பக்கங்கள்

17 மார்ச் 2013

முதுகெலும்பு பிரச்சனைகளிலிருந்து எப்படி விடுபடலாம்?

All parts of the body from the brain to the nerves in the The spine are all going through. Compression of the The spine, nerves near   stress high vibrations during the attacks.மூளையில் இருந்து உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் செல்லும் நரம்புகள் யாவும் முதுகெலும்பு வழியாக செல்கின்றன. இந்த முதுகெலும்பு அழுத்தப்படும் போது, அதிக அதிர்வுகளால் தாக்கப்படும் போது அதன் அருகே உள்ள நரம்புகளை அழுத்துகின்றன. அப்போது அது சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதிப்பு உண்டாகிறது. இதை தவிர்க்க நிமிர்ந்த நிலையில் அமர வேண்டும். வாகனங்களில் செல்லும் போது (அது இரண்டு சக்கரமோ, நான்கு சக்கரமோ) அதிகப்படியான அதிர்வுகள் முதுகெலும்புப் பகுதியைத் தாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக எடையை முதுகை வளைத்துக்கொண்டு தூக்குவதும், அதிக சுமைகளை தூக்குவதும் பாதிப்பை உண்டாக்கும். முதுகுவலி வந்தால். பின்னால் சகல தொல்லைகளும் தொடரும். எனவே வீட்டிலோ, வாகனத்திலோ, அலுவலகத்திலோ நாம் அதிக நேரம் அமரும் இருக்கைகள் நம் முதுகெலும்பை வளைக்காமல் சுகமாக, நேராக, அமர உதவுவதாக இருக்க வேண்டும். நம் உடலமைப்புக்கு ஏற்றவகையில் இருக்க வேண்டும். முதுகெலும்பை சிறப்பாக பராமரிக்க பின்பக்கமாக வளையக்கூடிய புஜங்காசனம், தனுராசனம், சக்கராசனம், முன்பக்கமாக வளையக்கூடிய பஸ்சிமோத்தாசனம், ஹாலாசனம், முதுகை திருக்கக்கூடிய அர்த்தமத்தியந்திராசனம் போன்ற ஆசனங்கள் செய்யலாம். இவைகளை அவசரமில்லாமல் மெதுவாக பழக வேண்டும். இடையில் ஆசனம் செய்வதை நிறுத்திவிட்டால், மீண்டும் ஆரம்பிக்கும் போது புதியவர்களைப் போல வளையும் தன்மையையும், ஆசனத்தில் இருக்கும் நேரத்தையும் குறைக்க வேண்டும்.

05 பிப்ரவரி 2013

இரத்த அழுத்தத்தை தவிர்க்க கட்டித்தளுவுங்கள்!

நீங்கள் அதிகம் நேசிப்பவர்களை கட்டி அணைப்பதின் மூலம் உங்களின் உறவு பலப்படுவதுடன் அதில் பல நலன்களும் உள்ளதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன. முக்கியமாக சோர்வான மனநிலை, ரத்த கொதிப்பு போன்ற தருணங்களில் கட்டித்தளுவினால் ரத்த அழுத்தம் குறையுமாம், மூளை சுறுசுறுப்படையுமாம். வியன்னா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்தியுள்ள ஆய்வின் முடிவில், தோழமையான உறவை கட்டித்தழுவும் போது, இரத்ததில் உள்ள ஆக்ஸிடாஸினின் ஹார்மோன் சுரப்பியால் ரத்த ஓட்டம் சீர் அடைகிறது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் யாரை கட்டி அனைக்கிறீர்கள் என்பதை முதலில் கருத்தில் கொள்ளவேண்டும். மனதிற்கு பிடித்தமான நண்பர்களை அனைக்கும் போதே மனதளவிலான மாறுதல் புலப்படும். மேலும் பிடித்தமான ஒருவரின் கையை பிடித்தாலும் இதே மனப்பாங்கை அடையாலாம். ஆனால் அது முற்றிலும் நீங்கள் தேர்வு செய்த மனதிற்கு ஒப்பான மனிதராக இருக்க வேண்டும். இந்த ஆய்வின்படி, ஆக்ஸிடாஸின் எனப்படும் ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பியில் மனதிற்கு இனியவர்களை கட்டி தழுவும்போது சுரப்பதாக கூறப்பட்டுள்ளது. இவை சமூக சூழலில், பெற்றோர்களுடன், நண்பர்களுடன், காதலர்களுடன், குழந்தைகளுடன் என பல தரப்பினரிடையே வேறுப்படுகிறது. இது தவிற கட்டி த்தழுவுவது உங்களை மேலும் மென்மமையாக மாற்றும். அத்துடன் உங்கள் அன்புக்குரியோரை நீங்கள் அடிக்கடி தழுவி கொள்வது அவர்களிடையேயான அன்பை மேம்படுத்தும். இது காலப்போக்கில் உறவில் ஏதும் சிக்கல் ஏற்பட்டாலும், அதனை அறுத்தெறிய வழிவகுக்கும். குற்றமே செய்தாலும் அந்த நம்பிக்கைக்குரிய அன்பானவர்கள் உங்கள் முந்தய அன்பான நடவடிக்கைகளை எண்ணி தவறையும் மறப்பார்கள். ஒரு வகையில், ஒரு தாய் சேய்க்கு பாலூட்டும் போது குழந்தைக்கும் தாய்க்கும் ஏற்படும் வார்த்தைக்கு அடங்காத மனமொழியை போல அன்பானவர்களை கட்டித் தழுவும் போதும் ஏற்படும் உணர்வும் அலாதியானது என்று அந்த ஆய்வு கூறியுள்ளது. மேலும் நேர்மறையான விளைவுகளையே இது ஏற்படுத்தும். இருப்பினும் இதில் இருவருக்குமான பரஸ்பர அன்பு மிகவும் முக்கியம். அதே போல பிடிக்காதவர்களை கட்டிக்கொள்ளும் போது, அந்த தழுவுதலின் மூலம் ஒருவரின் ஆளுமை செயல் பாதிக்கப்படும். எதிர்தரப்பில் உள்ளவர்களுக்கு பதட்டம் அதிகரித்து ஆத்திரத்தை தூண்டவும் வழிவகுக்கும். அத்துடன் இந்த எதிர்மறையான மனப்போக்கில் ஆக்ஸிடாஸின் சுரக்காது, அன்பு காலப்போக்கிலும் மேம்படாது என்று இந்த ஆய்வின் முடிவில் நரம்புநோய் மருத்துவர் சாண்ட்க்யூளர் தெரிவித்துள்ளார்.

12 டிசம்பர் 2012

கரும்புள்ளிகளை நீக்க உதவும் எலுமிச்சை!

அனைவருக்குமே எலுமிச்சை எவ்வளவு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தப் பொருள் என்பது நன்கு தெரியும். அதிலும் இவை சருமத்திற்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இவை சருமத்தில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் எளிதில் நீக்கவல்லது. இதற்கு காரணம் இதில் உள்ள சிட்ரஸ் அமிலம் தான். ஆகவே அவ்வளவு நன்மையைத் தரும் எலுமிச்சையைப் பயன்படுத்தி பல அழகுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அதிலும் இந்த எலுமிச்சையால் தயாரிக்கப்படும் ப்ளீச் அல்லது ஸ்கரப் போன்றவற்றை செய்தால், சருமத்தில் அழுக்குகளால் உருவாகும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவற்றை நீக்கிவிடலாம். இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவற்றிற்கு பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதனால் அவர்கள், அழகு நிலையங்களுக்குச் சென்று ஃபேஷியல் செய்து கரும்புள்ளிகளை நீக்குகின்றனர். என்ன தான் அழகு நிலையங்களுக்குச் சென்று முகத்தை அழகு படுத்தினாலும், அதில் உள்ள கெமிக்கல் சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே எப்போதும் இயற்கைப் பொருட்களே சிறந்தது. அதிலும் எலுமிச்சை இதற்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும். இப்போது அந்த மாதிரியான கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா!!!

எலுமிச்சை ஸ்கரப்:
இந்த ஸ்கரப் செய்வதற்கு முன் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவிட வேண்டும். பின்னர் ஒரு துண்டு எலுமிச்சையை முகம் மற்றும் மூக்கின் பக்கவாட்டிலும் நன்கு தேய்க்க வேண்டும். ஏனெனில் பொதுவாக கரும்புள்ளிகளானது முக்கின் பக்கவாட்டில் தான் தங்கியிருக்கும். ஆகவே குறைந்தது 3-4 நிமிடமாவது தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை அதிக அளவில் கரும்புள்ளிகள் உள்ளவர்கள், ஒரு நாளைக்கு 2 முறை செய்வது நல்லது.

எலுமிச்சை சர்க்கரை ஸ்கரப்:
கரும்புள்ளிகளை நீக்க சிறந்த முறைகளில் எலுமிச்சை சர்க்கரை ஸ்கரப் சிறந்ததாக இருக்கும். இவ்வாறு சர்க்கரையுடன் கலந்து ஸ்கரப் செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்குவதோடு, முகப்பருக்களும் நீங்கிவிடும்.

எலுமிச்சை சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு:
இது ஒரு பொதுவான கரும்புள்ளிகளை நீக்க செய்யப்படும் இயற்கையான ஸ்கரப் மற்றும் மாஸ்க். இதற்கு எலுமிச்சை சாற்றுடன், முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து, நன்கு கலந்து கொண்டு, பின் அதனை முகத்திற்கு தடவி, காய வைத்து, பின் மாஸ்க் செய்தால் எப்படி உரித்து எடுப்போமா, அப்படி உரித்து எடுத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர்:
ரோஸ் வாட்டரை எலுமிச்சை சாற்றுடன் கலந்து, காட்டனில் நனைத்து, பின் முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 3-4 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும். மேற்கூறியவாறு எலுமிச்சையின் சாற்றை பயன்படுத்தினால், கரும்புள்ளிகளை நீக்குவதோடு, வெள்ளைப்புள்ளிகளையும் நீக்கிவிடும். அதிலும் இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலனை பெறலாம். முக்கியமாக எலுமிச்சை சாறு சருமத்தை வறட்சியடையச் செய்யும். ஆகவே எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்திய பின்னர் மறக்காமல் மாய்ச்சுரைசரை பயன்படுத்த வேண்டும்.

04 டிசம்பர் 2012

சருமம் பொலிவு பெற வேண்டுமா....?

வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு எப்போதும் தொந்தரவு இருக்கும். ஏனெனில் அப்போது சருமத்தில் ஒருவித கோடுகள் போன்ற தோற்றம் தெரியும். இதனால் முகம் பொலிவிழந்து காணப்படுவதோடு, அசிங்கமாக இருக்கும். மேலும் அந்த வறட்சியை போக்குவதற்காக சிறிது ஆலிவ் எண்ணெய் வைத்து மசாஜ் செய்தாலும், சருமம் அதிக எண்ணெய் பசையுடன் காணப்படும். இதனால் தான் இதற்கு மேக்-கப் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்வது. ஏனெனில் மேக்-கப் செய்வதால், அத்தகைய வறட்சியை போக்கலாம். சரி, இப்போது வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கான மேக்-கப் டிப்ஸ் என்னவென்று பார்ப்போமா!!! *எந்த வகையான சருமம் இருந்தாலும், மேக்-கப் போடுவதற்கு முன்பும் சரி, பின்பும் சரி முகத்தை நன்கு கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கிவிடும். அதேப் போல் மேக்-கப்பை இரவில் படுக்கும் முன்பும் நீக்கிவிட வேண்டும். ஏனெனில் அப்போது தான் சரும செல்கள் எளிதில் மூச்சுவிட முடியும். இல்லையெனில் மேக்-கப் போடுவதற்கு பயன்படுத்தும் அழகுப் பொருட்களில் இருக்கும் கெமிக்கல்கள் சரும செல்களை பாதிக்கும். *மேக்-கப் போடுவதற்கு 10-20 நிமிடத்திற்கு முன், கிளின்சிங் மில்க் வைத்து கிளின்ஸ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள், இறந்த செல்கள் நீங்கிவிடுவதோடு, சருமமும் ஈரப்பசையுடன் இருக்கும். பின்னர் கிளின்ஸ் செய்து காய வைத்தப் பின்னர், சிறிது நேரம் கழித்து, மேக்-கப் போட வேண்டும். இதனால் சருமம் வறட்சியின்றி எண்ணெய் பசையுடன் இருக்கும். *மேக்-கப் டிப்ஸில் வறட்சியை நீக்க சிறந்த வழி என்னவென்றால், அது ஃபௌண்டேஷனுடன் சிறிது மாய்ச்சுரைசரை சேர்த்து கலந்து தடவியப் பின், மேக்-கப் போட வேண்டும். ஒரு வேளை கிளின்சிங் மில்க் வைத்து செய்துவிட்டால், அதிகமான அளவில் மாய்ச்சுரைசரை ஃபௌண்டேஷனுடன் சேர்க்க கூடாது. *வறட்சியான சருமம் இருந்தால், கன்சீலரை பயன்படுத்தக் கூடாது. ஒருவேளை முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை மறைக்க வேண்டுமெனில் அப்போது, ஃபௌண்டேசனை விட லைட்டான நிறத்தல் இருக்கும் கன்சீலரைப் பயன்படுத்த வேண்டும். *மேக்-கப் போடுவதற்கு முன் ஜெல் பயன்படுத்துவதற்கு பதிலாக கிரீமி ப்ளஷ்ஷை பயன்படுத்த வேண்டும். அதிலும் மிகவும் லேசான நிறத்தில் கன்னங்களில் அவற்றை தடவ வேண்டும். *எப்போது சருமம் வறட்சியுடன் காணப்படுகிறதோ, அப்போது சருமத்திற்கு எந்த ஒரு பவுடரையும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அவை மேலும் சருமத்தை அசிங்கமாக காண்பிக்கும். ஒரு வேளை மாய்ச்சுரைசர் வேலை செய்யவில்லை என்றால், அப்போது மிகவும் லேசாக மேக்-கப் போட்டாலே போதுமானது. இவையே வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கான சில மேக்-கப் டிப்ஸ்.

11 நவம்பர் 2012

மன இறுக்கத்தை தவிர்க்க..!

வீட்டு வேலை, அலுவலக வேலை, குழந்தைகள் பராமரிப்பு போன்றவற்றில் சிக்கி பெரும்பாலும் பெண்கள் மன இறுக்கத்திற்கு ஆளாகின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்து பிரச்சினைகளை எதிர்நோக்கும் போதும், ஒரே நாளில் பல்வேறு சூழ்நிலைகளைக் கையாள வேண்டிய நிலையில் இருக்கும்போதும், மனதை அமைதிப்படுத்த, தனக்கென செலவழிக்க சில நிமிட நேரங்கள் கூட கிடைக்காத நிலையில்தான் மன இறுக்கம் ஏற்படுகிறது. மன இறுக்கத்திற்கு மற்றுமொரு முக்கியக் காரணம், பிரச்சினையை, மன அழுத்தத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளாததும் ஆகும். சில நோய்களும் மன இறுக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நோயின் தாக்கம், நோயின் பக்க விளைவுகள் போன்றவற்றால் மன இறுக்கம் ஏற்படுகிறது. மன இறுக்கம் ஏற்படும்போது எதிலும் மனம் ஒன்றிச் செயல்பட முடியாது. எதிலும் ஆர்வம் இருக்காது. எல்லோர் மீதும் எரிந்து விழுவோம். தலை வலி, வயிற்று வலி, கோபம் போன்றவை ஏற்படுவதாக உணர்வோம். மன இறுக்கத்தால் இதயம் மறைமுகமாக பாதிக்கப்படுகிறது. மன இறுக்கத்தில் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள்தான் எளிதில் போதைப் பொருளுக்கு அடிமையாதல், கெட்ட நண்பர்கள் சேர்க்கை, தற்கொலை முயற்சி, சூழ்நிலையை தவிர்க்க ஓடிப்போதல், தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளுதல் போன்றவை நிகழ்கிறது. மன இறுக்கத்தைத் தவிர்க்க பிரச்சனைகள் ஏற்படும் போது அதை மனதிற்குள் வைத்துக்கொள்ளாமல் யாராவது ஒருவரிடம் பகிர்ந்து கொண்டால் நல்லது.

03 செப்டம்பர் 2012

கவலைப்படாதீங்க,மன அழுத்தத்தை விரட்டலாம்!

இன்றைய காலத்தில் அதிக மக்கள் மனஅழுத்தத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மன அழுத்தம் வேறு எங்கு இருந்தும் வருவதில்லை, நாம் செய்யும் செயல்களைப் பொறுத்தே மனஅழுத்தம், உளைச்சல் போன்றவை ஏற்படுகிறது. அதிலும் தற்போது அதிக வேலைப்பளு பலருக்கு உள்ளது. இதன் காரணமாகவும் மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்படுகிறது. அதிலும் பெண்களே அதிக அளவில் இந்த பிரச்சனைக்கு ஆளாகின்றனர். ஆகவே அத்தகைய மன அழுத்தத்தை குறைக்க, சரிசெய்ய என்ன செய்ய வேண்டுமென்று உளவியல் நிபுணடர்கள் கூறுகின்றனர் என்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்... மனஅழுத்தத்தை விரட்டும் வழிகள்: * எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு மனஅழுத்தம், மன உளைச்சல் மற்றும் மன இறுக்கம் போன்றவை ஏற்படாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகவே எதையுமே சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், சிரித்துக் கொண்டு ரிலாக்ஸ் ஆக இருந்தால், மன அழுத்தம் வருவதைத் தடுக்கலாம். * வாரத்திற்கு ஒரு முறை தலைக்கு மற்றும உடலுக்கு நன்கு எண்ணெய் வைத்து, மசாஜ் செய்து குளிக்க வேண்டும். அதிலும் வீட்டில் பூஜைக்கு அல்லது தலைக்கு வைக்க பூக்களை வாங்குவீர்கள். அதில் சிறிது பூக்களை கொதிக்கும் தண்ணீரில் போட்டு மூடி வைத்துவிட்டு, பின்னர் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்தால், அதன் நறுமணத்திற்கு மன அழுத்தம் குறைந்து, மனதும் சற்று ரிலாக்ஸ் ஆகும். * மன அழுத்தம் ஏற்பட மற்றொரு காரணம், தன் மனதில் இருக்கும் பிரச்சனை மற்றும் கஷ்டத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதது ஆகும். உங்களுக்கு ஏற்படும் பிரச்சனையை உங்கள் உயிர் தோழனிடம் மனம் விட்டு பேசிப்பாருங்கள், அப்போது உங்களுக்கே மனதில் இருக்கும் பாரத்தை இறக்கி வைத்துப் போல் இருக்கும். மனம் குதூகலத்துடன் காணப்படும். * மனம் கஷ்டமாக இருக்கும் போது, பிராணயாமம் என்னும் மூச்சுப் பயிற்சியை செய்தால், மன இறுக்கம் குறையும். இல்லையென்றால் கடினமான உடற்பயிற்சி அல்லது வேகமாக நடப்பது போன்றவற்றையும் செய்யலாம். அதனால் உடலுக்கு மட்டும் ஆரோக்கியமானதல்ல, மனதிற்கும் தான். * சிகரெட், மதுபானம் போன்றவையும் மனஅழுத்ததிற்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகவே அதனை குறைப்பது நல்லது. ஏனெனில் அதில் இருக்கும் பொருள் மன உளைச்சலை ஏற்படுத்தும் ஹார்மோன்களோடு தொடர்புடையது. * எதைப் பற்றியும் எப்போதும் யோசித்துக் கொண்டிருக்க வேண்டாம். அதிலும் முக்கியமாக நாளை என்ன நடக்கும் என்பதைப் பற்றி நினைத்து கவலைப்படக்கூடாது. இவ்வாறு யோசித்தால், இரவில் நிம்மதியான தூக்கம் ஏற்படாமல், உடலும் மனமும் பாதிக்கப்படும். ஆகவே எப்போதும் ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும். வேலை இல்லாத நேரத்தில் மனதிற்கு அமைதியைத் தரும் பாடல்கள் அல்லது பிடித்த பாடல்களை கேட்டலாம். இவற்றாலும் மனஇறுக்கம் குறையும். நண்பர்களே! மனஅழுத்தம் ஏற்பட்டால், இதயம் மறைமுகமாக பாதிக்கப்படும். ஆகவே எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

21 ஆகஸ்ட் 2012

தலைவலிக்குதா? தேன் சாப்பிடுங்க!

headacheகண் திறந்து பார்க்க முடியாத அளவிற்கு சில நேரங்களில் தலைவலி உயிர் போகும். தலைவலிக்கான காரணத்தை கண்டறிவது என்பது அப்போதைக்கு இயலாத காரியம். உடனடியாக என்ன நிவாரணம் கிடைக்கும் என்பதையே மனது தேடும். தலைவலிக்கு தேன் சிறந்த நிவாரணம் தரும் மருந்து என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களின் மூலமும் எளிதில் தலைவலியை போக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தலைவலிக்கு தேன் மிகச்சிறந்த நிவாரணம் தரும் மருந்து. சீன மருத்துவத்தில் தலைவலிக்கு சிகிச்சை அளிக்கும் போது தேன் அதிகம் பயன்படுத்துகின்றனர். வெது வெதுப்பான நீரில் தேன் கலந்து கொடுப்பது சீன மருத்துவர்களின் வழக்கம். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கிறதாம். இங்கிலாந்தில் வேதியியல் பிரிவு அறிவியலாளர்கள் ஜான் எம்ஸ்லே என்ற அறிஞர் தலைமையில் தேன் பற்றி சில ஆய்வுகள் மேற்கொண்டனர். அதில் தேனில் பிரக்டோஸ் என்ற வேதிபொருள் உள்ளது. இது குடிபோதையில் உள்ளோருக்கு ஏற்படும் தலைவலி, மூச்சு திணறல் மற்றும் வாந்தி வருதல் போன்ற சிக்கல்களில் இருந்து விடுவிக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். ஆல்கஹால் உட்கொள்வோர் உடலில் அசிட்டால்டிஹைடு என்ற வேதிபொருள் உற்பத்தி ஆகிறது. இதுதான் தலைவலி ஏற்படுவதற்கு காரணமாகிறது. இதனை தேனில் உள்ள பிரக்டோஸ் என்ற வேதிபொருள் அசிட்டிக் அமிலமாக மாற்றுகிறது. பின்னர் அது கார்பன் டை ஆக்சைடாக மாறி சுவாசத்தின் போது எளிதாக வெளியேறுகிறது. அதனால் குடிபோதையால் தலைவலி என முணுமுணுப்பவர்கள் நேரடியாக தேனை எடுத்து கொள்ளலாம். ஆல்கஹால் அளவு அதிகமாக காணப்படும் ஜின் போன்றவற்றை உட்கொண்டால் தூங்க செல்வதற்கு முன் ஒரு கப் பால் குடித்தால் நன்மை கிடைக்கும். பொதுவாக ஆல்கஹால் உடலிலுள்ள நீரின் அளவை குறைத்து விடும் இயல்புடையது. அதனால் தூங்க செல்வதற்கு முன் ஒரு கப் நீர் அருந்திவிட்டு படுக்க செல்வதும் நலம் தரும் என கூறுகின்றனர் ஆய்வாளர்கள். தேன் தவிர எலுமிச்சை, புதினா, போன்ற பொருட்களும் தலைவலிக்கு நிவாரணம் தரும் மருந்தாக செயல்படுகின்றன. எலுமிச்சையும், தேனும் கலந்து தண்ணீர் சேர்த்து ஜூஸ் சாப்பிடுவது தலைவலிக்கு சிறந்த மருந்தாக அமையும். எலுமிச்சையை பிழிந்து தலையில் பற்று போட்டால் தலைவலி சிறிதுநேரத்தில் குணமடையும். புதினா சிறந்த இயற்கை மருந்தாக செயல்படுகிறது. புதினா இலையை டீ போட்டு குடித்தால் தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும். வயிறு காலியாக இருந்தாலும் தலைவலி வரும் எனவே சரியான நேரத்திற்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுங்கள். வயிறு நிரம்பினால் தலைவலி சரியாகிவிடும். எதிர்மறை எண்ணங்களும், மன அழுத்தமும் தலைவலியை ஏற்படுத்தும். எனவே நேர்மறையாக எண்ணுங்கள் தலைவலி குணமடையும். அதிகமாக தலைவலித்தால் வெதுவெதுப்பான நீரில் பருத்தி துணியை நனைத்து தலைக்கு ஒத்தடம் கொடுப்பதன் மூலம் தலைவலி குணமடையும். தலைவலிக்கு சிறந்த தீர்வு ஓய்வுதான். எதைப்பற்றியும் கவலைப்படாமல் கண்களை மூடி ரிலாக்ஸ் ஆக ஓய்வு எடுங்கள். கட்டை விரலால் தலையை அழுத்தி பிடித்துக் கொண்டிருப்பதன் மூலம் தலைவலி குணமடையும். கழுத்து, தலை என மெதுவாக மசாஜ் செய்வதன் மூலம் தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.