உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் உணவுப் பொருட்களும், பழக்கவழக்கங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.சற்று துவர்ப்புடன் இருக்கும் நெல்லிக்காயை எடுத்து கொண்டால், அதன் உண்மையான பலனை நிச்சயம் உணரலாம். நீண்ட நாட்கள் ஆரோக்கியமாகவும், இளமையுடனும் வாழ இக்கனி உதவுகிறது.1. ஒரு சிறு துண்டு இஞ்சி, 2 நெல்லிக்காய், இரண்டையும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து குடிக்க சிறுநீரகக் கல்களை கரைத்துவிடும்.
2. இலைகள், பட்டை, வேர், மலர்கள் மற்றும் அனைத்தும் மருத்துவப் பயனுள்ள பகுதியாகும்.சிறுநீரகக் கோளாறு, இரத்தச் சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரண நோய்களுக்கு நன்மருந்தாகிறது. சர்க்கரை நோயாளியின் கணையத்தை வலுவேற்ற உதவும். மூப்பினை ஏற்படுத்தும் தொல்லைகளைப் போக்கி, உடல் உறுப்புகளை நல்ல நிலையில் வைக்கும் திறன் படைத்தது.
3. நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது குறையும்.
4. பாலுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் நரை இருந்தாலும் கருக்கத் தொடங்கி விடும். இது இதயத்திற்கு வலிமையை வழங்குகிறது. மற்றும் குடற்புண், இரத்தப்பெருக்கு, நீரிழிவு, கண் நோய் ஆகியவற்றைக் குணமாக்கும்.
5. உடல் அசதி மற்றும் அஜிரணக் கோளாறுகளுக்கு இது கைகண்ட மருந்தாகும். அத்துடன் வாயுத் தொல்லைகளைப் போக்கக்கூடிய குணம் இதற்கு உண்டு. இரத்த உறைவினால் உண்டாகும் பல நோய்களைப் போக்கும் ஆற்றலும் முக்கியமாக பித்தத் தொடர்பான வியாதிகளுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது.
6. உடலில் இரத்தம் குறைவினால் ஏற்படும் ஞாபக மறதியைத் தடுக்க, தினமும் நெல்லிக்காய் சாற்றை குடித்தால், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகமாகி, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
7. தலையில் ஒரு கரண்டி எண்ணெயை நன்றாக அழுத்தி தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது தவிர்க்கப்படுவதோடு, முடி கருமையாகவும், எந்தவித தொல்லையுமின்றி, மூளையைக் குளிர்ச்சியாக வைத்து அனைத்து வகைகளிலும் சுகமளிக்கக்கூடியதாகும்.

நாம் தினமும் உண்ணும் சீனியில் எவ்வளவு நச்சுத் தன்மை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால் நமக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும்.
நாம் காலையில் எழுந்தவுடன் குடிக்கும் டீ அல்லது காபியில் இருந்து இரவு படுக்கும் முன் குடிக்கும் பால் வரை நாம் சீனியைப் பயன்படுத்துகிறோம்.
இந்த வெள்ளை சீனி தயாராகும் விதத்தை நாம் தெரிந்து கொண்டால் அது உடலுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். இந்த வெள்ளைச் சீனி தயாரிக்க பயன்படுத்தும் ரசயானப் பொருட்கள் மிகவும் ஆபத்தானவை.
கரும்பிலிருந்து சாறு பிழியப்படும்போது, பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை ஃபுளுய்டு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் அமிலம் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த அமிலம் அழுக்கு நீக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.
பின்னர் சுண்ணாம்பை 2 சதவிகித அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயுவை செலுத்துகிறார்கள்.
இதை 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
இதையடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு பெறப்படுகிறது.
காஸ்டிக் சோடா, சலவை சோடா சேர்த்து சுடுகலனில் அடர்த்தி மிகுந்த சாறு தயாரிக்கப்படுகிறது.
மீண்டும் சல்பர்-டை-ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க, படிகநிலைக்கு சீனி வருகிறது. சல்பர்-டை-ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது. இவ்வாறு தயாராகும் சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரி மட்டும்தான்.
இது, தயாரான நாளில் இருந்து, ஆறு மாத காலத்திற்கு மேல் இந்த சீனியை சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் அதில் உள்ள சல்பர்-டை-ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள விஷமாக மாறிவிடும்.
அது, குடல் புண், உடல் பருமன், பல் சொத்தை, சளித்தொல்லை, இதய நோய், இரத்த அழுத்தம், மற்றும் சக்கரை நோய் போன்ற பெரிய வியாதிகள் அனைத்திற்கும் இதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது.
இந்த வெள்ளை சீனிக்குப் பதில், வெல்லம், கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதனால் ரத்த அழுத்தம், இதய நோயோ, சர்க்கரை நோய் ஆகியவற்றில் இருந்து தப்பிக்கலாம்.


