்கம்:கவிதா

18 ஏப்ரல் 2010

காதலித்துப்பார்!


காதலித்து பார்!

நிலவை பிடித்து வருவாய்,

வானவில்லை வளைப்பாய்,

மேகத்தை தூது அனுப்புவாய்,

கடலை கைக்குள் அடக்குவாய்,

காதலித்து பார்!

புல்லுடனும் பேசுவாய்,

உன்னுடனே சிரிப்பாய்,

நெருப்பு இதம் என்பாய்,

வெயில் குளிர் என்பாய்,

காதலித்து பார்!

உலகம் காலில் என்பாய்!

பூமி என் கையில் என்பாய்!

இரவே இல்லை என்பாய்!

கனவும் நிஜம் என்பாய்!

காதலித்து பார்!

16 ஏப்ரல் 2010

கவிதைக்கு கவியாத்த பாவைக்கு அஞ்சலி!

என் கவிகண்டு வயப்பட்டு,கவி பலதான் புனைந்து,
தேனான வார்த்தைகளை பேனாவில்தான் புகுத்தி,
கவருக்குள் அடைத்தெடுத்து தபாலில் அனுப்பி வந்த
பேதை எங்கு போனாளோ இடைவழி திரும்பி!

சோதனையில் வேதனையாம்,உலகமிது பிடிக்கலையாம்,
திருமலை சன்முகநாதாவும் வெறுத்தானாம்,
உலகமிது விளங்காமல்,இதயமது தாங்காமல்,
கழுத்திற்குள் கயிறிறுக்கி பாவை அவள் விரைந்தாளே!

உன் கவிகள் என் நெஞ்சில் அச்சாகப் பதிந்ததுவே சிறீமதி!
ஓ...வெண்ணிலா,என் கண்ணாளா,கண்ணன் வருவான்,
என்று நீ தலைப்பிட்டு எழுதிய கவிதான் எத்தனை!?
யாவும் மறந்து நீ எங்கேதான் சென்றாயோ.....?

பாசக்கயிற்றை நீ நேசமாக்கி கொண்டாயோ....?
வாசம் வீசுமுன்னே உதிர்ந்திட்ட சோகமென்ன...?
இன்னுமொரு பிறப்பெடுத்து இங்கு வந்து பிறந்துவிடு,
எங்கள் நட்புக்கு மீண்டு வந்து உயிர்கொடு....!!!

எது அழகு?

கார்குழளால் என அழைத்தேன்,
தேன் துளியாய் கவி வடித்தேன்,
கொட்டியது தேள் அல்லவோ!
எட்டியது துயரல்லவோ!
நெற்றியை பிறை என்பேன்,
விழியை கயல் என்பேன்,
இதழை கொவ்வை என்பேன்,
கன்னமோ மது என்பேன்,
பற்கள் பச்சரிசி என்பேன்,
முகமோ முழு நிலவென்பேன்,
கால்களோ வாழை தண்டு என்பேன்,
இத்தனை அழகிருந்தும்
புன்னகையே இல்லையென்றால்
பெண்ணுக்கும் அழகுண்டோ!?

14 ஏப்ரல் 2010

தமிழிசை

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறது தமிழிசை இணையம்!
இக்காலமும் இனி வரும் காலமும் தமிழ் மக்கள்
வாழ்வில் பொன்னான காலமாக அமையவேண்டும்
என்பதே எமது வேண்டுதலாகும்.
இன்பமே சூழ்க,எல்லோரும் வாழ்க!