பக்கங்கள்

28 ஜூன் 2010

“பத்து பேரை அடிக்கிறவன் ஆம்பளை இல்லை, ஒரு பெண்ணுக்கு பிடிக்கிறவந்தான் ஆம்பிளை”!


“பத்து பேரை அடிக்கிறவன் ஆம்பளை இல்லை, ஒரு பெண்ணுக்கு பிடிக்கிறவந்தான் ஆம்பிளை” இப்படி ஒரு மையக்கருவை வைத்து உருவாகும் படம் ‘தா’. அது என்ன தா, என்று இயக்குநரிடம் கேட்டால், காதலை தா என்று அர்த்தமாம். வெறும் தா என்று தலைப்பு வைத்தால் ஒரு ஈர்ப்பு இருக்கும் என்பதால் இப்படி ஒரு தலைப்பை தேர்வு செய்தாராம், இப்படத்தின் இயக்குநர் ஆர்.கே.சூர்யபிரபாகர்.
இந்த படத்திற்கு இசையமைத்திருப்பவர் ஸ்ரீவிஜய், இலைங்கை தமிழரான இவர் யாழ்பாணத்தை சேர்ந்தவராம். இவரின் ஆல்பங்களை கேட்ட சூர்யபிரபாகர், இவரைத் தேடிப்பிடித்து இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியிருக்கிறார். படத்தில் ஆறு பாடல்கள் ஒவ்வொரு பாடலும் ஸ்ரீவிஜய்க்கு இன்னும் பல படங்களின் வாய்ப்புகளை பெற்றுத்தரும், என்று கூறும் இயக்குநர் இது போல படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் தேர்வில் பெரிதும் மெனக்கெட்டு இருக்கிறார்.
படத்தின் ஹீரோ ஸ்ரீஹரி, இவர் நடிக்க வருவதற்கு முன்பு விமான பணியாளராக வேலை பார்த்தாராம். இப்படி சாப்டா வளந்த இவரை, இந்த படத்திற்காக ரொம்பவே மாற்றியிருக்கிறார் இயக்குநர். படத்தின் ஹுரோயின் நிஷா, மும்பையை சார்ந்தவரான இவரையும் கதாபாத்திறத்திற்கு ஏற்றவாறு மாற்றுவதற்காக, படப்பிடிப்பு நடக்கும் கோவையிலே ஒரு மாதம் தங்க வைத்து அந்த ஊர் மக்களின் நடவடிக்கைகளை கவனிக்க வைத்து, அதன் பிறகுதான் படப்பிடிப்பை துவங்கினார்களாம். இது போல ஒவ்வொறு விசயத்திலும் தன்னை சமுதானப்படுத்திக்கொள்ளாமல், திரைக்கதைக்கு எது தேவையோ அதை கேட்ட இயக்குநருக்கு முகம் சுலிக்காமல், செய்து கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் ராஜேஷ் உத்தமன்.
‘நாடோ டிகள்’ பட இயக்குநர் சமுத்திரக்கனியிடன் உதவி இயக்குநராக பணியாற்றிய சூர்யபிரபாகர் இயக்கும் முதல் படம் இது. எந்த வகையிலாவது இந்த படத்திற்கு மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற இயக்குநரின் எண்ணம், படத்தின் தலைப்பு, விளம்பர போஸ்ட்டர் என அனைத்திலும் பிரதிபலிக்கிறது. அது படத்திலும் இருந்தால் சரி.

16 ஜூன் 2010

ட்விட்டர் இணையத்தில் பதிவு செய்துவிட்டு மரணித்த இளைஞர்!


டுவிட்டர் இணையத்தளத்தில் தகவல் ஒன்றைத் தரவேற்றம் செய்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் ஒருவர். தென் கொரியாவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தென்கொரியாவைச் சேர்ந்த லீ-கே-ஹவா எனும் 27 வயதான இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகத் தன் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இவர் டுவிட்டர் ஊடாக தகவல் ஒன்றைத் தரவேற்றம் செய்துள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமையே தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்திருந்த இவர், பின்னர் தலைமறைவாகியுள்ளார். இவர் காணாமல் போனதாக இவரது குடும்பத்தார் முறைப்பாடு செய்துள்ளனர். லீ மரணித்த விடயம் டுவிட்டர் பாவனையாளர்கள் மூலம் அனைவருக்கும் விரைவாகத் தெரிய வந்தது.அவரது தொடர்பாளர்கள் லீயின் மரணச் செய்திக்கான தம் அனுதாபங்களை அதிர்ச்சி மேலிட தெரிவித்த வண்ணமுள்ளனர்.டுவிட்டர் மூலம் தகவல் தெரிவித்து விட்டுத் தன்னை ஒருவர் மாய்த்துக் கொண்ட சம்பவம் இதுவே முதல் தடவையாக நிகழ்ந்துள்ளதாக இணையத்தள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

14 ஜூன் 2010

மூதாட்டி ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்!


இந்திய அரியானாவில் 66 வயதான மூதாட்டி ஒருவர் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். உலகிலேயே முதிய வயதில், ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பெற்ற ஒரே பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். அரியானா மாநிலம் ரோடக் மாவட்டத்தில் உள்ள மதினா கிராமத்தைச் சேர்ந்தவர் பட்டேரி தேவி. இவரது கணவர் தேவா சிங் ஒரு விவசாயி. இவர்களுக்கு திருமணமாகி 44 ஆண்டு ஆகியும் குழந்தை பேறு இல்லாதிருந்தது.பட்டேரி தேவிக்குக் குழந்தை பிறக்காததால் தேவா சிங் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கும் குழந்தை பிறக்கவில்லை. எனவே சொத்துக்கு வாரிசு வேண்டுமே என்பதற்காக மூன்றாம் தாரமாக இளம் பெண் ஒருவரை திருமணம் செய்தார். ஆனால் அவருக்கும் குழந்தை பிறக்கவில்லை.வேதனை அடைந்த தேவா சிங்குக்கு ஹிஸ்சாரில், முதியவர்கள் கூட சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்ற தகவல் கிடைத்தது. ஹிஸ்சாரைச் சேர்ந்த டாக்டர் அனுராக் இவ்வித சிகிச்சையில் தேர்ச்சி பெற்றவர் என்பதையும் இவர் அறிந்த் கொண்டார்.உடனே, மனைவி பட்டேரி தேவியை டாக்டர் அனுராக்கிடம் அழைத்துச் சென்றார் தேவா சிங். சோதனை குழாய் முறையில் பட்டேரி தேவி கருத்தரிக்க வாய்ப்பு இருப்பதாக டாக்டர் கூறினார். இதற்கான சிகிச்சை கடந்த ஆண்டு தொடங்கியது. முதல் இரண்டு மாதங்களில் 2 கருமுட்டைகளை பட்டேரி தேவியின் கருப்பையில் டாக்டர்கள் வைத்தனர். ஆனால் அதில் ஒரு கருமுட்டை கூட வளரவில்லை. அடுத்து, மூன்றாவது மாதம் 3 கருமுட்டைகளை கருப்பையில் வைத்தனர். இந்த முறை 3 கருமுட்டைகளும் வளரத் தொடங்கின.கடந்த மே 29ஆம் திகதி பட்டேரி தேவிக்கு சத்திர சிகிச்சை மூலம் 2 ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. 66 வயதான முதியவர் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்திருப்பது, உலகச் சாதனையாகவே கருதப்படுகிறது.

09 ஜூன் 2010

நடிகை சசிரேகா மரணம்,தப்பியோடியவர்களை தேடுகிறது காவல்துறை.


தெலுங்கு நடிகை சசிரேகா நேற்று சென்னை ஈஞ்சம்பாக்கம் பண்ணைவீட்டில் இறந்துகிடந்தார். அவருடன் தங்கியிருந்த நடன இயக்குநர் ஷா, மற்றும் பக்கத்து அறையில் தங்கியிருந்த ஷாவின் நண்பர்களை தலைமைறைவாகிவிட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.
கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் அரிச்சந்திரா காலனியில் மருவூர் அரசி கார்டன் என்ற பண்ணை வீடு உள்ளது. இங்கு தங்குவதற்கு 8 அறைகள் உள்ளன. கிளப் உறுப்பினர்கள் மட்டுமே இங்கு தங்க முடியும். கிளப் உறுப்பினர்கள் சிபாரிசு இருந்தால் மட்டுமே மற்றவர்கள் தங்கமுடியும். கடந்த 6-ந் தேதி 28 வயதுடைய கீழ்க்கட்டளையைச் சேர்ந்த நடன நடிகர் ஷா’வும் 20 வயதுடைய தெலுங்கு சீரியல் நடிகை சசிரேகாவும் இங்கு அறை எடுத்து தங்கியிருந்தனர். குமார் என்ற பெயரில்தான் இங்கு அறை புக் செய்துள்ளார் ஷா. நேற்று முன்தினம் மதியம் ஷா வெளியில் சென்று விட்டார். சசிரேகா தூங்கிக்கொண்டு இருக்கிறார். யாரும் அவரை எழுப்ப வேண்டாம். நான் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வருகிறேன் என்று ரூம் பாயிடம் கூறிவிட்டு சென்றவர் திரும்பி வரவேயில்லை. வெகு நேரம் ஆகியும் ஷா வராததால் பண்ணை வீட்டின் மானேஜர் சந்தேகம் அடைந்து அறையில் எட்டிப் பார்த்த போது சசிரேகா தூக்கில் பிணமாக தொங்கினார். துரைப்பாக்கம் உதவி கமிஷனர் முரளி, இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் ஆகியோர் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சசிரேகா தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது. சசிரேகா வளசரவாக்கம் காமாட்சி நகரில் பெற்றோருடன் வசித்து வந்தார். தந்தை சீனிவாசரெட்டி பாரிமுனையில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். தமிழ் சினிமாவில் நடிக்கும் ஆசையால் அடிக்கடி ஷாவை பார்க்கச்சென்றுள்ளார். அப்படி ஏற்பட்ட பழக்கத்தால் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. சசிரேகா, ஷா தங்கியிருந்த அறையில் போலீசார் சோதனையிட்ட போது 6 பீர் பாட்டில்களும், ஆணுறைகளும் இருந்தன. கீழ்க்கட்டளையில் உள்ள ஷா வீட்டை உடைத்து போலீசார் உள்ளே சென்றனர். அங்கு 50 ஆணுறை பொட்டலங்களும், பீர் பாட்டில்கள், வீடியோ கேசட்டுகளும் சிக்கின. பக்கத்து வீட்டுக்காரர்களிடம் விசாரித்த போது தினமும் 2, 3 பெண்கள் வரை வந்து செல்வார்கள் என்று தெரிவித்துள்ளனர். பண்ணையில் தங்கியிருந்த ஷா, பக்கத்து அறையில் தங்கியிருந்த அவரின் நண்பர்கள் நான்கு பேர், ஒரு பெண் எங்கே என்று போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் கிடைத்தால்தான் சசிரேகா தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தெரியவரும்.

07 ஜூன் 2010

ஜோதிகா ஆண் குழந்தையொன்றை பெற்றெடுத்தார்,மகிழ்ச்சியில் சூர்யா.


சூர்யா - ஜோதிகா காதல் திருமணம் கடந்த 2006ல் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகிய ஜோதிகா, இல்லற வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்புவதாக கூறிவிட்டு புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இல்லதரசியாக இருந்து வருகிறார். இவர்களுக்கு 2007 ஆகஸ்டு 10 ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு தியா என பெயரிட்டனர். தற்போது மீண்டும் அவர் கர்ப்பமாக இருந்தார். கடந்த ஜூன் 6ஆம் தேதி, திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஜூன் 7ஆம் தேதி அதிகாலை 4.04 மணிக்கு ஜோதிகாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அப்போது கணவர் சூர்யாவும், குடும்பத்தினரும் மருத்துவமனையில் இருந்தனர்.
சூர்யாவுக்கு, அப்பா சிவக்குமார், தம்பி கார்த்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
குழந்தை பிறந்ததும் சூர்யா மகிழ்ச்சியானார். மருத்துவமனையில் இருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கினார். சக நடிகர் நடிகைகள்மற்றும் உறவினர்கள் செல்போனில் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சூர்யா ஜோதிகா தம்பதிக்கு குழந்தை பிறந்ததையொட்டி சூர்யா ரசிகர் மன்றத்தினர் இன்று திருவான்மியூரில் பட்டாசு வெடித்தனர். இனிப்புகளும் வழங்கினார்கள். பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சூர்யா ரசிகர் மன்றத்தினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.சூர்யா தற்போது நடித்து வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் சிங்கம் படம் வெற்றியடைந்து உள்ளது. இந்நிலையில் சூர்யாவுக்கு சிங்கக்குட்டி (ஆண் குழந்தை) பிறந்துள்ளதால், இரட்டிப்பு சந்தோஷத்தில் உள்ளார்.

05 ஜூன் 2010

பாலியல் வல்லுறவு முயற்சி,பேராசிரியர் கைது!


சென்னையில் மாணவியை கற்பழிக்க முயன்றதாக கல்லூரி பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை கோட்டூர்புரம் தண்டபாணி நகரை சேர்ந்தவர் கனகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணமான இவர், கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில், முதுகலை பட்டதாரியான இவர், பொதுத்துறை பாடப்பிரிவில் பி.எச்டி. பயின்று வந்தார். சென்னை மாநில கல்லூரி பொதுத்துறை பேராசிரியர் மாதவன் (வயது 54), கனகாவுக்கு வழிகாட்டுதல் ஆசிரியராக இருந்தார். அந்த வகையில் கனகா, பேராசிரியர் மாதவனை அடிக்கடி சந்தித்து பேசுவார்.

அவ்வாறு சந்திக்கும்போது கடந்த 18-ந் தேதி அன்று தன்னை, பேராசிரியர் மாதவன் கட்டிப்பிடித்து கற்பழிக்க முயன்றதாகவும், தனது ஜாக்கெட்டை கிழித்து மானபங்கப்படுத்தியதாகவும், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம், கனகா புகார் கொடுத்தார். இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

அதன்பேரில், உதவி கமிஷனர் தமிழ்செல்வன் மேற்பார்வையில், அண்ணாசதுக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, பேராசிரியர் மாதவன் மீது வழக்குப்பதிவு செய்தார். மாதவன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு உள்பட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது. நேற்று மாலை அவர் திடீரென்று கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை ரகசியமாக எழும்பூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

03 ஜூன் 2010

எங்களின் வீட்டினுள் யூதர்கள் நுழைந்தனர்!




ஒர் கொடிய நீண்ட இரவின் பிறப்பில்
எலும்பும் சதையுமாக
எரிந்து கொண்டிருந்தது
முள்ளிவாய்க்கால்.
இறந்த தாயின் முலையில்
குழந்தை பால் குடிக்க
இழுத்து வந்து
நெருப்பு மூட்டினர்

இருளின் நடுவே
சிலுவை தாங்கி
இறைவன் வருவான்
என நிலவைப் பார்த்தோம்
கண்களை மூடி
இது உன் விதி என்றது

எங்களின் வீட்டினுள்
யூதர்கள் நுழைந்தனர்
யேசுவைக் கேட்டனர்
ஆயிரம் ஆயிரம் சிலுவையில்
அவர்களை அறைந்தனர்
அடையாளம் காட்ட யூடாஸ் வந்தான்

மாவீரன் கல்லறையில்
மீண்டும் இரத்தம் வடிய
உயிர்த்திருந்தவர்களை
இன்னெருமுறை
புதைத்தனர்
கனவுகள் உடைந்து
கல்லறைக்குள் ஒளித்துக் கொண்டது

இரத்தமும் சதையுமாய்
எழுப்பிய சுவருக்குள்
எங்கள் முகங்கள்
எரிந்து கருகின.
முள்ளிவாய்க்கால் முழுமையாக
மூச்சிழந்தது
ஆயிரம் சிலுவையோடு அணைந்து போனது

அந்த உயிர்களின் கனவும் வாழ்வும்
கங்கையில் மிதந்த
பிணங்களைப் போல்
எங்களின் வயல்களில்
பிணங்கள் நீந்தின
எல்லாமே எரிந்து முடிந்தது
மிஞ்சிக் கிடக்கும் சாம்பலில் இருந்து
எலும்பை எண்ணிக் கணக்கெடுக்க
அங்கு யாரும்
சாட்சிகள் இல்லை
எரிந்து கிடக்கும் சாம்பலைத் தவிர

எஞ்சியிருப்பதற்கு
எங்களிடம் ஒன்றுமில்லை
மிஞ்சியிருக்கும் காக்கையும் குருவியும்
கரைந்த படி திரிய
நாறிக் கிடந்தன பிணங்கள்
நாங்கள் மனிதரில்லை என்றே
மூடிக் கிடக்கிறது முள்ளிவாய்க்கால்
புத்தரின் காவியினால்.

தாகம் தீர்த்தது சத்திய சோதனை
எங்களின் குருதியினால்.


(பா.உதயகுமார் நோர்வே.)