பக்கங்கள்

18 ஜூலை 2011

உடல் எடை கூடுவதை தவிர்க்க.

உடல் எடை போட்டுவிடக்கூடாதே என்று படாதபாடுபட்டு பல கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்க்கும் பலர், அவர்களை அறியாமலேயே உடலை பருக்க செய்யும் உணவுகளையும் எடுத்துக் கொளவதாக கூறும் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ நிபுணர்கள், அத்தகைய உணவுகள் எவை என்பதையும் பட்டியலிட்டுள்ளனர்.
கீழ் காணும் இந்த ஐந்து வகையான உணவுகளை உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.
பால்:
உங்களது அன்றாட உணவு பட்டியலில் பாலையும் சேர்த்துக் கொள்வது உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்றாலும், அதிக எடை கொண்டவர்கள் அல்லது உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் பாலை அதிக அளவில் அருந்துவதை தவிர்ப்பது நல்லது.சிலர் இரவில் படுக்கைக்கு போகும் முன்னர் ஒரு டம்ளர் பால் அருந்துவது வழக்கம்.வேறு சிலர் காலை உணவுக்கு பின்னரோ அல்லது மாலை சிற்றுண்டிக்கு பின்னரோ பால் அருந்துவது வழக்கம்.இத்தகைய பழக்கம் உடையவர்கள், குறைந்தது ஒரு மாதத்திற்காவது அப்பழக்கத்தை நிறுத்தி பார்த்தால் மந்த நிலை அகன்று, உடல் எடையும் குறைந்து,மேனியும் தூய்மையாகி வித்தியாசமான மாற்றத்தை உணரலாம்.இத்தகைய மாற்றங்கள் உங்களது பல பிரச்சனைகளை தீர்த்துவிடும்.
சாப்பாட்டுக்கு பின் இனிப்பு:
நம்மில் பலருக்கு சாப்பிட்டவுடன் குறைந்தபட்சம் ஒரு கடலை மிட்டாயையாவது சாப்பிடும் பழக்கம் இருக்கிறது.இவ்வாறு சாப்பாட்டுக்கு பின்னர் ஸ்வீட் எடுத்துக்கொள்ளும் பழக்கம் முற்றிலும் அநாவசியமான ஒன்று என்பதே நிபுணர்களின் வாதம்.எடுத்துக்கொள்ளும் உணவே சர்க்கரை சத்தாகத்தான்-குளுகோஸ்- மாற்றம்பெற்று உடலுக்கு தேவையான சக்தியை அளிக்க தொடங்குகிறது.அப்படி இருக்கையில் மேலும் ஸ்வீட் எடுத்துக்கொண்டு சர்க்கரை அளவை கூட்டுவது உடல் எடையை அதிகரிக்கத்தான் வழி வகுக்கும்.எனவே அந்த பழக்கத்தை குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு கைவிட்டு பார்த்தாலே அதன் பலனை உணர்ந்து, நீங்கள அப்பழக்கத்தை அடியோடு தலைமுழுகி விடுவீர்கள்.

10 ஜூலை 2011

முகப்பரு நீங்கி அழகு பெற.

கரு‌ப்பு‌ள்‌ளிக‌ள் மறைய...
ஒரு எலுமிச்சசம் பழம் வாங்கி சாறு பிழியுங்கள். அச்சாற்றினை ஒரு மெல்லிய துணியினாலோ, மிருதுவான பஞ்சினாலோ தொட்டுப் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 5-6 நிமிடங்கள் அதனை அப்படியே காய விடுங்கள். அதன்பிறகு முகத்தை நன்றாகக் கழுவி விடுங்கள் முக‌‌‌த்‌தி‌ல் உ‌ள்ள கரு‌ம்பு‌ள்‌ளிக‌ள் ‌நீங்கும். தொடர்ந்து சில நாட்கள் இதைக் கடைபிடிக்க வேண்டும்.
முகப்பரு அகல...
புனுகு வாங்கி வந்து முகப்பரு எங்கெங்கு உள்ளதோ அங்கங்கே தடவி விட்டு சில மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகப்பரு மறைந்து போகும்.
பப்பாளி மரத்திலிருந்து எதை உடைத்தாலும் பால் வரும். அதைச் சிறிதளவு சேகரித்து அத்துடன் கொஞ்சம் தண்ணீரையும் சேர்க்கவும். இந்தக் கலவையில் சிறிதளவு சீரகத்தை ஊறப் போடவும். இதை கால் மணி நேரம் வைத்திருக்கவும். பின் முகப்பரு எங்கே உள்ளதோ அங்கே இக்கலவையை நன்றாகத் தடவி விடவும்.
முகப்பருக்கள் மறைந்து, இருந்த சுவடு தெரியாமல் போய்விடும்.
அம்மைத் தழும்புகள் மறைய...
ஒரு எலுமிச்சம் பழத்தை குறுக்காக வெட்டவும். அதனை அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் பரவலாக அழுத்தமாகத் தேய்த்து விடவும். இப்படித் தினமும் தொடர்ந்து செய்துகொண்டே வந்தால் தழும்புகள் மறைந்துவிடும்.
அம்மை வடுக்க‌ள் மறைய...
சிறிதளவு கசகசா, சின்னதாக மஞ்சள் துண்டு ஒன்று, கறிவேப்பிலை சிறிதளவு எடுத்து இம்மூன்றையும் மை பதத்திற்கு அரைக்கவும்.
இந்தக் கலவையை முகத்தில் எங்கே அம்மை வடுக்கள் காணப்படுகின்றனவோ அங்கே நன்றாகத் தடவுங்கள். 15-20 நிமிடங்கள் உலற விடுங்கள்.
பின்னர் பயத்த மாவினால் முகத்தைக் கழுவி விடுங்கள். இப்படியே 3 நாட்களுக்கு ஒரு முறை செய்யுங்கள். அம்மை வடுக்கள் நீங்கி முகம் மினு மினுக்கும்.

02 ஜூலை 2011

பால்வினை நோய்க்கு வெள்ளெருக்கு சிறந்த மருந்து.

தரிசு நிலங்களிலும், ஆற்றங்கரைகளிலும் காணப்படும் வெள்ளெருக்கு புதர்செடி வகையைச் சேர்ந்தது. கருஞ்சிவப்பு அல்லது வெண்மை நிற மலர்கள் நெடியுடன் கூடிய மணம் கொண்டவை. இந்த செடியின் இலைகள், மலர்கள், லேடக்ஸ்பால், வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.
இலைகளின் பொடியை எண்ணெயில் கொதிக்க வைத்து தோல்வியாதிகள், படை, கொப்புளங்களுக்கு பூச்சாகப் பயன்படுகிறது. வதக்கிய இலைகள் வீக்கமடைந்த மற்றும் வலியுள்ள மூட்டுக்களின் மேல் வைத்து கட்டப்படுகிறது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
எருக்கின் மருத்துவ குணங்களின் அடிப்படையாக உள்ள சைகுளோ சேடால், புரோசெஸ்டிரால், கலோடிரோஃபின், கைகேன்சியோல் சைரியோ ஜெனின் போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.
பால்வினை நோய்கள் தீரும்:
இலைகளின் கலவை காய்ச்சலை குணப்படுத்தக்கூடியது. வெள்ளைநிறப் பால்போன்ற லேடக்ஸ் கருச்சிதைவினை தூண்டக்கூடியது. சிறுகுச்சியினை லேடக்ஸ் பாலில் தேய்த்து கருப்பை வாயில் தடவினால் கருப்பை சுருக்கம் அடைந்து கருச்சிதைவு ஏற்படுகிறது.
மலர்கள் ஜீரணத்தை தருபவை, வயிற்று வலியினை போக்கக் கூடியவை. பசியின்மை, ஆஸ்துமா, சளி, இருமல் ஆகியவற்றினை போக்கும் திறன்கொண்டவை. உலர்த்தப்பட்ட மலர்கள் சர்க்கரையுடன் சேர்க்கப்பட்டு தொழுநோய், பால்வினை நோய்களுக்கு மருந்தாகக் கொடுக்கப்படுகிறது.
வேர்ப்பட்டை:
வேர்ப்பட்டை உடலின் சுரப்பிகளை ஊக்கப்படுத்தும். தோல்வியாதிகள், யானைக்கால் வியாதி, அடிவயிறு வீக்கம், வயிற்றுப் புழுக்கள், தோலடி நீர்கோர்வை ஆகியவற்றிர்க்கும் மருந்தாகிறது. வேர்ப்பட்டையின் மேல் உள்ள கார்க் போன்ற பகுதியைப் பிரித்தெடுத்துவிட்டு பட்டையினை அரைத்து பழைய கஞ்சியுடன் பசையாக்கி யானைக்கால் நோயினால் பாதிக்கப்பட்ட கால் மற்றும் விரைப் பகுதிகளின் மீது தடவப்படுகிறது.
வேர்ப்பட்டையினால் தயாரிக்கப்பட்ட மருந்துகள் தொழுநோய், பால்வினை நோய், பால்வினை நோயின் புண்கள், வயிற்றுப்போக்கு, நாள்பட்ட மூட்டுவலி ஆகியவற்றை குணப்படுத்தும். பால்போன்ற சாறு தலையின் படை மற்றும் மூல வியாதியினை போக்கும். தேனுடன் கலந்து வாய்ப்புண்ணுக்கும், பஞ்சில் தோய்த்து சொத்தை பல் வலிக்கும் மருந்தாகப் பயன்படு்ததப்படுகிறது.
மஞ்சள் காமாலை குணமாகும்:
வேர்ப்பட்டையின் பொடி வாந்தியினைத் தூண்டக்கூடியது. நாள்பட்ட மூட்டுவலிக்கு, மஞ்சள் காமாலைக்கு மிளகுடன் சேர்த்து இருவேளை கொடுக்கப்படுகிறது. பால் திரிந்தபின் மேலே காணப்படும் நீருடன் சோடியம் கார்பனேட் கலந்து கொடுக்கப்பட்டால் ஒரே வாரத்தில் மஞ்சள் காமாலை குணமாகும்.
மருந்து தயாரிப்பதற்கு மிக வயதான தாவரத்தின் வேரினை வெப்பமான அல்லது உலர் காலத்தில் பிரித்தெடுக்க வேண்டும். வேரினை தோண்டியதும் பட்டையினை பிரித்தெடுக்காமல் ஒரு நாள் கழித்தே எடுக்க வேண்டும். வேர்ப்பட்டை தூளினை தயாரிப்பதற்கு முன் பட்டையின் மேல் புறத்தில் உள்ள தடித்த கார்க் போன்ற பகுதியினை சுரண்டி எடுத்துவிட வேண்டும்.