பக்கங்கள்

12 டிசம்பர் 2012

கரும்புள்ளிகளை நீக்க உதவும் எலுமிச்சை!

அனைவருக்குமே எலுமிச்சை எவ்வளவு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தப் பொருள் என்பது நன்கு தெரியும். அதிலும் இவை சருமத்திற்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இவை சருமத்தில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் எளிதில் நீக்கவல்லது. இதற்கு காரணம் இதில் உள்ள சிட்ரஸ் அமிலம் தான். ஆகவே அவ்வளவு நன்மையைத் தரும் எலுமிச்சையைப் பயன்படுத்தி பல அழகுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அதிலும் இந்த எலுமிச்சையால் தயாரிக்கப்படும் ப்ளீச் அல்லது ஸ்கரப் போன்றவற்றை செய்தால், சருமத்தில் அழுக்குகளால் உருவாகும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவற்றை நீக்கிவிடலாம். இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவற்றிற்கு பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதனால் அவர்கள், அழகு நிலையங்களுக்குச் சென்று ஃபேஷியல் செய்து கரும்புள்ளிகளை நீக்குகின்றனர். என்ன தான் அழகு நிலையங்களுக்குச் சென்று முகத்தை அழகு படுத்தினாலும், அதில் உள்ள கெமிக்கல் சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே எப்போதும் இயற்கைப் பொருட்களே சிறந்தது. அதிலும் எலுமிச்சை இதற்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும். இப்போது அந்த மாதிரியான கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா!!!

எலுமிச்சை ஸ்கரப்:
இந்த ஸ்கரப் செய்வதற்கு முன் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவிட வேண்டும். பின்னர் ஒரு துண்டு எலுமிச்சையை முகம் மற்றும் மூக்கின் பக்கவாட்டிலும் நன்கு தேய்க்க வேண்டும். ஏனெனில் பொதுவாக கரும்புள்ளிகளானது முக்கின் பக்கவாட்டில் தான் தங்கியிருக்கும். ஆகவே குறைந்தது 3-4 நிமிடமாவது தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை அதிக அளவில் கரும்புள்ளிகள் உள்ளவர்கள், ஒரு நாளைக்கு 2 முறை செய்வது நல்லது.

எலுமிச்சை சர்க்கரை ஸ்கரப்:
கரும்புள்ளிகளை நீக்க சிறந்த முறைகளில் எலுமிச்சை சர்க்கரை ஸ்கரப் சிறந்ததாக இருக்கும். இவ்வாறு சர்க்கரையுடன் கலந்து ஸ்கரப் செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்குவதோடு, முகப்பருக்களும் நீங்கிவிடும்.

எலுமிச்சை சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு:
இது ஒரு பொதுவான கரும்புள்ளிகளை நீக்க செய்யப்படும் இயற்கையான ஸ்கரப் மற்றும் மாஸ்க். இதற்கு எலுமிச்சை சாற்றுடன், முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து, நன்கு கலந்து கொண்டு, பின் அதனை முகத்திற்கு தடவி, காய வைத்து, பின் மாஸ்க் செய்தால் எப்படி உரித்து எடுப்போமா, அப்படி உரித்து எடுத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர்:
ரோஸ் வாட்டரை எலுமிச்சை சாற்றுடன் கலந்து, காட்டனில் நனைத்து, பின் முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 3-4 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும். மேற்கூறியவாறு எலுமிச்சையின் சாற்றை பயன்படுத்தினால், கரும்புள்ளிகளை நீக்குவதோடு, வெள்ளைப்புள்ளிகளையும் நீக்கிவிடும். அதிலும் இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலனை பெறலாம். முக்கியமாக எலுமிச்சை சாறு சருமத்தை வறட்சியடையச் செய்யும். ஆகவே எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்திய பின்னர் மறக்காமல் மாய்ச்சுரைசரை பயன்படுத்த வேண்டும்.

04 டிசம்பர் 2012

சருமம் பொலிவு பெற வேண்டுமா....?

வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு எப்போதும் தொந்தரவு இருக்கும். ஏனெனில் அப்போது சருமத்தில் ஒருவித கோடுகள் போன்ற தோற்றம் தெரியும். இதனால் முகம் பொலிவிழந்து காணப்படுவதோடு, அசிங்கமாக இருக்கும். மேலும் அந்த வறட்சியை போக்குவதற்காக சிறிது ஆலிவ் எண்ணெய் வைத்து மசாஜ் செய்தாலும், சருமம் அதிக எண்ணெய் பசையுடன் காணப்படும். இதனால் தான் இதற்கு மேக்-கப் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்வது. ஏனெனில் மேக்-கப் செய்வதால், அத்தகைய வறட்சியை போக்கலாம். சரி, இப்போது வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கான மேக்-கப் டிப்ஸ் என்னவென்று பார்ப்போமா!!! *எந்த வகையான சருமம் இருந்தாலும், மேக்-கப் போடுவதற்கு முன்பும் சரி, பின்பும் சரி முகத்தை நன்கு கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கிவிடும். அதேப் போல் மேக்-கப்பை இரவில் படுக்கும் முன்பும் நீக்கிவிட வேண்டும். ஏனெனில் அப்போது தான் சரும செல்கள் எளிதில் மூச்சுவிட முடியும். இல்லையெனில் மேக்-கப் போடுவதற்கு பயன்படுத்தும் அழகுப் பொருட்களில் இருக்கும் கெமிக்கல்கள் சரும செல்களை பாதிக்கும். *மேக்-கப் போடுவதற்கு 10-20 நிமிடத்திற்கு முன், கிளின்சிங் மில்க் வைத்து கிளின்ஸ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள், இறந்த செல்கள் நீங்கிவிடுவதோடு, சருமமும் ஈரப்பசையுடன் இருக்கும். பின்னர் கிளின்ஸ் செய்து காய வைத்தப் பின்னர், சிறிது நேரம் கழித்து, மேக்-கப் போட வேண்டும். இதனால் சருமம் வறட்சியின்றி எண்ணெய் பசையுடன் இருக்கும். *மேக்-கப் டிப்ஸில் வறட்சியை நீக்க சிறந்த வழி என்னவென்றால், அது ஃபௌண்டேஷனுடன் சிறிது மாய்ச்சுரைசரை சேர்த்து கலந்து தடவியப் பின், மேக்-கப் போட வேண்டும். ஒரு வேளை கிளின்சிங் மில்க் வைத்து செய்துவிட்டால், அதிகமான அளவில் மாய்ச்சுரைசரை ஃபௌண்டேஷனுடன் சேர்க்க கூடாது. *வறட்சியான சருமம் இருந்தால், கன்சீலரை பயன்படுத்தக் கூடாது. ஒருவேளை முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை மறைக்க வேண்டுமெனில் அப்போது, ஃபௌண்டேசனை விட லைட்டான நிறத்தல் இருக்கும் கன்சீலரைப் பயன்படுத்த வேண்டும். *மேக்-கப் போடுவதற்கு முன் ஜெல் பயன்படுத்துவதற்கு பதிலாக கிரீமி ப்ளஷ்ஷை பயன்படுத்த வேண்டும். அதிலும் மிகவும் லேசான நிறத்தில் கன்னங்களில் அவற்றை தடவ வேண்டும். *எப்போது சருமம் வறட்சியுடன் காணப்படுகிறதோ, அப்போது சருமத்திற்கு எந்த ஒரு பவுடரையும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அவை மேலும் சருமத்தை அசிங்கமாக காண்பிக்கும். ஒரு வேளை மாய்ச்சுரைசர் வேலை செய்யவில்லை என்றால், அப்போது மிகவும் லேசாக மேக்-கப் போட்டாலே போதுமானது. இவையே வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கான சில மேக்-கப் டிப்ஸ்.

11 நவம்பர் 2012

மன இறுக்கத்தை தவிர்க்க..!

வீட்டு வேலை, அலுவலக வேலை, குழந்தைகள் பராமரிப்பு போன்றவற்றில் சிக்கி பெரும்பாலும் பெண்கள் மன இறுக்கத்திற்கு ஆளாகின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்து பிரச்சினைகளை எதிர்நோக்கும் போதும், ஒரே நாளில் பல்வேறு சூழ்நிலைகளைக் கையாள வேண்டிய நிலையில் இருக்கும்போதும், மனதை அமைதிப்படுத்த, தனக்கென செலவழிக்க சில நிமிட நேரங்கள் கூட கிடைக்காத நிலையில்தான் மன இறுக்கம் ஏற்படுகிறது. மன இறுக்கத்திற்கு மற்றுமொரு முக்கியக் காரணம், பிரச்சினையை, மன அழுத்தத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளாததும் ஆகும். சில நோய்களும் மன இறுக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நோயின் தாக்கம், நோயின் பக்க விளைவுகள் போன்றவற்றால் மன இறுக்கம் ஏற்படுகிறது. மன இறுக்கம் ஏற்படும்போது எதிலும் மனம் ஒன்றிச் செயல்பட முடியாது. எதிலும் ஆர்வம் இருக்காது. எல்லோர் மீதும் எரிந்து விழுவோம். தலை வலி, வயிற்று வலி, கோபம் போன்றவை ஏற்படுவதாக உணர்வோம். மன இறுக்கத்தால் இதயம் மறைமுகமாக பாதிக்கப்படுகிறது. மன இறுக்கத்தில் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள்தான் எளிதில் போதைப் பொருளுக்கு அடிமையாதல், கெட்ட நண்பர்கள் சேர்க்கை, தற்கொலை முயற்சி, சூழ்நிலையை தவிர்க்க ஓடிப்போதல், தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளுதல் போன்றவை நிகழ்கிறது. மன இறுக்கத்தைத் தவிர்க்க பிரச்சனைகள் ஏற்படும் போது அதை மனதிற்குள் வைத்துக்கொள்ளாமல் யாராவது ஒருவரிடம் பகிர்ந்து கொண்டால் நல்லது.

03 செப்டம்பர் 2012

கவலைப்படாதீங்க,மன அழுத்தத்தை விரட்டலாம்!

இன்றைய காலத்தில் அதிக மக்கள் மனஅழுத்தத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மன அழுத்தம் வேறு எங்கு இருந்தும் வருவதில்லை, நாம் செய்யும் செயல்களைப் பொறுத்தே மனஅழுத்தம், உளைச்சல் போன்றவை ஏற்படுகிறது. அதிலும் தற்போது அதிக வேலைப்பளு பலருக்கு உள்ளது. இதன் காரணமாகவும் மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்படுகிறது. அதிலும் பெண்களே அதிக அளவில் இந்த பிரச்சனைக்கு ஆளாகின்றனர். ஆகவே அத்தகைய மன அழுத்தத்தை குறைக்க, சரிசெய்ய என்ன செய்ய வேண்டுமென்று உளவியல் நிபுணடர்கள் கூறுகின்றனர் என்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்... மனஅழுத்தத்தை விரட்டும் வழிகள்: * எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு மனஅழுத்தம், மன உளைச்சல் மற்றும் மன இறுக்கம் போன்றவை ஏற்படாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகவே எதையுமே சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், சிரித்துக் கொண்டு ரிலாக்ஸ் ஆக இருந்தால், மன அழுத்தம் வருவதைத் தடுக்கலாம். * வாரத்திற்கு ஒரு முறை தலைக்கு மற்றும உடலுக்கு நன்கு எண்ணெய் வைத்து, மசாஜ் செய்து குளிக்க வேண்டும். அதிலும் வீட்டில் பூஜைக்கு அல்லது தலைக்கு வைக்க பூக்களை வாங்குவீர்கள். அதில் சிறிது பூக்களை கொதிக்கும் தண்ணீரில் போட்டு மூடி வைத்துவிட்டு, பின்னர் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்தால், அதன் நறுமணத்திற்கு மன அழுத்தம் குறைந்து, மனதும் சற்று ரிலாக்ஸ் ஆகும். * மன அழுத்தம் ஏற்பட மற்றொரு காரணம், தன் மனதில் இருக்கும் பிரச்சனை மற்றும் கஷ்டத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதது ஆகும். உங்களுக்கு ஏற்படும் பிரச்சனையை உங்கள் உயிர் தோழனிடம் மனம் விட்டு பேசிப்பாருங்கள், அப்போது உங்களுக்கே மனதில் இருக்கும் பாரத்தை இறக்கி வைத்துப் போல் இருக்கும். மனம் குதூகலத்துடன் காணப்படும். * மனம் கஷ்டமாக இருக்கும் போது, பிராணயாமம் என்னும் மூச்சுப் பயிற்சியை செய்தால், மன இறுக்கம் குறையும். இல்லையென்றால் கடினமான உடற்பயிற்சி அல்லது வேகமாக நடப்பது போன்றவற்றையும் செய்யலாம். அதனால் உடலுக்கு மட்டும் ஆரோக்கியமானதல்ல, மனதிற்கும் தான். * சிகரெட், மதுபானம் போன்றவையும் மனஅழுத்ததிற்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகவே அதனை குறைப்பது நல்லது. ஏனெனில் அதில் இருக்கும் பொருள் மன உளைச்சலை ஏற்படுத்தும் ஹார்மோன்களோடு தொடர்புடையது. * எதைப் பற்றியும் எப்போதும் யோசித்துக் கொண்டிருக்க வேண்டாம். அதிலும் முக்கியமாக நாளை என்ன நடக்கும் என்பதைப் பற்றி நினைத்து கவலைப்படக்கூடாது. இவ்வாறு யோசித்தால், இரவில் நிம்மதியான தூக்கம் ஏற்படாமல், உடலும் மனமும் பாதிக்கப்படும். ஆகவே எப்போதும் ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும். வேலை இல்லாத நேரத்தில் மனதிற்கு அமைதியைத் தரும் பாடல்கள் அல்லது பிடித்த பாடல்களை கேட்டலாம். இவற்றாலும் மனஇறுக்கம் குறையும். நண்பர்களே! மனஅழுத்தம் ஏற்பட்டால், இதயம் மறைமுகமாக பாதிக்கப்படும். ஆகவே எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

21 ஆகஸ்ட் 2012

தலைவலிக்குதா? தேன் சாப்பிடுங்க!

headacheகண் திறந்து பார்க்க முடியாத அளவிற்கு சில நேரங்களில் தலைவலி உயிர் போகும். தலைவலிக்கான காரணத்தை கண்டறிவது என்பது அப்போதைக்கு இயலாத காரியம். உடனடியாக என்ன நிவாரணம் கிடைக்கும் என்பதையே மனது தேடும். தலைவலிக்கு தேன் சிறந்த நிவாரணம் தரும் மருந்து என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களின் மூலமும் எளிதில் தலைவலியை போக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தலைவலிக்கு தேன் மிகச்சிறந்த நிவாரணம் தரும் மருந்து. சீன மருத்துவத்தில் தலைவலிக்கு சிகிச்சை அளிக்கும் போது தேன் அதிகம் பயன்படுத்துகின்றனர். வெது வெதுப்பான நீரில் தேன் கலந்து கொடுப்பது சீன மருத்துவர்களின் வழக்கம். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கிறதாம். இங்கிலாந்தில் வேதியியல் பிரிவு அறிவியலாளர்கள் ஜான் எம்ஸ்லே என்ற அறிஞர் தலைமையில் தேன் பற்றி சில ஆய்வுகள் மேற்கொண்டனர். அதில் தேனில் பிரக்டோஸ் என்ற வேதிபொருள் உள்ளது. இது குடிபோதையில் உள்ளோருக்கு ஏற்படும் தலைவலி, மூச்சு திணறல் மற்றும் வாந்தி வருதல் போன்ற சிக்கல்களில் இருந்து விடுவிக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். ஆல்கஹால் உட்கொள்வோர் உடலில் அசிட்டால்டிஹைடு என்ற வேதிபொருள் உற்பத்தி ஆகிறது. இதுதான் தலைவலி ஏற்படுவதற்கு காரணமாகிறது. இதனை தேனில் உள்ள பிரக்டோஸ் என்ற வேதிபொருள் அசிட்டிக் அமிலமாக மாற்றுகிறது. பின்னர் அது கார்பன் டை ஆக்சைடாக மாறி சுவாசத்தின் போது எளிதாக வெளியேறுகிறது. அதனால் குடிபோதையால் தலைவலி என முணுமுணுப்பவர்கள் நேரடியாக தேனை எடுத்து கொள்ளலாம். ஆல்கஹால் அளவு அதிகமாக காணப்படும் ஜின் போன்றவற்றை உட்கொண்டால் தூங்க செல்வதற்கு முன் ஒரு கப் பால் குடித்தால் நன்மை கிடைக்கும். பொதுவாக ஆல்கஹால் உடலிலுள்ள நீரின் அளவை குறைத்து விடும் இயல்புடையது. அதனால் தூங்க செல்வதற்கு முன் ஒரு கப் நீர் அருந்திவிட்டு படுக்க செல்வதும் நலம் தரும் என கூறுகின்றனர் ஆய்வாளர்கள். தேன் தவிர எலுமிச்சை, புதினா, போன்ற பொருட்களும் தலைவலிக்கு நிவாரணம் தரும் மருந்தாக செயல்படுகின்றன. எலுமிச்சையும், தேனும் கலந்து தண்ணீர் சேர்த்து ஜூஸ் சாப்பிடுவது தலைவலிக்கு சிறந்த மருந்தாக அமையும். எலுமிச்சையை பிழிந்து தலையில் பற்று போட்டால் தலைவலி சிறிதுநேரத்தில் குணமடையும். புதினா சிறந்த இயற்கை மருந்தாக செயல்படுகிறது. புதினா இலையை டீ போட்டு குடித்தால் தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும். வயிறு காலியாக இருந்தாலும் தலைவலி வரும் எனவே சரியான நேரத்திற்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுங்கள். வயிறு நிரம்பினால் தலைவலி சரியாகிவிடும். எதிர்மறை எண்ணங்களும், மன அழுத்தமும் தலைவலியை ஏற்படுத்தும். எனவே நேர்மறையாக எண்ணுங்கள் தலைவலி குணமடையும். அதிகமாக தலைவலித்தால் வெதுவெதுப்பான நீரில் பருத்தி துணியை நனைத்து தலைக்கு ஒத்தடம் கொடுப்பதன் மூலம் தலைவலி குணமடையும். தலைவலிக்கு சிறந்த தீர்வு ஓய்வுதான். எதைப்பற்றியும் கவலைப்படாமல் கண்களை மூடி ரிலாக்ஸ் ஆக ஓய்வு எடுங்கள். கட்டை விரலால் தலையை அழுத்தி பிடித்துக் கொண்டிருப்பதன் மூலம் தலைவலி குணமடையும். கழுத்து, தலை என மெதுவாக மசாஜ் செய்வதன் மூலம் தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

13 ஜூலை 2012

முகத்தில் மச்சம் இருக்கிறதா?

ஒரு சிலருக்கு மச்சங்கள் பிறப்பிலேயே இருக்கும். அதனை அதிர்ஷ்டம் என்று சொல்வர். சிலருக்கு தேவையில்லாமல் ஏகப்பட்ட இடங்களில் மச்சம் இருக்கும். அழகைக் கெடுக்கும் வகையில் கூட அவை இருக்கும். ஆனால் மச்சத்தை விரட்டுவது சாதாரண காரியமன்று. இருப்பினும் முறையான மருத்துவ நடைமுறைகளைப் பின்பற்றினால் மச்சத்தையும் கூட அகற்ற முடியும். நமது தோலில் உள்ள மெலனோசைட் எனப்படும் நிற செல்கள் ஒரு இடத்தில் அதிகமாக சுரந்தால் சேர்ந்தால் வருவதுதான் மச்சம். அதேசமயம், அதிக அளவில் சேர்ந்தால் அதாவது மச்சம் வளர்வது போலத் தெரிந்தால் அதை உடனே கவனிக்க வேண்டும். காரணம் அது தோல் புற்றுநோயாக இருக்கலாம். இத்தகைய மச்சங்களை எளிமையான வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி ஈஸியாக நீக்கலாம்.
1. கொத்தமல்லி இலையை நன்கு அரைத்து, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் போல் செய்து, மச்சம் உள்ள இடத்தில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து, பின்பு கழுவலாம். இதனை தினமும் செய்து வந்தால் ஒரு நல்ல பலன் கிடைக்கும். 
2. பூண்டு மற்றும் கிராம்பை சற்று அரைத்து மச்சம் உள்ள இடத்தில் வைத்து 30 நிமிடம் கட்டிவிட வேண்டும். இவ்வாறு தினமும் செய்தால் மச்சமானது மறையலாம். 
3. வெள்ளை எருக்கு செடியின் சாற்றை மச்சம் இருக்கும் இடத்தில், இரவில் படுக்கும் முன் தடவி படுக்க வேண்டும். பின் காலையில் எழுந்து அதனை மறக்காமல் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பருக்களானது நாளடைவில் மறையும். 
4. பேக்கிங் சோடாவுடன் சிறிது ஆமணக்கெண்ணெயை ஊற்றி பேஸ்ட் போல் செய்து, படுக்கும் போது தடவி, காலையில் கழுவ வேண்டும். 
5. மச்சம் உள்ள இடத்தில் ஆமணக்கெண்ணெயை வைத்து தினமும் இரண்டு முறை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் மச்சமானது மென்மையடைந்து, சருமத்தில் இருந்து போய்விடும். மேலும் இது அரிப்பையும் தடுக்கும். 
6. முருங்கையின் சதைப்பகுதியை எடுத்து அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு பேஸ்ட் செய்து, மச்சத்தின் மீது தடவ வேண்டும். முக்கியமாக அந்த கலவையை தேய்க்கக் கூடாது. 
7. மச்சத்தை வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவ வேண்டும். பிறகு ஆப்பிள் சாற்றை காட்டன் கொண்டு தடவ வேண்டும். பிறகு அதனை காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், மச்சம் காணாமல் போய்விடும். இவ்வாறெல்லாம் செய்து வந்தால், உடலில் அதிகமாக இருக்கும் மச்சத்தை நீக்கி அழகைக் கூட்டுவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.

25 ஜூன் 2012

கருவில் இருக்கும் குழந்தையிடம் பேசலாம்!

கருவில் இருக்கும் குழந்தையானது இந்த உலகத்தை பார்க்கத்தான் 10 மாதங்கள் வேண்டும். ஆனால் இந்த குழந்தை வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தாயுடன் வாழ்ந்து தான் வருகிறது. தாயானவள் ஒவ்வொரு நாளும் இந்த குழந்தையின் அசைவையும் உணருவாள். மருத்துவ ஆய்வின் படி, குழந்தைக்கு 16 வாரத்திலேயே கேட்கும் திறன் வந்துவிடுமாம். மேலும் இதனால் எல்லாவற்றையுமே புரிந்து கொள்ளவும் முடியுமாம். ஆகவே அப்போது குழந்தையிடம் தாயானவள் என்னென்ன செய்ய வேண்டும், எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று மகப்பேறு மருத்துவர் கூறுகிறார். அது என்னென்னவென்று படித்து பாருங்களேன்... கருவில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதற்கு சில டிப்ஸ்... 1. முதலில் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லக் பெயரை வைத்து பேசலாம். நிறைய பெற்றோர்களுக்கு என்ன குழந்தை என்று தெரியாமல் எப்படி பெயர் வைப்பதென்று ஒரு சந்தேகம் வரும். ஆனால் இதற்கு ஒரு வழி இருக்கிறது. அது தான் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லப் பெயரை, அதாவது இரு பாலினத்திற்கும் பொதுவான ஏதேனும் ஒரு செல்லப் பெயரை வைத்து அழைக்கலாம். வேண்டுமென்றால் இந்த பெயரை பிறந்த பிறகு மாற்றிக் கொள்ளலாம். 2. தாயானவள் முதலில் குழந்தையிடம் பேச வேண்டும். இது ஒரு பழைய நம்பிக்கை தான், இருப்பினும் குழந்தைக்கு தாயின் குரலானது மிகவும் பிடிக்கும். அப்படி பேசுவதால் குழந்தையானது அமைதியுடன், தாயின் குரலைக் கேட்டுக் கொண்டு நிம்மதியாக இருக்கும். மேலும் இப்படி பேசுவதால் பிறக்கும் போது அழும் குழந்தை கூட தாயின் குரலை கேட்டதும் அழுகாமல் இருக்கும். 3. கர்ப்பமாக இருக்கும் பெண் பாட்டு கேட்டால் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு மென்மையான பாட்டுக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே வீட்டில் ஏதேனும் ஒரு மென்மையான பாட்டை ப்ளேயரில் போட்டு, ஹெட் செட்டை வயிற்றில் வைக்கலாம். அப்படி பாட்டுக்களை கேட்கும் போது குழந்தை வயிற்றில் உதைத்தால் அது சந்தோஷத்தில் நடனம் ஆடுகிறது என்று அர்த்தம் ஆகும். 4. மேலும் குழந்தை கருவில் இருக்கும் போது எப்போதும் பாசிடிவ்-ஆகவே யோசித்து பேச வேண்டும். இதனால் குழந்தையானது பிறந்த பின்னும் எப்போதும் பாசிட்டிவ்-ஆகவே யோசிக்கும். மேலும் தாயானவள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதனால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும். 5. அனைத்து தாய்க்கும் குழந்தை வயிற்றில் உதைக்கும் போது கணவர் அதை உணர வேண்டும் என்று நினைப்பர். அப்படியே அவர்களது கணவரும் ஆசைபடுவர். ஆகவே அப்படி உதைக்கும் போது, குழந்தையின் தந்தையும் குழந்தையிடம் அடிக்கடி பேச வேண்டும். அப்போது தான் தாய்க்குப் பின் தந்தை தூக்கினாலும் குழந்தை இது தான் தந்தை என்பதையும் புரிந்து கொள்ளும். மேலும் இவ்வாறு அந்த குழந்தை உதைக்கும் போது தந்தை அதை நன்கு உணர, அவருக்கும் அந்த பிரசவத்தின் அற்புதமும் நன்கு புரியும். எனவே, இப்படியெல்லாம் நடந்து பாருங்கள், குழந்தை ஆரோக்கியமாக புத்திக்கூர்மையுடன் பிறக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

03 ஜூன் 2012

கோபத்தோடு தாய்ப்பால் கொடுக்காதீங்க!

After Angry Breast Feeding Baby Is Worst கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்த பாலையே நஞ்சாக்கி, குழந்தை இறக்கும் வாய்ப்பை கூட ஏற்படுத்துகிறதாம். எனவே தாய்மார்கள் பாலூட்டும் போது அமைதியான சூழ்நிலையில் தாய்ப்பாலுட்ட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். கோபம் என்பது ஒரு உணர்வு. எரிச்சல், மனக்கடுப்பு, வருத்தம், சீற்றம், ஆத்திரம், ஆவேசம், பெரும்சினம் இவை எல்லாம் கோபத்தின் பெருவகைகள். கோபம் என்பது ஒரு சில இடங்களில் அவசியம்தான் அதேசமயம் எதற்கெடுத்தாலும் கோபம், எப்போதும் கோபம் என்று இருக்கக் கூடாது. கோபம் ஏற்படும் போது மனதை அமைதியாக வைத்திருக்க பழகவேண்டும். கோபம் வரக்கூடாது. வந்தாலும்கூட நீண்ட நேரம் இருக்கக் கூடாது. அவ்வாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கோபம் உடனே மறைந்து விட வேண்டும். திரும்ப திரும்ப பேசியதைப் பேசி கேட்பவரையும் கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்று தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடாது. கோபம் உடலில் பல கெடுதல்களை ஏற்படுத்துகிறது. கோபத்தோடு தன் குழந்தைக்கு தாய்பால் அந்த கோப உணர்ச்சியானது பாலையே நஞ்சாக்கிவிடுமாம்.கோபத்தினால் நம்முடைய சக்தி வீணாகிறது. நரம்பு மண்டலம் முழுவதும் சீர்குலைகிறது. உடல் பதறுகிறது. உடலில் சோர்வு ஏற்படுகிறது. மறுபடியும் உடல் தன்னிலைக்கு வர பல மணி நேரங்கள் ஆகின்றன. எனவே உங்கள் உடலை நோய்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ளவும். தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கவும் கோபம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். கோபம் வரும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் நம்முடைய மூச்சுக்காற்றை கவனிக்க வேண்டும். மூச்சு உள்ளே போவதையும், வெளியே வருவதையும் சில நிமிடங்கள் கவனித்து வந்தீர்களானால் கோபம் வராது வந்தாலும் அடங்கிவிடும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் கோபத்தை கட்டுப்படுத்த தியானம் சிறந்த வழி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

04 மே 2012

நகங்களைப் பராமரிக்க!


Tips Strong Healthy Nails 001089அழகு என்றால் முக அழகை மட்டும் குறிக்காது, நக அழகையும் குறிக்கும். முக அழகுக்கு நேரம் செலவிடும் பெண்கள் ஒரு சில நிமிடங்கள் கூட தங்கள் கை விரல்களுக்கோ அல்லது நகங்களுக்கோ செலவிடுவதில்லை. விரல்கள் அழகாக இருக்க வேண்டுமென்றால் நகங்கள் அழகாக இருக்க வேண்டும். நகங்கள் அழகாக இருக்க நகங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.

நகங்களைப் பராமரிக்க இதோ சில டிப்ஸ்!

நகங்கள் எளிதில் உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களைச் சாப்பிட வேண்டும்.
சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், அடிக்கடி நகங்கள் உடையாமல் உறுதியாகும்.
விரல்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க, தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களை சிறிது நேரம் வைக்க வேண்டும்.
நெயில் பாலீஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது நகத்திற்கு தீங்கு விளைவிக்கும். நெயில் பாலீஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்துவது நல்லது.
ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள்.
கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும்.
மேலும் பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினால் நகம் பொலிவுடன் காணப்படும். மாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து நகங்களைத் தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில் காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் சுத்தமாகும்.

24 மார்ச் 2012

இரைப்பையில் புண் ஏற்படக்காரணம்!


1) எளிதில் ஜீரணமாகாத உணவுப் பொருட்களை அளவிற்கு அதிகமாக உண்பது.

2) பட்டினி கிடப்பது.
3) குறிப்பிட்ட நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் நேரம் தவறி சாப்பிடுவது.
4) மிகச் சூடான பானங்களை அருந்துவது
5) சூடான உணவுப் பொருட்களை உண்பது.
6) காரமான மசாலா கலந்த உணவுகளை உண்பது
7) சத்தான உணவுவகைகளை அதிகமாக உணவில் சேர்க்காதது.
8) குடலில் கிருமி உடையவர்கள்
9) மது அருந்துதல், புகை பிடித்தல், புகையிலை முதலியவைகளை அளவிற்கு அதிகமாக பயன்படுத்துதல்
10) கல், மண், தூசி மற்றும் கலப்படங்கள் கலந்த அசுத்தமான உணவுகளை உண்பது.
11) சில வகை மருந்துகளை வெகுகாலமாக மருத்துவரின் ஆலோசனை யின்றி உண்பது
மேலும் அதிக கவலை, மன அழுத்தம், கோபம் கொள்வது போன்றவைகளிலும் அல்சர் ஏற்படுகிறது. `நொறுங்கத் திண்ணவனுக்கு நூறு வயது' என்பார்கள். ஆனால் இன்றைய வாழ்க்கையில் யார் அமைதியாக உட்கார்ந்து மென்று தின்கிறார்கள். யாரும் சரியான நேரத்தில் உணவு உண்பதில்லை. இரவுக்கு கடைகளில் இரண்டு மணிக்கு கூட உண்பவர்களைப் பார்க்கிறோம். அதனால் நாம் ஓய்வு கொடுக்காத வயிறு நமக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுகிறது.

14 பிப்ரவரி 2012

சொக்லேட் சாப்பிடுங்க இளமையுடன் இருங்க.

நல்ல விசயம் செய்வதற்கு முன் இனிப்பு சாப்பிடச்சொல்லி அம்மா சொன்னாங்க. இது சமீபத்தில் அனைவரையும் கவர்ந்த ஒரு விளம்பரத்தின் வாசகம்.
சாக்லேட் சாப்பிடவேண்டும் என்று இந்த விளம்பரம் கூறினாலும், தினமும் சிறிதளவு டார்க் சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நோய்களை தடுக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
இளமை தோற்றம்:
குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் விருப்பம். ஆனால் அவை பற்களை பாதிக்கும் என்று பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளை சாக்லேட் உண்ண அனுமதிப்பதில்லை. மேலும் கொழுப்பை அதிகரித்து உடல் எடையை அதிகரிக்கும் என்பது பெரும்பாலானோரின் கருத்து.
ஆனால் தினமும் ஏழு கிராம் டார்க் சாக்லேட் உண்பதன் மூலம் இதயநோய் மற்றும் கேன்சரில் இருந்து காப்பாற்றிக்கொள்வதோடு இளமையான தோற்றத்தைப் பெறமுடியும்.
மனதை சுறுசுறுப்பாக்கும்:
சாக்லேட்டில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடன்டஸ் வயதாவதை தடுப்பதோடு, ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கின்றன.
உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் தினமும் சிறிய அளவில் டார்க் சாக்லேட் உண்பதன் மூலம் ரத்த அழுத்ததை குறைக்க முடியும். மேலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தேவையற்ற கொழுப்பை 10 சதவிகிதம் வரை குறைக்கிறது.
இதில் உள்ள செரோடோனின் என்ற மூலப்பொருள் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்கி உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக்கும் ஆற்றலும் டார்க் சாக்லேட்டிற்கு உண்டு.
கோகோவின் நன்மைகள்
சாக்லேட் தயாரிக்கப் பயன்படும் கோகோவில் காணப்படும் பாலிஃபினைல், நுரையீரல் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. இந்த குணநலன்கள் எல்லாம் சாதா சாக்லேட்டில் கிடையாது.
75 சதவிகிதம் கோகோ சேர்த்து செய்யப்பட்ட டார்க் சாக்லேட்டில் மட்டுமே இத்தனை மருத்துவ குணங்களும் உள்ளன எனவே வீட்டில் தயார் செய்யப்படும் டார்க் சாக்லேட்டை உட்கொள்வது சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள்.

04 பிப்ரவரி 2012

கைபேசியில் சதா பேசும் கர்ப்பிணிகளுக்கு முரட்டுப்பிள்ளை பிறக்கும்!

கர்ப்பிணிகள் செல்போன் உபயோகித்தால் குழந்தைகளில் நடத்தையில் மாற்றம் ஏற்படும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் முரடர்களாக மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் கர்ப்பிணிகள் செல்போன் உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
குழந்தைகள் நலனுக்கும், மொபைல்போனுக்கும் உள்ள தொடர்பு பற்றி அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
7 வயதான 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களும், அவர்களின் பெற்றோரும் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அதேபோல், 1996 முதல் 2002 வரை கர்ப்பமடைந்த பெண்கள் பற்றியும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. ஒரு லட்சம் பேரிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், கர்ப்பமடைந்த பெண்கள் தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தினால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது தெரிய வந்தது.
முரட்டுத்தனம் அதிகரிப்பு
ஆய்வில் பங்குபெற்ற 3 சதவீத குழந்தைகள் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்; உடல் பருமன், எளிதில் உணர்ச்சி வசப்படுதல் போன்ற பாதிப்புகளையும் கொண்டிருந்தனர். சில சமயம் முரடர்கள் போல் நடந்து கொண்டனர். இதற்கு சிறுவர்களின் தாய் கர்ப்பமாக இருந்த காலத்தில், தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தியது தான் காரணம் என தெரிய வந்துள்ளதாக ஆய்வுக்குழுத் தலைவர் லீகா கெய்பட்ஸ் கூறியுள்ளார். இதனை அந்த குழந்தைகளில் பெற்றோரும் ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே கர்ப்பகாலத்தில் பெண்கள் மொபைல்போன் பயன்படுத்தினால், அவர்களின் குழந்தைகள் முரட்டுத்தனம் கொண்டவர்களாக மாறும் வாய்ப்பு உள்ளது' என்று கண்டறியப்பட்டுள்ளது.
எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் மொபைல்போன் உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எனினும், இதுகுறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் ஆய்வாளர் லீகா கூறியுள்ளார்.

30 ஜனவரி 2012

பிரசவ வலியை ஆண்களும் அனுபவிக்கிறார்களாம்!

கர்ப்பிணி மனைவியை கொண்ட ஆண்கள் தாமும் கர்ப்பகால வேதனையை அனுபவிக்கின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் நாப்பி தயாரிப்பு நிறுவனமொன்று இந்த ஆய்வினை மேற்கொண்டது. 16 முதல் - 55 வயதுடைய 2000 த்திற்கும் அதிகமான ஆண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
உடலியல் மாற்றங்கள்:
தந்தையாகப் போகும் 23 வீத ஆண்கள் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும், உடல் உடலியல் மாற்றங்களை கொண்டவர்களாகவும் காணப்படுகின்றார்கள் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவர்களில் 26 சதவீதமானோர் மனநிலை மாற்றங்களுக்குள்ளாகினர். 10 சதவீதமானோர் உணவு ஒவ்வாமைக்கு ஆளானார்கள். 6 சதவீதமானோர் வாந்தியெடுத்தார்கள். 3 சதவீதமானோர் கற்பனையான பிரசவ வலியை அனுபவித்தனர்.
மசக்கை உணர்வு:
மனைவி கர்ப்பமாக இருக்கும் காலத்தில் சில கணவர்கள் அழுதல், மனநிலை மாற்றத்திற்குள்ளாதல், வாந்தியெடுத்தல் ஆகியவற்றுடன் கர்ப்ப வலிகளையும் அனுபவிக்கின்றனராம். இந்த ஆய்வுகுட்படுத்தப்பட்ட தந்தையாகப் போகும் ஆண்கள், ஊறுகாய், தக்காளி, தோடம்பழம் போன்ற புளி உணவுகளில் விருப்பம் கொண்டவர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தையுடன் பிணைப்பு:
தந்தையாகப் போகும் ஆண்கள் தங்களது துணைவியின் கர்ப்பத்துடன் மிக நெருக்கமாகிவிடுவதுடன் ஆண்களில் பலர் கர்ப்பிணிகளைப் போன்று உணவு ஒவ்வாமை மற்றும் சுகவீனம் போன்ற கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் உபாதைகளின் அறிகுறிகளையும் வெளிப்படுத்துகின்றனராம். தங்களது துணைவி கர்ப்பிணியாக இருக்கும்போது அதிக உணர்வுபூர்வமானவர்களாக விளங்குவதே இந்த ஆச்சரியமான நிலைக்கு காரணம் எனவும் அவர்கள் கூடுதலாக கர்ப்பிணிகளுக்கான வகுப்புகள் மற்றும் ஸ்கேன் சோதனைகளுக்கு செல்வதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவத் தாதியாக பணிபுரியும் மேரி ஸ்டீன் என்பவர், கர்ப்பத்தின் 12-14 ஆவது வாரங்களில் ஸ்கேன் சோதனைகளின்போது கணவர்களும் வருவதாகவும் அவர்கள் கர்ப்பிணிகளுக்கான வகுப்புகளிலும் கலந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார். 'இந்த விசயத்தில் ஆண்கள் இவ்வாறு ஈடுபடுவது குழந்தையுடனான அவர்களின் பிணைப்பை அதிகரிக்கிறது. அத்துடன் தமது துணைவியின் அனுபவங்கள் பற்றியும் அதிகம் அறிந்துகொள்கின்றனர்' என அவர் கூறியுள்ளார்.
நெருக்கம் அதிகரிப்பு:
தனது மனைவி கர்ப்பிணியாக இருந்தபோது அப்பிள் மார்மைட் போன்ற உணவுகள் மீது விருப்பம் கொண்டதாக 32 வயதான மத்தியூ டோவ்னிங் என்பவர் கூறியுள்ளார். 'இந்த கர்ப்பத்திலும் பிரசவத்திலும் என்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். அது இருவரையும் மேலும் நெருக்கமாக்கியது. எனது உணர்வுகள் அவளின் உணர்வுகளுடன் மிக ஒத்திருப்பதை உணர்ந்தேன' என்கிறார் மத்தியூ.
அயல்நாடுகளில் மட்டுமல்ல நம் நாட்டிலும் தந்தையாகப் போகும் ஏராளமான ஆண்கள் மனைவியின் பிரசவ காலம் முடியும் வரை தாடி வைத்திருப்பதும், மனைவிக்காக பத்திய உணவு உண்பதும் நடைமுறையில் இருக்கிறது.உணர்வு பூர்வமான இந்த ஒத்துழைப்பு கர்ப்பிணிகளுக்கு கணவர் மேல் அதீத நம்பிக்கையை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

19 ஜனவரி 2012

முதுகு வலிக்கு முதலுதவி!

முதுகுவலி வந்தவர்கள், அதற்கு அடிக்கடி இலக்காகிறவர்கள், சில எளிய சுய அணுகுமுறைகளால் முதலுதவி பெறலாம். அவை வருமாறு:
1. பெரிய பிரச்னைக்கு ஆளாகிவிட்டோம் என்று பதறிவிடாமல் மனதை ஓய்வு நிலைக்குக் கொண்டு வாருங்கள். இதைக் குணப்படுத்த முடியும் என்ற சாதகமான மன‌நிலையை‌ப் பெறுங்கள்.
2, வ‌லி அ‌திக‌ரி‌த்தா‌ல்...
வலி அதிகரித்து நீங்கள் எழுந்து நிற்கிற நேரங்களில் எல்லாம் ‌கீ‌ழ்‌க்க‌ண்ட உடற் தோற்றத்தைக் கடைப்பிடியுங்கள்.
(அ) நேராக நிமிர்ந்து நில்லுங்கள்.
(ஆ) தரையைப் பார்க்காதவாறு தலை நேர்கோணத்தில் நிற்க வேண்டும்.
(இ) வயிற்றை உள்ளுக்கு தசைகள் மூலம் இழுங்கள். சிறிது நேரம் வயிறு உள்ளடங்கியே இருக்கட்டும்.
(ஈ) இரு தொடைகளும் காலுக்கு மேல் ஒன்றை ஒன்று சந்திப்பது போல் இணைத்து வையுங்கள்.
(உ) முதுகின் கீழ்ப்பகுதி அசைந்தோ, சாய்ந்தோ ஆடாத நிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
3. கடுமையான தாக்குதல் வந்தால் முழுமையாக 3-4 நாட்களுக்கு படுக்கை நேராக அசைவு இன்றி மல்லாந்த நிலையில் படுத்திருங்கள். இதுவே வலியைக் குறைக்கும்.
4. வெந்நீர் ஒத்தடம் அல்லது ஐஸ் ஒத்தடம் கொடுங்கள்.
5. உட்காரும் போது...
(அ) நேரான முதுகுப் பக்கம் உள்ள நாற்காலி அதுவும் பாதியளவு மட்டுமே சாய்ந்து கொள்ள அமைப்புக் கொண்ட நாற்காலியே சிறந்தது.
(ஆ) இடுப்பைவிட லேசாக உயர்ந்த நிலையில் உங்கள் முழங்கால் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் காலுக்கு சிறிய ஸ்டூல் ஒன்று வைத்துக் கொள்ளுங்கள்.
(இ) கால்மேல் கால் போடாதீர்கள். நாற்காலியில் சரிந்து உட்காராதீர்கள்.
(ஈ) உங்கள் வேலை ஒரே இடத்தில் வெகு நேரம் அமர்ந்து செய்ய வேண்டிய வகைப்பட்டது எனில், இடையிடையே அடிக்கடி எழுந்து நில்லுங்கள். அல்லது சிறிது தூரம் நடந்து செல்லுங்கள்.
6. நிற்கும்போது...
(அ) இரண்டு கால்களிலும் உங்கள் உடல் எடை சமமாக அமரும்படி நில்லுங்கள்.
(ஆ) நெடுநேரம் நிற்க வேண்டி இருப்பின் சற்று சுற்றிச் சுற்றி நடந்து செல்லுங்கள். உங்கள் உடல் எடையை ஒரு கால் விட்டு ஒருகால் என்று மாற்றி மாற்றி தாங்க வையுங்கள்.
(இ) நெடுநேரம் நிற்கும்போது முதுகில் ஏற்படும் டென்ஷனைக் குறைக்க ஒரு ஸ்டூல் அல்லது படி மீது ஒரு கால் மாற்றி ஒரு கால் உயர வையுங்கள்.
7. தூங்கும்போது...
(அ) மென்மையான, புதையும் தன்மை கொண்ட மெத்தையில் படுக்காதீர்கள். கடினமான ஒரு படுக்கை அல்லது கடினமான பலகை உள்ள கட்டிலின் மேல் விரிப்பு விரித்துப் படுங்கள்.
(ஆ) உங்கள் படுக்கை முதுகிற்கு நல்ல சார்பு தருவதாகவும், முதுகெலும்பை நேர்நிலையில் வைக்க உதவுவதாகவும் அமையவேண்டும்.
(இ) ஒருப‌‌‌க்கமாகப் படுக்கும்போது முழங்கால்கள் நேர்கோணத்தில் அமையும்படி விழிப்பாகக் கவனித்துக் கொள்ளுங்கள்.
(ஈ) கவிழ்ந்து படுப்பது சரியல்ல.
8. பொருள்களைத் தூக்கும்போதோ உயர்த்தி எடுக்கும்போதோ...
(அ) முழங்காலை வளையுங்கள். முதுகை அல்ல.
(ஆ) பயணத்துக்குச் சுலபம் என்று ஒரே சூட்கேஸில் அடைக்காதீர்கள். இரண்டு சிறிய அல்லது மீடியம் சைஸ் சூட் கேஸில் கொண்டு செல்லுங்கள். இரண்டையும் இருகரங்களால் தூக்கும்போது சம எடைப் பங்கீடு வரும். முதுகுத் தசைகளுக்கும் சம வேலை கிட்டும்.
(இ) முதுகுத் தசைகளை அதிக உபத்திரவம் செய்யாத வகையில் பொருள்களை உயர்த்தி வைக்கும்போது ஏணியில் படிப்படியாக வைத்து ஏற்றுங்கள்.
9. கார் ஓட்டும்போது...
(அ) உங்கள் கீழ் முதுகுக்கு சார்ந்து கொள்ள ஒரு குஷன் உபயோகியுங்கள். இடைவெளி விட்டு விட்டு காரை நிறுத்தி இறங்கி நின்று பின்பு தொடருங்கள்.
10. ஹீல் வைத்த காலணிகளை அணியாதீர்கள். தட்டையாக உள்ள காலணியையே அணியுங்கள்.
11. உங்கள் எடை அதிகமாக இருந்தால் குறைத்துவிடுங்கள்.
12. டைவ் அடித்தல், பல்டி அடித்தல் போன்ற செயல்கள் கூடாது.
13. கண்ட கண்ட மாத்திரை மருந்துகளை வாங்கி நீங்களே சுய மருத்துவம் செய்து கொள்ளாதீர்கள்.
உடற்பயிற்சி!
தசை இயங்கு நிலைக்கு தேகப்பயிற்சி அவசியம். முதுகெலும்பை நல்ல நிலைக்கு வைக்கவும் உடற்பயிற்சி உதவும்.
உங்கள் மருத்துவரின் அனுமதி பெற்று உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். வேகமாக நடத்தல், நீச்சல், கைகால்களை மென்மையாக நீட்டி மடக்கல் நல்ல பயிற்சிகளாகும்.
எந்தப் பயிற்சியையும் நிதானமாகவும் படிப்படியாகவும் செய்யவேண்டும்.

09 ஜனவரி 2012

சாப்பிடும்போது நீர் அருந்துவதால் பாதிப்பு!

நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.
ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்து அறிந்துகொள்ளலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம்.
நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை. ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட சீதோஷ்ண நிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம். அதாவது நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி பெற்றுக்கொள்ளும்.
அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி அளவுக்கு அதிகமாக தண்ணீரை அருந்த தேவையில்லை.அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.
ஏனெனில் நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்க செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கிவிடும். அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால்,தண்ணீர் ஜீரண திரவத்துடன் சேர்ந்து,வயிற்றின் ஜீரண பணியை பாதித்துவிடும்.
"இந்தியர்களில் பெரும்பாலானோர் உணவுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவதாகவே இருக்கிறது. இது எவ்வளவு தவறானது; ஜீரண வேலையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர்" என்று ஆதங்கப்படுகிறார் பிரபல டயட்டீஷியன் ஷோனாலி.
உணவு செரிக்காமல் வயிற்றுவலி என்று மருத்துவர்களிடம் செல்வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தும் கேஸ்கள்தான் என்று கூறுகிறார் ஷோனாலி.
அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ்வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.
அப்படியானால் எப்பொழுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் வேண்டியமட்டும் தாரளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.
எனவே சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு டயட்டீஷியன் ஷோனாலி தரும் சில டிப்ஸ்கள் இதோ:
நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். வ்வாறு அல்லாமல் அதிக உப்பு கொண்ட உணவை உண்ணும்போது அது தாகத்தை தூண்டி, தண்ணீரை அருந்த செய்துவிடும்.அதேப்போன்று உணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.
மேலும் வேகமாகவும் சாப்பிடாதீர்கள்.அவ்வாறு வேகமாக சாப்பிடும்போது, உணவுக்குழாயில் உணவு இறங்காமல் விக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைபோக்க தண்ணீர் அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.
எனவே உணவு வாயில் மெதுவாக மென்று ஜீரண சக்தி குணம் கொண்ட உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினால்,அது உணவை வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் சேர்த்து மேலும் எளிதாக ஜீரணமடைய வைத்துவிடும்.