இதயமாற்று சத்திரசிகிச்சை, முகம் மாற்றுச் சத்திரசிகிச்சைகளைப் போன்று மனிதத் தலை மாற்ற சத்திரசிகிச்சையும் சாத்தியமாகும் என இத்தாலிய மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தசை நோய்கள், புற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட பலர் இந்த சத்திரசிகிச்சையின் மூலம் நன்மையடையலாம் என நரம்பியல் நிபுணரான டாக்டர் சேர்ஜியோ கனவேரோ எனும் இம்மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இதை கற்பனை செய்து பார்ப்பதற்கு திகில் திரைப்படங்களில் வரும் காட்சிகள் தோன்றலாம்.
ஆனால், இன்னும் இரு வருடங்களில் அதாவது 2017 ஆம் ஆண்டில் முதலாவது மனிதத் தலை மாற்று சத்திரசிகிச்சையை நடத்தும் நோக்குடனான திட்டமொன்றை இவ்வருட கோடைப்பருவத்தில் நடைபெறும் மாநாடொன்றில் மருத்துவர்கள் ஆரம்பிக்கவுள்ளனர்.
இத்திட்டத்துக்கு டாக்டர் சேர்ஜியா கனவேரோ தலைமை தாங்குகிறார்.
மிருகங்களுக்கான முதலாவது தலைமாற்று சத்திரசிகிச்சையானது 1971 ஆம் ஆண்டு குரங்கொன்றில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மனித தலைமாற்று சத்திரசிகிச்சைக்கான சாத்தியங்கள் குறித்து 2013 ஆம் ஆண்டு முதல் தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.
தற்போது இத்தகைய சத்திரசிகிச்சைக்கான முக்கிய தடங்கல்கள் வெற்றிகொள்ளப்பட்டுள்ளதாக தான் நம்புவதாக டாக்டர் கனவேரோ தெரிவித்துள்ளார்.
முள்ளந்தண்டை புதிய தலையுடன் பொருத்துவது, அத்தலையை உடல் நிராகரிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவது ஆகியனவும் இவற்றில் அடங்கும்.எதிர்வரும் ஜூன் மாதம் அமெரிக்காவின் மேரிலண்ட் மாநிலத்தின் அனாபொலிஸ் நகரில் நடைபெறவுள்ள மருத்துவ நிபுணர்களின் மாநொடொன்றில் இத்திட்டத்தை அறிவிப்பதற்கு டாக்டர் கனவேரோ திட்டமிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக