தலைவலி உடல்வலி என்று எதற்கெடுத்தாலும் வலி நிவாரண மாத்திரை உட்கொள்பவர்களா? நீங்கள் அப்படியானால் உங்களுக்குத்தான் இந்த கட்டுரை. சின்ன சின்ன வலிகளுக்கெல்லாம் வலிநிவாரண மாத்திரை எடுத்துக்கொண்டால் சிறுநீராக புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு சிலருக்கு மாத்திரை போடுவதென்பது சாக்லேட் சாப்பிடுவதைப்போல. தலைவலி, கால்வலி என்று தொட்டதற்கெல்லாம் மாத்திரை போட்டுக்கொள்வார்கள். மருத்துவர்கள் பரிந்துரைப்பதை விட தாங்களாகவே மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று வலிநிவாரண மாத்திரைகளை போட்டுக்கொள்பவர்களும் இருப்பார்கள்.
இப்படி அடிக்கடி வலி நிவாரண மாத்திரை உட்கொள்பவர்களுக்கு சிறுநீரக புற்றுநோய் ஏற்படும் என்று அபாயம் உள்ளதாக பாஸ்டனில் உள்ள ஹார்வார்டு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஹார்வார்டு மருத்துவக் கல்லூரி பேராசியர் இயாங்ஷோ தலைமையிலான குழுவினர் 1 லட்சத்து 25 ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்களில் 51 சதவிகிதம் பேர் சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
ஆபத்தை விளைவிக்கும் ஆஸ்பிரின்:
வலி நிவாரணி மாத்திரையான ஆஸ்பிரின், டிஸ்பிரின் போன்ற மாத்திரைகள் உடனடியாக வலியை போக்கினாலும் மெல்லக்கொல்லும் ஆபத்தை விளைவிப்பவை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வலி நிவாரணியாக அந்த மாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பித்தவர்கள் ஒரு கட்டத்தில் அந்த மாத்திரைக்கு அடிமையாகிவிடுகின்றனர். புகைப்பழக்கத்திற்கும், குடிப்பழக்கத்திற்கும் அடிமையாவதைப்போல வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்ளாமல் அவர்களால் காலம் தள்ள முடியாது. இதனால் எண்ணற்ற நோய் தாக்குதலுக்கும் ஆளாகின்றனர்.
சிறுநீராகம் செயல் இழக்கும்:
இந்த மாத்திரைக்கு அடிமையானவர்கள், மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி படிப்படியாக குறைந்து விடும் என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை. வாழ்நாளில் ஆயிரம் வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொண்டவர்கள் நிச்சயம் சிறுநீரக செயல் இழப்புக்கு ஆளாவார்கள் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
சில சமயம், நுரையீரல் தொடர்புடைய நோய் தாக்கும் ஆபத்தும் உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். ரத்தத்தை சுத்திகரிப்பது தடைபடுகிறது. வயிறு புண்ணாகி அல்சர் நோய் ஏற்படும். பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் மாற்றம் ஏற்படும். மேலும் காது இரைச்சல், தோல் நோய்கள், முடிகொட்டுதல், சீரற்ற இதயத்துடிப்பு போன்ற நோய்களும் ஏற்படும் என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை
சிறு குழந்தைகளுக்கு ஆபத்து:
கர்ப்பிணிப் பெண்கள் ஆஸ்பிரின் மாத்திரை உட்கொண்டால் அது குழந்தைகளையும் பாதிக்கும் என்பது ஆய்வாளர்களின் எச்சரிக்கை. சிறுவர்களுக்கு ஆஸ்ப்ரின், டிஸ்ப்ரின் போன்ற மாத்திரைகளை கண்டிப்பாக கொடுக்கக் கூடாது என்கின்றனர் ஆய்வாளர்கள். இதனால் நான்கு வயது குழந்தைகள் ஆஸ்பிரின் அல்லது டிஸ்பிரின் மாத்திரை உட்கொண்டால் நுரையீரல் செயல் இழப்பு ஏற்படும் என்பது மருத்துவர்களின் எச்சரிக்கையாகும். எனவே உடலில் வலி தோன்றினால் உடனே மாத்திரை சாப்பிடுவதை விட மருத்துவர்களை நாட வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் அறிவுரையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக