நியூயார்க்,அமெரிக்க கண்டத்தில் உள்ள கொலம்பியாவில் போதை மருந்து கடத்தல் அதிக அளவில் உள்ளது. எனவே, அந்த கும்பலை ஒடுக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு தீவிரமாக உள்ளது. பாரன்குயில்லா நகரில் ஒரு பங்களாவில் போதை மருந்து கடத்தல் கும்பல் பதுங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
உடனே சுமார் 300 போலீசார் அந்த பங்களாவை சுற்றி வளைத்தனர். அப்போது, அங்கு திடீரென ஒரு கிளி பறந்து வந்தது. வந்த வேகத்தில் ஓடு... ஓடு.... உன்னை பிடிக்க பூனை வருகிறது என கொஞ்சி கொஞ்சி பேசியது இதை கேட்ட போதை மருந்து கடத்தல் கும்பல் அங்கிருந்து தலை தெறிக்க தப்பி ஓடிவிட்டது.
இருந்தும் அவர்களில் சிலரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலீசார் வருவதை காட்டிக் கொடுக்க கிளியை வளர்த்து வருவதாகவும் அதற்கு “லொரன்ஸ்ஷோ” என பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
எனவே, அந்த கிளியையும் போலீசார் பிடித்தனர். அந்த கிளி விலங்குகள் நல மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இச் சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக