அலைபாயும் காதலுக்கு இப்போது நெடு நெடு அனுஷ்காவும் விழுந்து விட்டாராம். தான் ஒருவரை காதலித்து வருவதா பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார் அனுஷ்கா.
6.2 ஹைட்டில் இருக்கும் அனுஷ்கா, முன்பு தெலுங்குத் திரையுலகை ஆட்டிப்படைத்து வந்தார். இப்போது தமிழ் திரையுலகமும் அனுஷ்காவின் அசகாய அழகில் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. அனுஷ்காவுடன் ஜோடி சேர ஹீரோக்களுக்கு மத்தியில் 'ஆரோக்கியமான' போட்டி காணப்படுகிறது.
தெலுங்கிலும், தமிழிலும் கை நிறைய படங்கள் வைத்திரும் அனுஷ்கா, தமிழில் அவர் இரண்டு படம் மூலம் அறிமுகமானாலும் அதற்குப் பிறகு ஏற்றம் கிடைக்காததால் தெலுங்குக்கு டேக் ஆப் ஆனார். பின்னர் மீண்டும் வேட்டைக்காரன் மூலம் திரும்பி வந்த அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது என்னவோ சிங்கம் தான். தற்போது அஜீத்துடன் மங்காத்தா ஆடி வருகிறார்.
தெலுங்கில் சந்திரமுகி படத்தின் அடுத்த பாகமான நாகவள்ளி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. அதில் சந்திரமுகியாக நடித்திருப்பது அனுஷ்கா தான்.
படங்கள் மட்டுமன்று விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்துவிட்டாலே அவரை ஏதாவது ஒரு ஹீரோவுடன் சேர்த்து கிசு கிசு வந்துவிடும். இரு மொழிகளிலும் படு பிசியாக இருந்து வரும் அனுஷ்காவுக்கு மட்டும் வராமலா போய் விடும். வருகிறது, ஒன்றல்ல பல ஹீரோக்களுடன் கிசுகிசு வருகிறது.
ஆனால் அனுஷ்கா மனதில் ஏற்கனவே ஒருவருக்கு இடம் கொடுத்து உட்கார வைத்துள்ளாராம். ஆனால் அவர் யார் என்பதை தற்போது சொல்லுவதாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்த காதலன் பெயரைச் சொன்னால் நம் புருவமெல்லாம் தானாக உயரும் என்கிறார்.
தற்போது கை நிறைய படங்கள் வைத்திருப்பதால், அவற்றை எல்லாம் முடித்துவிட்டு இன்னும் 2 ஆண்டுகளில் திருமணமாம்.
அப்படி யாரப்பா அந்த அசகாய சூரன்? நீங்க சொல்லாட்டி என்ன, அடுத்த 'ரவுண்டு' கிசுகிசுவில் தெரிந்து விடப் போகிறது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக