பக்கங்கள்

29 மே 2010

இது நினைவு வணக்கமல்ல,என் தந்தைக்கு ஒரு கடிதம்!


எனது பாசத்திற்குரிய தந்தையே!


அன்பெனும் கூட்டில் எம்மை கலைந்திடாமல்காத்த என் உயிரே!


எனது சிறு வயதில் எப்படி செல்லமாய்என்னை வளர்த்தீர்களோ அதே போல்இன்று வரை என்னை பார்த்தீர்களே ஐயா!


இதயமெல்லாம் துயரமாகவே கனக்கிறது,


உறக்கமெல்லாம் உங்கள் கனவுகள் வந்து சுடுகிறது!


உங்கள் நோய் அறிந்து துயர் என்னை நெருங்கியது!


உங்கள் பிரிவறிந்து மகிழ்வென்னை பிரிந்தது!


எனக்கு பின்னும் நீங்கள் வாழவேண்டும்என நினைத்தேன்,


அந்தோ இடிவிழுந்தசெய்தியாலே நான் துடித்தேன்!


அப்பு அப்பு என தேனொழுக அழைத்த வார்த்தைஇனி என் செவிகளுக்கு வாராதா என எண்ணிநாளும் பொழுதும் இங்கே தவிக்கின்றேன்!


எனக்கொரு துயரென்றால் உங்களிடம் சொல்லிஆறுதல் பெற்று வந்தேன்!இன்று பெரும் துயர்கொண்டேனே!


ஓடி வந்து எந்தன் துயர் நீக்க அழைக்கின்றேன் தந்தையே!


காலங்கள் ஓடும்,காட்சிகள் கூட மாறும்ஆனாலும் உங்கள் எண்ணங்கள் என்பது மாறாது என்றுமே!


என்னுள் இருந்து துடிப்பது உங்கள் இதயமே!


என்னுயிர் என்பது அது உங்கள் உயிர்,


தந்தையே நீங்கள் என்னுள் என்றுமேவாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்!


தந்தையே இது நான் உங்களுக்கு செலுத்தும்வணக்க நிகழ்வல்ல,


எழுதும் ஒரு கடிதம்!
என்றென்றும்


உங்கள்செல்லக்குட்டி ரவி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக