பக்கங்கள்

23 செப்டம்பர் 2011

முதுகு வலி வராமல் தடுக்க.


உறங்கும்போது:
(அ) மென்மையான, புதையும் தன்மை கொண்ட மெத்தையில் படுக்காதீர்கள். கடினமான ஒரு படுக்கை அல்லது கடினமான பலகை உள்ள கட்டிலின் மேல் விரிப்பு விரித்துப் படுங்கள்.
(ஆ) உங்கள் படுக்கை முதுகிற்கு நல்ல சார்பு தருவதாகவும், முதுகெலும்பை நேர்நிலையில் வைக்க உதவுவதாகவும் அமையவேண்டும்.
(இ) ஒருப‌‌‌க்கமாகப் படுக்கும்போது முழங்கால்கள் நேர்கோணத்தில் அமையும்படி விழிப்பாகக் கவனித்துக் கொள்ளுங்கள்.
(ஈ) கவிழ்ந்து படுப்பது சரியல்ல.
8. பொருள்களைத் தூக்கும்போதோ உயர்த்தி எடுக்கும்போதோ...
(அ) முழங்காலை வளையுங்கள். முதுகை அல்ல.
(ஆ) பயணத்துக்குச் சுலபம் என்று ஒரே சூட்கேஸில் அடைக்காதீர்கள். இரண்டு சிறிய அல்லது மீடியம் சைஸ் சூட் கேஸில் கொண்டு செல்லுங்கள். இரண்டையும் இருகரங்களால் தூக்கும்போது சம எடைப் பங்கீடு வரும். முதுகுத் தசைகளுக்கும் சம வேலை கிட்டும்.
(இ) முதுகுத் தசைகளை அதிக உபத்திரவம் செய்யாத வகையில் பொருள்களை உயர்த்தி வைக்கும்போது ஏணியில் படிப்படியாக வைத்து ஏற்றுங்கள்.
9. கார் ஓட்டும்போது...
(அ) உங்கள் கீழ் முதுகுக்கு சார்ந்து கொள்ள ஒரு குஷன் உபயோகியுங்கள். இடைவெளி விட்டு விட்டு காரை நிறுத்தி இறங்கி நின்று பின்பு தொடருங்கள்.
10. ஹீல் வைத்த காலணிகளை அணியாதீர்கள். தட்டையாக உள்ள காலணியையே அணியுங்கள்.
11. உங்கள் எடை அதிகமாக இருந்தால் குறைத்துவிடுங்கள்.
12. டைவ் அடித்தல், பல்டி அடித்தல் போன்ற செயல்கள் கூடாது.
13. கண்ட கண்ட மாத்திரை மருந்துகளை வாங்கி நீங்களே சுய மருத்துவம் செய்து கொள்ளாதீர்கள்.
உடற்பயிற்சி!
தசை இயங்கு நிலைக்கு தேகப்பயிற்சி அவசியம். முதுகெலும்பை நல்ல நிலைக்கு வைக்கவும் உடற்பயிற்சி உதவும்.
உங்கள் மருத்துவரின் அனுமதி பெற்று உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். வேகமாக நடத்தல், நீச்சல், கைகால்களை மென்மையாக நீட்டி மடக்கல் நல்ல பயிற்சிகளாகும்.
எந்தப் பயிற்சியையும் நிதானமாகவும் படிப்படியாகவும் செய்யவேண்டும்.

11 செப்டம்பர் 2011

உறக்கம் தரும் உணவுகள்!

நம்மில் சிலர் தலையணையில் தலைவைத்த அடுத்த விநாடியே 'கொர்'ரென்ற குறட்டையுடனோ அல்லது குறட்டை அல்லாமலோ ஜோராக தூங்கத் தொடங்கிவிடுவார்கள்.அவர்களை பற்றி பிரச்சனை இல்லை.ஆனால் குறட்டை ஒரு பிரச்சனைதான்; அதுபற்றி அப்புறம் பார்க்கலாம்.
தற்போதைய பிரச்சனை தூக்கம் வராதவர்களை பற்றியது.புத்தகம் வாசிப்பது, இணைய தளத்தில் மேய்வது, மனதுக்கு பிடித்த இனிமையான பாடல்களை கேட்பது என பலவிதமாக முயற்சித்தும், சிலருக்கு தூக்கம் தொலைவிலேயே இருக்கும்;பக்கத்தில் நெருங்காது.
அப்படியானவர்களுக்காக மருத்துவ மற்றும் உணவு நிபுணர்கள் தரும் தூக்கம் வரவழைக்கும் உணவுகள் பட்டியல் இதோ:
இறால்:
மீன்களில் பலவகை உண்டென்றாலும் இறால் மீனுக்கு தனி ருசிமட்டுமல்லாது, தூக்கத்தை வரவழைக்கும் திறனும் உண்டு.இதிலுள்ள ஆரோக்கியமான கொழுப்பு,தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் சுரப்புகளை அதிகரிக்கும் திறனுடையதாம்.
பீன்ஸ்:
பீன்ஸ் மற்றும் இந்த வகையை சேர்ந்த அவரை, பட்டாணி போன்றவற்றில் பி6,பி12 உள்ளிட்ட 'பி' வைட்டமின்களும், ஃபோலிக் அமிலமும் மிகுதியாக உள்ளன. இவை மனிதனின் தூக்க சுழற்சி முறையை ஒழுங்குபடுத்துவதோடு, மனதை ஆசுவாசமாக வைத்திருக்கக் கூடிய செரோட்டோனினை சுரக்க வைக்கிறது.மேலும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு 'பி' வைட்டமின்கள் மிகவும் உதவுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
தயிர்:
கொழுப்பு குறைந்த தயிரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இந்த இரண்டுக்குமே தூக்கத்தை வரவழைப்பதில் முக்கிய பங்கு உள்ளது.ஆழ்ந்த தூக்கம் வர உதவும் இந்த தாதுக்கள், வேகமாகவும் தூக்கத்தை வரவழைக்குமாம். இந்த தாதுக்கள் ஒருவருக்கு உரிய அளவு கிடைக்காமல் பற்றாக்குறையாக இருந்தால், அதனால் தூக்கமின்மை ஏற்படுவதோடு,மன அழுத்தம் மற்றும் தசை வலி போன்றவையும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
பசளிக்கீரை:
கரும்பச்சை நிறத்தில் உள்ள இந்த பசளிக்கீரையில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது. தூக்கமின்மையை ஏற்படுத்தக்கூடிய ஒருவித படபடப்பு மற்றும் மன அமைதியின்மை போன்றவை ஏற்படாமல் பாதுகாப்பதில் இந்த பசளிக்கீரை முக்கிய பங்கு வகிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

04 செப்டம்பர் 2011

பிறர் புகையால் மரணம் ஆறு இலட்சம்!

"பேசிவ் ஸ்மோக்கிங்" என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தான் புகை பிடிக்காமல் புகைப்பழக்கமுள்ளவர்களுடன் தொடர்புடையதாலேயே மரணமடைபவர்களின் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு 6 லட்சம் பேர் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
நாம் பொதுவாக நம் நண்பர்கள் புகைப் பிடிக்கும் போது அருகில் நிற்போம். மதுபான விடுதிகளிலும் பிற பொது இடங்களிலும் சிகரட் புகையினால் பாதிக்கப்படுபவர்கள் புகை பிடிப்பவர்கள் மட்டுமல்ல அருகில் இருப்பவர்களும்தான்.
பிரிட்டன் மருத்துவ இதழான லான்செட்டில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுத் தகவல்களின் படி குழந்தைகளில் 40 சதவீதத்தினரும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோரில் 30 சதவீதத்தினரும் இம்மாதிரியான பிறரது புகைப்பழக்கத்திற்கு பாதிக்கப்படுகின்றனர்.
ஆண்டொன்றிற்கு பிறரது புகைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களில் இருதய நோயால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை 379,000, கீழ் மூச்சுக்குழல் நோயால் மரணமடைவர்கள் எண்ணிக்கை 1,65,000, ஆஸ்துமா நோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை 36,900, நுரையீரல் புற்று நோயால் மரணிப்பவர்கள் எண்ணிக்கை 21,400 என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகில் நிகழும் மரண விகிதத்தில் பிறரது புகைக்கு மரணமடைபவர்களின் பங்களிப்பு 1% என்று லான்செட் குண்டைத் தூக்கி போட்டுள்ளது.
51 லட்சம் பேர் ஆண்டு முழுதும் உலக அளவில் புகைப்பழக்கத்தால் உயிரிழக்கின்றனர் என்றால் அதில் 6,03,000 பேர் பிறரது புகைப்பழக்கத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.
2004ஆம் ஆண்டு முதல் 192 நாடுகளில் பல்வேறு தரப்பிலும் மேற்கொள்ளப் பாட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்தப் புள்ளி விவரங்கள் கிடைத்துள்ளன.
ஆப்பிரிக்கா, மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் ஆண்டொன்றுக்கு பிறரது புகைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு சுமார் 1,65,000 குழந்தைகள் மரணமடைவதாக உலக சுகாதார மையம் கவலை வெளியிட்டுள்ளது.
பெற்றொர்களுக்கு புகைப்பழக்கம் இருக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களின் தன்மை அபாயகரமாக உள்ளது. அதாவது காது தொடர்பான நோய்கள், நிமோனியா, ஆஸ்துமா, பிரான்க்கைட்டீஸ் ஆகிய நோய்கள் தாக்குவது இயல்பாகி வருகிறது என்கிறது லான்செட் புள்ளிவிவரம்.
பிறரது புகைப்பழக்கத்தினால் மரணமடைபவர்களின் எண்ணிக்கையில் ஐரோப்பாவும் ஆசியாவும்தான் முன்னிலை வகிக்கின்றன.
பிறரது புகைப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் பெண்களே அதிக அளவில் மரணம் அடைவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.