பக்கங்கள்

05 ஜூன் 2010

பாலியல் வல்லுறவு முயற்சி,பேராசிரியர் கைது!


சென்னையில் மாணவியை கற்பழிக்க முயன்றதாக கல்லூரி பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை கோட்டூர்புரம் தண்டபாணி நகரை சேர்ந்தவர் கனகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணமான இவர், கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில், முதுகலை பட்டதாரியான இவர், பொதுத்துறை பாடப்பிரிவில் பி.எச்டி. பயின்று வந்தார். சென்னை மாநில கல்லூரி பொதுத்துறை பேராசிரியர் மாதவன் (வயது 54), கனகாவுக்கு வழிகாட்டுதல் ஆசிரியராக இருந்தார். அந்த வகையில் கனகா, பேராசிரியர் மாதவனை அடிக்கடி சந்தித்து பேசுவார்.

அவ்வாறு சந்திக்கும்போது கடந்த 18-ந் தேதி அன்று தன்னை, பேராசிரியர் மாதவன் கட்டிப்பிடித்து கற்பழிக்க முயன்றதாகவும், தனது ஜாக்கெட்டை கிழித்து மானபங்கப்படுத்தியதாகவும், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம், கனகா புகார் கொடுத்தார். இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

அதன்பேரில், உதவி கமிஷனர் தமிழ்செல்வன் மேற்பார்வையில், அண்ணாசதுக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, பேராசிரியர் மாதவன் மீது வழக்குப்பதிவு செய்தார். மாதவன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு உள்பட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது. நேற்று மாலை அவர் திடீரென்று கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை ரகசியமாக எழும்பூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக