தேங்காயும், வாழைப்பழமும் மாவுச் சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், உயிர்ச் சத்துக்கள் நிறைந்த முழு உணவாகும்.வாழைப்பழம் சளியை வெளியேற்றுகிறது. தேங்காய் வயிற்றிலுள்ள பூச்சிகளை வெளியேற்றுகிறது. தேங்காயை உடைத்தவுடனேயே சாப்பிடவும்.
தேங்காயைப் பச்சையாகச் சாப்பிடும் பொழுது கொலஸ்ட்ரால் இல்லை. சமையலில் பயன்படுத்தும் பொழுது தான் கொலஸ்ட்ரால் ஏற்படும்.
உடல் உறுப்புகளுக்கு மிக்க வலிமை அளிப்பதோடு, அவற்றை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்வது தேங்காயாகும். தேங்காய் நன்கு பசி தாங்க வல்லது.
தேங்காயை உணவாக உண்டு வருவதால் தோலும், உள்ளுறுப்புகளும் நன்மையும், ஒளியும் பெறுகின்றன. மூட்டுகள் உராய்தலின்றி செயல்படுகின்றன.
பச்சைத் தேங்காய் எந்தத் தீங்கும் தருவதில்லை. தேங்காய் எண்ணெய் அவ்வளவு நன்மை தராது.மனிதன் உண்ணக்கூடிய உணவில் கரையும் கொழுப்பு, கரையாத கொழுப்பு என இரண்டு வகைகள் உள்ளன.
கரையாத கொழுப்புதான் மனித உடலுக்குத் தீங்கு செய்கிறது. தேங்காய் பருப்பில் கரையும் தன்மை கொண்ட கொழுப்பு வகைதான் இருக்கிறது.
தேங்காயை நெருப்பில் சமைக்கும் பொழுதுதான் அதில் இருக்கக்கூடிய கொழுப்பு கெடுதல் செய்யும். கரையாத கொழுப்பாக மாறி கேடு விளைவிக்கிறது.தேங்காய் உண்ணும் போது உயிராற்றலையும், வாழைப்பழத்தை சாப்பிடும் போது அதிலுள்ள குளுக்கோஸ் நமது உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக