29 மார்ச் 2011
பிரச்சனை வந்தால் விடாதீர்கள்!
கோபம், சண்டை வரும்போது ஆவேசமாக கத்தி கூப்பாடு போடும் தம்பதியர், அதிவிரைவில் மீண்டும் ஒன்று சேர்ந்து கொஞ்சுவதும், பிடிக்காத காரணத்தால் பேசாமல் இருக்கும் தம்பதியர் மீண்டும் ஒன்று சேர நாட்களாவதும் கண் கூடாக நாம் பார்க்கும் உண்மை. ஏனென்றால், மவுனம் என்பது ஒரு கூர்மையான ஆயுதம். அதனை முறையான சரியான விஷயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கணவன்-மனைவிக்குள் சண்டை வரும் சமயத்தில் இருவரும் மவுனமானது பெரும் ஆபத்தாகும். ஏனென்றால் மவுனமாக இருக்கும்போது, மூளையில் சாத்தான் வந்து அமர்ந்து கொள்ளும் காதலிக்கும் போது நடந்த விஷயங்கள் எல்லாம் நாடகமாகவும், இப்போது இருப்பதுதான் நிஜம் என்றும் எடுத்துக்காட்டும். மேலும் இதுவரை என்னென்ன குறைகள் அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கிறது என்று கெட்ட விஷயங்கள் மட்டுமே மனதில் திரைப்படமாக ஓடிக்கொண்டிருக்கும். மேலும் இருவரும் மவுனமாக இருப்பதால் யார் முதலில் பேச்சைத் தொடங்குவது என்பதில் ஈகோ வளர்ந்து வெட்ட முடியாத பெரிய மரமாக மாறிவிடும். முதலில் அவர்தான் பேசவேண்டுமென இவரும், இவர்தான் பேசவேண்டுமென அவரும் கொஞ்ச நாள் காத்திருப்பார்கள். இருவரும் பேசாமல் இருக்கும் பொழுது, இனிமேல் அவராக வந்து பேசினாலும், பேசக்கூடாது என்ற நிலைமைக்குப் போய்விடுவார்கள். அதற்குப்பின் சமாதானம் என்பது மிகவும் கஷ்டப்பட்டு அடைய வேண்டிய விஷயமாகிவிடும். அதனால் ஏதாவது பிரச்சனை என்றால் திட்டுங்கள், சண்டை போடுங்கள், கட்டிப் பிடித்து உருளுங்கள், ஆனால் பேசாமல் மட்டுமே இருக்கவே இருக்காதீர்கள். பேசுங்கள், நிறைய பேசிக்கொண்டே இருங்கள்.
25 மார்ச் 2011
ஒரு காதல் போனால் மறு காதல்!
காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் இனி வாழ்வு முழுவதும் காதலிக்காமல், திருமணம் முடிக்காமல் இருக்க முடியுமா?
எப்படியும் இன்னும் சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து செய்ய இருக்கும் காரியத்தை இப்போதே செய்யலாமே.
மீண்டும் பார்வை நிலைக்குப் போங்கள். மனசுக்குப் பிடித்த வேறு நபர் யாரும் இருக்கிறார்களா என தேடிப்பாருங்கள். புதியவற்றைத் தேடத் தொடங்கினால் பழைய துன்பங்கள் கண்டிப்பாக காணாமல் போய்விடும்.
காதல் தோல்விக்காக சிலர் தற்கொலை செய்கிறார்களே என்ன செய்வது?
இவ்வுலக வாழ்வு என்பது ஓர் இனிய வரம். இந்த அழகான பூமி, அழகான மாந்தர், அற்புத வாழ்க்கை எல்லாம் கிடைப்பது சாதாரண விஷயமல்ல. இதனை முழுவதுமாய் அனுபவித்து வாழவேண்டும்.
சிறப்பாய் வாழ்வதற்கு ஆயிரம் வழிகள் உண்டு. அதில் ஒன்றுதான் காதல். காதல் இல்லை என்றதும் உலக வாழ்வே வேஸ்ட் என தன்னைத்தானே அழித்துக்கொள்பவர்கள் மடையர்கள், முட்டாள்கள்.
வேறு என்ன சொல்வது? வாழ்வை ரசிக்கத் தெரியாததால் அவர்களால் காதலையும் ரசித்து ஜெயிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.
காதலில் வெற்றியடைந்தவர்கள் அடுத்ததாக திருமணம், குழந்தை, படிப்பு என எதிர்காலத்தை யோசித்து காதலை பெரும்பாலும் தொலைத்துவிடுவார்கள்.
ஆனால் காதலில் தோற்றவர்கள் அதனை வாழ்நாள் முழுவதும் மறப்பதே இல்லை. மனதிற்குள் ஒரு தாஜ்மகால் கட்டி அங்கே தோற்கப்பட்ட காதலை பூஜித்து வருவார்கள்.
ஒரு வகையில் காதலில் தோல்வி என்பதும் சுகமான அனுபவமே. நீங்கள் விரும்பிய ஒரு நபர் கிடைத்துவிட்டால் அவர் மீதிருந்த ஆசை, ஆர்வம், அன்பு எல்லாமே குறைந்துபோய்விடலாம்.
உங்களுக்குத் தெரியாமல் அவரிடம் சில அதிர்ச்சிகரமான விஷயங்கள் இருக்கலாம். இவை எதுவுமே இல்லாமல் உங்கள் மனதில் பரிசுத்தமாக இருக்கக்கூடியது காதல் தோல்வி.
காதலில் தோல்வியடைந்தவர்கள் மீண்டும் எப்போது காதலிக்கத் தொடங்குவது என சிலர் கேட்பார்கள். காதல் என்பது சுவாசம் மாரிரி, ஒரு நொடியும் சும்மா இருக்கக்கூடாது. அதனால் ஒரு காதல் முடிந்துவிட்டால், உடனடியாக அடுத்த காதலை தொடரலாம். அல்லது உங்கள் மனம் சமாதானமான பின் தொடரலாம்.

23 மார்ச் 2011
மூன்று வேளை உணவு உடலுக்கு நல்லது.
இன்றைய அவசர யுகத்தின் தவிர்க்க முடியாத பிரச்சனையாகி விட்ட உடல் பருமன் மற்றும் தொப்பை ஏற்படக் காரணமான கொழுப்பை விரட்ட, உணவு பழக்கம் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.
ஒரு சில ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள், உணவை ஒரு நாளைக்கு சிறிது சிறிதாக ஆறு வேளைக்கு உண்பது அதிக கொழுப்பு சேர வழி வகுக்காது என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில் ஆறு வேளை வேண்டாம்; நாளொன்றுக்கு 3 வேளை உணவே சிறந்தது என்ற புதிய ஆய்வறிக்கை ஒன்றை அமெரிக்கவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள புர்டியு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக உடல் பருமனான நபர்கள் 6 வேளை உண்பதற்குப் பதிலாக, 3 வேளை மட்டும் கலோரி குறைந்த, புரதச்சத்து நிறைந்த உணவு நல்லது என்றும், அது அவர்களுக்கு பசியை குறைத்து, திருப்திகரமான உணர்வை தரும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
நாம் மேற்கூறியபடி உணவை சிறிது சிறிதாக அதிக அளவு உண்பது நல்லது என்ற எண்ணம் பரவலாக ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அந்த ஆராய்ச்சியாளர்கள், 3 வேளை உணவுதான் சிறந்தது என்றும், இந்த "மினி மீல்ஸ்" பழக்கம் எவ்வித பலனையும் தராது என்று அடித்துக்கூறுகின்றனர்.

21 மார்ச் 2011
புறக்கர்ப்பம் ஏற்படுவதற்கான காரணம்.
சில வேளைகளில் தொடக்கத்திலேயே கர்ப்பம் தவறாகப் போய்விடுவது உண்டு. கருவுற்ற பிறகு, சினைமுட்டையானது கருப்பைக்கு நகர்வதற்குப் பதிலாக, கருப்பைக் குழாயிலேயே ஒட்டிக்கொண்டு அங்கேயே வளர்வது உண்டு. கருவுறுதல் சினைப்பையில் நிகழ்வதும், கருப்பைக் குழாயை முட்டை அடைவதும் மிகக் குறைவான அளவிலேயே நிகழ்கின்றன.
மிக அரிதாக, முட்டையானது கருப்பைக் குழாய்க்கு வெளிப்பக்கதிலோ அல்லது குழாய்க்கு முனையிலேயோ கருவுற்கு, பிறகு வயிற்றுப் பள்ளத்தில் பதியமாகி, இரத்த ஓட்டத்தை உருவாக்கிக் கொண்டு வளரத் தொடங்கிவிடுகிறது. இத்தகைய கர்ப்பங்கள் பொதுவாக நிலைப்பதில்லை என்றாலும், மிக அரிதாக ஒன்றிரண்டு வளர்ந்துவிடுவது உண்டு. இவையெல்லாம் வெளிப்பகுதியில் கருத்தரிப்பை உண்டாக்குகின்றன.
கருப்பைக் குழாயில் அடைப்பு அல்லது நோய்த்தொற்று ஏற்படுவதுதான் புறக் கர்ப்பத்துக்கான பொதுவான காரணம்.
உதாரணத்துக்கு, நோய்த் தொற்றினால் கருப்பைக் குழாய்கள் சேதமுற்று அவற்றின் உருவ அமைப்பு ஒழுங்கீனமாகி விடுவதால், உயிரணுக்களால் குழாயின் கடைசி நுனிவரை ஊர்ந்து செல்ல இயலாது. இதனால், சினைப்பையின் அருகில் கருத்தரிப்பு நிகழ்கிறது. கருப்பைக் குழாயின் பாதை மிகக் குறுகியதாக இருப்பதால், அந்த வழியாக கருப்பைப் பள்ளத்தை நோக்கி சினைமுட்டை ஊர்ந்து செல்ல முடியாதபடி தடுக்கப்பட்டு புறக் கர்ப்பம் உண்டாகிறது.
இவை தவிர, வேறு எண்ணற்ற காரணிகளும் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை :
கடந்த முறை ஏற்பட்ட புறக் கர்ப்பம்,
சிசேரியன் முறையிலான கடினப் பேறு,
இடுப்புக் கூட்டில் அறுவைச் சிகிச்சை,
கருப்பைக் குழாய்களில் அடைப்பு,
இடுப்புக் கூட்டுப்பகுதி கட்டிகள்,
தானாகக் தூண்டப்படுகிற கருச்சிதைவுகள் அல்லது கருவுறுதலுக்காகச் சாப்பிடும் மாத்திரைகள்,
உடலுறவுக்கு முன் ஈஸ்ட்ரோஜென் தடுப்பு மாத்திரையை எடுத்துக் கொள்ளுதல்.

19 மார்ச் 2011
உள்ளத்தை உருக்கும் நாய்களின் பாசம்!
சுனாமி பேரலையின்போது காயமடைந்த நாயொன்றின் அருகில் பிறிதொரு நாய் 6 நாட்களாக குளிரையும் பொருட்படுத்தாமல் உணவு உறக்கமின்றி காவல் இருந்த சம்பவம் வடகிழக்கு ஜப்பானிலுள்ள இபாரகி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி பிரதேசத்தை சுனாமி பேரலை தாக்கிய போது வீடொன்று இடிந்து விழுந்ததில் நாயொன்று இடிபாடுகளின் கீழ் சிக்கி படுகாயமடைந்தது.
இதன்போது அந்நாயுடன் நட்புறவுடன் பழகிய பிறிதொரு நாய் சுனாமியால் அடித்துவரப்பட்ட மண் சகதியால் நனைந்த நிலையில் உயிர் தப்பியிருந்தது.
மேற்படி நாய் இடிபாடுகளின் கீழ் சிக்கியிருந்த தனது நண்பனான நாயை கைவிட்டு செல்வதற்கு மனம் ஒப்பாமல் 6 நாட்களாக அதனருகே அதற்கு காவலாக இருந்துள்ளது.
இந்நிலையில் மேற்படி பிராந்தியத்துக்கு செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்கள் சென்ற போது உடல் முழுவதும் மண் சகதியால் நனைந்து நடுங்கிக்கொண்டிருந்த நாயொன்று, அவர்களை இடிந்து விழுந்த 4 மாடி கட்டிட வீட்டின் பின் பகுதிக்கு அழைத்துச் சென்றது.
அங்கு சென்ற ஊடகவியலாளர்கள், இடிபாடுகளின் கீழ் நாயொன்று சிக்கியிருப்பதை கண்டு வியப்படைந்தனர். ஆரம்பத்தில் இடிபாடுகளின் கீழ் சிக்கியிருந்த நாய் இறந்துவிட்டதாகவே அவர்கள் நினைத்தனர். ஆனால் அருகில் சென்று அவதானித்த போது நாய் உயிருடன் இருப்பதை அவர்கள் அறிந்தார்கள்.
உடனடியாக மீட்புப் பணியாளர்களுக்கு தகவல் பறந்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கியிருந்த நாயை மீட்டனர்.
மேலும் காயமடைந்த நாயை அருகிலிருந்த மிருக வைத்தியசாலையொன்றுக்கு எடுத்துச் செல்லப்படும் வரை ஒரு மணி நேரமாக குறிப்பிட்ட நாய் அங்கிருந்து நகர மறுத்து காயமடைந்த நாயின் அருகிலேயே இருந்துள்ளது.
மனதை உருக்கும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி “யு ரியூப்’ இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

18 மார்ச் 2011
கண்ணீரில் கிருமிநாசினிகள் உள்ளனவாம்!
பொதுவாக நமது உடல் உறுப்புகளை பல வழிகளில் நாம் சுத்தம் செய்கிறோம். குளிப்பதால் உடல் சுத்தப்படுகிறது. ஆனால் கண்களை சுத்தம் செய்வது எது தெரியுமா? நமது கண்ணீர்தான்.
நம்முடைய கண்கள் எப்போதும் ஈரப்பதமாகவே இருக்கும் வகையில், கண்களின் மேற்பரப்பில் நீர் சுரப்பிகள் உள்ளன. இந்த சுரப்பிகளில் இருந்து வெளியேறும் நீர், நாம் கண்களை இமைக்கும் போது கண்களை ஈரமாக்குகின்றன.
அதே சமயம், அதிகமான துக்கம், இன்பம் போன்றவற்றிற்கு நாம் ஆளாகும் போது இந்த சுரப்பிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதன் காரணமாக, வழக்கத்தை விட அதிகமாக நீர் உற்பத்தியாகிறது. அதுதான் கண்ணீராகும்.
ஆனால், இந்த கண்ணீர் அவ்வளவு சாதாரணமான ஒரு விஷயமல்ல. கண்ணீரில் கிருமி நாசினிகள் உள்ளன. இவைதான் கண்களை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
அதுபோல, காயம்பட்ட குழந்தையில் அழும் குழந்தைக்கு காயம் எளிதில் ஆறும் விநோதமும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

15 மார்ச் 2011
சைவ உணவினால் நாம் பெறும் நன்மைகள்!
சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச் சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:
நச்சுக்களை அகற்றுபவை:
நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை.உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு.அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரத சத்து இருக்கும் அளவுக்கு நார்சத்து இருப்பதில்லை.
எலும்புகளை வலுவாக்குபவை:
இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது.
மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சனை இல்லை.
கார்போஹைட்ரேட் பற்றாக்குறை:
அசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு.இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும்.
எளிதில் ஜீரணம்:
சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளூகோஸ் சத்தை சீராக அளிக்கும்.அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.
ஆரோக்கியமான மேனி:
பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.உடல் எடை:
இறைச்சி உணவை தவிர்ப்பது கொழுப்பு உடலில் சேருவதை குறைக்கும் ஒரு எளிய வழிமுறை. அதற்கு பதிலாக முழு தானிய உணவு,மொச்சை, காய்கறிகள், முந்திரி, பாதாம் போன்ற கொட்டை பருப்புகள் போன்றவற்றை உண்பது உடம்பிலுள்ள கொழுப்பை குறைப்பதோடு, ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றையும் குறைக்கிறது.
பற்களுக்கு எளிது:
நமது கடைவாய் பற்கள் இறைச்சி துண்டுகளை கடித்து இழுப்பதை காட்டிலும் தானிய உணவுகள், காய்கறிகள் போன்றவற்றை மென்று அரைக்கத்தான் அதிக தோதாக அமைந்துள்ளன. உமிழ் நீருடன்தான் ஜீரண வேலை முதலில் தொடங்குகிறது.இந்த உமிழ் நீர் தாவர வகை கார்போஹைட்ரேட் உணவுகளை மட்டுமே ஜீரணிக்க செய்யும் ஆற்றலுடையது.
நோய் தடுப்பு:
மேற்கூறிய சைவ உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் சர்க்கரை நோய், புற்று நோய், சிறுநீரக கோளாறுகள்,ஸ்ட்ரோக் மற்றும் எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இவையெல்லாமே சைவ உணவுகளில் மட்டுமே சாத்தியம்.அசைவ உணவு பிரியர்கள் இதனை இழக்கிறார்கள்.

13 மார்ச் 2011
நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள கலோரியின் அளவு!
நாம் பலவிதமான உணவுகளை உட்கொள்கிறோம். சாதாரண பிஸ்கெட்டில் இருந்து பிரியாணி வரை சுவை சுவையாய்.. வகை வகையாய் சாப்பிடுகிறோம். ஆனால் நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து நமக்கு எவ்வளவு கலோரி சக்தி கிடைக்கிறது என நமக்குத் தெரியுமா?
பொதுவாக நாம் உட்கொள்ளும் சில உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள கலோரிகள் விவரம்:
பால் பொருட்கள்:
பால் ஒரு கப் (225 மிலி) 150 கலோரி
வெண்ணெய் 1 டீ ஸ்பூன் 150
நெய் 1 டீ ஸ்பூன் 45
பழங்கள்:
ஆப்பிள் (சிறியது) 5060
வாழைப்பழம் (நடுத்தரம்) 100120
திராட்சை பழங்கள் (சிறியது) 155060
மாம்பழம் (சிறியது) 100120
ஆரஞ்சு (நடுத்தரம்) 5060
சமைத்த பண்டங்கள்:
அரிசி 25 கிராம் 80
சப்பாத்தி 1க்கு 80
காய்கறிகள் 150 கிராம் 80
வெஜிடபிள் பிரியாணி ஒரு கப் 200
அசைவ உணவுகள்:
மீன் 50 கிராம் 55
இறைச்சி 75
முட்டை 75
மட்டன் பிரியாணி ஒரு கப் 225
கோழிக்கறி 100 கிராம் 225
மற்ற பண்டங்கள்:
இனிப்பு பிஸ்கட் 15 கிராம் 70
கேக் 50 கிராம் 135
கேரட் அல்வா 45 கிராம் 165
ஜிலேபி 20 கிராம் 100
ரசகுல்லா 140
பொதுவாக ஒரு மனிதன் இயங்குவதற்கு அவரது உடல் அமைப்பு, செய்யும் வேலையைப் பொறுத்து 4000 முதல் 7000 கலோரிகள் வரை தேவைப்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

09 மார்ச் 2011
பித்தக் கற்கள் எப்படியானவர்களுக்கு ஏற்படுகிறது?
பித்தக் கற்களின் பெரும்பகுதி பல கற்துகள்களால் ஆனவைதான். கொலஸ்ட்ரால், கால்ஷியம், கார்பனேட், பிலிருபினேட் போன்ற கலவையின் கலவையாகத்தான் இருக்கின்றன.
பித்தக் கற்கள் ஏன், யாருக்கு ஏற்படுகின்றன தெரியுமா?
உடல் பருமனாக இருப்பவர்களுக்கு...
பரம்பரை காரணமாக..
கிட்னி, கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு...
கருத்தடை மாத்திரைகள் அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு..
ரத்தசோகை நோய் இருப்பவர்களுக்கு..
செக்ஸ் ஹார்மோன் மாற்றங்களால்..
சிறு குடல் பாதையில் ஏற்படும் வியாதிகள் காரணமாக..
அடிக்கடி விரதம் இருப்பதால்...
என்ன.. தமாஷ் பண்றீங்களா?
"லங்கணம் பரம ஒளஷதம்" (பட்டினியே மருந்து) என்று பெரியவங்களே சொல்லியிருக்காங்களே! விரதம் இருக்கிறது நல்லதுதானே? என்று கேட்கலாம்.
வேளாவேளாக்குப் போதுமான உணவு கிடைக்காதபோது, பித்தநீர் அளவுக்கு அதிகமாகச் சுரந்து, கற்களாக உறைந்துவிடும் அபாயம் இருக்கிறது.
தீவிர டயல்டில் இருக்கும் இளம் பெண்களுக்கும் பித்தப் பையில் கற்கள் உண்டாவதன் காரணம், பட்டினி ஃபேஷன்தான்!
பித்தக் கற்களின் அறிகுறிகள் என்ன?
விதவிதமான வலிகள் ஏற்பட்டு, மாரடைப்பு வலியோ என்று கூடப் பயம் ஏற்படும். மார்பு எலும்புக்கும் தொப்புளுக்கும் இடையே வலிக்கும். வயிற்றின் மேற்புறம் தோன்றும் வலி, முதுகுப்பக்கம், ஏறி, வலது தோள்பட்டையில் கடுப்பெடுக்கும். வாந்தியும் குமட்டலும் அதிகமாக இருக்கும்.
ஒரு சிலருக்கு, குண்டூசியின் தலை அளவுக்குக் கூட வலி இருக்காது. ஆனால் பாதிப்புகள் மெகா சீரியல் போல் நீண்டு வளர்ந்துகொண்டே இருக்கும்.
ஆபரேஷன் மட்டும்தான் தீர்வா?
இல்லை, பித்தப்பைக் கற்களைக் கரைப்பதற்கென்றே மருந்துகள் உள்ளன. சில சமயம் பித்தநீர்ப் பைக்குள் அதிர்வலைகளைப் பாய்ச்சி, கற்களைப் பொடியாக்கி, மலத்துடன் வெளியேற்றிவிடலாம். ஆனால், இந்த முறை கணையத்தில் வீக்கம், பித்தப்பையில் அழற்சி உள்ளவர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஏற்றதல்ல.
லேப்ராஸ்கோப்பி எனப்படும் நுண்துளை அறுவை சிகிச்சை முறையில் பித்தக்கற்களை வலியின்றி, மிகச் சுலபமாக நீக்கிவிடும் வசதி உள்ளது. சில சமயம் குடல் ஒட்டுதல் அதிகம் இருந்தாலோ, பொது நாளத்தில் கட்டி, கல் இருந்தாலோ, ஓப்பன் சர்ஜரி தேவைப்படலாம். பித்தப்பைக் கற்களை நீக்காவிட்டால் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

06 மார்ச் 2011
கர்ப்பகால வலிகள்!
கர்ப்பக் காலத்தில் பல்வேறு வலிகளை கர்ப்பிணிகள் அனுபவிக்க நேரிடும். முக்கியமாக மார்பக வலி, முதுகு வலி, தலைவலி, கால்களில் வலி ஆகியவற்றைக் கூறலாம்.
பெண்ணின் மார்பகம் கருத்தரித்த பிறகுதான் முழுமை அடைகிறது. அதில் நிறமாற்றமும் ஏற்படும். மார்பகப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் இரத்த அழுத்தம் அதிகமாகும். இதனால் இரத்த நாளங்கள் வீங்கி தொட்டாலே வலிக்கும்.
மார்பகங்களைச் சுற்றி சின்னச் சின்ன முடிச்சுகள் தோன்ற ஆரம்பிக்கும். இது ஏதோ கட்டிகள் என பல பெண்கள் பயந்துவிடுகிறார்கள். இது மார்பக மாற்றத்தின் ஒரு பகுதி. எனவே பயப்படத் தேவையில்லை.
கரு வளரும்போது கூடவே வளரும் கருப்பையானது வளர்ந்து முன்னோக்கித் தள்ளுவதால் உடல் தனது சமநிலையை இழந்துவிடும். இதனால் முதுகு வலிக்கும். இவ்வாறே கருப்பையின் அழுத்தத்தால் இரத்த நாளங்கள் அமுக்கப்பட்டு கால்களுக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும். இதனால் கால்கள் வலிக்கும்.
குழந்தையின் தலைப்பகுதி பெரிதாகும் போது திரவங்கள் அதிகமாவதாலும், நாளங்கள் சுருங்குவதாலும் அங்கு இரத்தத் தேக்கம் உண்டாகி கால்கள் வீங்க ஆரம்பிக்கும். இதை வெரிக்கோஸ் வெயின் என்பார்கள்.
சருமத்தின் மேல் இந்த நாளங்கள் வீங்கிப் புடைத்துக் காணப்படும்போது அது நீலநிறமாகத் தோன்றும். இதனால் கால் வலி அதிகமாகும்.
இதைத் தவிர்ப்பதற்கு நீண்ட நேரம் நிற்காதிருத்தல், கால்களை உயர வைத்து ஓய்வெடுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலும் பிரச்சனை பிரசவத்திற்குப் பிறகு சரியாகிவிடும். இல்லாவிட்டால் இரத்த நாள நிபுணரை அணுக வேண்டியிருக்கும்.
கர்ப்ப கால மாற்றங்கள் காரணமாக, கருவுக்கு சில பொருட்கள் ஒத்துக்கொள்ளாவிட்டால் ஏதேனும் சில பொருட்களை முகர்ந்தாலோ, அருந்தினாலோ கூட தலைவலி வந்துவிடும். இவையெல்லாம் கர்ப்பக் காலத்தில் இயல்பாக வருபவையாகும்.
சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். இதற்குக் காரணம் கரு வளர்ச்சியின் போது கருப்பையானது மேல் நோக்கி அழுத்துவதால் நுரையீரல் முழுமையாக விரிவடையாத நிலை உண்டாவது. ஆஸ்துமா நோய் இல்லாமல் இவ்வாறு இருப்பதும் இயல்பானதுதான்.

04 மார்ச் 2011
உடலுக்கு மருந்தாகும் தயிர்!
சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.
பழச்சாறு உடலுக்குத் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. தயிரும் பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது.
மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து.
அப்ரண்டீஸ் மற்றும் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும்.
மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.
மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.
சில தோல் வியாதிகளுக்கு மோரில் நனைந்த துணியை பாதித்த இடத்தில கட்டி வருவது சிறந்த மருந்தாகும். தோல் வீக்க நோய்க்கு மோர் கட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.

01 மார்ச் 2011
அதிக கொழுப்பினால் தசை வலி ஏற்படுகிறது!
தசை நார்களில் வலி, உடல் வலி, இரவில் சரியான தூக்கமின்மை, காலையில் எழுந்தவுடன் களைப்பு மேலீடுதல், கை, கால் முட்டிகளில் பிடிப்பு ஏற்படுதல் ஆகியவற்றையே ஃபைப்ரோமியால்ஜியா (Fibromyalgia) நோயின் அறிகுறிகளாக என்று மருத்துவம் கூறுகிறது.
ஆண்கள், பெண்கள், மிக குறைந்த அளவிற்கு சிறுவர்கள் என்று எல்லோரையும் இந்த தசை வலி, தூக்கமின்மை தாக்கினாலும், இதில் பொதுவாக அதிகம் பாதிக்கப்படுவோர் பெண்களாகவே இருக்கின்றனர். ஃபைப்ரோமியால்ஜியா தாக்கியவர்களில் 80 விழுக்காட்டினர் பெண்களே என்பது பல ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவத் துறையில் முன்பு ஃபைப்ரோசைட்டிஸ் என்றழைக்கப்பட்ட இந்த தசை வலி நோயே தற்போது ஃபைப்ரோமியால்ஜியா என்ற பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரிரு வாரங்களோ அல்லது மாதங்களோ இருந்துவிட்டு போகும் (நமத் நாட்டின் ஸ்பெஷல் ஆன சிக்கன்குனியா போன்ற) ஒரு நோய் அல்ல. மாறாக, இது வாழ்க்கையோடு பிண்ணிப்பிணைந்து வதைக்கும் ஒரு நோயாகவே உலகெங்கிலும் உள்ளது.
இந்த நோயின் ஒரு முக்கிய பாதிப்பு தூக்கமின்மை என்பதால், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சிலருக்கு மன அழுத்தமும் ஏற்படுகிறது என்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோயை நாம் எலும்புத் தேய் நோயுடன் இணைத்து குழப்பிக்கொள்ளக் கூடாது. அது வேறு, இது முழுக்க முழுக்க தசை தொடர்புடையதே.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)