இந்திய அரியானாவில் 66 வயதான மூதாட்டி ஒருவர் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். உலகிலேயே முதிய வயதில், ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பெற்ற ஒரே பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். அரியானா மாநிலம் ரோடக் மாவட்டத்தில் உள்ள மதினா கிராமத்தைச் சேர்ந்தவர் பட்டேரி தேவி. இவரது கணவர் தேவா சிங் ஒரு விவசாயி. இவர்களுக்கு திருமணமாகி 44 ஆண்டு ஆகியும் குழந்தை பேறு இல்லாதிருந்தது.பட்டேரி தேவிக்குக் குழந்தை பிறக்காததால் தேவா சிங் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கும் குழந்தை பிறக்கவில்லை. எனவே சொத்துக்கு வாரிசு வேண்டுமே என்பதற்காக மூன்றாம் தாரமாக இளம் பெண் ஒருவரை திருமணம் செய்தார். ஆனால் அவருக்கும் குழந்தை பிறக்கவில்லை.வேதனை அடைந்த தேவா சிங்குக்கு ஹிஸ்சாரில், முதியவர்கள் கூட சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்ற தகவல் கிடைத்தது. ஹிஸ்சாரைச் சேர்ந்த டாக்டர் அனுராக் இவ்வித சிகிச்சையில் தேர்ச்சி பெற்றவர் என்பதையும் இவர் அறிந்த் கொண்டார்.உடனே, மனைவி பட்டேரி தேவியை டாக்டர் அனுராக்கிடம் அழைத்துச் சென்றார் தேவா சிங். சோதனை குழாய் முறையில் பட்டேரி தேவி கருத்தரிக்க வாய்ப்பு இருப்பதாக டாக்டர் கூறினார். இதற்கான சிகிச்சை கடந்த ஆண்டு தொடங்கியது. முதல் இரண்டு மாதங்களில் 2 கருமுட்டைகளை பட்டேரி தேவியின் கருப்பையில் டாக்டர்கள் வைத்தனர். ஆனால் அதில் ஒரு கருமுட்டை கூட வளரவில்லை. அடுத்து, மூன்றாவது மாதம் 3 கருமுட்டைகளை கருப்பையில் வைத்தனர். இந்த முறை 3 கருமுட்டைகளும் வளரத் தொடங்கின.கடந்த மே 29ஆம் திகதி பட்டேரி தேவிக்கு சத்திர சிகிச்சை மூலம் 2 ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. 66 வயதான முதியவர் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்திருப்பது, உலகச் சாதனையாகவே கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக