ஒவ்வொரு உயிர் இனத்திற்கும் ஒரு தனிப்பட்ட உடல் அமைப்பு இருக்கும். இவற்றில் மனிதனுக்கு மிகவும் சிறப்பான உடல் அமைப்பு என்றே கூறலாம். காரணம் 3 வேளை சாப்பாடு, நல்ல ஓய்வு, சீரான வேலை... இவைகள் தான் மனித உடலுக்கு அவசியம் தேவைப்படுகிறவை. மற்ற எல்லாவற்றையும் காட்டிலும் உணவு தான் மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று. கண்ட நேரத்தில் உணவு சாப்பிட்டால் அது நமது உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். குறிப்பாக காலை மற்றும் இரவு நேரத்தில் சரியான நேரத்தில் உணவை சாப்பிடுதல் மிக முக்கியமானதாகும். நேரம் தவறி சாப்பிடுவதால் அவை உடல் ஆரோக்கியத்தை முழுவதுமாக பாதித்து ஆபாய நிலைக்கு தள்ளி விடும்.அந்த வகையில் ஒரு சில மணி நேரத்திற்கு பிறகு இரவு உணவை சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கான உண்மை காரணத்தையும், ஏன் அவ்வாறு சாப்பிட கூடாது என்பதையும் இந்த பதிவில் அறியலாம்.பொதுவாக இரவு நேர உணவை மிக விரைவிலே சாப்பிட்டு முடித்து விட வேண்டும். அதாவது, இரவு உணவை 7 மணிக்கு முன்னதாக சாப்பிட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு கூறுவதற்கு சில காரணிகள் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் உணவு சுழற்சி தான். அந்தந்த நேரத்திற்கு நாம் உணவை சாப்பிடவில்லை என்றால் அது முழு உடல் உறுப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமாம்.இரவு 7 மணிக்கு மேல் உணவை சாப்பிட்டால் செரிமான கோளாறுகள் உண்டாகும். மிக விரைவிலே செரிமானம் அடைவதற்கு 7 மணிக்கு முன்னதாக உணவை சாப்பிடுதல் நல்லது. அத்துடன் முழு கலோரிகளும் நமது உடலுக்கு கிடைக்கும்.இரவில் நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவு அதிகமாக இருந்தால் அவை நமது இதய ஆரோக்கியத்தை பாதித்து விடும். அத்துடன் வயிற்று உப்பசம், வாயு தொல்லை, உயர் இரத்த அழுத்தம் போன்ற பலவித பாதிப்புகளை இது ஏற்படுத்தும். எனவே, இரவு 7 மணிக்கு மேல் சாப்பிடும் பழக்கம் இந்த பாதிப்புகளில் ஏதேனும் ஒன்றை நமக்கு தர கூடும்.இரவில் மிக தாமதமாக உணவை சாப்பிடுவோருக்கு பல பாதிப்புகள் உண்டாகும் என அண்மைய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அவற்றில் மிக முக்கியமானவை மார்பக புற்றுநோயின் பாதிப்பு, சர்க்கரை அளவு அதிகரித்தல், இரத்த கொதிப்பு போன்றவை பாதிப்பு உருவாகுதல். இதனை தடுக்க இரவு 7 மணிக்கு முன்னதாக உணவை உட்கொள்ளுங்கள்.தூங்குவதற்கு முன்னர் சிறப்பான சம்பவத்தை சாப்பாட்டில் செய்து விட்டு தூங்கினால் ஆபத்து நமக்கு தான். ஆகையால் தூங்குவதற்கு முன் சாப்பிடுவதை தவிர்க்கவும். மேலும், 7 மணிக்குள் சாப்பிட்டால் நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வரும்.இரவில் நேரம் கடந்து சாப்பிடுவதால் மூளையின் செயல்பாடு பாதிக்கப்படும். இதனால் மூளை விழித்திருக்கும் நிலை ஏற்படும். இதே நிலை நீடித்தால் ஹார்மோன் உற்பத்தியும் பாதிக்கப்படும். இதனால் சிலருக்கு சீரற்ற முறையில் உறுப்புகள் செயல்பட ஆரம்பிக்கும்.இரவில் 7 மணிக்கு முன்னதாக சாப்பிட்டால் உடல் பருமனாகாது. நேரம் கடந்து சாப்பிடுவதால் உடல் எடை அபரிமிதமாக கூட தொடங்கி விடும். இது நாளுக்கு நாள் உயர்ந்து இதய நோய்கள், இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளையும் உண்டாக்கி விடும்.21 மார்ச் 2019
இரவில் நேரம் பிந்தி சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்!
ஒவ்வொரு உயிர் இனத்திற்கும் ஒரு தனிப்பட்ட உடல் அமைப்பு இருக்கும். இவற்றில் மனிதனுக்கு மிகவும் சிறப்பான உடல் அமைப்பு என்றே கூறலாம். காரணம் 3 வேளை சாப்பாடு, நல்ல ஓய்வு, சீரான வேலை... இவைகள் தான் மனித உடலுக்கு அவசியம் தேவைப்படுகிறவை. மற்ற எல்லாவற்றையும் காட்டிலும் உணவு தான் மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று. கண்ட நேரத்தில் உணவு சாப்பிட்டால் அது நமது உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். குறிப்பாக காலை மற்றும் இரவு நேரத்தில் சரியான நேரத்தில் உணவை சாப்பிடுதல் மிக முக்கியமானதாகும். நேரம் தவறி சாப்பிடுவதால் அவை உடல் ஆரோக்கியத்தை முழுவதுமாக பாதித்து ஆபாய நிலைக்கு தள்ளி விடும்.அந்த வகையில் ஒரு சில மணி நேரத்திற்கு பிறகு இரவு உணவை சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கான உண்மை காரணத்தையும், ஏன் அவ்வாறு சாப்பிட கூடாது என்பதையும் இந்த பதிவில் அறியலாம்.பொதுவாக இரவு நேர உணவை மிக விரைவிலே சாப்பிட்டு முடித்து விட வேண்டும். அதாவது, இரவு உணவை 7 மணிக்கு முன்னதாக சாப்பிட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு கூறுவதற்கு சில காரணிகள் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் உணவு சுழற்சி தான். அந்தந்த நேரத்திற்கு நாம் உணவை சாப்பிடவில்லை என்றால் அது முழு உடல் உறுப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமாம்.இரவு 7 மணிக்கு மேல் உணவை சாப்பிட்டால் செரிமான கோளாறுகள் உண்டாகும். மிக விரைவிலே செரிமானம் அடைவதற்கு 7 மணிக்கு முன்னதாக உணவை சாப்பிடுதல் நல்லது. அத்துடன் முழு கலோரிகளும் நமது உடலுக்கு கிடைக்கும்.இரவில் நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவு அதிகமாக இருந்தால் அவை நமது இதய ஆரோக்கியத்தை பாதித்து விடும். அத்துடன் வயிற்று உப்பசம், வாயு தொல்லை, உயர் இரத்த அழுத்தம் போன்ற பலவித பாதிப்புகளை இது ஏற்படுத்தும். எனவே, இரவு 7 மணிக்கு மேல் சாப்பிடும் பழக்கம் இந்த பாதிப்புகளில் ஏதேனும் ஒன்றை நமக்கு தர கூடும்.இரவில் மிக தாமதமாக உணவை சாப்பிடுவோருக்கு பல பாதிப்புகள் உண்டாகும் என அண்மைய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அவற்றில் மிக முக்கியமானவை மார்பக புற்றுநோயின் பாதிப்பு, சர்க்கரை அளவு அதிகரித்தல், இரத்த கொதிப்பு போன்றவை பாதிப்பு உருவாகுதல். இதனை தடுக்க இரவு 7 மணிக்கு முன்னதாக உணவை உட்கொள்ளுங்கள்.தூங்குவதற்கு முன்னர் சிறப்பான சம்பவத்தை சாப்பாட்டில் செய்து விட்டு தூங்கினால் ஆபத்து நமக்கு தான். ஆகையால் தூங்குவதற்கு முன் சாப்பிடுவதை தவிர்க்கவும். மேலும், 7 மணிக்குள் சாப்பிட்டால் நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வரும்.இரவில் நேரம் கடந்து சாப்பிடுவதால் மூளையின் செயல்பாடு பாதிக்கப்படும். இதனால் மூளை விழித்திருக்கும் நிலை ஏற்படும். இதே நிலை நீடித்தால் ஹார்மோன் உற்பத்தியும் பாதிக்கப்படும். இதனால் சிலருக்கு சீரற்ற முறையில் உறுப்புகள் செயல்பட ஆரம்பிக்கும்.இரவில் 7 மணிக்கு முன்னதாக சாப்பிட்டால் உடல் பருமனாகாது. நேரம் கடந்து சாப்பிடுவதால் உடல் எடை அபரிமிதமாக கூட தொடங்கி விடும். இது நாளுக்கு நாள் உயர்ந்து இதய நோய்கள், இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளையும் உண்டாக்கி விடும்.14 ஜூன் 2018
முருங்கைப் பூவின் மருத்துவ குணங்கள்!
முருங்கை மரத்தின் இலை, காய், பூ, பட்டை, பிசின், வேர் என இதன் அனைத்துப் பாகங்களும் பயன் தரக்கூடியவை.
முருங்கை இலையில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நீங்கும். முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். பித்த நீர் குறையும். வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.
இதையும் படியுங்கள்:
சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும் வழிமுறைகள்...!
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும்.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
கர்ப்பப் பை பிரச்னை, கருமுட்டைக் குறைபாடு, குழந்தையின்மைப் பிரச்னைகளுக்கு முருங்கைப் பூ நல்ல பலனளிக்கும்.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம்.15 ஏப்ரல் 2018
தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பதால் நன்மைகள் கிடைக்கிறது!
தேங்காய் எண்ணெயில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. தேங்காய் எண்ணெயை தினமும் இரவில் தூங்கும் முன் தொப்புளில் வைப்பதன் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கும்.
தேங்காய் எண்ணெய்யில் உள்ள மீடியம் செயின் ட்ரைகிளிசரைடுகள், வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவும்.
உடலின் வலிமை மற்றும் ஆற்றலை மேம்படுத்த உதவும்.
மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.
சளி தொல்லையில் இருந்து விடுபட உதவும்.
அடிவயிற்று வலியில் இருந்து விரைவில் விடுபட உதவும்.
முக்கியமாக மாதவிடாய காலத்தில் வயிற்று வலி அல்லது வாய்வால் ஏற்படும் வயிற்றுப் பிடிப்பில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
கண்களில் ஏற்படும் வறட்சியை சரிசெய்யும் மற்றும் மோசமான கண் பார்வையைத் தடுக்கும்.
இரவு நேரத்தில் தூக்கம் வராமல் சிரமப்படுபவர்கள் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும்.
23 மார்ச் 2018
தலைமுடியை பாதுகாக்கும் சீயாக்காய்!
சீயக்காய் என்பது நம் கூந்தலையும், தலைச்சருமத்தையும் பராமரிக்க காலம் காலமாக நாம் பயன்படுத்தி வரும் பொருட்களில் ஒன்றாகும். சீயக்காய் உங்கள் கூந்தல் மற்றும் தலைச்சருமத்திற்கும் சேர்த்து பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. சிறந்த சுத்திகரிப்பான் கூந்தலுக்கு ஒரு தலைசிறந்த இயற்கை சுத்திகரிப்பானாக செயல்படும். மேலும் ரசாயனம் கலந்த ஷாம்புவில் இருந்து, உங்கள் தலைச்சருமம் பாதுகாக்கப்படுகிறது.முடிக்கு நல்ல பாதுகாப்பு வழங்கும் பலர் இன்னும் கூந்தலுக்கு சோப்புகளை தான் பயன்படுத்துகின்றனர். அவை உங்கள் தலைச்சருமத்தை வறட்சியாக்கி, செபோர்ஹெயிக் டெர்மட்டிட்டிஸ் எனப்படும் அழற்சி நிலையை ஏற்படுத்துவதால், அவை கூந்தலுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை.
சீயக்காயில் பி.எச். அளவு குறைவாக இருக்கும். அதோடு சேர்த்து அது மிதமான தன்மையை கொண்டுள்ளதால், மென்மையான தலைச்சருமத்தை கொண்டவர்களும் கூட இதனை பயன்படுத்தலாம். இது தலைச்சருமத்தை வறட்சியாக்காது.
கண்டிஷனர் தேவையில்லை உங்கள் கூந்தலில் உள்ள அதிகப்படியான சிக்கலை நீக்கவும் சீயக்காய் உதவும். அதனால் சீயக்காய் பயன்படுத்திய பிறகு தனியாக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை.மயிர்கால்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வைட்டமின் டி மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துக்களை அளித்து, இது தலைச்சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
கூந்தலின் ஆரோக்கியம் மேம்படும் இது மற்ற மூலிகைகளை மற்றும் இயற்கை சாறுகளுடன் நன்றாக ஒன்றி விடும். அதனால் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு பயனாக அமையும்.
முடியின் நிறத்தை தக்க வைக்கும் கூந்தலுக்கு சாயம் போடுவதற்கு முன், அது இயற்கை சாயமாக இருந்தாலும் கூட, கூந்தலை சீயக்காய் கொண்டு கழுவ வேண்டும். இதனால் சாயம் அதிக நேரம் ஊறி, நீண்டு நிலைக்கும்.பொடுகை தடுக்கும் பொடுகை எதிர்த்து போராடவும் சீயக்காய் உதவுகிறது. பொடுகிற்கான சிகிச்சையை உரிய நேரத்தில் எடுக்கவில்லை என்றால் தற்காலிக முடி உதிர்தல் ஏற்படும்.17 மார்ச் 2018
வெறும் வயிற்றில் நீர்த்துப்பூசணி சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
நீர்த்துப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்கும்.ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும். நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு நீர்த்துப் பூசணிச் சாறு உடனடி பலனைத் தரும். அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனையை எதிர்த்துப் போராடவும் நீர்த்துப் பூசணிச் சாறு உதவும்.தினமும் காலையில் நீர்த்துப் பூசணி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.நீர்த்துப் பூசணி சாறை தினமும் காலையில் குடித்து வாருங்கள். இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்.உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள்,நீர்த்துப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில்தடுக்கலாம்.சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறுநீருட நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.நீர்த்துப் பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை,மாலை என இருவேளையில் குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால், எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.சிறு நீரகத்தில் தொற்று ஏற்பட்டு சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு நீர்த்துப்பூசணி சாறு நல்ல பலனைத் தரும். சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை அல்லது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக குணமாகும்.09 டிசம்பர் 2017
தலையில் நீர் சேர்வதை தடுக்க இலகு மருத்துவம்!
முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரசால், தலையில் நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லதுதான்,தலையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது.
தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது.
ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரும். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும்.தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.தலையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது. தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்று விரிவாகத் தெரியப்படுத்துகிறோம். அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார். இரண்டு சிறிய ஸ்பூன் அளவு மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்து தலையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும். அவ்வாறு பூசினால் தலையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிடும்.
21 நவம்பர் 2017
கொழுப்பை குறைக்கும் பூண்டுக் கஞ்சி!
நலமாக வாழ இயற்கையாக கிடைக்கும் காய் கறிகளையும் பழங்களையும் உண்டு வாழ்ந்தாலே போதும். ஆனால் நடைமுறை வாழ்வில் தற்போது அனுபவித்து வரும் செயற்கையான வாழ்க்கையால் அவதிபடுவதுதான் மிச்சம்.
உடல் எடையை குறைப்பதில் நாம் தினமும் வீட்டில் பயன்படுத்தும் பூண்டு எந்த அளவிற்கு உதவி செய்கிறது தெரியுமா ? இந்த கீழ்வரும் செய்முறையின் அடிப்படையில் பூண்டில் கஞ்சி செய்து தினமும் குடித்துவர, உடல் எடை மிக வேகமாகக் குறைய ஆரம்பிக்கும்.
பூண்டு கஞ்சி தயார் செய்யும் முறை:
தேவையான பொருள்கள்:
பூண்டு - 15 பல் (தோல் நீக்கப்பட்டது)
புழுங்கல் அரிசி - ஒரு கப் (வறுத்து, உடைத்தது)
சீரகம், மிளகு - தலா கால் டீஸ்பூன் (உடைத்தது)
வெந்தயக்கீரை - ஒரு கைப்பிடி அளவு
இந்துப்பு - தேவையான அளவு
மோர் - ஒரு கப்
தண்ணீர் - 4 கப்
செய்முறை:
உடைத்த புழுங்கல் அரிசி, பூண்டு, மிளகு, சீரகம், இந்துப்பு, வெந்தயக்கீரை, தண்ணீர் ஆகியவற்றை குக்கரில் சேர்த்து, மூடி 3 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் நன்கு மசித்து, மோர் சேர்த்து குடிக்கலாம்.
காலை, மாலை வேளைகளிலும் இதை சாப்பிடலாம். இதனை மதிய உணவில் நாம் இயல்பாகவே அதிக கலோரிகளை எடுத்துக் கொள்வோம். அதற்கு பதிலாக இந்த கஞ்சியைக் குடித்து வந்தால் பசியும் அடங்கும். குறைந்த கலோரியில் நிறைவான, சத்தான உணவைச் சாப்பிடவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நம் உடலில் அதிகரித்துள்ள கொழுப்பை ,அதிக அளவில் மெடபாலிசம் செய்து வெகுவாக குறைக்கிறது. அதுமட்டுமில்லாமல், ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்க செய்கிறது. புற்று நோய் வருவதை தடுகிறது. இது போன்ற பல நன்மைகள் இருக்கின்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)