பக்கங்கள்

25 அக்டோபர் 2011

பெண்களும் பியர் குடிக்கலாம்!

வயதான காலத்தில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பில் இருந்து பெண்களுக்கு பீர் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் குறித்த ஆய்வு பிரிவினர் ஜொனாத்தன் போவெல் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.
எலும்பின் வலுவுக்கு பீரின் பங்களிப்பு குறித்து ஆராயப்பட்டது. பீரில் உள்ள எத்தனால் எலும்புக்கு ஆரோக்கியமளிப்பதும், அதில் உள்ள சிலிகான் புதிய எலும்புகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுவதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல் வருமாறு: மதுபானத்தை மருந்தாக எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை பல தொடர் ஆய்வுகள் வலியுறுத்தி வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில், பீரில் உள்ள சத்துகள் எலும்புக்கு வலு சேர்ப்பது உறுதியாகி உள்ளது. குறிப்பாக வயதான காலத்தில் பெண்களை தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பில் இருந்து பீர் பாதுகாக்கிறதாம்.
பீரில் உள்ள எத்தனால் மற்றும் சிலிகான் பெரும்பாலான தாவர பயிர்களிலும் காணப்படுவதாகும். குறிப்பாக அவரை, மொச்சை உள்ளிட்ட தானியங்களில் அதிக அளவில் இந்த சத்து உள்ளது. இது எலும்பு தேய்மானத்தை தடுப்பதுடன் புதிய எலும்புகள் ஆரோக்கியமாக வளரவும் உதவும். பெண்களின் ஈஸ்ட்ரோஜன் சுரப்பியில் சிலிகான் கலப்பு இருக்கும்.
ஈஸ்ட்ரோஜன் அளவு மாதவிடாய் காலங்களில் பாதிப்படையும். அந்த நேரத்தில் மாத்திரை, மருந்துகள் வாயிலாக இந்த சுரப்பியின் குறைபாட்டை ஈடுசெய்வது மிகமிக அவசியம். கவனிக்காமல் விடும் பட்சத்தில் எலும்புகள் நலிவடைந்து ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இத்தகைய சமயங்களில் பீரை தினமும் சிறிதளவு மருந்தாக எடுத்துக் கொள்ளலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. உணவுகளில் இருந்து கிடைக்கும் சிலிகான் அளவைவிட பன்மடங்கு அதிகமாக பீரில் இருந்து கிடைப்பதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
பெண்களுக்கு தினமும் 8 மில்லிகிராம் அளவு சிலிகான் அவசியமாகிறது. இந்த தேவை குறைந்த அளவு பீரில் இருந்து எளிதாக கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். அவர்கள் தினமும் ஒரு டீஸ்பூன் என்ற அளவில் பீர் அருந்துவது எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு வலு சேர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 அக்டோபர் 2011

இனி தலைமுடி நரைக்காது!

நரைத்த முடி என்பது உலகம் முழுதும் பெரிய சவாலக இருக்கிறது. இதனால் "ஹேர் டை" தொழிற்சாலை இன்று உலக அளவில் மிகப்பெரிய சந்தையை உருவாக்கியுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்போம், இன்னும் 4 ஆண்டுகளில் வெளிவரும் ஒரு மாத்திரை நரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று விஞ்ஞானிகள் சிலர் கோரியுள்ளனர்.
பெயரிடப்படாத பழம் ஒன்றின் சாறிலிருந்து தயாரிக்கப்படும் மாத்திரை இன்னும் 4 ஆண்டுகளில் விற்பனைக்கு வந்து விடும் என்று இந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
காஸ்மெடிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்யும் முதன்மை நிறுவனமான ஓரியல் (L'Oreal) இந்த புதிய மாத்திரையை கண்டுபிடித்துள்ளது. 10 ஆண்டுகள் இடைவிடாத ஆராய்ச்சிக்குப் பிறகு இப்போது நரை முடிக்கு டாடா என்று இவர்கள் குதூகலத்துடன் தெரிவிக்கிறார்கள்.
800கோடி பவுண்டுகள் தொகை கொண்ட உலகின் "டை" சந்தைக்கு ஆப்பு வைத்துள்ளதாக ஓரியல் நிறுவனம் பெருமை பட்டுக் கொண்டுள்ளது.
ஆய்வில் ஈடுபட்ட அந்த நிறுவனத்தின் உயிரியல் துறை தலைவர் புரூனோ பெர்னர்ட், "இந்த புதிய நரைதடுப்பு மாத்திரைக்கு ஆண்கள் முதல் பெண்கள் வரை உலகம் நெடுகிலும் மிகப்பெரிய சந்தை இருக்குமென்று எதிர்பார்க்கிறோம். இது விலை அதிகமில்லை என்றும் தினசரி உணவு எடுத்துக் கொள்வது போல் இதனை எடுத்துக் கொண்டால் போதுமானது" என்றார்.
உடலில் உள்ள தீங்கான புரோட்டின்களுடன் முடி செல்கள் வினையாற்றும்போது நரைத்த முடி தோன்றுகிறது. தற்போது அடையாளம் தெரியாத இந்தப் பழத்திலிருந்து எடுக்கப்படும் சாறில் உள்ள ஒரு சத்து முடி நரையை தூண்டிவிடும் சுரப்பியை ஒத்ததாக இருப்பதை இந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
"நரை முடி தோன்றுவதற்கு முன்னால் இந்த மாத்திரையை தினமும் எடுத்துக் கொண்டால் நரை ஏற்படுவதை தடுக்க முடியும். ஆனால் முடி நரைத்த பிறகு அதனை மீண்டும் கறுப்பாக இந்த மாத்திரை ஆக்குமா என்பது சந்தேகமே" என்கிறார் பெர்னர்ட்.
10 ஆண்டுகள் இந்த மாத்திரை சந்தையில் புழங்கிய பிறகே இதன் சக்தி பற்றி தெரியவரும் என்று இவர்கள் கூறுகின்றனர்.
2013ஆம் ஆண்டு மே மாதம் விஞ்ஞான மாநாட்டில் இது எப்படி தயாரிக்கப்பட்டது, இந்த விஞ்ஞானிகளின் கோரலில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பது தெரியவரும்.
பிராட்ஃபோர்ட் பலகலையில் பணியாற்றி வரும் பேராசிரியர் டெஸ் டாபின் என்ற தோல்நோய் நிபுணர் இது பற்றி கூறுகையில், "சுரப்பியை மாற்றினால் நரை நின்று விடும் என்பது பற்றி தெளிவாக இல்லை. ஆனால் இந்த ஆய்வை மேற்கொண்ட டாக்டர் பெர்னட் குழுவினருக்கு இது பற்றிய அறிவு அதிகம், மயிர்க்கால்கள் எவ்வாறு வேலை செய்கிறது என்பதில் இவர்கள் நிபுணர்கள்" என்றார்.

07 அக்டோபர் 2011

குழந்தைகளின் மந்தத்தை போக்கும் ஓமம்.

ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது. இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்ற ஒரு செடி வகை ஆகும்.
* சீதளத்தால் உண்டாகும் சுரம், இருமல், செரிமானம் சரியாக இல்லாதது, வயிற்று பொருமல் பேதி, குடலிரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள், இரைப்பு நோய் (ஆஸ்துமா) ஆசனவாய் நோய்கள் இவைகளை ஓமம் போக்கும்.
* இன்று கூட நம் கிராமங்களில் சிறு குழந்தைகளுக்கு வயிறு வலித்து அழும்போது ஓமத் திரவம் கொடுப்பார்கள். இந்த ஓமத் திரவம் ஓமத்தை காய்ச்சி எடுக்கப்படுவது.
* இது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு மந்தம் தொடர்பான நோயை போக்கும் தன்மை கொண்டது.
* பொதுவாக மந்தமானது சிறு குழந்தைகளுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும்.
* இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.
* ஓமத்திராவகம் என்ற மாபெரும் மருந்து ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான்.
* ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.
* சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.
* உடல் சோர்வை போக்குவதில் ஓமம் சிறந்த மருந்தாகும். ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.
* சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் .
* நல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும்.
* பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.
ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும். ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.
* சுவாசக்கோளறுகள், இருமல் போன்ற நோய்களை சீர்படுத்த ஓமம் சிறந்த மருந்தாகும். மேலும் குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் போன்றவற்றையும் ஓமம் குணப்படுத்துகிறது.

23 செப்டம்பர் 2011

முதுகு வலி வராமல் தடுக்க.


உறங்கும்போது:
(அ) மென்மையான, புதையும் தன்மை கொண்ட மெத்தையில் படுக்காதீர்கள். கடினமான ஒரு படுக்கை அல்லது கடினமான பலகை உள்ள கட்டிலின் மேல் விரிப்பு விரித்துப் படுங்கள்.
(ஆ) உங்கள் படுக்கை முதுகிற்கு நல்ல சார்பு தருவதாகவும், முதுகெலும்பை நேர்நிலையில் வைக்க உதவுவதாகவும் அமையவேண்டும்.
(இ) ஒருப‌‌‌க்கமாகப் படுக்கும்போது முழங்கால்கள் நேர்கோணத்தில் அமையும்படி விழிப்பாகக் கவனித்துக் கொள்ளுங்கள்.
(ஈ) கவிழ்ந்து படுப்பது சரியல்ல.
8. பொருள்களைத் தூக்கும்போதோ உயர்த்தி எடுக்கும்போதோ...
(அ) முழங்காலை வளையுங்கள். முதுகை அல்ல.
(ஆ) பயணத்துக்குச் சுலபம் என்று ஒரே சூட்கேஸில் அடைக்காதீர்கள். இரண்டு சிறிய அல்லது மீடியம் சைஸ் சூட் கேஸில் கொண்டு செல்லுங்கள். இரண்டையும் இருகரங்களால் தூக்கும்போது சம எடைப் பங்கீடு வரும். முதுகுத் தசைகளுக்கும் சம வேலை கிட்டும்.
(இ) முதுகுத் தசைகளை அதிக உபத்திரவம் செய்யாத வகையில் பொருள்களை உயர்த்தி வைக்கும்போது ஏணியில் படிப்படியாக வைத்து ஏற்றுங்கள்.
9. கார் ஓட்டும்போது...
(அ) உங்கள் கீழ் முதுகுக்கு சார்ந்து கொள்ள ஒரு குஷன் உபயோகியுங்கள். இடைவெளி விட்டு விட்டு காரை நிறுத்தி இறங்கி நின்று பின்பு தொடருங்கள்.
10. ஹீல் வைத்த காலணிகளை அணியாதீர்கள். தட்டையாக உள்ள காலணியையே அணியுங்கள்.
11. உங்கள் எடை அதிகமாக இருந்தால் குறைத்துவிடுங்கள்.
12. டைவ் அடித்தல், பல்டி அடித்தல் போன்ற செயல்கள் கூடாது.
13. கண்ட கண்ட மாத்திரை மருந்துகளை வாங்கி நீங்களே சுய மருத்துவம் செய்து கொள்ளாதீர்கள்.
உடற்பயிற்சி!
தசை இயங்கு நிலைக்கு தேகப்பயிற்சி அவசியம். முதுகெலும்பை நல்ல நிலைக்கு வைக்கவும் உடற்பயிற்சி உதவும்.
உங்கள் மருத்துவரின் அனுமதி பெற்று உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். வேகமாக நடத்தல், நீச்சல், கைகால்களை மென்மையாக நீட்டி மடக்கல் நல்ல பயிற்சிகளாகும்.
எந்தப் பயிற்சியையும் நிதானமாகவும் படிப்படியாகவும் செய்யவேண்டும்.

11 செப்டம்பர் 2011

உறக்கம் தரும் உணவுகள்!

நம்மில் சிலர் தலையணையில் தலைவைத்த அடுத்த விநாடியே 'கொர்'ரென்ற குறட்டையுடனோ அல்லது குறட்டை அல்லாமலோ ஜோராக தூங்கத் தொடங்கிவிடுவார்கள்.அவர்களை பற்றி பிரச்சனை இல்லை.ஆனால் குறட்டை ஒரு பிரச்சனைதான்; அதுபற்றி அப்புறம் பார்க்கலாம்.
தற்போதைய பிரச்சனை தூக்கம் வராதவர்களை பற்றியது.புத்தகம் வாசிப்பது, இணைய தளத்தில் மேய்வது, மனதுக்கு பிடித்த இனிமையான பாடல்களை கேட்பது என பலவிதமாக முயற்சித்தும், சிலருக்கு தூக்கம் தொலைவிலேயே இருக்கும்;பக்கத்தில் நெருங்காது.
அப்படியானவர்களுக்காக மருத்துவ மற்றும் உணவு நிபுணர்கள் தரும் தூக்கம் வரவழைக்கும் உணவுகள் பட்டியல் இதோ:
இறால்:
மீன்களில் பலவகை உண்டென்றாலும் இறால் மீனுக்கு தனி ருசிமட்டுமல்லாது, தூக்கத்தை வரவழைக்கும் திறனும் உண்டு.இதிலுள்ள ஆரோக்கியமான கொழுப்பு,தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் சுரப்புகளை அதிகரிக்கும் திறனுடையதாம்.
பீன்ஸ்:
பீன்ஸ் மற்றும் இந்த வகையை சேர்ந்த அவரை, பட்டாணி போன்றவற்றில் பி6,பி12 உள்ளிட்ட 'பி' வைட்டமின்களும், ஃபோலிக் அமிலமும் மிகுதியாக உள்ளன. இவை மனிதனின் தூக்க சுழற்சி முறையை ஒழுங்குபடுத்துவதோடு, மனதை ஆசுவாசமாக வைத்திருக்கக் கூடிய செரோட்டோனினை சுரக்க வைக்கிறது.மேலும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு 'பி' வைட்டமின்கள் மிகவும் உதவுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
தயிர்:
கொழுப்பு குறைந்த தயிரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இந்த இரண்டுக்குமே தூக்கத்தை வரவழைப்பதில் முக்கிய பங்கு உள்ளது.ஆழ்ந்த தூக்கம் வர உதவும் இந்த தாதுக்கள், வேகமாகவும் தூக்கத்தை வரவழைக்குமாம். இந்த தாதுக்கள் ஒருவருக்கு உரிய அளவு கிடைக்காமல் பற்றாக்குறையாக இருந்தால், அதனால் தூக்கமின்மை ஏற்படுவதோடு,மன அழுத்தம் மற்றும் தசை வலி போன்றவையும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
பசளிக்கீரை:
கரும்பச்சை நிறத்தில் உள்ள இந்த பசளிக்கீரையில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது. தூக்கமின்மையை ஏற்படுத்தக்கூடிய ஒருவித படபடப்பு மற்றும் மன அமைதியின்மை போன்றவை ஏற்படாமல் பாதுகாப்பதில் இந்த பசளிக்கீரை முக்கிய பங்கு வகிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

04 செப்டம்பர் 2011

பிறர் புகையால் மரணம் ஆறு இலட்சம்!

"பேசிவ் ஸ்மோக்கிங்" என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தான் புகை பிடிக்காமல் புகைப்பழக்கமுள்ளவர்களுடன் தொடர்புடையதாலேயே மரணமடைபவர்களின் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு 6 லட்சம் பேர் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
நாம் பொதுவாக நம் நண்பர்கள் புகைப் பிடிக்கும் போது அருகில் நிற்போம். மதுபான விடுதிகளிலும் பிற பொது இடங்களிலும் சிகரட் புகையினால் பாதிக்கப்படுபவர்கள் புகை பிடிப்பவர்கள் மட்டுமல்ல அருகில் இருப்பவர்களும்தான்.
பிரிட்டன் மருத்துவ இதழான லான்செட்டில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுத் தகவல்களின் படி குழந்தைகளில் 40 சதவீதத்தினரும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோரில் 30 சதவீதத்தினரும் இம்மாதிரியான பிறரது புகைப்பழக்கத்திற்கு பாதிக்கப்படுகின்றனர்.
ஆண்டொன்றிற்கு பிறரது புகைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களில் இருதய நோயால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை 379,000, கீழ் மூச்சுக்குழல் நோயால் மரணமடைவர்கள் எண்ணிக்கை 1,65,000, ஆஸ்துமா நோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை 36,900, நுரையீரல் புற்று நோயால் மரணிப்பவர்கள் எண்ணிக்கை 21,400 என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகில் நிகழும் மரண விகிதத்தில் பிறரது புகைக்கு மரணமடைபவர்களின் பங்களிப்பு 1% என்று லான்செட் குண்டைத் தூக்கி போட்டுள்ளது.
51 லட்சம் பேர் ஆண்டு முழுதும் உலக அளவில் புகைப்பழக்கத்தால் உயிரிழக்கின்றனர் என்றால் அதில் 6,03,000 பேர் பிறரது புகைப்பழக்கத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.
2004ஆம் ஆண்டு முதல் 192 நாடுகளில் பல்வேறு தரப்பிலும் மேற்கொள்ளப் பாட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்தப் புள்ளி விவரங்கள் கிடைத்துள்ளன.
ஆப்பிரிக்கா, மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் ஆண்டொன்றுக்கு பிறரது புகைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு சுமார் 1,65,000 குழந்தைகள் மரணமடைவதாக உலக சுகாதார மையம் கவலை வெளியிட்டுள்ளது.
பெற்றொர்களுக்கு புகைப்பழக்கம் இருக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களின் தன்மை அபாயகரமாக உள்ளது. அதாவது காது தொடர்பான நோய்கள், நிமோனியா, ஆஸ்துமா, பிரான்க்கைட்டீஸ் ஆகிய நோய்கள் தாக்குவது இயல்பாகி வருகிறது என்கிறது லான்செட் புள்ளிவிவரம்.
பிறரது புகைப்பழக்கத்தினால் மரணமடைபவர்களின் எண்ணிக்கையில் ஐரோப்பாவும் ஆசியாவும்தான் முன்னிலை வகிக்கின்றன.
பிறரது புகைப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் பெண்களே அதிக அளவில் மரணம் அடைவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

15 ஆகஸ்ட் 2011

பிரண்டை இதய நோயை குணப்படுத்துகிறது.

இந்தியாவே மூலிகைகள் நிறைந்த தேசம்தான். நம்நாட்டில் கிடைக்கும் மூலிகைகளே நமது நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளன. காடு, மலைகளில்தான் மூலிகைகள் வளரும் என்பதில்லை.சாலையோரங்களிலும்,வயல்வரப்புகளிலும் கூட மூலிகைகள் தானாக வளர்ந்து நிற்கின்றன. வேலிகளில் படர்ந்து வளரும் பிரண்டை எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. பிரண்டை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும் கொடியாகும்.
இதில் ஓலைப்பிரண்டை, உருண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை என பல வகைகள் உள்ளன. முப்பிரண்டை கிடைப்பதற்கரியது. இது மலைப் பகுதியில்தான் அதிகம் காணப்படும். இதன் தண்டு, வேர், பழம் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் அமைரின், அமிரோன், சிட்டோசிரால் மற்றும் வைட்டமின் சி ஆகியவை காணப்படுகின்றன.
மருத்துவ மூலிகை:
இலைகளும், இளம் தண்டுத் தொகுதியும் உடல்நலம் தேற்றுபவை. வயிற்றுவலி போக்க வல்லது. இதன் பொடி ஜீராணகோளாறுகளுக்கு மருந்தாகிறது. தண்டின் சாறு எலும்பு முறிவுகளில் பயன்படுகிறது. ஒழுங்காக மாதவிடாய் வராத கோளறு, ஆஸ்துமா, ஆகியவற்றை தீர்க்கும். வேரின் பொடி எலும்பு முறிவில் கட்டுப்போட உதவுகிறது.
மெலிந்த உடல் குண்டாக:
ஒரு சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.
வயிற்றுப் பொருமலால் அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.
பிரண்டை துவையல்:
எலும்பு சந்திப்புகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுக்களின் சீற்றத்தால் தேவையற்ற நீர் தேங்கிவிடும். அவர்கள் முதுகு மற்றும் கழுத்து வலியால் அவதிப்படுவார்கள். இந்த நீரானது முதுகுத் தண்டு வழியாக இறங்கி சளியாக மாறி பின் பசைபோல் முதுகு, கழுத்துப் பகுதியில் இறுகி முறுக்கிக்கொள்ளச் செய்யும். இதனால்தான் இவர்களால் தலையை திருப்பவோ, அசைக்கவோ, குனியவோ முடியாமல் அவஸ்தைப்படுவார்கள். இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட சித்தர்கள் பிரண்டை உப்பு, பிரண்டை கற்பக மருந்து போன்றவற்றைக் கொடுத்து சிகிச்சை செய்துள்ளனர்.
இளம் பிரண்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் சிறிது வெந்நீர் கலந்து பசைபோல் தயாரித்து கழுத்து, முதுகு இடுப்புப் பகுதியில் பற்றுப்போட்டு வந்தால் முறுக்கிய பகுதிகள் இளகி முதுகு வலி, கழுத்துவலி குணமாகும். பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம்.
மன அழுத்தம் அல்லது வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத் துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும்.
மூலநோயால் அவதிப்படுபவர்களின் மூலப் பகுதி அதிக அரிப்பை உண்டாக்கி புண்ணை ஏற்படுத்தும். இதனால் மலத்தோடு இரத்தமும் கசிந்துவரும். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள் விரைவில் குணமாகும்.
ரத்த ஓட்டம் சீராகும்:
உடலில் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் இதய வால்வுகள் பாதிப்படைகின்றன. பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும். பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.
எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம்பெறும். கள்ளிச் செடியின்மீது படர்ந்திருக்கும் பிரண்டையை தவிர்ப்பது நல்லது.