டுவிட்டர் இணையத்தளத்தில் தகவல் ஒன்றைத் தரவேற்றம் செய்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் ஒருவர். தென் கொரியாவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தென்கொரியாவைச் சேர்ந்த லீ-கே-ஹவா எனும் 27 வயதான இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகத் தன் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இவர் டுவிட்டர் ஊடாக தகவல் ஒன்றைத் தரவேற்றம் செய்துள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமையே தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்திருந்த இவர், பின்னர் தலைமறைவாகியுள்ளார். இவர் காணாமல் போனதாக இவரது குடும்பத்தார் முறைப்பாடு செய்துள்ளனர். லீ மரணித்த விடயம் டுவிட்டர் பாவனையாளர்கள் மூலம் அனைவருக்கும் விரைவாகத் தெரிய வந்தது.அவரது தொடர்பாளர்கள் லீயின் மரணச் செய்திக்கான தம் அனுதாபங்களை அதிர்ச்சி மேலிட தெரிவித்த வண்ணமுள்ளனர்.டுவிட்டர் மூலம் தகவல் தெரிவித்து விட்டுத் தன்னை ஒருவர் மாய்த்துக் கொண்ட சம்பவம் இதுவே முதல் தடவையாக நிகழ்ந்துள்ளதாக இணையத்தள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக