இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மையுடையதெனவும் கல்லீரலை பாதுகாக்கும் தன்மையுடையதெனவும் பல்வேறு ஆய்வுகள் மூலம் தெளிவுபடுத்தி உள்ளனர்.
1. கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, தும்பை, சீரகம், பொன்னாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து காய்ச்சிய பசும்பால் அல்லது தேங்காய்ப்பால் விட்டு நன்றாக அரைத்து காலை மாலை பாலில் 7 நாட்கள் கொடுக்க மஞ்சள் காமாலை நோய் தீரும்.
2. மாதவிடாய் அளவுக்கு மீறி போய்க்கொண்டிருந்தால் கீழ்க்காய் நெல்லி, அத்திப் பட்டை, அசோகப்பட்டை, அரசம் பட்டை, நாவல் பட்டை இவைகளை சம அளவாக எடுத்து நன்றாக தூள்செய்து வைத்துக் கொண்டு தினம் ஒரு கரண்டி வீதம் தேன், வெந்நீர், பால் ஏதாவது ஒன்றில் மாறிமாறி சாப்பிட்டு வர கர்ப்பநோய்கள் அனைத்தும் தீரும். மேலும் வெள்ளைப்படுதல் போன்றவையும் தீரும்.
3. கீழ்காய் நெல்லியை நன்றாக அரைத்து சொறி சிரங்கு படைகளில் போட உடனே மாறும். கீழாநெல்லியும் மஞ்சளும் சேர்த்து உடலில் தேய்த்து சில நிமிடம் ஊறவிட்டு குளித்து வர தோல் நோய்கள் வராமல் தடுப்பதோடு வந்த நோய்கள் அனைத்தும் தீரும்.
4. கீழ்க்காய் நெல்லியை நன்றாக மென்று பல் துலக்கி வர பல்வலி என்பது பக்கத்திலும் அண்டாது.
5. கீழாநெல்லிப்பொடி, நெல்லிக்காய்பொடி, கரிசாலைப் பொடி மூன்றையும் சமஅளவு எடுத்து தேனில் உண்டுவர அடிக்கடி வரும் சளித் தொல்லை, இரத்தக்குறைவு, இரத்தசோகை போன்ற நோய்களுக்கான எதிர்ப்பாற்றல் பெருகும்.
6. தினமும் இதை தலையில் தேய்த்து தண்ணீரில் குளித்து வந்தால் கண்நோய்கள், பித்த நோய்கள், மேக நோய்கள், மேக உஷ்ணம், காமாலை நோய்கள் தீரும். மஞ்சள் காமாலை நோயாளிக்கு இது சிறந்த மருந்தாகும்.
7. தோல் சம்பந்தமான நோய்கள் குணமாக்க இலையை உப்பு சேர்த்து மைய அரைத்து தோல் சம்பந்தமான நோய்களுக்கு பூசி வந்தால் அவைகள் குணமாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக