பக்கங்கள்

02 நவம்பர் 2011

அதிக காலம் வாழ மகிழ்ச்சியாய் இருங்கள்.

எந்த நேரமும் மகிழ்ச்சியாய் இருப்பவர்களை மரணம் எளிதில் நெருங்குவதில்லை என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் மகிழ்ச்சி ஒன்றே குறிக்கோளாக கொண்டவர்கள் எந்த நோய்க்கும் ஆளாவதில்லை என்கின்றது அந்த ஆய்வு.
லண்டனில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்று இந்த ஆய்வினை மேற்கொண்டது. 52 முதல் 79 வயது வரை உடைய 4ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஐந்து ஆண்டுகளாக சோதனைக்கு உட்படுத்தியதில் நேர்மறை எண்ணத்துடன், மகிழ்ச்சியுடன் இருந்தவர்கள் அனைவரும் எந்த நோயுக்கும் ஆட்படாமல் ஆரோக்கியமாக இருந்தது தெரியவந்தது.
கவலையை விரட்டுங்கள்:
ஆய்வில் பங்கேற்றவர்களின் உடல்ஆரோக்கியம் குறித்து மருத்துவர்கள் சோதனை செய்தனர். வயது, பாலினம், மனஅழுத்தம், நோய்பாதிப்பு குறித்து 5 ஆண்டுகள் அவர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கவலைப்படுபவர்களை விட, மகிழ்ச்சியுடன் இருந்தவர்களுக்கு 35சதவிகித அளவிற்கு நோய் தாக்குதல் குறைந்துள்ளது தெரியவந்தது.
நேர்மறை எண்ணங்கள்:
நேர்மறை எண்ணம் கொண்ட வயதானவர்களை எந்த நோயும் தாக்குவதில்லை என்று ஆய்வு மேற்கொண்ட பேராசிரியர் ஆன்டூரு ஸ்டீயூ என்பவர் டெயில் மெயில் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த ஆய்வு முடிவினை நேசனல் அகாடமி ஆப் சயின்ஸ் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக