பக்கங்கள்

20 ஜூன் 2014

வெங்காயத்தின் நன்மைகள்!

வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. ஜலதோஷம் வந்தால் ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்று, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறையும், தும்மல், நீர்க்கடுப்பு குணமாகும். வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், வெங்காயத்தை நறுக்கும்போது நமது கண்களில் வரும் கண்ணீருக்கும் காரணம் ஆகும்.
நெஞ்சில் படபடப்பு:
நெஞ்சில் படபடப்பு ஏற்பட்டால் சின்ன வெங்காயத்தை தின்று வெந்நீர் குடித்தால் குணமாகும். குறிப்பாக இதய நோயாளிகளுக்கு இப்படிபட்ட பிரச்னைகள் வரும்போது முதலுதவி சிகிச்சையாக இந்த முறையை செய்யலாம். வெங்காயத்தை பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.
மூல நோய்:
மூல நோய் இருப்பவர்கள் உணவில் அதிகமாக வெங்காயம் சேர்ப்பது நல்லது. மோரில் சின்ன வெங்காயத்தை நறுக்கி குடித்தாலும் பலன் கிடைக்கும்.  

வெங்காயச்சாறு:
 * வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
 * புகை பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
 * தேள் கொட்டிய இடத்தில் வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் ஏறாது. அதேபோல் படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவினாலும் மறைந்துவிடும்.
 * வெங்காயச் சாறுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
* வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
* வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

29 மார்ச் 2014

உணவில் இருக்கு மருத்துவம்!

நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்! தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்கும். மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம். ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட். பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு,கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும். சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள். பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம். பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது. ,அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும். தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும். கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.

19 நவம்பர் 2013

பிரசவ சிக்கலை தவிர்க்க புதிய கருவி!

அர்ஜென்டினாவை சேர்ந்த நபர் ஒருவர், பிரசவத்தை எளிதாக்கும் வகையில் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அர்ஜென்டினாவை சேர்ந்த கார் மெக்கானிக் ஜோர்ஜ் ஓ டன். இவர் பிரசவ முறையை எளிதாக்கும் வகையில் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அதாவது பிளாஸ்டிக் பையை பயன்படுத்தி குழந்தையை மிக எளிதான முறையில் வெளியே எடுப்பது. இந்த புதிய கருவியை பற்றி ஜோர்ஜ், தனது நண்பருடன் சேர்ந்து மகப்பேறு மருத்துவரை சந்தித்து விளக்கியுள்ளார். அந்த மருத்துவர் ஜோர்ஜின் புதிய கருவி செயல்பாட்டை தனது மருத்துவமனையில் சோதனை செய்து பார்க்க உதவினார். இதனை தொடர்ந்து யூடியூப்பில் இணையத்தளத்தில் சோதனையை வெளியிட்டதுடன், மிகச் சிறந்த மருத்துவரான மரியோ மரியால்டியை சந்தித்து பேச வைத்தார். இதுகுறித்து டாக்டர் மரியோ கூறுகையில், மகப்பேறு காலங்களில் பெண்கள் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். அவற்றில் ஒன்று பிரசவ நேரத்தில் குழந்தை கருப்பைக்குள் சிக்கிக்கொள்வது. இதனால் குழந்தை அறுவை சிகிச்சை மூலமாக வெளியில் எடுக்கப்படுகிறது. இந்த சிக்கலான நேரத்தில் மருத்துவர் என்ன பிரச்னை, அதை எப்படி சரிசெய்வது என்று சரியாக முடிவெடுக்கவில்லை என்றால் தாயும் சேயும் இறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. சிக்கலான பிரசவ நேரத்தில் உபயோகப்படுத்தும் வகையில் எளிய கருவி இருந்தால் மருத்துவர்கள் பிரசவங்களை எளிதாகவும் சீக்கிரமாகவும் செய்யமுடியும். ஓடன் கருவி என்று பெயரிடப்பட்ட இந்த கருவி அர்ஜென்டினாவை சேர்ந்த ஜோர்ஜ் ஓ‘டன் என்ற 59 வயது கார் மெக்கானிக் கண்டுபிடித்தது. இதன்மூலம் எளிதாக பிரசவம் நடக்க கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவர்கள் உதவ முடியும். இதில் கையால் பிடிக்கும் வகையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பை உள்ளது. உராய்வை குறைக்க லூப்ரிகன்ட் செலுத்தப்பட்ட இந்த பை காற்று நிரப்பும் வகையில் உள்ளது. இதன்மூலம் சிக்கலான பிரசவத்தில் குழந்தை வெளிவராத போது குழந்தையின் தலையை சுற்றி இந்த பிளாஸ்டிக் பையை வைத்து காற்றால் நிரப்பவேண்டும். இதனால் தலையை சுற்றி பிளாஸ்டிக் பை கெட்டியாக பிடித்துக் கொள்ளும், பின்னர் மெதுவாக வெளியில் இழுத்தால் குழந்தை பத்திரமாக பிரசவிக்கப்படும். இதன்மூலம் மிக சிக்கலான பிரசவங்கள் கூட எளிதாக நடைபெறுகிறது. இந்த கருவியை உலக சுகாதார நிறுவனம் அர்ஜென்டினா கர்ப்பிணி பெண்களிடம் சோதித்துப் பார்த்ததில், சுகப் பிரசவம் நடந்துள்ளது. இதனால் அறுவை சிகிச்சைகள் குறையும், இந்த முறையை இந்தியா, சீனா மற்றும் தெற்கு ஆப்ரிக்காவில் பயன்படுத்த உள்ளோம். இதன்மூலம் பிரசவ நேரத்தில் ஏற்படும் சிக்கல்களினால் இறக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களை காப்பாற்ற முடியும். இதைத் தயாரிக்க 50 டாலர்கள் ஆகிறது. கனடாவை சேர்ந்த கிரான்ட் சேலஞ்சஸ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பென்டன் டிக்கின்சன் கம்பெனியுடன் சேர்ந்து இந்த கருவியை தயாரிக்க உள்ளது. ஏழை நாடுகளில் இந்த கருவி அதிக அளவில் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த கருவிக்கு உலக சுகாதார நிறுவனம் விருது வழங்கியுள்ளது.

27 அக்டோபர் 2013

நீரிழிவு நோயாளிகள் கவனிக்க வேண்டியவை!

ht2131உணவுகளில் சாதத்தை குறைத்து காய்கறிகளை அதிகமாக உட்கொண்டால் ஏராளமான நோய்களை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் அறிவுரை கூறி வருகின்றனர். அதே நேரத்தில் சில வகை உணவுகள் அதிகளவு எடுத்து கொண்டால் உடலில் சில தொந்தரவுகள் ஏற்படும். அதிலும் நீரிழிவு (சர்க்கரை) நோயாளிகள் உணவு எடுத்து கொள்வதில் அதிக கவனம் வேண்டும். மருத்துவரின் முறையான ஆலோசனையின் பேரில் உணவுகளை எடுத்தால் தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்கலாம். எந்தெந்த காய்கறிகளில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கிறது என்பதை பார்ப்போம்… நீரிழிவு நோயாளிகள் முதலில் தவிர்க்க வேண்டிய பச்சை பட்டாணி. இதில் ஸ்டார்ச் அதிகமாக இருப்பதால் இதன் பக்கம் கூட திரும்பி பார்க்க வேண்டாம். ஸ்குவாஷ் என அழைக்கப்படும் சர்க்கரை பூசணி. இதனை பறங்கிக்காய் என்றும் கூறுவர். இது இனிப்பு சுவையுடன் கூடிய குளிர்கால காய்கறி. இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகமாக உள்ளது. இதில் அதிக நன்மை இருந்தாலும் நீரிழிவு நோயாளிகள் இதனை அறவே தவிர்க்க வேண்டும். உருளைகிழங்கில் மாவு சத்து அதிகம் உள்ளது. இதேபோல சேனை கிழங்கு சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சொல்ல முடியாத அளவிற்கு அதிகரிக்கும். இதனால் உருளை, சேனை கிழங்குகளை உணவில் சேர்க்க கூடாது. மேலும் சர்க்கரைவள்ளி கிழங்கை உருளைக்கிழங்குடன் ஒப்பிடுகையில் ஸ்டார்ச் குறைவாக இருந்தாலும், கிளைசீமிக் இன்டென்ஸ் அதிகம் உள்ளது. எனவே இதனையும் தவிர்ப்பது நல்லது. பீன்ஸ் இனிப்பாக இல்லாவிட்டாலும், இதில் ஸ்டார்ச் மிகவும் அதிகமாக உள்ளது. அதற்காக முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பீன்சை நீரில் வேக வைத்து, அளவாக சாப்பிடலாம். பீட்ரூட் ஒரு வேர் காய்கறி. இது மண்ணில் உள்ள அனைத்து இனிப்புகளையும் உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால் அதிக இனிப்புடன் இருக்கும். ஆனால் இதில் அதிக நன்மைகள் உள்ளன. இதனை 2 அல்லது 3 வாரங்களுக்கு ஒரு முறை எடுத்து கொள்ளலாம். தக்காளி இல்லாத உணவுகளை பார்ப்பது அரிது. இது இனிப்பு சுவை கொண்டது என்பதால் பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உணவுகளிலும் தக்காளியை அளவாக பயன்படுத்த வேண்டும். சோளத்தில் பல வகைகள் உள்ளது. அதில் ஒன்று தான் ஸ்வீட் கார்ன். இதன் பெயரிலேயே இது இனிப்பு சுவை கொண்டது என்பது உணர்த்துகிறது. மேலும் ஸ்டார்ச் அதிகமாக உள்ளது. இதனை நீரிழிவு நோயாளிகள் எடுக்கவே கூடாது. இந்தியாவில் வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவைகளை அதிகம் சமைத்து சாப்பிடுகிறோம். இந்த உணவு பொருட்களில் ஸ்டார்ச் நிறைந்துள்ளது. அதேபோல வாழைப்பழத்தில் இனிப்பு அதிகமாக உள்ளது. எனவே இந்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும். முறையான ஆலோசனையுடன் கூடிய உணவு பழக்கம் மற்றும் எளிய உடற்பயிற்சி இருந்தால் நீரிழிவு நோய் குறித்த கவலையை களைந்தெறியலாம்.

23 செப்டம்பர் 2013

உயர் ரத்த அழுத்தத்தை தணிக்கிறது பீட்ரூட்!

பீட்ரூட்சாறு மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தத்தை தணிக்கவல்லது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.ஓரு தேநீர் கோப்பை அளவு, அதாவது 250 மிலி லிட்டர் பீட்ரூட் சாறு குடித்தால் ஓருவரின் உயர் ரத்தஅழுத்தம் சுமார் 10 ஙம் அளவு குறைவதாக லண்டன் மருத்துவக் கல்லூரியும் பார்ட்ஸ் சுகாதார மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பதினைந்து பேரிடம் நடத்திய இந்த ஆய்வின் முடிவில் ஓரு சிலருக்கு அவர்களின் உயர் ரத்தஅழுத்தம் சாதாரண அளவுக்கு குறைந்ததாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பதாக, மருத்துவ நூலான ஹைபர்டென்ஷன் தெரிவிக்கிறது. இவர்கள் பீட்ரூட் சாற்றைகுடித்து மூன்று முதல் ஆறுமணி நேரம் கழித்து இவர்களின் உயர் ரத்தஅழுத்தம் கணிசமாக குறைந்ததாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். மேலும் மறுநாளும் கூட இவர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைந்தே காணப்பட்டதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் சத்து மனிதர்களின் ரத்தநாளங்களை விரிவடையச் செய்வதனால் ரத்த ஓட்டம் சீராக செல்வதால், மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைவதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே அஞ்ஞைனா என்கிற இரத்தநாள வலிநோயால் அவதிப்படுபவர்களுக்கு நைட்ரேட் மருந்து அளிப்பதன் மூலம் அவர்களின் வலியை குறைக்க முடிவதை சுட்டிக்காட்டும் மருத்துவர்கள், இங்கே நைட்ரேட் சத்து அதிகம் கொண்டிருக்கும் பீட்ரூட் சாறு அதே வேலையை செய்வதாக கருதுகிறார்கள்.மருந்து அளிப்பதன் மூலம் அவர்களின் வலியை குறைக்க முடிவதை சுட்டிக்காட்டும் மருத்துவர்கள், இங்கே நைட்ரேட் சத்து அதிகம் கொண்டிருக்கும் பீட்ரூட் சாறு அதே வேலையை செய்வதாக கருதுகிறார்கள். நைட்ரேட் சத்து ரத்த நாளத்தை விரிவடையச்செய்யும். மண்ணில் இயற்கையிலேயே இருக்கும் நைட்ரேட் சத்து, தாவரங்களின் வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்டு அவற்றின் இலை, தண்டு மற்றும் கிழங்குகளில் சேமிக்கப்படுகிறது. ஓவ்வொரு தாவரமும் இந்த நைட்ரேட் சத்தை ஓவ்வொருவிதமாக உறிஞ்சும் தன்மையையும், சேமிக்கும் தன்மையையும் கொண்டிருக்கின்றன. இதில் பீட்ரூட் தாவரம் நிலத்தில் இருந்து உறிஞ்சும் நைட்ரேட் சத்தை தனது கிழங்கில் அடர்த்தியாக சேமிக்கும் தன்மை கொண்டது. எனவே பீட்ரூட் கிழங்கின் சாற்றை குடிக்கும் போது அதில் இருக்கும் நைட்ரேட் மனிதர்களின் ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும் வேலையை செய்கிறது. இவ்வளவு குறைவான நைட்ரேட், உயர் ரத்தஅழுத்தத்தில் இவ்வளவு பெரிய நல்ல பலனை அளிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறுகிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர் அம்ரிதா அலுவாலியா.

19 செப்டம்பர் 2013

முகச்சுருக்கம் நீங்க சில ஆலோசனைகள்!

முகச்சுருக்கம் மறைய:
காய்ச்சாத பசும் பால் - 50 மி.லி.
எலுமிச்சம் பழச்சாறு - 10 மி.லி எடுத்து ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து, இளம் சூடானநீரில் முகத்தை கழுவி, மென்மையான பருத்தியினாலான துண்டு வைத்து துடைத்துவர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 3 வாரங்கள் செய்து வந்தால் முகச்சுருக்கம் நீங்கி பளபளப்பாகும். காரட்டை மிக்ஸியில் போட்டு நன்றாக பசைபோல் அரைத்து முகத்தில் தடவிகாய்ந்த பின் இளம் சூடான நீரில் கழுவி வந்தால் முகச் சுருக்கம் மறையும். காரட், கோஸ், தக்காளி இவற்றை பச்சையாக அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் காணாமல் போகும்.சிறிது தேன், வாழைப்பழம், முட்டைக்கரு ஆகியவற்றை நன்கு கலக்கி முகத்திலும் கைகளிலும் தடவிப் பதினைந்து நிமிடம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் அலசி விடவும். இம்மாதிரி தொடர்ந்து செய்து வந்தால் முகச் சுருக்கம் நீங்கிப் புதுப் பொலிவு பெறுவீர்கள். பப்பாளி அல்லது வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூசிக் கொள்வது நல்லது. தக்காளிச் சாற்றை முகத்தில் தடவ வேண்டும்.இது தோலில் உள்ள செல்களை புதுப்பிக்கிறது மேலும் முகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுகிறது. எப்போதும் இனிமையான சிந்தனைகள் இருந்தால் முகம் அழகாக இருக்கும். முகச் சுருக்கம் மறைந்து விடும். பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும் அல்லது பழச்சாறு குடிக்க வேண்டும். மேலும் தண்ணீரையும் நிறைய குடிக்க வேண்டும்.

09 ஆகஸ்ட் 2013

ஆறு கிலோ எடையுள்ள குழந்தையை பெற்ற பெண்!

பிரிட்டனை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் சுகபிரசவத்தில் 6 கிலோவில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பிரிட்டனை சேர்ந்த பெண், ஸ்பெயின் நாட்டு மருத்துவமனையில், ஆறு கிலோ எடையுள்ள குழந்தையை பெற்றெடுத்தார். பிரிட்டனை சேர்ந்தவர் மரின், 40. இவர் தற்போது ஸ்பெயின் நாட்டில் வசிக்கிறார். கர்ப்பிணியான, மரினுக்கு, நேற்று முன்தினம், பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, டெனியா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வலி தெரியாமல் இருக்கும் ஊசி ஏதும் இவருக்கு போடப்படவில்லை. ஐந்து மணி நேரத்தில், அழகான, ஆறு கிலோ எடை கொண்ட, பெண் குழந்தையை, மரின் பெற்றெடுத்தார். இவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர் சேவியர் ரியூஸ் குறிப்பிடுகையில், ""என்னுடைய, 40 ஆண்டு கால மருத்துவப் பணியில், இவ்வளவு பெரிய குழந்தையை பார்த்ததில்லை; தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர்,'' என்றார்.