பக்கங்கள்

29 டிசம்பர் 2010

கமலுடன் ஜோடி சேரும் அனுஷ்கா.

மன்மதன் அம்பு வெளியான வேகத்தில் தனது அடுத்த அம்பை எய்யத் தயாராகிவிட்டார் கமல்ஹாஸன். இந்த முறை வெளிவரும் படம் தலைவன் இருக்கின்றான், அவரது சொந்த இயக்கத்தில் உருவாகும் படம் இது!
டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கும் என்று தெரிகிறது.
இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்படுகிறது. அனுஷ்காவிடம் மொத்தமாக 6 மாதங்கள் கால்ஷீட் கேட்டிருப்பதாகவும், தமிழில் இதுவரை யாரும் பெறாத அளவு பெரும் சம்பளம் தர ஒப்புக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது தமிழில் சிம்புவுடன் வானம் படத்தில் நடிக்கும் அனுஷ்கா, வேறு புதிய படங்களில் நடிக்க கால்ஷீட் தராமல் உள்ளார்.
தலைவன் இருக்கின்றான் ஸ்கிரிப்ட் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டதாக கமல்ஹாஸன் சில தினங்களுக்கு முன் கூறியது நினைவிருக்கலாம். புத்தாண்டில் இந்தப் பதிய பட அறிவிப்பை வெளியிட உள்ளார் கமல்.

24 டிசம்பர் 2010

காதல் வலையில் அனுஷ்கா!

அலைபாயும் காதலுக்கு இப்போது நெடு நெடு அனுஷ்காவும் விழுந்து விட்டாராம். தான் ஒருவரை காதலித்து வருவதா பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார் அனுஷ்கா.
6.2 ஹைட்டில் இருக்கும் அனுஷ்கா, முன்பு தெலுங்குத் திரையுலகை ஆட்டிப்படைத்து வந்தார். இப்போது தமிழ் திரையுலகமும் அனுஷ்காவின் அசகாய அழகில் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. அனுஷ்காவுடன் ஜோடி சேர ஹீரோக்களுக்கு மத்தியில் 'ஆரோக்கியமான' போட்டி காணப்படுகிறது.
தெலுங்கிலும், தமிழிலும் கை நிறைய படங்கள் வைத்திரும் அனுஷ்கா, தமிழில் அவர் இரண்டு படம் மூலம் அறிமுகமானாலும் அதற்குப் பிறகு ஏற்றம் கிடைக்காததால் தெலுங்குக்கு டேக் ஆப் ஆனார். பின்னர் மீண்டும் வேட்டைக்காரன் மூலம் திரும்பி வந்த அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது என்னவோ சிங்கம் தான். தற்போது அஜீத்துடன் மங்காத்தா ஆடி வருகிறார்.
தெலுங்கில் சந்திரமுகி படத்தின் அடுத்த பாகமான நாகவள்ளி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. அதில் சந்திரமுகியாக நடித்திருப்பது அனுஷ்கா தான்.
படங்கள் மட்டுமன்று விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்துவிட்டாலே அவரை ஏதாவது ஒரு ஹீரோவுடன் சேர்த்து கிசு கிசு வந்துவிடும். இரு மொழிகளிலும் படு பிசியாக இருந்து வரும் அனுஷ்காவுக்கு மட்டும் வராமலா போய் விடும். வருகிறது, ஒன்றல்ல பல ஹீரோக்களுடன் கிசுகிசு வருகிறது.
ஆனால் அனுஷ்கா மனதில் ஏற்கனவே ஒருவருக்கு இடம் கொடுத்து உட்கார வைத்துள்ளாராம். ஆனால் அவர் யார் என்பதை தற்போது சொல்லுவதாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்த காதலன் பெயரைச் சொன்னால் நம் புருவமெல்லாம் தானாக உயரும் என்கிறார்.
தற்போது கை நிறைய படங்கள் வைத்திருப்பதால், அவற்றை எல்லாம் முடித்துவிட்டு இன்னும் 2 ஆண்டுகளில் திருமணமாம்.
அப்படி யாரப்பா அந்த அசகாய சூரன்? நீங்க சொல்லாட்டி என்ன, அடுத்த 'ரவுண்டு' கிசுகிசுவில் தெரிந்து விடப் போகிறது?

15 டிசம்பர் 2010

சபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன்?

சபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன்? பெண்கள் சென்றால் என்ன தப்பு? இதெல்லாம் எனக்குப் புரியவில்லை. இந்த விஷயத்தில் துணிச்சலுடன் செயல்பட்ட ஜெயமாலாவை பாராட்டுகிறேன், என்று நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.
சபரிமலை சந்நிதானத்தில் உள்ள அய்யப்பன் சிலையைத் தொட்டு வணங்கியதாகக் கூறினார் நடிகை ஜெயமாலா. ஆனால் அவர் தொட்டிருக்க வாய்ப்பில்லை, பொய் சொல்கிறார் என மறுத்தது கோயில் நிர்வாகம். ஆனால் ஜெயமாலா, தான் கருவறைக்குள் நுழைந்து அய்யப்பனைத் தொட்டு தரிசித்தது உண்மையே என்று கூறியதால், அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு, நேற்று குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விஷயம் குறித்து கேள்விப்பட்டு கருத்துத் தெரிவித்துள்ள நடிகை ஸ்ரேயா, ஜெயமாலா அய்யப்பனைத் தொட்டு தரிசித்திருந்தால் அவரது துணிச்சலை நான் பாராட்டுகிறேன், என்று கூறியுள்ளார்.
மேலும், அய்யப்பன் கோயிலுக்கு பெண்கள் சென்றால் என்ன தவறு? ஏன் அனுமதி மறுக்கிறார்கள் என்பதே புதிராக உள்ளது", என்று கூறியுள்ளார்.

12 டிசம்பர் 2010

கவர்ச்சி உடை தப்பில்லை!-ஸ்ரேயா.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நீச்சல் உடையில் நடிக்க நான் தயார். அதற்குப் பொருத்தமான கதை, காட்சி இருந்தால். இயக்குநர்கள் தயாராக இருந்தால் சரி", என்கிறார் ஸ்ரேயா.
தமிழில் ஸ்ரேயாவுக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லை. தெலுங்கில் சில படங்களில் நடிக்கிறார். சமீபத்தில் ஹைதராபாதில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் கூறுகையில், "ரசிகர்கள் விருப்பப்படி நடிப்பதுதான் நடிகைகள் கடமை. எனக்கு அழகு இருக்கிறது. அதன் மூலம் ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும். உடம்பை முழுமையாக மூடிக்கொண்டு நடித்தால் ரசிகர்களுக்கு எரிச்சல் வந்து விடும்.
எனவே அவர்களுக்காக கவர்ச்சியாக நடிக்கிறேன். சில நடிகைகள் நீச்சல் உடையில் நடிக்கின்றனர். நானும் அது போல் நீச்சல் உடையில் நடிக்கத் தயார். ஆனால் அது போன்ற கதைகள் இன்னும் வரவில்லை.
பொது விழாக்களில் கவர்ச்சி உடை அணிந்து கலந்து கொள்வதை சிலர் விமர்சிக்கின்றனர். அப்படி வருவதில் எந்தத் தவறும் இல்லை.
காதல் மனித வாழ்க்கையில் ஒரு அங்கம். எனக்கு யார் மீதும் இன்னும் காதல் வரவில்லை. ஆனால் சினிமா மேல் அளவு மீறிய காதல் எனக்கு இருக்கிறது. படப்பிடிப்பு என்றால் சந்தோஷமாக ஓடுகிறேன். மழை, வெயில் பற்றிக்கூட கவலைப்படாமல் நடிக்கிறேன். வாழ்க்கையில் எனக்கு சலிப்பே வராத விஷயம் சினிமா", என்றார்.

10 டிசம்பர் 2010

கார்த்தியுடன் என்னை இணைத்துப் பேசுவது முட்டாள்தனம்! - தமன்னா.

நடிகர் கார்த்தியுடன் என்னை இணைத்துப் பேசுவது முட்டாள்தனம் என்கிறார் நடிகை தமன்னா.
தமன்னாவிடம் தவறாமல் கேட்கும் கேள்விகளுள் ஒன்றாகிவிட்டது 'கார்த்தியுடன் காதலா?' என்பது.
இந்த முறையும் அப்படி ஒரு கேள்வியை அவரிடம் கேட்க, கடுப்பான தமன்னா இப்படிக் கூறினார்.
எனக்கும், கார்த்திக்கும் காதல் இல்லை என்று பலமுறை மறுத்து விட்டேன். ஆனாலும் தொடர்ந்து வதந்திகள் பரப்பப்படுகிறது. என்னையும், கார்த்தியையும் இணைத்து பேசுவதே முட்டாள்தனம்.
அவரோடு இரண்டு படம் நடிச்சிட்டா, காதல் வந்துடுமா... உடன் நடிக்கும் ஒரு நடிகர் அவர். அவ்வளவுதான். வேற எந்த உணர்வும் இல்லை. தயவு செய்து இதை எழுதுங்கள்.
சிறுத்தை என்ற படத்தில் அவருடன் நடிக்கிறேன். அந்தப் படம் முடிந்தபிறகு அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. இதுதான் எங்களுக்குள் உள்ள உறவு. போதுமா..?" என்றார்.
கார்த்தியுடன் காதல் என்ற விவகாரத்தை தொடர்ந்து மீடியாவில் இருக்கும்படி செய்ய வேண்டும் என்பதற்காக அந்தப் படம் தொடர்பான சிலரே இப்படி பொய்யான செய்திகளை வெறும் பப்ளிசிட்டிக்காக பரப்பி வருகின்றனர் என ஏற்கென நாம் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
இந்த மாதிரி வதந்திகளைத் தவிர்க்க இப்போதெல்லாம் தவறாமல் அனைத்துப் படப்பிடிப்புகளுக்கும் தன் பாட்டியை உடன் அழைத்துச் சென்றுவிடுகிறாராம் தமன்னா!

07 டிசம்பர் 2010

விலைமாது ரோல்.. விலகிய த்ரிஷா!

தெலுங்குப் படங்களில் வாய்ப்பு என்றால், கையிலிருக்கும் தமிழ்ப் படங்களைக் கூட அம்போவென விட்டுவிட்டு ஓடுகிறார்கள் நடிகைகள். ஆனால் த்ரிஷாவோ, தெலுங்கில் கிடைத்த ஒரு பெரிய வாய்ப்பை மறுத்துவிட்டிருக்கிறார்.
காரணம்...?
அது விலைமாது கேரக்டராம்!
இந்த ரோலுக்காக த்ரிஷாவுக்கு ஒரு கோடிக்கும் மேல் சம்பளம் தரத் தயாராக இருந்தார்களாம். ஆனால் விபச்சாரியாக நடிப்பது கஷ்டம் என்பதாலும் மறுத்து விட்டாராம் த்ரிஷா.
இதுபற்றி திரிஷா கூறுகையில், "விபச்சாரி கேரக்டர் என்பது மிகவும் சவால் நிறைந்தது. எளிதாக அதில் நடிக்க முடியாது. எனவேதான் அந்த வேடத்தில் நடிக்க நான் மறுத்து விட்டேன்.
விலைமாது கேரக்டர் செய்யும் அளவு எனக்கு இன்னும் பக்குவம் வரவில்லை. அந்த கேரக்டரில் நடிக்கும்போது இதற்கு முன் எந்த நடிகையும் அதுமாதிரி நடிக்கவில்லை என்று பெயர் எடுக்க வேண்டும். வேறு நடிகைகளும் இந்த நடிப்பை பார்த்து பயப்பட வேண்டும். அப்படியொரு துணிச்சல் வரும்போது நடிப்பேன்.
கமலுடன் நடித்த மன்மதன் அம்பு படம் வருகிற 17-ந்தேதி ரிலீசாகிறது. கமலுடன் நடிக்கும் முதல் படம் என்பதால் ரொம்ப பயந்தேன். படப்பிடிப்புக்கு போகும் போதெல்லாம் எனது முதல் படத்தில் வேலை செய்த உணர்வே ஏற்பட்டது. அந்த படத்தை ரொம்பவும் எதிர்நோக்கி இருக்கிறேன்.
நடிகர், நடிகைகள் பற்றி கிசுகிசுக்கள் வருவது தவறல்ல. கிசுகிசுக்கள் வளர்ச்சிக்கு உதவுகின்றன. எனவே அவை பற்றி வருத்தப்படக் கூடாது.
ஆனால் சில நடிகைகள் தங்களை பற்றிய கிசுகிசுக்களை தாங்களே பரப்பி விளம்பரம் தேடுகின்றனர். அதுதான் தவறு. நான் அப்படியல்ல.." என்றார்.

04 டிசம்பர் 2010

சேட்டன் திருந்துவதுபோல் தெரியவில்லை!

ஜீவா இரட்டை வேடங்களில் நடிக்கும் சிங்கம்புலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. சினிமா வி.ஐ.பி.கள் கலந்து கொண்ட இவ்விழாவில் ஜீவாவின் நண்பர் எனும் முறையில் கலந்து கொண்டனர் ஜெயம்ரவி, ஆர்யா உள்ளிட்ட நடிகர்கள். அதில் ஆர்யா மட்டும் வாயில் சூயிங்கத்தை போட்டு மென்ற படி ஆஃப் டிரவுசருடன் அநாகரீகமாக மேடை ஏறியது மேடையில் இருந்த வி.ஐ.பி.களுக்கு மட்டுமல்ல அந்த திரையரங்கில் குழுமியிருந்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை தந்தது. பால்கனியில் இருந்த ஒரு ரசிகர் ஏன் ஆர்யா உங்களுக்கு முழு பேண்ட் கிடைக்கலியா? என்று கேட்டே விட்டார்.அதற்கு மேடையில் பேசும் போது பதில் அளித்த ஆர்யா துபாய்நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கேற்றுவிட்டு நான், ஜீவா, ஜெயம்ரவி எல்லோரும் விமானத்தில் இருந்து அப்படியே வந்து விட்டோம அது தான் ஆஃப்டிரவுசர் என்று சமாளித்தார். அதே விமானத்தில் வந்த ஜெயம்ரவி ஜீவா உள்ளிட்டவர்கள் எல்லாம் மேடை ஏறப் போகிறோம் என்று பேண்ட் - சட்டையுடன் உஷாராக வந்து விழாவில் கலந்து கொள்ள ஆர்யாவுக்கு அந்தபயம் இல்லாததும் எடுத்துப்போடும் ஃபேண்ட்டில் ஒன்றை பேக்கில் இருந்து எடுத்து மாட்டிக் கொண்டு வர மனமில்லாததும் ஏன்? என்பது புரியாத புதிர்தான்! சமீபத்தில் ஆர்யா வெளிநாட்டில் நடந்த மலையாள பட தமிழ் பட உலகையும் தமிழ் நடிகர்களையும் அநாகரீகமாக பேசி அவமானப்பட்டு வரும் சுவடு மறைவதற்குள்ளாகவே வி.ஐ.பிகள் தமிழ் சினிமா மேடையையும் இவ்வாறு அவமானப்படுத்தி இருப்பது வேதனைக்குரிய விஷயம் தான்! சேட்டன் திருந்துவது போல் தெரியலை‌‌யே?!