பக்கங்கள்

09 மே 2010

வீர இளைஞர்களே முன்னேறி செல்லுங்கள்!

வீர இளைஞர்களே! முன்னேறிச் செல்லுங்கள். கட்டுண்டு கிடக்கச் செய்யும் தடைகளை வெட்டி வீழ்த்தவும், எளியவர்களின் துயரச்சுமையை குறைக்கவும், இருண்ட உள்ளங்களில் ஒளியேற்றவும் முன்னேறிச் செல்லுங்கள்.நம்புங்கள். இறைவனின் கட்டளை வந்துவிட்டது. பாமரமக்களும், எளியவர்களும் நலம் பெற வேண்டும் உழைத்திடுங்கள். இறைவனின் கையில் நீங்கள் ஒருகருவி என்ற உணர்வுடன் பிறருக்கு சேவை செய்யுங்கள்.உங்களிடம் நேர்மை இருக்கிறதா? பொதுநலத்துடன் சேவை செய்கிறீர்களா? அன்பு இருக்கிறதா? இம்மூன்றும் இருந்தால் பயமே வாழ்வில் தேவையில்லை. மரணம் கூட உங்களை நெருங்க முடியாது.இறைநம்பிக்கையோடு செயல்படுங்கள். அவரையே எப்போதும் சார்ந்திருங்கள். உங்களை எந்தச் சக்தியும் எதிர்த்து நிற்க முடியாது. வலிமையின்மையே துன்பத்திற்கான ஒரே காரணம். பொய்யும், திருட்டும், கொலையும், மற்ற அனைத்து பாவச் செயல்களும் மனபலவீனத்தாலே தோன்றுகின்றன. உலகவாழ்வுக்குள் வந்துவிட்டீர்கள். அதற்கு அறிகுறியாக ஏதேனும் அடையாளத்தினை விட்டுச் செல்லுங்கள். எழுந்திருங்கள், உழையுங்கள். இல்லாவிட்டால் நாம் பூமியில் பிறந்ததில் ஒருபயனும் இல்லை.
விவேகானந்தர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக