பக்கங்கள்

07 டிசம்பர் 2010

விலைமாது ரோல்.. விலகிய த்ரிஷா!

தெலுங்குப் படங்களில் வாய்ப்பு என்றால், கையிலிருக்கும் தமிழ்ப் படங்களைக் கூட அம்போவென விட்டுவிட்டு ஓடுகிறார்கள் நடிகைகள். ஆனால் த்ரிஷாவோ, தெலுங்கில் கிடைத்த ஒரு பெரிய வாய்ப்பை மறுத்துவிட்டிருக்கிறார்.
காரணம்...?
அது விலைமாது கேரக்டராம்!
இந்த ரோலுக்காக த்ரிஷாவுக்கு ஒரு கோடிக்கும் மேல் சம்பளம் தரத் தயாராக இருந்தார்களாம். ஆனால் விபச்சாரியாக நடிப்பது கஷ்டம் என்பதாலும் மறுத்து விட்டாராம் த்ரிஷா.
இதுபற்றி திரிஷா கூறுகையில், "விபச்சாரி கேரக்டர் என்பது மிகவும் சவால் நிறைந்தது. எளிதாக அதில் நடிக்க முடியாது. எனவேதான் அந்த வேடத்தில் நடிக்க நான் மறுத்து விட்டேன்.
விலைமாது கேரக்டர் செய்யும் அளவு எனக்கு இன்னும் பக்குவம் வரவில்லை. அந்த கேரக்டரில் நடிக்கும்போது இதற்கு முன் எந்த நடிகையும் அதுமாதிரி நடிக்கவில்லை என்று பெயர் எடுக்க வேண்டும். வேறு நடிகைகளும் இந்த நடிப்பை பார்த்து பயப்பட வேண்டும். அப்படியொரு துணிச்சல் வரும்போது நடிப்பேன்.
கமலுடன் நடித்த மன்மதன் அம்பு படம் வருகிற 17-ந்தேதி ரிலீசாகிறது. கமலுடன் நடிக்கும் முதல் படம் என்பதால் ரொம்ப பயந்தேன். படப்பிடிப்புக்கு போகும் போதெல்லாம் எனது முதல் படத்தில் வேலை செய்த உணர்வே ஏற்பட்டது. அந்த படத்தை ரொம்பவும் எதிர்நோக்கி இருக்கிறேன்.
நடிகர், நடிகைகள் பற்றி கிசுகிசுக்கள் வருவது தவறல்ல. கிசுகிசுக்கள் வளர்ச்சிக்கு உதவுகின்றன. எனவே அவை பற்றி வருத்தப்படக் கூடாது.
ஆனால் சில நடிகைகள் தங்களை பற்றிய கிசுகிசுக்களை தாங்களே பரப்பி விளம்பரம் தேடுகின்றனர். அதுதான் தவறு. நான் அப்படியல்ல.." என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக