பக்கங்கள்

07 செப்டம்பர் 2015

சீனியில் கலந்திருக்கிறது நஞ்சு!

Sugarநாம் தினமும் உண்ணும் சீனியில் எவ்வளவு நச்சுத் தன்மை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால் நமக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும். நாம் காலையில் எழுந்தவுடன் குடிக்கும் டீ அல்லது காபியில் இருந்து இரவு படுக்கும் முன் குடிக்கும் பால் வரை நாம் சீனியைப் பயன்படுத்துகிறோம். இந்த வெள்ளை சீனி தயாராகும் விதத்தை நாம் தெரிந்து கொண்டால் அது உடலுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். இந்த வெள்ளைச் சீனி தயாரிக்க பயன்படுத்தும் ரசயான‌ப் பொருட்கள் மிகவும் ஆபத்தானவை. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும்போது, பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை ஃபுளுய்டு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள். பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் அமிலம் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த அமிலம் அழுக்கு நீக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. பின்னர் சுண்ணாம்பை 2 சதவிகித அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயுவை செலுத்துகிறார்கள். இதை 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது. இதையடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு பெறப்படுகிறது. காஸ்டிக் சோடா, சலவை சோடா சேர்த்து சுடுகலனில் அடர்த்தி மிகுந்த சாறு தயாரிக்கப்படுகிறது. மீண்டும் சல்பர்-டை-ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க, படிகநிலைக்கு சீனி வருகிறது. சல்பர்-டை-ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது. இவ்வாறு தயாராகும் சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரி மட்டும்தான். இது, தயாரான நாளில் இருந்து, ஆறு மாத காலத்திற்கு மேல் இந்த சீனியை சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் அதில் உள்ள சல்பர்-டை-ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள விஷமாக மாறிவிடும். அது, குடல் புண், உடல் பருமன், பல் சொத்தை, சளித்தொல்லை, இதய நோய், இரத்த அழுத்தம், மற்றும் சக்கரை நோய் போன்ற பெரிய வியாதிகள் அனைத்திற்கும் இதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த வெள்ளை சீனிக்குப் பதில், வெல்லம், கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதனால் ரத்த அழுத்தம், இதய நோயோ, சர்க்கரை நோய் ஆகியவற்றில் இருந்து தப்பிக்கலாம்.

01 மார்ச் 2015

மனிதத் தலைமாற்று சத்திரசிகிச்சை சாத்தியம்!இத்தாலிய மருத்துவ நிபுணர்

இத­ய­மாற்று சத்­தி­ர­சி­கிச்சை, முகம் மாற்றுச் சத்­தி­ர­சி­கிச்­சை­களைப் போன்று மனிதத் தலை மாற்ற சத்­திர­சி­கிச்­சையும் சாத்­தி­ய­மாகும் என இத்­தா­லிய மருத்­துவர் ஒருவர் தெரி­வித்­துள்ளார். தசை நோய்கள், புற்­று­நோய்­களால் பாதிக்­கப்­பட்ட பலர் இந்த சத்­தி­ர­சி­கிச்­சையின் மூலம் நன்­மை­ய­டை­யலாம் என நரம்­பியல் நிபு­ண­ரான டாக்டர் சேர்­ஜியோ கன­வேரோ எனும் இம்­ம­ருத்­துவர் தெரி­வித்­துள்ளார். இதை கற்­பனை செய்து பார்ப்­ப­தற்கு திகில் திரைப்­படங்­களில் வரும் காட்­சிகள் தோன்­றலாம். ஆனால், இன்னும் இரு வரு­டங்­களில் அதா­வது 2017 ஆம் ஆண்டில் முத­லா­வது மனிதத் தலை மாற்று சத்­தி­ர­சி­கிச்­சையை நடத்தும் நோக்­கு­ட­னான திட்­ட­மொன்றை இவ்­வ­ருட கோடைப்­ப­ரு­வத்தில் நடை­பெறும் மாநா­டொன்றில் மருத்­து­வர்கள் ஆரம்­பிக்­க­வுள்­ளனர். இத்­திட்­ட­த்துக்கு டாக்டர் சேர்­ஜியா கன­வேரோ தலைமை தாங்­கு­கிறார். மிரு­கங்­களுக்கான முத­லா­வது தலை­மாற்று சத்­தி­ர­சி­கிச்­சை­யா­னது 1971 ஆம் ஆண்டு குரங்­கொன்றில் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. மனித தலை­மாற்று சத்­தி­ர­சி­கிச்­சைக்­கான சாத்­தி­யங்கள் குறித்து 2013 ஆம் ஆண்டு முதல் தீவி­ர­மாக ஆரா­யப்­பட்டு வரு­கி­றது. தற்­போது இத்­த­கைய சத்­தி­ர­சி­கிச்­சைக்­கான முக்­கிய தடங்­கல்கள் வெற்­றி­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக தான் நம்­பு­வ­தாக டாக்டர் கன­வேரோ தெரி­வித்­துள்ளார். முள்­ளந்­தண்டை புதிய தலை­யுடன் பொருத்­து­வது, அத்­த­லையை உடல் நிரா­க­ரிக்­காமல் இருப்­பதை உறு­திப்­ப­டுத்­து­வது ஆகி­ய­னவும் இவற்றில் அடங்கும்.எதிர்­வரும் ஜூன் மாதம் அமெரிக்காவின் மேரிலண்ட் மாநிலத்தின் அனாபொலிஸ் நகரில் நடைபெறவுள்ள மருத்துவ நிபுணர்களின் மாநொடொன்றில் இத்திட்டத்தை அறிவிப்பதற்கு டாக்டர் கனவேரோ திட்டமிட்டுள்ளார்.