அர்ஜென்டினாவை சேர்ந்த நபர் ஒருவர், பிரசவத்தை எளிதாக்கும் வகையில் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
அர்ஜென்டினாவை சேர்ந்த கார் மெக்கானிக் ஜோர்ஜ் ஓ டன்.
இவர் பிரசவ முறையை எளிதாக்கும் வகையில் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
அதாவது பிளாஸ்டிக் பையை பயன்படுத்தி குழந்தையை மிக எளிதான முறையில் வெளியே எடுப்பது.
இந்த புதிய கருவியை பற்றி ஜோர்ஜ், தனது நண்பருடன் சேர்ந்து மகப்பேறு மருத்துவரை சந்தித்து விளக்கியுள்ளார்.
அந்த மருத்துவர் ஜோர்ஜின் புதிய கருவி செயல்பாட்டை தனது மருத்துவமனையில் சோதனை செய்து பார்க்க உதவினார்.
இதனை தொடர்ந்து யூடியூப்பில் இணையத்தளத்தில் சோதனையை வெளியிட்டதுடன், மிகச் சிறந்த மருத்துவரான மரியோ மரியால்டியை சந்தித்து பேச வைத்தார்.
இதுகுறித்து டாக்டர் மரியோ கூறுகையில், மகப்பேறு காலங்களில் பெண்கள் பல சிக்கல்களை சந்திக்கின்றனர்.
அவற்றில் ஒன்று பிரசவ நேரத்தில் குழந்தை கருப்பைக்குள் சிக்கிக்கொள்வது. இதனால் குழந்தை அறுவை சிகிச்சை மூலமாக வெளியில் எடுக்கப்படுகிறது.
இந்த சிக்கலான நேரத்தில் மருத்துவர் என்ன பிரச்னை, அதை எப்படி சரிசெய்வது என்று சரியாக முடிவெடுக்கவில்லை என்றால் தாயும் சேயும் இறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
சிக்கலான பிரசவ நேரத்தில் உபயோகப்படுத்தும் வகையில் எளிய கருவி இருந்தால் மருத்துவர்கள் பிரசவங்களை எளிதாகவும் சீக்கிரமாகவும் செய்யமுடியும்.
ஓடன் கருவி என்று பெயரிடப்பட்ட இந்த கருவி அர்ஜென்டினாவை சேர்ந்த ஜோர்ஜ் ஓ‘டன் என்ற 59 வயது கார் மெக்கானிக் கண்டுபிடித்தது.
இதன்மூலம் எளிதாக பிரசவம் நடக்க கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவர்கள் உதவ முடியும்.
இதில் கையால் பிடிக்கும் வகையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பை உள்ளது. உராய்வை குறைக்க லூப்ரிகன்ட் செலுத்தப்பட்ட இந்த பை காற்று நிரப்பும் வகையில் உள்ளது.
இதன்மூலம் சிக்கலான பிரசவத்தில் குழந்தை வெளிவராத போது குழந்தையின் தலையை சுற்றி இந்த பிளாஸ்டிக் பையை வைத்து காற்றால் நிரப்பவேண்டும்.
இதனால் தலையை சுற்றி பிளாஸ்டிக் பை கெட்டியாக பிடித்துக் கொள்ளும், பின்னர் மெதுவாக வெளியில் இழுத்தால் குழந்தை பத்திரமாக பிரசவிக்கப்படும்.
இதன்மூலம் மிக சிக்கலான பிரசவங்கள் கூட எளிதாக நடைபெறுகிறது.
இந்த கருவியை உலக சுகாதார நிறுவனம் அர்ஜென்டினா கர்ப்பிணி பெண்களிடம் சோதித்துப் பார்த்ததில், சுகப் பிரசவம் நடந்துள்ளது.
இதனால் அறுவை சிகிச்சைகள் குறையும், இந்த முறையை இந்தியா, சீனா மற்றும் தெற்கு ஆப்ரிக்காவில் பயன்படுத்த உள்ளோம்.
இதன்மூலம் பிரசவ நேரத்தில் ஏற்படும் சிக்கல்களினால் இறக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களை காப்பாற்ற முடியும்.
இதைத் தயாரிக்க 50 டாலர்கள் ஆகிறது. கனடாவை சேர்ந்த கிரான்ட் சேலஞ்சஸ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பென்டன் டிக்கின்சன் கம்பெனியுடன் சேர்ந்து இந்த கருவியை தயாரிக்க உள்ளது.
ஏழை நாடுகளில் இந்த கருவி அதிக அளவில் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த கருவிக்கு உலக சுகாதார நிறுவனம் விருது வழங்கியுள்ளது.
19 நவம்பர் 2013
27 அக்டோபர் 2013
நீரிழிவு நோயாளிகள் கவனிக்க வேண்டியவை!
உணவுகளில் சாதத்தை குறைத்து காய்கறிகளை அதிகமாக உட்கொண்டால் ஏராளமான நோய்களை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் அறிவுரை கூறி வருகின்றனர். அதே நேரத்தில் சில வகை உணவுகள் அதிகளவு எடுத்து கொண்டால் உடலில் சில தொந்தரவுகள் ஏற்படும். அதிலும் நீரிழிவு (சர்க்கரை) நோயாளிகள் உணவு எடுத்து கொள்வதில் அதிக கவனம் வேண்டும். மருத்துவரின் முறையான ஆலோசனையின் பேரில் உணவுகளை எடுத்தால் தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்கலாம்.
எந்தெந்த காய்கறிகளில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கிறது என்பதை பார்ப்போம்…
நீரிழிவு நோயாளிகள் முதலில் தவிர்க்க வேண்டிய பச்சை பட்டாணி. இதில் ஸ்டார்ச் அதிகமாக இருப்பதால் இதன் பக்கம் கூட திரும்பி பார்க்க வேண்டாம்.
ஸ்குவாஷ் என அழைக்கப்படும் சர்க்கரை பூசணி. இதனை பறங்கிக்காய் என்றும் கூறுவர். இது இனிப்பு சுவையுடன் கூடிய குளிர்கால காய்கறி. இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகமாக உள்ளது. இதில் அதிக நன்மை இருந்தாலும் நீரிழிவு நோயாளிகள் இதனை அறவே தவிர்க்க வேண்டும்.
உருளைகிழங்கில் மாவு சத்து அதிகம் உள்ளது. இதேபோல சேனை கிழங்கு சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சொல்ல முடியாத அளவிற்கு அதிகரிக்கும். இதனால் உருளை, சேனை கிழங்குகளை உணவில் சேர்க்க கூடாது. மேலும் சர்க்கரைவள்ளி கிழங்கை உருளைக்கிழங்குடன் ஒப்பிடுகையில் ஸ்டார்ச் குறைவாக இருந்தாலும், கிளைசீமிக் இன்டென்ஸ் அதிகம் உள்ளது. எனவே இதனையும் தவிர்ப்பது நல்லது.
பீன்ஸ் இனிப்பாக இல்லாவிட்டாலும், இதில் ஸ்டார்ச் மிகவும் அதிகமாக உள்ளது. அதற்காக முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பீன்சை நீரில் வேக வைத்து, அளவாக சாப்பிடலாம்.
பீட்ரூட் ஒரு வேர் காய்கறி. இது மண்ணில் உள்ள அனைத்து இனிப்புகளையும் உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால் அதிக இனிப்புடன் இருக்கும். ஆனால் இதில் அதிக நன்மைகள் உள்ளன. இதனை 2 அல்லது 3 வாரங்களுக்கு ஒரு முறை எடுத்து கொள்ளலாம்.
தக்காளி இல்லாத உணவுகளை பார்ப்பது அரிது. இது இனிப்பு சுவை கொண்டது என்பதால் பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உணவுகளிலும் தக்காளியை அளவாக பயன்படுத்த வேண்டும்.
சோளத்தில் பல வகைகள் உள்ளது. அதில் ஒன்று தான் ஸ்வீட் கார்ன். இதன் பெயரிலேயே இது இனிப்பு சுவை கொண்டது என்பது உணர்த்துகிறது. மேலும் ஸ்டார்ச் அதிகமாக உள்ளது. இதனை நீரிழிவு நோயாளிகள் எடுக்கவே கூடாது.
இந்தியாவில் வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவைகளை அதிகம் சமைத்து சாப்பிடுகிறோம். இந்த உணவு பொருட்களில் ஸ்டார்ச் நிறைந்துள்ளது. அதேபோல வாழைப்பழத்தில் இனிப்பு அதிகமாக உள்ளது. எனவே இந்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும். முறையான ஆலோசனையுடன் கூடிய உணவு பழக்கம் மற்றும் எளிய உடற்பயிற்சி இருந்தால் நீரிழிவு நோய் குறித்த கவலையை களைந்தெறியலாம்.
23 செப்டம்பர் 2013
உயர் ரத்த அழுத்தத்தை தணிக்கிறது பீட்ரூட்!
பீட்ரூட்சாறு மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தத்தை தணிக்கவல்லது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.ஓரு தேநீர் கோப்பை அளவு, அதாவது 250 மிலி லிட்டர் பீட்ரூட் சாறு குடித்தால் ஓருவரின் உயர் ரத்தஅழுத்தம் சுமார் 10 ஙம் அளவு குறைவதாக லண்டன் மருத்துவக் கல்லூரியும் பார்ட்ஸ் சுகாதார மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பதினைந்து பேரிடம் நடத்திய இந்த ஆய்வின் முடிவில் ஓரு சிலருக்கு அவர்களின் உயர் ரத்தஅழுத்தம் சாதாரண அளவுக்கு குறைந்ததாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பதாக, மருத்துவ நூலான ஹைபர்டென்ஷன் தெரிவிக்கிறது. இவர்கள் பீட்ரூட் சாற்றைகுடித்து மூன்று முதல் ஆறுமணி நேரம் கழித்து இவர்களின் உயர் ரத்தஅழுத்தம் கணிசமாக குறைந்ததாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள்.
மேலும் மறுநாளும் கூட இவர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைந்தே காணப்பட்டதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் சத்து மனிதர்களின் ரத்தநாளங்களை விரிவடையச் செய்வதனால் ரத்த ஓட்டம் சீராக செல்வதால், மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைவதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே அஞ்ஞைனா என்கிற இரத்தநாள வலிநோயால் அவதிப்படுபவர்களுக்கு நைட்ரேட் மருந்து அளிப்பதன் மூலம் அவர்களின் வலியை குறைக்க முடிவதை சுட்டிக்காட்டும் மருத்துவர்கள், இங்கே நைட்ரேட் சத்து அதிகம் கொண்டிருக்கும் பீட்ரூட் சாறு அதே வேலையை செய்வதாக கருதுகிறார்கள்.மருந்து அளிப்பதன் மூலம் அவர்களின் வலியை குறைக்க முடிவதை சுட்டிக்காட்டும் மருத்துவர்கள், இங்கே நைட்ரேட் சத்து அதிகம் கொண்டிருக்கும் பீட்ரூட் சாறு அதே வேலையை செய்வதாக கருதுகிறார்கள்.
நைட்ரேட் சத்து ரத்த நாளத்தை விரிவடையச்செய்யும்.
மண்ணில் இயற்கையிலேயே இருக்கும் நைட்ரேட் சத்து, தாவரங்களின் வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்டு அவற்றின் இலை, தண்டு மற்றும் கிழங்குகளில் சேமிக்கப்படுகிறது. ஓவ்வொரு தாவரமும் இந்த நைட்ரேட் சத்தை ஓவ்வொருவிதமாக உறிஞ்சும் தன்மையையும், சேமிக்கும் தன்மையையும் கொண்டிருக்கின்றன. இதில் பீட்ரூட் தாவரம் நிலத்தில் இருந்து உறிஞ்சும் நைட்ரேட் சத்தை தனது கிழங்கில் அடர்த்தியாக சேமிக்கும் தன்மை கொண்டது.
எனவே பீட்ரூட் கிழங்கின் சாற்றை குடிக்கும் போது அதில் இருக்கும் நைட்ரேட் மனிதர்களின் ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும் வேலையை செய்கிறது.
இவ்வளவு குறைவான நைட்ரேட், உயர் ரத்தஅழுத்தத்தில் இவ்வளவு பெரிய நல்ல பலனை அளிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறுகிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர் அம்ரிதா அலுவாலியா.
19 செப்டம்பர் 2013
முகச்சுருக்கம் நீங்க சில ஆலோசனைகள்!
முகச்சுருக்கம் மறைய:
காய்ச்சாத பசும் பால் - 50 மி.லி.
எலுமிச்சம் பழச்சாறு - 10 மி.லி எடுத்து ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து, இளம் சூடானநீரில் முகத்தை கழுவி, மென்மையான பருத்தியினாலான துண்டு வைத்து துடைத்துவர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 3 வாரங்கள் செய்து வந்தால் முகச்சுருக்கம் நீங்கி பளபளப்பாகும். காரட்டை மிக்ஸியில் போட்டு நன்றாக பசைபோல் அரைத்து முகத்தில் தடவிகாய்ந்த பின் இளம் சூடான நீரில் கழுவி வந்தால் முகச் சுருக்கம் மறையும். காரட், கோஸ், தக்காளி இவற்றை பச்சையாக அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் காணாமல் போகும்.சிறிது தேன், வாழைப்பழம், முட்டைக்கரு ஆகியவற்றை நன்கு கலக்கி முகத்திலும் கைகளிலும் தடவிப் பதினைந்து நிமிடம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் அலசி விடவும். இம்மாதிரி தொடர்ந்து செய்து வந்தால் முகச் சுருக்கம் நீங்கிப் புதுப் பொலிவு பெறுவீர்கள். பப்பாளி அல்லது வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூசிக் கொள்வது நல்லது. தக்காளிச் சாற்றை முகத்தில் தடவ வேண்டும்.இது தோலில் உள்ள செல்களை புதுப்பிக்கிறது மேலும் முகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுகிறது. எப்போதும் இனிமையான சிந்தனைகள் இருந்தால் முகம் அழகாக இருக்கும். முகச் சுருக்கம் மறைந்து விடும். பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும் அல்லது பழச்சாறு குடிக்க வேண்டும். மேலும் தண்ணீரையும் நிறைய குடிக்க வேண்டும்.
எலுமிச்சம் பழச்சாறு - 10 மி.லி எடுத்து ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து, இளம் சூடானநீரில் முகத்தை கழுவி, மென்மையான பருத்தியினாலான துண்டு வைத்து துடைத்துவர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 3 வாரங்கள் செய்து வந்தால் முகச்சுருக்கம் நீங்கி பளபளப்பாகும். காரட்டை மிக்ஸியில் போட்டு நன்றாக பசைபோல் அரைத்து முகத்தில் தடவிகாய்ந்த பின் இளம் சூடான நீரில் கழுவி வந்தால் முகச் சுருக்கம் மறையும். காரட், கோஸ், தக்காளி இவற்றை பச்சையாக அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் காணாமல் போகும்.சிறிது தேன், வாழைப்பழம், முட்டைக்கரு ஆகியவற்றை நன்கு கலக்கி முகத்திலும் கைகளிலும் தடவிப் பதினைந்து நிமிடம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் அலசி விடவும். இம்மாதிரி தொடர்ந்து செய்து வந்தால் முகச் சுருக்கம் நீங்கிப் புதுப் பொலிவு பெறுவீர்கள். பப்பாளி அல்லது வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூசிக் கொள்வது நல்லது. தக்காளிச் சாற்றை முகத்தில் தடவ வேண்டும்.இது தோலில் உள்ள செல்களை புதுப்பிக்கிறது மேலும் முகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுகிறது. எப்போதும் இனிமையான சிந்தனைகள் இருந்தால் முகம் அழகாக இருக்கும். முகச் சுருக்கம் மறைந்து விடும். பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும் அல்லது பழச்சாறு குடிக்க வேண்டும். மேலும் தண்ணீரையும் நிறைய குடிக்க வேண்டும்.
09 ஆகஸ்ட் 2013
ஆறு கிலோ எடையுள்ள குழந்தையை பெற்ற பெண்!
பிரிட்டனை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் சுகபிரசவத்தில் 6 கிலோவில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
பிரிட்டனை சேர்ந்த பெண், ஸ்பெயின் நாட்டு மருத்துவமனையில், ஆறு கிலோ எடையுள்ள குழந்தையை பெற்றெடுத்தார். பிரிட்டனை சேர்ந்தவர் மரின், 40. இவர் தற்போது ஸ்பெயின் நாட்டில் வசிக்கிறார்.
கர்ப்பிணியான, மரினுக்கு, நேற்று முன்தினம், பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, டெனியா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வலி தெரியாமல் இருக்கும் ஊசி ஏதும் இவருக்கு போடப்படவில்லை. ஐந்து மணி நேரத்தில், அழகான, ஆறு கிலோ எடை கொண்ட, பெண் குழந்தையை, மரின் பெற்றெடுத்தார்.
இவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர் சேவியர் ரியூஸ் குறிப்பிடுகையில், ""என்னுடைய, 40 ஆண்டு கால மருத்துவப் பணியில், இவ்வளவு பெரிய குழந்தையை பார்த்ததில்லை; தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர்,'' என்றார்.
27 மார்ச் 2013
முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் கருச்சிதைவை தடுக்க!
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தான் கர்ப்பிணிகள் அதிக கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் கருச்சிதைவு எளிதில் ஏற்படும். மேலும் இன்றைய மன அழுத்தம் அதிகம் சூழ்ந்துள்ள மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், நிறைய கருச்சிதைவானது நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி, கர்ப்பிணிகள் வீட்டிலேயே அதிக நேரம் தங்குவதில்லை. ஏனெனில் வாழ்க்கையை நன்கு நடத்துவதற்கு, கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே இத்தகைய சூழ்நிலையில் பெண்கள் ஒருசில செயல்களை மற்றும் உணவுகளை, கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் செய்வதை அறவே தவிர்க்க வேண்டும். இதனால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புக்கள் குறையும். சரி, இப்போது அந்த மூன்று மாதங்களில் கருச்சிதைவு நடைபெறாமல் இருப்பதற்கு என்னவெல்லாம் பின்பற்ற வேண்டுமென்று பார்ப்போமா!!! * சீஸ் உணவுகள் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் சீஸ் அதிகம் சாப்பிட்டால், அவை உடலில் ஒருவித அழற்சியை உண்டாக்கி, இறுதியில் கருச்சிதைவிற்கு வழிவகுக்கும். * பொதுவாக கர்ப்பத்தின் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் நீண்ட தூர பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் வயிற்றில் இருக்கும் சிசுவானது நன்கு வலிமையோடு இருக்காது. ஆகவே அப்போது உடலில் அதிகப்படியாக அசைந்தாலோ அல்லது குலுங்கினாலோ, அவை கருச்சிதைவை ஏற்படுத்திவிடும். * ஜங்க் உணவுகள் சாப்பிடக்கூடாது. அவையும் கருச்சிதைவை உண்டாக்கும். ஆகவே நல்ல பழங்கள் மற்றும் வீட்டில் சமைக்கும் ஆரோக்கியமான உணவுகளை மட்டும் சாப்பிட்டு வந்தால், உடலையும், வயிற்றில் இருக்கும் சிசுவையும் ஆரோக்கியத்துடன் பெற்றெடுக்கலாம். * சில நேரங்களில் பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களில் கர்ப்பமாக இருப்பது தெரியாது. ஆகவே கர்ப்பமாவதற்கு முயற்சிக்கும் போது, காபி அதிகம் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், காபியில் உள்ள காப்ஃபைன் கருச்சிதைவை உண்டாக்கும். எனவே குழந்தையை நன்கு பெற்றெடுக்க வேண்டுமெனில் காபி குடிப்பதை நிறுத்த வேண்டும். * கர்ப்பமாக இருக்கும் போது அதிகமாக கோபமோ அல்லது மனஅழுத்தமோ அடையக் கூடாது. ஏனெனில் அவ்வாறு மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்கள் கருப்பையில் ஒருவித இறுக்கத்தை ஒருவாக்கி, கருவிற்கு அழிவை ஏற்படுத்தும். எனவே எந்த அளவு மன அழுத்தத்தை தவிர்த்து சந்தோஷமாக இருக்க முடியுமோ, அந்த அளவு சந்தோஷமாக இருக்க வேண்டும். இவையே கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் ஏற்படும் கருச்சிதைவை தடுக்கும் எளிமையான இயற்கை வழிகள்.
17 மார்ச் 2013
முதுகெலும்பு பிரச்சனைகளிலிருந்து எப்படி விடுபடலாம்?
மூளையில் இருந்து உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் செல்லும் நரம்புகள் யாவும் முதுகெலும்பு வழியாக செல்கின்றன. இந்த முதுகெலும்பு அழுத்தப்படும் போது, அதிக அதிர்வுகளால் தாக்கப்படும் போது அதன் அருகே உள்ள நரம்புகளை அழுத்துகின்றன. அப்போது அது சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதிப்பு உண்டாகிறது. இதை தவிர்க்க நிமிர்ந்த நிலையில் அமர வேண்டும்.
வாகனங்களில் செல்லும் போது (அது இரண்டு சக்கரமோ, நான்கு சக்கரமோ) அதிகப்படியான அதிர்வுகள் முதுகெலும்புப் பகுதியைத் தாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக எடையை முதுகை வளைத்துக்கொண்டு தூக்குவதும், அதிக சுமைகளை தூக்குவதும் பாதிப்பை உண்டாக்கும். முதுகுவலி வந்தால். பின்னால் சகல தொல்லைகளும் தொடரும்.
எனவே வீட்டிலோ, வாகனத்திலோ, அலுவலகத்திலோ நாம் அதிக நேரம் அமரும் இருக்கைகள் நம் முதுகெலும்பை வளைக்காமல் சுகமாக, நேராக, அமர உதவுவதாக இருக்க வேண்டும். நம் உடலமைப்புக்கு ஏற்றவகையில் இருக்க வேண்டும். முதுகெலும்பை சிறப்பாக பராமரிக்க பின்பக்கமாக வளையக்கூடிய புஜங்காசனம், தனுராசனம், சக்கராசனம், முன்பக்கமாக வளையக்கூடிய பஸ்சிமோத்தாசனம், ஹாலாசனம், முதுகை திருக்கக்கூடிய அர்த்தமத்தியந்திராசனம் போன்ற ஆசனங்கள் செய்யலாம். இவைகளை அவசரமில்லாமல் மெதுவாக பழக வேண்டும்.
இடையில் ஆசனம் செய்வதை நிறுத்திவிட்டால், மீண்டும் ஆரம்பிக்கும் போது புதியவர்களைப் போல வளையும் தன்மையையும், ஆசனத்தில் இருக்கும் நேரத்தையும் குறைக்க வேண்டும்.
05 பிப்ரவரி 2013
இரத்த அழுத்தத்தை தவிர்க்க கட்டித்தளுவுங்கள்!
நீங்கள் அதிகம் நேசிப்பவர்களை கட்டி அணைப்பதின் மூலம் உங்களின் உறவு பலப்படுவதுடன் அதில் பல நலன்களும் உள்ளதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன. முக்கியமாக சோர்வான மனநிலை, ரத்த கொதிப்பு போன்ற தருணங்களில் கட்டித்தளுவினால் ரத்த அழுத்தம் குறையுமாம், மூளை சுறுசுறுப்படையுமாம்.
வியன்னா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்தியுள்ள ஆய்வின் முடிவில், தோழமையான உறவை கட்டித்தழுவும் போது, இரத்ததில் உள்ள ஆக்ஸிடாஸினின் ஹார்மோன் சுரப்பியால் ரத்த ஓட்டம் சீர் அடைகிறது என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் நீங்கள் யாரை கட்டி அனைக்கிறீர்கள் என்பதை முதலில் கருத்தில் கொள்ளவேண்டும். மனதிற்கு பிடித்தமான நண்பர்களை அனைக்கும் போதே மனதளவிலான மாறுதல் புலப்படும். மேலும் பிடித்தமான ஒருவரின் கையை பிடித்தாலும் இதே மனப்பாங்கை அடையாலாம். ஆனால் அது முற்றிலும் நீங்கள் தேர்வு செய்த மனதிற்கு ஒப்பான மனிதராக இருக்க வேண்டும்.
இந்த ஆய்வின்படி, ஆக்ஸிடாஸின் எனப்படும் ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பியில் மனதிற்கு இனியவர்களை கட்டி தழுவும்போது சுரப்பதாக கூறப்பட்டுள்ளது.
இவை சமூக சூழலில், பெற்றோர்களுடன், நண்பர்களுடன், காதலர்களுடன், குழந்தைகளுடன் என பல தரப்பினரிடையே வேறுப்படுகிறது.
இது தவிற கட்டி த்தழுவுவது உங்களை மேலும் மென்மமையாக மாற்றும். அத்துடன் உங்கள் அன்புக்குரியோரை நீங்கள் அடிக்கடி தழுவி கொள்வது அவர்களிடையேயான அன்பை மேம்படுத்தும். இது காலப்போக்கில் உறவில் ஏதும் சிக்கல் ஏற்பட்டாலும், அதனை அறுத்தெறிய வழிவகுக்கும். குற்றமே செய்தாலும் அந்த நம்பிக்கைக்குரிய அன்பானவர்கள் உங்கள் முந்தய அன்பான நடவடிக்கைகளை எண்ணி தவறையும் மறப்பார்கள்.
ஒரு வகையில், ஒரு தாய் சேய்க்கு பாலூட்டும் போது குழந்தைக்கும் தாய்க்கும் ஏற்படும் வார்த்தைக்கு அடங்காத மனமொழியை போல அன்பானவர்களை கட்டித் தழுவும் போதும் ஏற்படும் உணர்வும் அலாதியானது என்று அந்த ஆய்வு கூறியுள்ளது.
மேலும் நேர்மறையான விளைவுகளையே இது ஏற்படுத்தும். இருப்பினும் இதில் இருவருக்குமான பரஸ்பர அன்பு மிகவும் முக்கியம்.
அதே போல பிடிக்காதவர்களை கட்டிக்கொள்ளும் போது, அந்த தழுவுதலின் மூலம் ஒருவரின் ஆளுமை செயல் பாதிக்கப்படும். எதிர்தரப்பில் உள்ளவர்களுக்கு பதட்டம் அதிகரித்து ஆத்திரத்தை தூண்டவும் வழிவகுக்கும்.
அத்துடன் இந்த எதிர்மறையான மனப்போக்கில் ஆக்ஸிடாஸின் சுரக்காது, அன்பு காலப்போக்கிலும் மேம்படாது என்று இந்த ஆய்வின் முடிவில் நரம்புநோய் மருத்துவர் சாண்ட்க்யூளர் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)