பக்கங்கள்

29 மே 2010

இது நினைவு வணக்கமல்ல,என் தந்தைக்கு ஒரு கடிதம்!


எனது பாசத்திற்குரிய தந்தையே!


அன்பெனும் கூட்டில் எம்மை கலைந்திடாமல்காத்த என் உயிரே!


எனது சிறு வயதில் எப்படி செல்லமாய்என்னை வளர்த்தீர்களோ அதே போல்இன்று வரை என்னை பார்த்தீர்களே ஐயா!


இதயமெல்லாம் துயரமாகவே கனக்கிறது,


உறக்கமெல்லாம் உங்கள் கனவுகள் வந்து சுடுகிறது!


உங்கள் நோய் அறிந்து துயர் என்னை நெருங்கியது!


உங்கள் பிரிவறிந்து மகிழ்வென்னை பிரிந்தது!


எனக்கு பின்னும் நீங்கள் வாழவேண்டும்என நினைத்தேன்,


அந்தோ இடிவிழுந்தசெய்தியாலே நான் துடித்தேன்!


அப்பு அப்பு என தேனொழுக அழைத்த வார்த்தைஇனி என் செவிகளுக்கு வாராதா என எண்ணிநாளும் பொழுதும் இங்கே தவிக்கின்றேன்!


எனக்கொரு துயரென்றால் உங்களிடம் சொல்லிஆறுதல் பெற்று வந்தேன்!இன்று பெரும் துயர்கொண்டேனே!


ஓடி வந்து எந்தன் துயர் நீக்க அழைக்கின்றேன் தந்தையே!


காலங்கள் ஓடும்,காட்சிகள் கூட மாறும்ஆனாலும் உங்கள் எண்ணங்கள் என்பது மாறாது என்றுமே!


என்னுள் இருந்து துடிப்பது உங்கள் இதயமே!


என்னுயிர் என்பது அது உங்கள் உயிர்,


தந்தையே நீங்கள் என்னுள் என்றுமேவாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்!


தந்தையே இது நான் உங்களுக்கு செலுத்தும்வணக்க நிகழ்வல்ல,


எழுதும் ஒரு கடிதம்!
என்றென்றும்


உங்கள்செல்லக்குட்டி ரவி.

28 மே 2010

சுறா படப் பாடல்.

பார்த்து,கேட்டு

மகிழுங்கள்.உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.

24 மே 2010

இரண்டாயிரத்து பன்னிரண்டில் உலகம் அழியும்?


மாயா என்றொரு இனம் தென்னமெரிக்காவில் முன்பு இருந்ததாம். கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நாகரிகம் தோன்றி சமீபத்தில் பதினைந்தாவது நூற்றாண்டு வரை இருந்து வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு உலகில் கோலோச்சிய இந்த இனம் குறித்த தகவல்கள் இன்றும் கூட விரிவான ஆராய்ச்சிகள் இல்லாமல், மர்மமாகவே இருப்பது ஆச்சரியகரமானது.
மாயர்கள் கட்டிடக்கலை, வானவியல் சாஸ்திரங்கள் மற்றும் கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதற்கு அவர்கள் உதாரணம் காட்டுவது மாயர்களின் காலண்டர். மிக நுட்பமாக கணிதவியல் பரிமாணங்கள் துணை கொண்டு மாயர்களின் காலண்டர் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். மாயர்களின் காலண்டர் கி.மு. 3113ல் தொடங்கி, கி.பி. 2012-ல் நிறைவடைவது தான் இப்போது பலருக்கும் பீதியைக் கிளப்பியிருக்கிறது.
மாயமந்திரங்களிலும், வானவியல் சாஸ்திரங்களிலும் கைதேர்ந்த கில்லாடிகளான மாயர்கள் ஏன் 2012-ல் காலண்டரை முடித்து விட்டிருக்கிறார்கள். அன்று உலகம் அழியப் போவதை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தங்கள் ஞானதிருஷ்டியால் கண்டுவிட்டார்கள் என்று கொலைவெறியோடு வதந்திகளை கிளப்பி வருகிறார்கள் பலர். ஆரம்பத்தில் தென்னமெரிக்காவிலும், பின்னர் ஐரோப்பாவிலும் சூடாக விவாதிக்கப்பட்ட ‘உலகின் கடைசி நாள்’ விவாதம், இப்போது மூடநம்பிக்கைகளில் புரையோடிப் போன ஆசிய நாடுகளுக்கும் ஒரு ரவுண்டு வந்திருக்கிறது. சரி. மாயன் காலண்டர் என்னதான் சொல்ல வருகிறது, பார்ப்போமா?
சூரியக் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் பூமி 2012ஆம் ஆண்டு, சூரிய மண்டலத்தின் நேர்க்கோட்டுக்கு வருமாம். இதையடுத்து நேர்க்கோட்டிலிருந்து முன்பு பயணித்த திசையிலிருந்து நேரெதிராக விலகி பயணிக்கும்போது புவியின் காந்தப்புலங்கள் திசைமாறி, துருவங்கள் இடமாற்றம் ஏற்படும் என்பதாக மாயன் காலண்டர் கணிக்கிறது. ‘துருவங்களின் இடமாற்றம்’ என்பது ஏற்கனவே விஞ்ஞானிகளால பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு ஓரளவுக்கு ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம். ஆனால் அது 2012ஆம் ஆண்டு தான் ஏற்படுமா என்பதை எந்த விஞ்ஞானியாலும் உறுதியாக சொல்ல இயலவில்லை.
ஒன்றுமில்லை. மலை உயரத்துக்கு சுனாமி வரும், தினம் தினம் பூம் பூம் பூகம்பம், பனிமலைகள் எரிமலைகளாக மாறிச்சீறும். ஒட்டுமொத்தமாக இயற்கைப் பேரழிவுகள் மனிதகுலத்தை ஆங்காரப் பசியோடு கபளீகரம் செய்யும். இப்படியெல்லாம் பயமுறுத்திக் கொண்டே போகிறார்கள். மாயன் காலண்டரும் இந்த ஊழிப்பெருந்தீ, மற்றும் ஊழிப்பெருநீர் வகையறாக்களை உறுதி செய்கிறது.
சூரிய மண்டலத்துக்கு ஒருநாள் என்பது, நம் பூமியின் கணக்கில் பார்த்தோமானால் 25,625 வருடங்களாம். இதை மாயர்களின் காலண்டர் ஐந்து காலக்கட்டங்களாக பிரிக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டமும் 5125 வருடங்களைக் கொண்டது. நான்கு காலக்கட்டங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டதாம். இப்போது நடைபெறுவது ஐந்தாவது காலக்கட்டமாம். கடைசிக் காலக்கட்டம். அதுவும் கூட 2012, டிசம்பர் 12ல் முடிவடைகிறதாம். எனவேதான் இதை ‘ஜட்ஜ்மெண்ட் டே’ என்று பலரும் அஞ்சுகிறார்கள்.
அதாவது இப்போது உலகில் வசித்து வரும் நீங்களும், நானும் ஐந்தாவது காலக்கட்ட மனிதர்கள். நான்காவது காலக்கட்டத்தில் வசித்தவர்கள் 5125 வருடங்களுக்கு முன்பாக (கி.மு. 3113ல்) நடந்த ஏதோ ஒரு இயற்கைப் பேரழிவில் மண்டையைப் போட்டிருப்பார்களாம். நிலத்தை மூழ்கடித்த நீரால் அவர்கள் அழிந்திருப்பார்கள் என்று மாயன் கணிப்பு கூறுகிறது. மனிதக்குலம் ஒட்டுமொத்தமாக அழிந்து, மீண்டும் பிறந்துதான் இன்று பூமியின் கடைசிக் காலக்கட்டத்தைச் சேர்ந்த பெருமை பெற்ற நீங்கள் விக்கிபீடியாவில் இந்த கட்டுரையை வாசிக்கும் அளவுக்கு பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறீர்கள் என்று நாம் சொல்லவில்லை. எப்போதோ செத்துப்போன மாயர்கள் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

20 மே 2010

முதலாமாண்டு நினைவு வணக்கம்!


திரு:நாகலிங்கம் அரியகுட்டி.
திருமதி:அரியகுட்டி நாகபூரணம்.
சுழிபுரம்.
அப்பாவே உங்களை பிரிந்து ஆண்டொன்று ஆனதுவோ?
நேற்றுப்பேசியது போல் உங்கள் வார்த்தைகள் காதினுள் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது,
கண்ணீர் எம் கன்னங்களை இன்னும் நனைத்துக்கொண்டே இருக்கிறது,
நாம் என்ன தவறு செய்தோம் அப்பாவே?
அம்மாவை பிரிந்திருந்து நாம் கண்டதில்லை உங்களை,
அதனால்தான் அம்மாவையும் உடன் அழைத்துச் சென்றீர்களோ?
எம் அருமை அம்மாவே ஏனம்மா எமை பிரிந்தீர்?
அப்பாவின் ஞாபகத்தில் அவரிடத்தில் சென்றீரோ?
நாம் இங்கு கதறுவது உங்களுக்கு கேட்கலையோ?
உங்கள் பிள்ளைகள் நாமிங்கு அநாதரவாய் ஆனோமே!
நெஞ்சமோ கனக்கிறது,
உறக்கமோ வர மறுக்கிறது,
உங்கள் உயிர் என்றென்றும் எங்களிடம் இருக்கிறது,
ஓம்!சாந்தி ஓம்!சாந்தி ஓம்!சாந்தி.

16 மே 2010

இது அழுவதற்கான நாள் அல்ல,நாம் நிமிர்வதற்கான நாள்!


முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்கிறார் பலர்,

நான் சொல்கிறேன் முள்ளிவாய்க்கால்தான் முடிவு,

எம் துன்பங்களின் முடிவாக முள்ளிவாய்க்கால்இருக்கட்டும்,

துன்பங்களின் எல்லையாக முள்ளிவாய்க்கால்இருக்கட்டும்,

அங்கே முடிந்துபோனது எமது இன்னல்களாக இருக்கட்டும்,

தமிழனே எழுந்து கொள்!

மாண்டுபோன எம் உறவுகள் மீதுசத்தியம் செய்!

விடுதலை பெறுவோம் எனசத்தியம் செய்!

உனக்காக இல்லாவிட்டாலும்,

நீ எம்மைதொடர்வாய் என்ற நம்பிக்கையுடன்

வீர காவியமான அந்தமறவர்களுக்காகவெனினும்

தாயக விடுதலைக்காய்உறுதி கொள்!

சிங்களன் புரிந்த கொடூரம்தனை நினைவில் கொள்!

உன் கண்கள்தனில் கோப அனல் தெறிக்கட்டும்,

அதுஇனவாத சிங்களத்தையே எரிக்கட்டும்,

எம் தமிழர் கல்லறை எழுந்து நாளை சிரிக்கட்டும்,

இது அழுவதற்கான நாள் அல்ல,

நாம் நிமிர்வதற்கான நாள் என கொள்வோம்.

09 மே 2010

வீர இளைஞர்களே முன்னேறி செல்லுங்கள்!

வீர இளைஞர்களே! முன்னேறிச் செல்லுங்கள். கட்டுண்டு கிடக்கச் செய்யும் தடைகளை வெட்டி வீழ்த்தவும், எளியவர்களின் துயரச்சுமையை குறைக்கவும், இருண்ட உள்ளங்களில் ஒளியேற்றவும் முன்னேறிச் செல்லுங்கள்.நம்புங்கள். இறைவனின் கட்டளை வந்துவிட்டது. பாமரமக்களும், எளியவர்களும் நலம் பெற வேண்டும் உழைத்திடுங்கள். இறைவனின் கையில் நீங்கள் ஒருகருவி என்ற உணர்வுடன் பிறருக்கு சேவை செய்யுங்கள்.உங்களிடம் நேர்மை இருக்கிறதா? பொதுநலத்துடன் சேவை செய்கிறீர்களா? அன்பு இருக்கிறதா? இம்மூன்றும் இருந்தால் பயமே வாழ்வில் தேவையில்லை. மரணம் கூட உங்களை நெருங்க முடியாது.இறைநம்பிக்கையோடு செயல்படுங்கள். அவரையே எப்போதும் சார்ந்திருங்கள். உங்களை எந்தச் சக்தியும் எதிர்த்து நிற்க முடியாது. வலிமையின்மையே துன்பத்திற்கான ஒரே காரணம். பொய்யும், திருட்டும், கொலையும், மற்ற அனைத்து பாவச் செயல்களும் மனபலவீனத்தாலே தோன்றுகின்றன. உலகவாழ்வுக்குள் வந்துவிட்டீர்கள். அதற்கு அறிகுறியாக ஏதேனும் அடையாளத்தினை விட்டுச் செல்லுங்கள். எழுந்திருங்கள், உழையுங்கள். இல்லாவிட்டால் நாம் பூமியில் பிறந்ததில் ஒருபயனும் இல்லை.
விவேகானந்தர்.

03 மே 2010

ஏனிந்த உலகம் இப்படியானது?


ஏனிந்த உலகம் இப்படியானது?

மனிதத்தை விழுங்கியேமிருகமாய் ஆனது!
இதயமே இல்லையா-இருந்தால்அதிலே கருணையே இல்லையா?

ஏனிந்த உலகம் இப்படியானது?
பேச்சிலே தெறிக்கும் ஜனநாயகம்செயலிலே மட்டும் ஏனற்றுப்போனது?எங்கள் தமிழினம் கோரமாய் மாண்டதே!

கேட்டதா எந்த உலக நாயாவது?

ஏனிந்த உலகம் இப்படியானது?
மக்களை ஏய்த்து அரசிலே அமர்ந்தவன்,

அப்பாவி ஜனங்களை பாடாய் படுத்துறான்,

தட்டிக்கேட்டால் தீவிரவாதி என்கிறான்,

துப்பாக்கி ஏந்தி தேடுதல் நடத்துறான்,

ஏனிந்த உலகம் இப்படியானது?
ஐ.நா.கூட பேருக்குத்தானோ?

சர்வாதிகாரியின் உதவிக்குத்தானோ?

யாரிடம் போவோம்?

எப்படித்தெளிவோம்?

எமக்கு சுதந்திரம் எப்படி பெறுவோம்?

ஏனிந்த உலகம் இப்படியானது?

01 மே 2010

ஒருதலைக் காதல்!!!


சூர்யா,ப்ரெய்ன்,ரதன் மூவரும் ஒரே தொழிலகத்தில் வேலை செய்து வந்தார்கள்,
அங்கே சுபோ என்ற அழகிய பெண்ணும் வேலை செய்து வந்தார்,
சுபோவும் ரதனும் மிகவும் நட்பாக பழகி வந்தார்கள்,சூர்யாவும்,ப்ரெய்னும்
ஒருதலையாக சுபோவை காதலித்து வந்தார்கள்,பின்பு இருவருமே கடிதமூலமாக
தமது காதலையும் தெரிவித்து விட்டார்கள்,இருந்தபோதும் சுபோ இந்த காதலை
ஏற்றுக்கொள்ளவில்லை,இந்த விடயங்களை ரதனிடம் சுபோ பகிர்ந்து கொண்டார்,
ஆனாலும் அவர்கள் இருவரும் விட்டபாடில்லை,
சூர்யா தனது கையை வெட்டி இரத்தம் எடுத்து சுபோவுக்கு கடிதம் எழுதிகொடுத்தார்,
இது சம்பந்தமாக ரதனிடம் முறையிட்ட சுபோ,நீங்கள் இதில் தலையிட வேண்டுமென
கேட்டுக்கொண்டார்,இதையடுத்து ரதனுக்கும்,சூர்யாவுக்குமிடையே வாதப்பிரதிவாதங்கள்
இடம்பெற்றன,பழகி எட்டு நாட்களிலேயே இரத்தத்தில் கடிதம் எழுதும் அளவிற்கு
காதல் மலர்ந்துவிட்டதோ என ரதன் கேட்டார்,அதற்கு காதல் ஒரு செக்கனிலும் வரும்
என சூர்யா தெரிவித்தார்,இதற்கு ரதன் அதற்கு பெயர் காதல் இல்லை காமம் என்றார்,
நீங்கள் சுபோவை காதலிப்பதாக இருந்தால் சொல்லுங்கள் நான் ஒதுங்கிகொள்கிறேன் என
சூர்யா தெரிவித்தார்,இதன் பின் ப்ரெய்ன்,சூர்யா இருவரும் தமது காதல் நாடகத்தை
முடிவுக்கு கொண்டுவந்தனர்,ஆனாலும் சுபோ ரதனை ஒருதலையாய் காதலித்து வந்தவிடயம்
சுபோவினாலேயே பின்னர் பகிரங்கப்படுத்தப்பட்ட போதிலும் ரதனால் அதை ஏற்றுக்கொள்ள
முடியாமல் போய்விட்டது,சுபோ ரதன் இருவரும் தொடர்பற்றவர்களாக......!
(இது ஒரு உண்மை சம்பவம்)