பொதுவாக காதலர் அல்லது கணவன் பெயரையோ பச்சை குத்துவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் மகன் பெயரை பச்சை குத்திய கதை நமக்கு சற்று புதிதுதான். அந்தப் பாசமான தாய் வேறு யாருமல்ல மாளவிகாதான். தனது அன்பு மகன் ஆரவ் மேனனின் பெயரை தனது முதுகில் பச்சை குத்தியுள்ளாராம். ஆரவ் குட்டிக்கு இப்போது ஒன்றரை வயதாகிறதாம். அடுத்த குழந்தைக்கும் தயாராகியுள்ள மாளவிகா அந்தக் குழந்தையை டிசம்பர் மாதம் பெற்றெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
27 செப்டம்பர் 2010
மகன் பெயரை பச்சை குத்திய மாளவிகா.
பொதுவாக காதலர் அல்லது கணவன் பெயரையோ பச்சை குத்துவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் மகன் பெயரை பச்சை குத்திய கதை நமக்கு சற்று புதிதுதான். அந்தப் பாசமான தாய் வேறு யாருமல்ல மாளவிகாதான். தனது அன்பு மகன் ஆரவ் மேனனின் பெயரை தனது முதுகில் பச்சை குத்தியுள்ளாராம். ஆரவ் குட்டிக்கு இப்போது ஒன்றரை வயதாகிறதாம். அடுத்த குழந்தைக்கும் தயாராகியுள்ள மாளவிகா அந்தக் குழந்தையை டிசம்பர் மாதம் பெற்றெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
24 செப்டம்பர் 2010
ஆர்யாவுடன் வேட்டை ஆடப்போகிறார் தமன்னா.

லிங்குசாமியின் அடுத்த படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. ஆனால் இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் லிங்குசாமி படத்திலிருந்து சிம்பு அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதனால் கடுப்பாகியிருந்த சிம்பு, சற்று ஓய்ந்த பின்னர் இப்பொழுது லிங்குசாமி இயக்கும் ‘வேட்டை’ திரைப்படத்தில் நாயகனாக ஆர்யாவை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் புரொடக்ஷன் தான் ‘வேட்டை’ படத்தினை தயாரிக்கிறது. அண்மைக்காலமாக சூப்பர் ஹிட் பாடல்களை அதிகமாக வழங்கிவரும் யுவன்சங்கர் ராஜா இப்படத்திலும் தனது கைவரிசையை காட்டவிருக்கிறார்.
ஆர்யாவுக்கு ஜோடியாக யாரைப்போடலாம் என்று பலரை நாடியிருக்கிறார்கள். இறுதியாக வேட்டையாடுவதற்கு சிறந்தவர் 'தமன்னா' என லிங்குசாமி அறிவித்திருக்கிறார். ஆகையினால் ஆர்யாவுடன் வேட்டைக்கு தயாராகிவிட்டார் தமன்னா. வெகுவிரைவில் படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

20 செப்டம்பர் 2010
பூஜா, நிலாவுடன் காதல் இல்லை -ஆர்யா.
ஆர்யாவையும் பூஜாவையும் இணைத்து கிசு கிசுக்கள் வந்தன. நிலாவை காதலிப்பதாகவும் பேசப்பட்டது.இதுபற்றி ஆர்யாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
பூஜா, நிலாவுடன் காதல் என்பதெல்லாம் தவறானவை. இதுவரை யார் மீதும் எனக்கு காதல் வரவில்லை. நயன்தாராவுக்கு தனியாக பிறந்தநாள் விருந்து அளித்ததாகவும் செய்தி வந்தன. அதிலும் உண்மை இல்லை. அந்த விருந்தில் நயன்தாரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அவருடன் நான் இணைந்து நடித்த “பாஸ் என்கிற பாஸ்கரன்” படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சிறந்த காமெடி படமாக இது வந்துள்ளது. இதில் நயன்தாரா நல்ல ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்.
எனக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று சொல்ல இயலாது. நேரம் அமையும் போது நடக்கும். எனது ராசியில் காதல் திருமணம் என்று உள்ளது. அப்படி நடந்தால் மகிழ்ச்சிதான்.
“ஷோ பீப்பிள்” என்ற படக்கம்பெனி தொடங்கி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன். புதுமுகங்களை வைத்து “படித்துறை” என்ற படத்தை எடுக்கிறேன். நான் நடிக்கும், இயக்குனர் பாலாவின் “அவன் இவன்” படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துள்ளது. வில்லன் வேடத்திலும் நடிக்க தயார்.
இவ்வாறு ஆர்யா கூறினார்.
காதலியைத் தீ மூட்டி கொல்ல முயன்ற இளைஞர்!
வெளிநாட்டில் இருந்து எட்டு வருடங்களுக்குப் பின் நாடு திரும்பிய 28 வயதுடைய இளைஞன் ஒருவர் காதலி மீது பெற்றோலை ஊற்றி தீ மூட்ட முயன்ற சம்பவம் நேற்று கண்டியில் இடம்பெற்றது. இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.வேறு ஒரு இளைஞனுடன் காதலி தகாத தொடர்பில் ஈடுபட்டிருக்கின்றார் என்கிற சந்தேகத்திலேயே இவ்வாறு நடந்து கொண்டார் என்று இவர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
19 செப்டம்பர் 2010
போலீஸ் வருவதை காட்டி கொடுத்தது: போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி! (காணொளி இணைக்கப்பட்டுள்ளது)
நியூயார்க்,அமெரிக்க கண்டத்தில் உள்ள கொலம்பியாவில் போதை மருந்து கடத்தல் அதிக அளவில் உள்ளது. எனவே, அந்த கும்பலை ஒடுக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு தீவிரமாக உள்ளது. பாரன்குயில்லா நகரில் ஒரு பங்களாவில் போதை மருந்து கடத்தல் கும்பல் பதுங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
உடனே சுமார் 300 போலீசார் அந்த பங்களாவை சுற்றி வளைத்தனர். அப்போது, அங்கு திடீரென ஒரு கிளி பறந்து வந்தது. வந்த வேகத்தில் ஓடு... ஓடு.... உன்னை பிடிக்க பூனை வருகிறது என கொஞ்சி கொஞ்சி பேசியது இதை கேட்ட போதை மருந்து கடத்தல் கும்பல் அங்கிருந்து தலை தெறிக்க தப்பி ஓடிவிட்டது.
இருந்தும் அவர்களில் சிலரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலீசார் வருவதை காட்டிக் கொடுக்க கிளியை வளர்த்து வருவதாகவும் அதற்கு “லொரன்ஸ்ஷோ” என பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
எனவே, அந்த கிளியையும் போலீசார் பிடித்தனர். அந்த கிளி விலங்குகள் நல மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இச் சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

18 செப்டம்பர் 2010
உடல் எடையை குறைக்க தினமும் 2 டம்ளர் பால்.
தினமும் 2 டம்ளர் பால் குடிப்பதன் மூலம் உடல் எடை குறையும் என புதிய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.பால் குடிப்பதால் உடல் எடை குறையுமா என்பது குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது. இதற்காக, உடல் பருமன் உள்ள 40 முதல் 65 வயதுக்குட்பட்ட 300 ஆண், பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை கொழுப்பு மற்றும் மாவுச் சத்து குறைவான உணவு வழங்கப்பட் டது. இத்துடன் ஒரு பிரிவினருக்கு தினமும் 2 டம்ளர் பால் வீதம் வழங்கப்பட்டது. இதைவிட சிலருக்கு குறைவாகவும் இன்னும் சிலருக்கு கூடுதலாகவும் வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு பால் வழங்கப்படவில்லை. 2 ஆண்டுகளுக்குப் பிறகு பரிசோதனை செய்ததில் தினமும் 2 டம்ளர் பால் குடித்தவர்களின் உடல் எடை 6 கிலோ வரை குறைந்து இருந்தது.
பால் குடிக்காதவர்களின் எடையில் மாற்றம் ஏற்படவில்லை. சற்று கூடுதலாக பால் அல்லது பால் பொருட்கள் சாப்பிட்டவர்களின் எடை 5 கிலோ வரை குறைந்தது. குறைவாக வழங்கப்பட்டவர்களின் எடை வெறும் 3.5 கிலோ மட்டுமே குறைந்தது. பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை அதிக அளவில் உள்ளன.
இவை உடல் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக வைட்டமின் டி சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் புற்று நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மொத்தத்தில் இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. சரிவிகித உணவுடன் கொழுப்பு சத்து குறைவான 3 டம்ளர் பால் குடித்து வருவதன் மூலம் தங்கள் உடல் எடையை சீராக பராமரிக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
16 செப்டம்பர் 2010
மீண்டும் தெலுங்கில் நடிகை திரிஷா!
இந்திப் படங்கள் தன்னைக் கைவிட்டதைத் தொடர்ந்து தெலுங்குப் படவுலகுக்குத் திரும்பிள்ளார் நடிகை திரிஷா.தமிழ், தெலுங்குப் படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு கட்டா மிட்டா படம் மூலம் இந்தியில் அறிமுகம் ஆனார் த்ரிஷா. இப்படத்தை இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடித்து, தயாரித்திருந்தார்.
கட்டா மிட்டா உட்பட அவரது நிறுவனம் தயாரிக்கும் 3 படங்களில் நடிக்க த்ரிஷாவை அக்ஷய் ஒப்பந்தம் செய்திருந்தார். இந்நிலையில் கட்டா மிட்டா படம் எதிர்பாராத தோல்வியை சந்தித்தது. இதில் அக்ஷய்க்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் படங்கள் தயாரிக்கும் திட்டத்தை அவர் தள்ளிப் போட்டுள்ளாராம்.
இதையடுத்து அக்ஷய் குமாரின் படங்களில் த்ரிஷா நடிக்க போடப்பட்ட ஒப்பந்தமும் ரத்தாகிவிட்டதாக பாலிவுட்டில் தகவல் பரவியுள்ளது. இதனால்தான் உடனடியாக தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக நடிக்க அவர் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.
இதேபோல தமிழில் வாய்ப்புகள் வந்தால் மீண்டும் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளாராம் திரிஷா.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)