பக்கங்கள்

06 ஜூன் 2011

சாப்பிடும்போது கோபம் வேண்டாம்.

சிலர், அரக்கபரக்க சாப்பிடுவர் தினமும்! கேட்டால், “காலை எழுந்ததும் ஏகப்பட்ட வேலைகள்; இதில், சாப்பிட நேரம் இருக்கா…என்ன?’ என்று அலுத்துக் கொள்வர். இப்படி சாப்பிடுவதால் எந்த பலனும் இல்லை என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. திட்டமிடப்படாமல் செயல்படுவதால் தான் இப்படி நேர்கிறது. தினமும் காலை படுக்கையில் இருந்து எழுகிறோம்; காலையில் சிற்றுண்டி முதல் இரவு டின்னர் வரை நேரம் குறித்து சாப்பிட்டலாம். என்ன தான், “டென்ஷன்’ இருந் தாலும், சாப்பாட்டு விஷயத்தில் கண்டிப்பு தேவை.
பிசினசில் இருப்பவராக இருந்தாலும், ஊர் விட்டு ஊர் போகும் வேலை செய்பவராக இருந்தாலும், சாப்பிடுவதில் மட்டும் நேரம் தவறக் கூடாது. அதிலும், நம் கோபதாபங்களை எல் லாம், சாப்பிடும் போது மூட்டை கட்டி விட வேண்டும். இல்லாவிட்டால், நம் உணர்வு, நாம் சாப்பிடும் உணவின் மூலம் கிடைக்கும் சத்துக்களுடன் சேர்த்து, நம் சுரப்பிகளும் அதிக வேலை செய்து, அதற்கேற்ப, உடலில் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்கின்றனர் டாக்டர்கள்.உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் “செல்’கள்! அவற்றுக்கு முக்கிய தேவை “ஆன்டி ஆக்சிடெண்ட்’ என்ற ஒரு வித சத்து. நாம் சாப்பிடும் எல்லா உணவு வகைகளிலும் அந்த ,” ஆன்டி ஆக்சிடெண்ட்’ உள்ளது.
அது தான் உடலில் உள்ள “செல்’களை பாதுகாத்து, எந்த வியாதியும் அண்டாமல் செய்கிறது; உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தருகிறது.அதனால், நாம் சாப்பிடும் உணவை முழுமையாக ரசித்து, ருசித்து சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், கோபம், கவலையுடன் சாப்பிட்டால், உடலில் ஒன்று எடை கூடும்; இல்லாவிட்டால் எடை பல மடங்கு குறையும்.அமெரிக்க நிபுணர்கள், சமீபத்தில், 3,300 பேரிடம், “ஆன்லைன்’ மூலம் சர்வே நடத்தினர். இதில், உடல் எடை அதிகம் உள்ளவர்கள், தாங்கள், கோபம், கவலையுடன் சாப்பிடுவதாக கூறினர். அதுபோல, உடல் எடை குறைந்தவர்களும், இதே காரணத்தை கூறியிருந்தனர்.விருந்துகளில் சிலர், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விடுவர். அப்புறம் தான், அதன் விளைவுகள் தெரியும். அவர்கள் உடல் எடை பல மடங்கு அதிகரித்துவிடும்.இதனால், என்ன தான் “டென்ஷன்’ இருந்தாலும், சாப்பிடும் போது மட்டும் மூட்டை கட்டிவிட்டு, சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், உடல் பாதிப்பு நிச்சயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக