பக்கங்கள்

14 பிப்ரவரி 2012

சொக்லேட் சாப்பிடுங்க இளமையுடன் இருங்க.

நல்ல விசயம் செய்வதற்கு முன் இனிப்பு சாப்பிடச்சொல்லி அம்மா சொன்னாங்க. இது சமீபத்தில் அனைவரையும் கவர்ந்த ஒரு விளம்பரத்தின் வாசகம்.
சாக்லேட் சாப்பிடவேண்டும் என்று இந்த விளம்பரம் கூறினாலும், தினமும் சிறிதளவு டார்க் சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நோய்களை தடுக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
இளமை தோற்றம்:
குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் விருப்பம். ஆனால் அவை பற்களை பாதிக்கும் என்று பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளை சாக்லேட் உண்ண அனுமதிப்பதில்லை. மேலும் கொழுப்பை அதிகரித்து உடல் எடையை அதிகரிக்கும் என்பது பெரும்பாலானோரின் கருத்து.
ஆனால் தினமும் ஏழு கிராம் டார்க் சாக்லேட் உண்பதன் மூலம் இதயநோய் மற்றும் கேன்சரில் இருந்து காப்பாற்றிக்கொள்வதோடு இளமையான தோற்றத்தைப் பெறமுடியும்.
மனதை சுறுசுறுப்பாக்கும்:
சாக்லேட்டில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடன்டஸ் வயதாவதை தடுப்பதோடு, ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கின்றன.
உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் தினமும் சிறிய அளவில் டார்க் சாக்லேட் உண்பதன் மூலம் ரத்த அழுத்ததை குறைக்க முடியும். மேலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தேவையற்ற கொழுப்பை 10 சதவிகிதம் வரை குறைக்கிறது.
இதில் உள்ள செரோடோனின் என்ற மூலப்பொருள் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்கி உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக்கும் ஆற்றலும் டார்க் சாக்லேட்டிற்கு உண்டு.
கோகோவின் நன்மைகள்
சாக்லேட் தயாரிக்கப் பயன்படும் கோகோவில் காணப்படும் பாலிஃபினைல், நுரையீரல் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. இந்த குணநலன்கள் எல்லாம் சாதா சாக்லேட்டில் கிடையாது.
75 சதவிகிதம் கோகோ சேர்த்து செய்யப்பட்ட டார்க் சாக்லேட்டில் மட்டுமே இத்தனை மருத்துவ குணங்களும் உள்ளன எனவே வீட்டில் தயார் செய்யப்படும் டார்க் சாக்லேட்டை உட்கொள்வது சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக