நடிகர் கார்த்தியுடன் என்னை இணைத்துப் பேசுவது முட்டாள்தனம் என்கிறார் நடிகை தமன்னா.
தமன்னாவிடம் தவறாமல் கேட்கும் கேள்விகளுள் ஒன்றாகிவிட்டது 'கார்த்தியுடன் காதலா?' என்பது.
இந்த முறையும் அப்படி ஒரு கேள்வியை அவரிடம் கேட்க, கடுப்பான தமன்னா இப்படிக் கூறினார்.
எனக்கும், கார்த்திக்கும் காதல் இல்லை என்று பலமுறை மறுத்து விட்டேன். ஆனாலும் தொடர்ந்து வதந்திகள் பரப்பப்படுகிறது. என்னையும், கார்த்தியையும் இணைத்து பேசுவதே முட்டாள்தனம்.
அவரோடு இரண்டு படம் நடிச்சிட்டா, காதல் வந்துடுமா... உடன் நடிக்கும் ஒரு நடிகர் அவர். அவ்வளவுதான். வேற எந்த உணர்வும் இல்லை. தயவு செய்து இதை எழுதுங்கள்.
சிறுத்தை என்ற படத்தில் அவருடன் நடிக்கிறேன். அந்தப் படம் முடிந்தபிறகு அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. இதுதான் எங்களுக்குள் உள்ள உறவு. போதுமா..?" என்றார்.
கார்த்தியுடன் காதல் என்ற விவகாரத்தை தொடர்ந்து மீடியாவில் இருக்கும்படி செய்ய வேண்டும் என்பதற்காக அந்தப் படம் தொடர்பான சிலரே இப்படி பொய்யான செய்திகளை வெறும் பப்ளிசிட்டிக்காக பரப்பி வருகின்றனர் என ஏற்கென நாம் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
இந்த மாதிரி வதந்திகளைத் தவிர்க்க இப்போதெல்லாம் தவறாமல் அனைத்துப் படப்பிடிப்புகளுக்கும் தன் பாட்டியை உடன் அழைத்துச் சென்றுவிடுகிறாராம் தமன்னா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக