சீயக்காய் என்பது நம் கூந்தலையும், தலைச்சருமத்தையும் பராமரிக்க காலம் காலமாக நாம் பயன்படுத்தி வரும் பொருட்களில் ஒன்றாகும். சீயக்காய் உங்கள் கூந்தல் மற்றும் தலைச்சருமத்திற்கும் சேர்த்து பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. சிறந்த சுத்திகரிப்பான் கூந்தலுக்கு ஒரு தலைசிறந்த இயற்கை சுத்திகரிப்பானாக செயல்படும். மேலும் ரசாயனம் கலந்த ஷாம்புவில் இருந்து, உங்கள் தலைச்சருமம் பாதுகாக்கப்படுகிறது.முடிக்கு நல்ல பாதுகாப்பு வழங்கும் பலர் இன்னும் கூந்தலுக்கு சோப்புகளை தான் பயன்படுத்துகின்றனர். அவை உங்கள் தலைச்சருமத்தை வறட்சியாக்கி, செபோர்ஹெயிக் டெர்மட்டிட்டிஸ் எனப்படும் அழற்சி நிலையை ஏற்படுத்துவதால், அவை கூந்தலுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை.
சீயக்காயில் பி.எச். அளவு குறைவாக இருக்கும். அதோடு சேர்த்து அது மிதமான தன்மையை கொண்டுள்ளதால், மென்மையான தலைச்சருமத்தை கொண்டவர்களும் கூட இதனை பயன்படுத்தலாம். இது தலைச்சருமத்தை வறட்சியாக்காது.
கண்டிஷனர் தேவையில்லை உங்கள் கூந்தலில் உள்ள அதிகப்படியான சிக்கலை நீக்கவும் சீயக்காய் உதவும். அதனால் சீயக்காய் பயன்படுத்திய பிறகு தனியாக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை.மயிர்கால்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வைட்டமின் டி மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துக்களை அளித்து, இது தலைச்சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
கூந்தலின் ஆரோக்கியம் மேம்படும் இது மற்ற மூலிகைகளை மற்றும் இயற்கை சாறுகளுடன் நன்றாக ஒன்றி விடும். அதனால் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு பயனாக அமையும்.
முடியின் நிறத்தை தக்க வைக்கும் கூந்தலுக்கு சாயம் போடுவதற்கு முன், அது இயற்கை சாயமாக இருந்தாலும் கூட, கூந்தலை சீயக்காய் கொண்டு கழுவ வேண்டும். இதனால் சாயம் அதிக நேரம் ஊறி, நீண்டு நிலைக்கும்.பொடுகை தடுக்கும் பொடுகை எதிர்த்து போராடவும் சீயக்காய் உதவுகிறது. பொடுகிற்கான சிகிச்சையை உரிய நேரத்தில் எடுக்கவில்லை என்றால் தற்காலிக முடி உதிர்தல் ஏற்படும்.
23 மார்ச் 2018
17 மார்ச் 2018
வெறும் வயிற்றில் நீர்த்துப்பூசணி சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
நீர்த்துப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்கும்.ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும். நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு நீர்த்துப் பூசணிச் சாறு உடனடி பலனைத் தரும். அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனையை எதிர்த்துப் போராடவும் நீர்த்துப் பூசணிச் சாறு உதவும்.தினமும் காலையில் நீர்த்துப் பூசணி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.நீர்த்துப் பூசணி சாறை தினமும் காலையில் குடித்து வாருங்கள். இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்.உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள்,நீர்த்துப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில்தடுக்கலாம்.சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறுநீருட நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.நீர்த்துப் பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை,மாலை என இருவேளையில் குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால், எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.சிறு நீரகத்தில் தொற்று ஏற்பட்டு சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு நீர்த்துப்பூசணி சாறு நல்ல பலனைத் தரும். சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை அல்லது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக குணமாகும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)