அன்னாசி பழத்தில் வைட்டமின் 'பி' உள்ளதால் உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்தாக உள்ளது.நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.
அன்னாசி பழச்சாறு சிறுநீர் கழிவை தூண்டி, விஷம் மற்றும் கழிவுப் பொருட்களை வெளியேற்றி, சிறுநீரகங்கள் சிறப்பாகச் செயல்பட உதவும்.
அன்னாசிப் பழத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ஒரு பக்க தலைவலி, மாலைக்கண் நோய், கண் பார்வை மங்கல், கண் உறுத்தல், காது வலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவதில் இருந்து விடுபடலாம். மேலும், அன்னாசிப் பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.அன்னாசிப் பழம் குடலில் உள்ள கெட்ட கிருமிகள் மற்றும் புழுக்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது. இதில், கால்சியம் உள்ளதால் பற்கள், எலும்புகளை உறுதிப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல அன்னாசிப் பழம் சளி மற்றும் காய்ச்சலைக் கூட குணப்படுத்த வல்லது. வயிறு தொடர்பான பிரச்சனைகளைக் கூட சரி செய்கிறது.
16 மார்ச் 2017
08 மார்ச் 2017
குடற்புண்ணை ஆற்றும் திராட்சை!
ஊட்டச் சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று, இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச் சத்து பாஸ்பரஸ் போன்ற சத்துப் பொருள்கள் உண்டு.உடல் வறட்சி, மூளை நரம்புகள் வலுபெறுவதுடன் செரிமான கோளாறுகள் நீங்கும். இதயம் பலவீனமாக இருந்தாலும், அடிக்கடி படபடப்பு ஏற்பட்டாலும், திராட்சை பழத்தை பன்னீரில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து அதை அப்படியே பிசைந்து வடிகட்டி சிறிது சிறிதாக குடித்து வர இதயம் பலப்படும். படபடப்பு நீங்கும்.
உலர்ந்த திராட்சைப் பழத்தை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வர மலச்சிக்கல் தீருவதுடன் நாவறட்சி மற்றும் மயக்கமும் நீங்கும். திராட்சையால் குடல்புண் ஆறும். கல்லீரல் மண்ணீரல் கோளாறு நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
உலர்ந்த திராட்சைப் பழங்களை இரண்டாக பிளந்து எடுத்து, சுத்தமான நீரில் சிறிது நெல்லிக்காய் சாறு கலந்து சாப்பிட்டு வர, சிறிநீரகக் கோளாறுகள் குணமாகும்.
திராட்சைப் பழத்துடன் மிளகை அரைத்து சாப்பிட்டு வர கல்லடைப்பு நீங்கும். கருப்பு திராட்சை பழச்சாறு 200 மி.லி. தினமும் இரண்டு வேளை அருந்தி வர, அதிகபடியான கொழுப்புச் சத்து குறையும்.திராட்சை நல்ல உறக்கத்தை தருவதுடன், ரத்த சோகையை போக்கும் தன்மை உடையது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை நிவர்த்தி செய்வதுடன் காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினமும் திராட்சைப் பழம் சாப்பிட்டு வர அந்த நோயின் தன்மை குறையும்.20 பிப்ரவரி 2017
மூட்டு,வாதநோய்களை அகற்றும் முடக்கற்றான்!
முடக்கு அறுத்தான் என்பதற்கு முடக்கும் வாதத்தை அறுக்கும் என்று பொருள்படும். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும் மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் எனப் பெயர் பெற்றது.
மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம், மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.
ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை ஒருசட்டியில் போட்டு, வெள்ளைப் பூண்டு பற்களில் ஐந்து நைத்து இதில் போட்டு அரைத்து தேக்கரண்டி அளவு மிளகை ஒன்றிரண்டாக உடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சிய கஷாயத்தை வடிகட்டி விடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால் ஒரு எலுமிச்சை பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம் சாதம்மட்டும் சாப்பிடலாம். இரவு தேவையான பதார்த்தம் சாப்பிடலாம்.
முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நீங்கும். இதன் இலையை இடித்துப் பிழிந்து எடுத்த சாற்றினை இரண்டு துளிகள் காதில் விட்டு வர காது வலி, காதில் இருந்து சீழ் வடிவது முதலியவை நீங்கும்.
முடக்கற்றான் இலையையும், வேரையும் குடி நீரிட்டு மூன்று வேளையாக அறுபது மில்லி வீதம் தொடர்ந்து அருந்திவர நாள்பட்ட இருமல் குணமாகும். சில பெண்களுக்கு மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்படாது இவர்கள் முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு ஒழுங்காக வரும்.
முடக்கற்றான் கொடி மல மிளக்கி செய்கை உடையது. இதன் கொடியை முறைப்படி குடிநீரிட்டு அத்துடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து அருந்த மலச்சிக்கல் குணமாகும்.04 பிப்ரவரி 2017
உடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி!
முள்ளங்கியானது தொண்டை சம்பந்தமான நோயை குணமாக்குவதோடு, குரலை இனிமையாக்குகிறது. பசியை தூண்டக்கூடியது, சிறுநீர் அடைப்பை போக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் வெட்டை நோய், முடி உதிர்தல் ஆகியவற்றை குணப்படுத்த வல்லது.
முள்ளங்கி சூப் குடித்தால் நரம்பு சுருள்கள் நீங்கும். அதிக நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ள முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகளும் தாது உப்புகளும் நிறைந்துள்ளது.
முள்ளங்கி, முள்ளங்கி இலை, விதை முதலியவை மருத்துவத்தன்மை நிறைந்தவை. இவற்றை உட்கொண்டால் உடல் முழுவதும் சுத்தமான இரத்தம் எப்போதும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும்.இலை பசியைத் தூண்டிச் சிறுநீர் பெருக்கித் தாது பலங்கொடுக்கும். சமைத்துண்ண அதிக சிறுநீர், நீர்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக் காசம், கபநோய், இருமல் ஆகியவை தீரும்.
முள்ளங்கிச்சாறு 30 மி.லி. காலை, மாலை கொடுக்கச் சிறுநீரகக் கோளாறு, நீர்தாரைக் குற்றங்கள் நீங்கும். முள்ளங்கி சிறுநீர் பெருக்கும், குளிர்ச்சியுண்டாக்கும்.
இலைச்சாற்றை 5 மி.லி. ஆக நாள்தோறும் 3 வேளை சாப்பிட்டு வர மலக்கட்டு, சிறுநீர்க் கட்டு, சூதகக்கட்டு எளிய வாத நோய்கள் தீரும்.
இந்த முள்ளங்கியால் வாத நோய், வயிற்றெரிச்சல், உடல் நரம்பு வலி, காசநோய், தலைவலி, மயக்கம், ஆஸ்துமா என்ற இரைப்பு, கடுப்பு என்ற சீதபேதி ஆகியன குணமாகும்.
சிறுநீரகத்தை நன்கு இயக்கும் குணமுடையது. அதனால் சிறுநீரைப் பெருக்கி நீர்கோர்வை என்ற உடல் வீக்கத்தைக் குறைக்கும். வாரம் இருமுறை இதனை உணவில் சேர்க்க வேண்டும். பொரியல், சாம்பார் எதுவும் செய்து சாப்பிடலாம். வெள்ளை முள்ளங்கி மிக்க குணமுடையது.
இதனை இடித்து சாறு பிழிந்து 30-50 மி.லி. அளவு காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது சாப்பிடும்போது உணவில் புளி தவிர்க்கவும். மேலே கூறப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும்.
கருவுற்ற தாய்மார்கள் இதனை வாரந்தோறும் சாப்பிட்டு வந்தால் குழந்தைப்பேறு எளிதாகும். சிறுநீர் எளிதாக பிரியும். இதனால் ஏற்படும் கை, கால் வீக்கம் வராது.
இதன் விதையைக் குடிநீராக-காசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும்.23 நவம்பர் 2016
சிறந்த மருந்தாகும் கீழாநெல்லி!
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மையுடையதெனவும் கல்லீரலை பாதுகாக்கும் தன்மையுடையதெனவும் பல்வேறு ஆய்வுகள் மூலம் தெளிவுபடுத்தி உள்ளனர்.
1. கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, தும்பை, சீரகம், பொன்னாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து காய்ச்சிய பசும்பால் அல்லது தேங்காய்ப்பால் விட்டு நன்றாக அரைத்து காலை மாலை பாலில் 7 நாட்கள் கொடுக்க மஞ்சள் காமாலை நோய் தீரும்.
2. மாதவிடாய் அளவுக்கு மீறி போய்க்கொண்டிருந்தால் கீழ்க்காய் நெல்லி, அத்திப் பட்டை, அசோகப்பட்டை, அரசம் பட்டை, நாவல் பட்டை இவைகளை சம அளவாக எடுத்து நன்றாக தூள்செய்து வைத்துக் கொண்டு தினம் ஒரு கரண்டி வீதம் தேன், வெந்நீர், பால் ஏதாவது ஒன்றில் மாறிமாறி சாப்பிட்டு வர கர்ப்பநோய்கள் அனைத்தும் தீரும். மேலும் வெள்ளைப்படுதல் போன்றவையும் தீரும்.
3. கீழ்காய் நெல்லியை நன்றாக அரைத்து சொறி சிரங்கு படைகளில் போட உடனே மாறும். கீழாநெல்லியும் மஞ்சளும் சேர்த்து உடலில் தேய்த்து சில நிமிடம் ஊறவிட்டு குளித்து வர தோல் நோய்கள் வராமல் தடுப்பதோடு வந்த நோய்கள் அனைத்தும் தீரும்.
4. கீழ்க்காய் நெல்லியை நன்றாக மென்று பல் துலக்கி வர பல்வலி என்பது பக்கத்திலும் அண்டாது.
5. கீழாநெல்லிப்பொடி, நெல்லிக்காய்பொடி, கரிசாலைப் பொடி மூன்றையும் சமஅளவு எடுத்து தேனில் உண்டுவர அடிக்கடி வரும் சளித் தொல்லை, இரத்தக்குறைவு, இரத்தசோகை போன்ற நோய்களுக்கான எதிர்ப்பாற்றல் பெருகும்.
6. தினமும் இதை தலையில் தேய்த்து தண்ணீரில் குளித்து வந்தால் கண்நோய்கள், பித்த நோய்கள், மேக நோய்கள், மேக உஷ்ணம், காமாலை நோய்கள் தீரும். மஞ்சள் காமாலை நோயாளிக்கு இது சிறந்த மருந்தாகும்.
7. தோல் சம்பந்தமான நோய்கள் குணமாக்க இலையை உப்பு சேர்த்து மைய அரைத்து தோல் சம்பந்தமான நோய்களுக்கு பூசி வந்தால் அவைகள் குணமாகும்.
1. கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, தும்பை, சீரகம், பொன்னாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து காய்ச்சிய பசும்பால் அல்லது தேங்காய்ப்பால் விட்டு நன்றாக அரைத்து காலை மாலை பாலில் 7 நாட்கள் கொடுக்க மஞ்சள் காமாலை நோய் தீரும்.2. மாதவிடாய் அளவுக்கு மீறி போய்க்கொண்டிருந்தால் கீழ்க்காய் நெல்லி, அத்திப் பட்டை, அசோகப்பட்டை, அரசம் பட்டை, நாவல் பட்டை இவைகளை சம அளவாக எடுத்து நன்றாக தூள்செய்து வைத்துக் கொண்டு தினம் ஒரு கரண்டி வீதம் தேன், வெந்நீர், பால் ஏதாவது ஒன்றில் மாறிமாறி சாப்பிட்டு வர கர்ப்பநோய்கள் அனைத்தும் தீரும். மேலும் வெள்ளைப்படுதல் போன்றவையும் தீரும்.
3. கீழ்காய் நெல்லியை நன்றாக அரைத்து சொறி சிரங்கு படைகளில் போட உடனே மாறும். கீழாநெல்லியும் மஞ்சளும் சேர்த்து உடலில் தேய்த்து சில நிமிடம் ஊறவிட்டு குளித்து வர தோல் நோய்கள் வராமல் தடுப்பதோடு வந்த நோய்கள் அனைத்தும் தீரும்.
4. கீழ்க்காய் நெல்லியை நன்றாக மென்று பல் துலக்கி வர பல்வலி என்பது பக்கத்திலும் அண்டாது.
5. கீழாநெல்லிப்பொடி, நெல்லிக்காய்பொடி, கரிசாலைப் பொடி மூன்றையும் சமஅளவு எடுத்து தேனில் உண்டுவர அடிக்கடி வரும் சளித் தொல்லை, இரத்தக்குறைவு, இரத்தசோகை போன்ற நோய்களுக்கான எதிர்ப்பாற்றல் பெருகும்.
6. தினமும் இதை தலையில் தேய்த்து தண்ணீரில் குளித்து வந்தால் கண்நோய்கள், பித்த நோய்கள், மேக நோய்கள், மேக உஷ்ணம், காமாலை நோய்கள் தீரும். மஞ்சள் காமாலை நோயாளிக்கு இது சிறந்த மருந்தாகும்.
7. தோல் சம்பந்தமான நோய்கள் குணமாக்க இலையை உப்பு சேர்த்து மைய அரைத்து தோல் சம்பந்தமான நோய்களுக்கு பூசி வந்தால் அவைகள் குணமாகும்.
23 ஜூன் 2016
வாழைப்பழத்திலும் தேங்காயிலும் உள்ள நன்மைகள்!
தேங்காயும், வாழைப்பழமும் மாவுச் சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், உயிர்ச் சத்துக்கள் நிறைந்த முழு உணவாகும்.வாழைப்பழம் சளியை வெளியேற்றுகிறது. தேங்காய் வயிற்றிலுள்ள பூச்சிகளை வெளியேற்றுகிறது. தேங்காயை உடைத்தவுடனேயே சாப்பிடவும்.
தேங்காயைப் பச்சையாகச் சாப்பிடும் பொழுது கொலஸ்ட்ரால் இல்லை. சமையலில் பயன்படுத்தும் பொழுது தான் கொலஸ்ட்ரால் ஏற்படும்.
உடல் உறுப்புகளுக்கு மிக்க வலிமை அளிப்பதோடு, அவற்றை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்வது தேங்காயாகும். தேங்காய் நன்கு பசி தாங்க வல்லது.
தேங்காயை உணவாக உண்டு வருவதால் தோலும், உள்ளுறுப்புகளும் நன்மையும், ஒளியும் பெறுகின்றன. மூட்டுகள் உராய்தலின்றி செயல்படுகின்றன.
பச்சைத் தேங்காய் எந்தத் தீங்கும் தருவதில்லை. தேங்காய் எண்ணெய் அவ்வளவு நன்மை தராது.மனிதன் உண்ணக்கூடிய உணவில் கரையும் கொழுப்பு, கரையாத கொழுப்பு என இரண்டு வகைகள் உள்ளன.
கரையாத கொழுப்புதான் மனித உடலுக்குத் தீங்கு செய்கிறது. தேங்காய் பருப்பில் கரையும் தன்மை கொண்ட கொழுப்பு வகைதான் இருக்கிறது.
தேங்காயை நெருப்பில் சமைக்கும் பொழுதுதான் அதில் இருக்கக்கூடிய கொழுப்பு கெடுதல் செய்யும். கரையாத கொழுப்பாக மாறி கேடு விளைவிக்கிறது.தேங்காய் உண்ணும் போது உயிராற்றலையும், வாழைப்பழத்தை சாப்பிடும் போது அதிலுள்ள குளுக்கோஸ் நமது உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கின்றது.03 ஜூன் 2016
நரம்பு தளர்ச்சியை குணப்படுத்தும் செவ்வாழை!
எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.
பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது.1.இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
2.இரத்த மண்டலத்திற்கும், ஆண்மைக்கான ஊட்டச்சத்துகளும் இருப்பதாக கருதப்படுகிறது. *கண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
3.செரிமானக்கோளாறுகள் மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.
4.கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
5.மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும். பல்வலி குணமடையும்.
6.பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
7.சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.
8.நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு 9.செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும். 10.குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். 11.தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அரிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
