பக்கங்கள்

22 ஜனவரி 2016

ஞாபக மறதியைத் தடுக்கும் நெல்லிக்காய்!

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் உணவுப் பொருட்களும், பழக்கவழக்கங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.சற்று துவர்ப்புடன் இருக்கும் நெல்லிக்காயை எடுத்து கொண்டால், அதன் உண்மையான பலனை நிச்சயம் உணரலாம். நீண்ட நாட்கள் ஆரோக்கியமாகவும், இளமையுடனும் வாழ இக்கனி உதவுகிறது.
1. ஒரு சிறு துண்டு இஞ்சி, 2 நெல்லிக்காய், இரண்டையும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து குடிக்க சிறுநீரகக் கல்களை கரைத்துவிடும்.
2. இலைகள், பட்டை, வேர், மலர்கள் மற்றும் அனைத்தும் மருத்துவப் பயனுள்ள பகுதியாகும்.சிறுநீரகக் கோளாறு, இரத்தச் சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரண நோய்களுக்கு நன்மருந்தாகிறது. சர்க்கரை நோயாளியின் கணையத்தை வலுவேற்ற உதவும். மூப்பினை ஏற்படுத்தும் தொல்லைகளைப் போக்கி, உடல் உறுப்புகளை நல்ல நிலையில் வைக்கும் திறன் படைத்தது.
3. நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது குறையும்.
4. பாலுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் நரை இருந்தாலும் கருக்கத் தொடங்கி விடும். இது இதயத்திற்கு வலிமையை வழங்குகிறது. மற்றும் குடற்புண், இரத்தப்பெருக்கு, நீரிழிவு, கண் நோய் ஆகியவற்றைக் குணமாக்கும்.
5. உடல் அசதி மற்றும் அஜிரணக் கோளாறுகளுக்கு இது கைகண்ட மருந்தாகும். அத்துடன் வாயுத் தொல்லைகளைப் போக்கக்கூடிய குணம் இதற்கு உண்டு. இரத்த உறைவினால் உண்டாகும் பல நோய்களைப் போக்கும் ஆற்றலும் முக்கியமாக பித்தத் தொடர்பான வியாதிகளுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது.
6. உடலில் இரத்தம் குறைவினால் ஏற்படும் ஞாபக மறதியைத் தடுக்க, தினமும் நெல்லிக்காய் சாற்றை குடித்தால், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகமாகி, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
7. தலையில் ஒரு கரண்டி எண்ணெயை நன்றாக அழுத்தி தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது தவிர்க்கப்படுவதோடு, முடி கருமையாகவும், எந்தவித தொல்லையுமின்றி, மூளையைக் குளிர்ச்சியாக வைத்து அனைத்து வகைகளிலும் சுகமளிக்கக்கூடியதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக