உணவுகளில் சாதத்தை குறைத்து காய்கறிகளை அதிகமாக உட்கொண்டால் ஏராளமான நோய்களை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் அறிவுரை கூறி வருகின்றனர். அதே நேரத்தில் சில வகை உணவுகள் அதிகளவு எடுத்து கொண்டால் உடலில் சில தொந்தரவுகள் ஏற்படும். அதிலும் நீரிழிவு (சர்க்கரை) நோயாளிகள் உணவு எடுத்து கொள்வதில் அதிக கவனம் வேண்டும். மருத்துவரின் முறையான ஆலோசனையின் பேரில் உணவுகளை எடுத்தால் தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்கலாம்.
எந்தெந்த காய்கறிகளில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கிறது என்பதை பார்ப்போம்…
நீரிழிவு நோயாளிகள் முதலில் தவிர்க்க வேண்டிய பச்சை பட்டாணி. இதில் ஸ்டார்ச் அதிகமாக இருப்பதால் இதன் பக்கம் கூட திரும்பி பார்க்க வேண்டாம்.
ஸ்குவாஷ் என அழைக்கப்படும் சர்க்கரை பூசணி. இதனை பறங்கிக்காய் என்றும் கூறுவர். இது இனிப்பு சுவையுடன் கூடிய குளிர்கால காய்கறி. இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகமாக உள்ளது. இதில் அதிக நன்மை இருந்தாலும் நீரிழிவு நோயாளிகள் இதனை அறவே தவிர்க்க வேண்டும்.
உருளைகிழங்கில் மாவு சத்து அதிகம் உள்ளது. இதேபோல சேனை கிழங்கு சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சொல்ல முடியாத அளவிற்கு அதிகரிக்கும். இதனால் உருளை, சேனை கிழங்குகளை உணவில் சேர்க்க கூடாது. மேலும் சர்க்கரைவள்ளி கிழங்கை உருளைக்கிழங்குடன் ஒப்பிடுகையில் ஸ்டார்ச் குறைவாக இருந்தாலும், கிளைசீமிக் இன்டென்ஸ் அதிகம் உள்ளது. எனவே இதனையும் தவிர்ப்பது நல்லது.
பீன்ஸ் இனிப்பாக இல்லாவிட்டாலும், இதில் ஸ்டார்ச் மிகவும் அதிகமாக உள்ளது. அதற்காக முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பீன்சை நீரில் வேக வைத்து, அளவாக சாப்பிடலாம்.
பீட்ரூட் ஒரு வேர் காய்கறி. இது மண்ணில் உள்ள அனைத்து இனிப்புகளையும் உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால் அதிக இனிப்புடன் இருக்கும். ஆனால் இதில் அதிக நன்மைகள் உள்ளன. இதனை 2 அல்லது 3 வாரங்களுக்கு ஒரு முறை எடுத்து கொள்ளலாம்.
தக்காளி இல்லாத உணவுகளை பார்ப்பது அரிது. இது இனிப்பு சுவை கொண்டது என்பதால் பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உணவுகளிலும் தக்காளியை அளவாக பயன்படுத்த வேண்டும்.
சோளத்தில் பல வகைகள் உள்ளது. அதில் ஒன்று தான் ஸ்வீட் கார்ன். இதன் பெயரிலேயே இது இனிப்பு சுவை கொண்டது என்பது உணர்த்துகிறது. மேலும் ஸ்டார்ச் அதிகமாக உள்ளது. இதனை நீரிழிவு நோயாளிகள் எடுக்கவே கூடாது.
இந்தியாவில் வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவைகளை அதிகம் சமைத்து சாப்பிடுகிறோம். இந்த உணவு பொருட்களில் ஸ்டார்ச் நிறைந்துள்ளது. அதேபோல வாழைப்பழத்தில் இனிப்பு அதிகமாக உள்ளது. எனவே இந்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும். முறையான ஆலோசனையுடன் கூடிய உணவு பழக்கம் மற்றும் எளிய உடற்பயிற்சி இருந்தால் நீரிழிவு நோய் குறித்த கவலையை களைந்தெறியலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக