பக்கங்கள்

23 ஜூன் 2016

வாழைப்பழத்திலும் தேங்காயிலும் உள்ள நன்மைகள்!

தேங்காயும், வாழைப்பழமும் மாவுச் சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், உயிர்ச் சத்துக்கள் நிறைந்த முழு உணவாகும்.வாழைப்பழம் சளியை வெளியேற்றுகிறது. தேங்காய் வயிற்றிலுள்ள பூச்சிகளை வெளியேற்றுகிறது. தேங்காயை உடைத்தவுடனேயே சாப்பிடவும். தேங்காயைப் பச்சையாகச் சாப்பிடும் பொழுது கொலஸ்ட்ரால் இல்லை. சமையலில் பயன்படுத்தும் பொழுது தான் கொலஸ்ட்ரால் ஏற்படும். உடல் உறுப்புகளுக்கு மிக்க வலிமை அளிப்பதோடு, அவற்றை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்வது தேங்காயாகும். தேங்காய் நன்கு பசி தாங்க வல்லது. தேங்காயை உணவாக உண்டு வருவதால் தோலும், உள்ளுறுப்புகளும் நன்மையும், ஒளியும் பெறுகின்றன. மூட்டுகள் உராய்தலின்றி செயல்படுகின்றன. பச்சைத் தேங்காய் எந்தத் தீங்கும் தருவதில்லை. தேங்காய் எண்ணெய் அவ்வளவு நன்மை தராது.மனிதன் உண்ணக்கூடிய உணவில் கரையும் கொழுப்பு, கரையாத கொழுப்பு என இரண்டு வகைகள் உள்ளன. கரையாத கொழுப்புதான் மனித உடலுக்குத் தீங்கு செய்கிறது. தேங்காய் பருப்பில் கரையும் தன்மை கொண்ட கொழுப்பு வகைதான் இருக்கிறது. தேங்காயை நெருப்பில் சமைக்கும் பொழுதுதான் அதில் இருக்கக்கூடிய கொழுப்பு கெடுதல் செய்யும். கரையாத கொழுப்பாக மாறி கேடு விளைவிக்கிறது.தேங்காய் உண்ணும் போது உயிராற்றலையும், வாழைப்பழத்தை சாப்பிடும் போது அதிலுள்ள குளுக்கோஸ் நமது உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கின்றது.

03 ஜூன் 2016

நரம்பு தளர்ச்சியை குணப்படுத்தும் செவ்வாழை!

எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது.
1.இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
2.இரத்த மண்டலத்திற்கும், ஆண்மைக்கான ஊட்டச்சத்துகளும் இருப்பதாக கருதப்படுகிறது. *கண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
 3.செரிமானக்கோளாறுகள் மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.
4.கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
5.மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும். பல்வலி குணமடையும்.
6.பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
7.சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.
8.நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு 9.செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும். 10.குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். 11.தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அரிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.