பொதுவாக நமது உடல் உறுப்புகளை பல வழிகளில் நாம் சுத்தம் செய்கிறோம். குளிப்பதால் உடல் சுத்தப்படுகிறது. ஆனால் கண்களை சுத்தம் செய்வது எது தெரியுமா? நமது கண்ணீர்தான்.
நம்முடைய கண்கள் எப்போதும் ஈரப்பதமாகவே இருக்கும் வகையில், கண்களின் மேற்பரப்பில் நீர் சுரப்பிகள் உள்ளன. இந்த சுரப்பிகளில் இருந்து வெளியேறும் நீர், நாம் கண்களை இமைக்கும் போது கண்களை ஈரமாக்குகின்றன.
அதே சமயம், அதிகமான துக்கம், இன்பம் போன்றவற்றிற்கு நாம் ஆளாகும் போது இந்த சுரப்பிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதன் காரணமாக, வழக்கத்தை விட அதிகமாக நீர் உற்பத்தியாகிறது. அதுதான் கண்ணீராகும்.
ஆனால், இந்த கண்ணீர் அவ்வளவு சாதாரணமான ஒரு விஷயமல்ல. கண்ணீரில் கிருமி நாசினிகள் உள்ளன. இவைதான் கண்களை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
அதுபோல, காயம்பட்ட குழந்தையில் அழும் குழந்தைக்கு காயம் எளிதில் ஆறும் விநோதமும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக