பக்கங்கள்

09 டிசம்பர் 2017

தலையில் நீர் சேர்வதை தடுக்க இலகு மருத்துவம்!

Ähnliches Fotoமுதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரசால், தலையில் நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லதுதான்,தலையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது. தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரும். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும்.
தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.தலையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது. தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்று விரிவாகத் தெரியப்படுத்துகிறோம். அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார். இரண்டு சிறிய ஸ்பூன் அளவு மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்து தலையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும். அவ்வாறு பூசினால் தலையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிடும்.

21 நவம்பர் 2017

கொழுப்பை குறைக்கும் பூண்டுக் கஞ்சி!

Bildergebnis für பூண்டுநலமாக வாழ இயற்கையாக கிடைக்கும் காய் கறிகளையும் பழங்களையும் உண்டு வாழ்ந்தாலே போதும். ஆனால் நடைமுறை வாழ்வில் தற்போது அனுபவித்து வரும் செயற்கையான வாழ்க்கையால் அவதிபடுவதுதான் மிச்சம். உடல் எடையை குறைப்பதில் நாம் தினமும் வீட்டில் பயன்படுத்தும் பூண்டு எந்த அளவிற்கு உதவி செய்கிறது தெரியுமா ? இந்த கீழ்வரும் செய்முறையின் அடிப்படையில் பூண்டில் கஞ்சி செய்து தினமும் குடித்துவர, உடல் எடை மிக வேகமாகக் குறைய ஆரம்பிக்கும். 

பூண்டு கஞ்சி தயார் செய்யும் முறை:
தேவையான பொருள்கள்:
பூண்டு - 15 பல் (தோல் நீக்கப்பட்டது)
புழுங்கல் அரிசி - ஒரு கப் (வறுத்து, உடைத்தது)
சீரகம், மிளகு - தலா கால் டீஸ்பூன் (உடைத்தது)
வெந்தயக்கீரை - ஒரு கைப்பிடி அளவு
இந்துப்பு - தேவையான அளவு
மோர் - ஒரு கப்
தண்ணீர் - 4 கப்

செய்முறை:
உடைத்த புழுங்கல் அரிசி, பூண்டு, மிளகு, சீரகம், இந்துப்பு, வெந்தயக்கீரை, தண்ணீர் ஆகியவற்றை குக்கரில் சேர்த்து, மூடி 3 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் நன்கு மசித்து, மோர் சேர்த்து குடிக்கலாம்.
காலை, மாலை வேளைகளிலும் இதை சாப்பிடலாம். இதனை மதிய உணவில் நாம் இயல்பாகவே அதிக கலோரிகளை எடுத்துக் கொள்வோம். அதற்கு பதிலாக இந்த கஞ்சியைக் குடித்து வந்தால் பசியும் அடங்கும். குறைந்த கலோரியில் நிறைவான, சத்தான உணவைச் சாப்பிடவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நம் உடலில் அதிகரித்துள்ள கொழுப்பை ,அதிக அளவில் மெடபாலிசம் செய்து வெகுவாக குறைக்கிறது. அதுமட்டுமில்லாமல், ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்க செய்கிறது. புற்று நோய் வருவதை தடுகிறது. இது போன்ற பல நன்மைகள் இருக்கின்றது.

04 ஜூலை 2017

தேன் தரும் பயன்கள்!

பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தரக்கூடியது தேன். பயன் தரும் தேனை தக்கவாறு உபயோகித்து பலன் பெறுவோம்.
1. தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும், ஊளைச் சதை குறையும், உடல் உறுதி அடையும். 2. எலுமிச்சை சாற்றை, தேனுடன் கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம் குறையும். 3. தேனுடன் வெங்காயச் சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும். 4. இருமல், சளித்தொல்லை, நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும், பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட இருமல் மட்டுப்படும். சளித்தொல்லை குறையும். 5. தேனையும், மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும். 6. தேனுடன், சுண்ணாம்பைக் கலந்து நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும். 7. மீன் எண்ணெய்யோடு, தேனை கலந்து உண்டு வந்தால் ஆறாத புண்கள் ஆறிவிடும். 8. கருஞ்சீரகத்தை நீர்விட்டுக் காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட்டால் கீல் வாதம் போகும். 9. வயிற்று வலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் தொந்தரவுகள் குறையும், கல்லீரல் வலுவடையும். 10. அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர குணமாகும்.

16 மார்ச் 2017

சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட உதவும் அன்னாசிப்பழம்!

அன்னாசி பழத்தில் வைட்டமின் 'பி' உள்ளதால் உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்தாக உள்ளது.நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும். அன்னாசி பழச்சாறு சிறுநீர் கழிவை தூண்டி, விஷம் மற்றும் கழிவுப் பொருட்களை வெளியேற்றி, சிறுநீரகங்கள் சிறப்பாகச் செயல்பட உதவும். அன்னாசிப் பழத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ஒரு பக்க தலைவலி, மாலைக்கண் நோய், கண் பார்வை மங்கல், கண் உறுத்தல், காது வலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவதில் இருந்து விடுபடலாம். மேலும், அன்னாசிப் பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.அன்னாசிப் பழம் குடலில் உள்ள கெட்ட கிருமிகள் மற்றும் புழுக்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது. இதில், கால்சியம் உள்ளதால் பற்கள், எலும்புகளை உறுதிப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல அன்னாசிப் பழம் சளி மற்றும் காய்ச்சலைக் கூட குணப்படுத்த வல்லது. வயிறு தொடர்பான பிரச்சனைகளைக் கூட சரி செய்கிறது.

08 மார்ச் 2017

குடற்புண்ணை ஆற்றும் திராட்சை!

ஊட்டச் சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று, இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச் சத்து பாஸ்பரஸ் போன்ற சத்துப் பொருள்கள் உண்டு.உடல் வறட்சி, மூளை நரம்புகள் வலுபெறுவதுடன் செரிமான கோளாறுகள் நீங்கும். இதயம் பலவீனமாக இருந்தாலும், அடிக்கடி படபடப்பு ஏற்பட்டாலும், திராட்சை பழத்தை பன்னீரில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து அதை அப்படியே பிசைந்து வடிகட்டி சிறிது சிறிதாக குடித்து வர இதயம் பலப்படும். படபடப்பு நீங்கும். உலர்ந்த திராட்சைப் பழத்தை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வர மலச்சிக்கல் தீருவதுடன் நாவறட்சி மற்றும் மயக்கமும் நீங்கும். திராட்சையால் குடல்புண் ஆறும். கல்லீரல் மண்ணீரல் கோளாறு நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். உலர்ந்த திராட்சைப் பழங்களை இரண்டாக பிளந்து எடுத்து, சுத்தமான நீரில் சிறிது நெல்லிக்காய் சாறு கலந்து சாப்பிட்டு வர, சிறிநீரகக் கோளாறுகள் குணமாகும். திராட்சைப் பழத்துடன் மிளகை அரைத்து சாப்பிட்டு வர கல்லடைப்பு நீங்கும். கருப்பு திராட்சை பழச்சாறு 200 மி.லி. தினமும் இரண்டு வேளை அருந்தி வர, அதிகபடியான கொழுப்புச் சத்து குறையும்.திராட்சை நல்ல உறக்கத்தை தருவதுடன், ரத்த சோகையை போக்கும் தன்மை உடையது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை நிவர்த்தி செய்வதுடன் காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினமும் திராட்சைப் பழம் சாப்பிட்டு வர அந்த நோயின் தன்மை குறையும்.

20 பிப்ரவரி 2017

மூட்டு,வாதநோய்களை அகற்றும் முடக்கற்றான்!

முடக்கு அறுத்தான் என்பதற்கு முடக்கும் வாதத்தை அறுக்கும் என்று பொருள்படும். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும் மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் எனப் பெயர் பெற்றது. மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம், மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும். ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை ஒருசட்டியில் போட்டு, வெள்ளைப் பூண்டு பற்களில் ஐந்து நைத்து இதில் போட்டு அரைத்து தேக்கரண்டி அளவு மிளகை ஒன்றிரண்டாக உடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சிய கஷாயத்தை வடிகட்டி விடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால் ஒரு எலுமிச்சை பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம் சாதம்மட்டும் சாப்பிடலாம். இரவு தேவையான பதார்த்தம் சாப்பிடலாம். முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நீங்கும். இதன் இலையை இடித்துப் பிழிந்து எடுத்த சாற்றினை இரண்டு துளிகள் காதில் விட்டு வர காது வலி, காதில் இருந்து சீழ் வடிவது முதலியவை நீங்கும். முடக்கற்றான் இலையையும், வேரையும் குடி நீரிட்டு மூன்று வேளையாக அறுபது மில்லி வீதம் தொடர்ந்து அருந்திவர நாள்பட்ட இருமல் குணமாகும். சில பெண்களுக்கு மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்படாது இவர்கள் முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு ஒழுங்காக வரும். முடக்கற்றான் கொடி மல மிளக்கி செய்கை உடையது. இதன் கொடியை முறைப்படி குடிநீரிட்டு அத்துடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து அருந்த மலச்சிக்கல் குணமாகும்.

04 பிப்ரவரி 2017

உடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி!

முள்ளங்கியானது தொண்டை சம்பந்தமான நோயை குணமாக்குவதோடு, குரலை இனிமையாக்குகிறது. பசியை தூண்டக்கூடியது, சிறுநீர் அடைப்பை போக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் வெட்டை நோய், முடி உதிர்தல் ஆகியவற்றை குணப்படுத்த வல்லது. முள்ளங்கி சூப் குடித்தால் நரம்பு சுருள்கள் நீங்கும். அதிக நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ள முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகளும் தாது உப்புகளும் நிறைந்துள்ளது. முள்ளங்கி, முள்ளங்கி இலை, விதை முதலியவை மருத்துவத்தன்மை நிறைந்தவை. இவற்றை உட்கொண்டால் உடல் முழுவதும் சுத்தமான இரத்தம் எப்போதும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும்.இலை பசியைத் தூண்டிச் சிறுநீர் பெருக்கித் தாது பலங்கொடுக்கும். சமைத்துண்ண அதிக சிறுநீர், நீர்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக் காசம், கபநோய், இருமல் ஆகியவை தீரும். முள்ளங்கிச்சாறு 30 மி.லி. காலை, மாலை கொடுக்கச் சிறுநீரகக் கோளாறு, நீர்தாரைக் குற்றங்கள் நீங்கும். முள்ளங்கி சிறுநீர் பெருக்கும், குளிர்ச்சியுண்டாக்கும். இலைச்சாற்றை 5 மி.லி. ஆக நாள்தோறும் 3 வேளை சாப்பிட்டு வர மலக்கட்டு, சிறுநீர்க் கட்டு, சூதகக்கட்டு எளிய வாத நோய்கள் தீரும். இந்த முள்ளங்கியால் வாத நோய், வயிற்றெரிச்சல், உடல் நரம்பு வலி, காசநோய், தலைவலி, மயக்கம், ஆஸ்துமா என்ற இரைப்பு, கடுப்பு என்ற சீதபேதி ஆகியன குணமாகும். சிறுநீரகத்தை நன்கு இயக்கும் குணமுடையது. அதனால் சிறுநீரைப் பெருக்கி நீர்கோர்வை என்ற உடல் வீக்கத்தைக் குறைக்கும். வாரம் இருமுறை இதனை உணவில் சேர்க்க வேண்டும். பொரியல், சாம்பார் எதுவும் செய்து சாப்பிடலாம். வெள்ளை முள்ளங்கி மிக்க குணமுடையது. இதனை இடித்து சாறு பிழிந்து 30-50 மி.லி. அளவு காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது சாப்பிடும்போது உணவில் புளி தவிர்க்கவும். மேலே கூறப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும். கருவுற்ற தாய்மார்கள் இதனை வாரந்தோறும் சாப்பிட்டு வந்தால் குழந்தைப்பேறு எளிதாகும். சிறுநீர் எளிதாக பிரியும். இதனால் ஏற்படும் கை, கால் வீக்கம் வராது. இதன் விதையைக் குடிநீராக-காசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும்.