27 ஜூலை 2010
உக்கிரேன் நாட்டை சேர்ந்த "ஒசான மலய" என்ற பெண் எவ்வித மனித நடத்தைகளையும் காட்டாமல் முற்றுமுழுதாக நாய்களின் நடத்தையை காட்டி பார்ப்போரை வியப்பிலும் அதே வேளை சோகத்திலும் ஆழ்த்தி வருகின்றாள். "ஒசான மலய" என்ற பெண் முற்றுமுழுதாக நாய்களின் நடத்தையை காட்டுவதற்கான சோகக்கதை இதுதான்:- 1983 ம் ஆண்டு கார்த்திகை மாதம் பிறந்த இப் பெண், குழந்தை பருவத்தில் இயல்பான மனித சுபாவங்களேயே கொண்டிருந்தாள்.
ஆனால் அக்குழந்தையின் விதி பெற்றோர்களால் மாறியது. இந்தப் பெண் குழந்தை பருவத்திலேயே குடிகார பெற்றோரால் கைவிடப்பட்டாள்.இதனால் தான் அவ் விபரீதம் நடந்தது. பெற்றோரால் கைவிடப்பட்ட அந்தக் குழந்தை பின் நாய் வளர்க்கும் இடம் ஒன்றில் நாய்களோடு நாய்களாக கூட்டிலேயே இருந்து 6 வருடங்கள் தொடர்ச்சியாக வாழ்ந்து இருக்கின்றாள்.இதனால் மனித நடத்தைகளை மறந்து முற்றுமுழுதாக நாயின் நடத்தைகளுக்கு மாறினாள்.
நாய்களைப்போல் குறைப்பது,பாய்வது,நடப்பது,உணவுண்பது மற்றும் நீர் பருகுவது என அனைத்து நடவடிக்கைகளும் நாய்களைப் போலவே செய்யத் தொடங்கினாள். ஆறு வருடங்களுக்கு பின் இப் பெண்ணை இனம்கண்டு தத்தெடுத்த சமூக ஆர்வலர்கள் விஞ்ஞானிகளின் உதவியுடன் அப்பெண்ணை மீண்டும் மனித இயல்புகளுக்கு மாற்ற முயற்சி எடுத்து வருகின்றனர் ஆனால் இன்றுவரை அவ் முயற்சிகள் எதுவும் வெற்றியளிக்கவில்லை. "தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் "என்ற பழமொழிக்கு அமைய இப்போது 27 வயதாகும் இப் பெண்ணின் நடத்தைகள் சற்றும் மாறாமல் இன்றுவரை நாய்களின் நடத்தைகளுடனேயே வாழ்ந்து வருகின்றாள்.
ஆனால் அக்குழந்தையின் விதி பெற்றோர்களால் மாறியது. இந்தப் பெண் குழந்தை பருவத்திலேயே குடிகார பெற்றோரால் கைவிடப்பட்டாள்.இதனால் தான் அவ் விபரீதம் நடந்தது. பெற்றோரால் கைவிடப்பட்ட அந்தக் குழந்தை பின் நாய் வளர்க்கும் இடம் ஒன்றில் நாய்களோடு நாய்களாக கூட்டிலேயே இருந்து 6 வருடங்கள் தொடர்ச்சியாக வாழ்ந்து இருக்கின்றாள்.இதனால் மனித நடத்தைகளை மறந்து முற்றுமுழுதாக நாயின் நடத்தைகளுக்கு மாறினாள்.
நாய்களைப்போல் குறைப்பது,பாய்வது,நடப்பது,உணவுண்பது மற்றும் நீர் பருகுவது என அனைத்து நடவடிக்கைகளும் நாய்களைப் போலவே செய்யத் தொடங்கினாள். ஆறு வருடங்களுக்கு பின் இப் பெண்ணை இனம்கண்டு தத்தெடுத்த சமூக ஆர்வலர்கள் விஞ்ஞானிகளின் உதவியுடன் அப்பெண்ணை மீண்டும் மனித இயல்புகளுக்கு மாற்ற முயற்சி எடுத்து வருகின்றனர் ஆனால் இன்றுவரை அவ் முயற்சிகள் எதுவும் வெற்றியளிக்கவில்லை. "தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் "என்ற பழமொழிக்கு அமைய இப்போது 27 வயதாகும் இப் பெண்ணின் நடத்தைகள் சற்றும் மாறாமல் இன்றுவரை நாய்களின் நடத்தைகளுடனேயே வாழ்ந்து வருகின்றாள்.
23 ஜூலை 2010
சாந்தி,படுக்கையறை காட்சி வெளியானதால் அதிர்ச்சி!
'ஏ ஒன் என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் சார்பாக தயாரிக்கப்பட்டு வரும் படம் 'சாந்தி'. எதார்த்தமான கதையம்சம் கொண்ட படமாகவும், அதே சமயம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாகவும் உருவாகிவரும் இப்படத்தை முரளி விஷ்வா இயக்குகிறார்.கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் நாயகி அர்ச்சனா, கதாநாயகன் மஹா ஆதித்யாவுடன் இணைந்து நடித்த படுக்கையறை காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது லிப் கிஸ் கொடுக்க மறுத்த அர்ச்சனாவிடம், இயக்குநர் அந்த காட்சியின் முக்கியத்துவத்தை விளக்கி எப்படியோ சம்மதிக்க வைத்து அந்த காட்சியை படமாக்கினார். இந்த நிலையில் பரபரப்பான அந்த காட்சியை படக்குழுவை சேர்ந்த யாரோ சிலர் அனுமதியில்லாமல் 'யூ ட்யூப்' இணையதளத்தில் (youtube.com) வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.இன்னும் ரீரெக்கார்டிங் செய்யப்படாத நிலையில், வெளியிடப்பட்டிருக்கும் அந்த காட்சிகளில் குறிப்பிட்ட இரண்டு நிமிடக் காட்சி மட்டும் வெளியானதால் படத்தின் இயக்குநரும், தயாரிப்பு நிறுவனமும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள். ஆனால் யூ ட்யூப்பில் இந்த காட்சியை பார்த்த சிலர், 'படம் எப்போது வெளிவரும்' என்று படத்தின் மீது உள்ள தங்களது ஆவலை கமெண்டாக தெரிவித்திருப்பது ஆச்சர்யமளித்திருக்கிறது.
19 ஜூலை 2010
அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனின் மகளுக்கு திருமணம்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தம்பதியினரின் மகள் செல்சியா. இவருக்கு வரும் 31 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன்னாள் எம்.பி.கள் எட்மெஷ்வின்ஸ்கி, மார்ஜோரி மார்கோலிஷ் தம்பதிகளின் மகன் மெஷ்வின்ஸ்கி.30 வயதான செல்சியாவும் 32 வயதான மெஷ்வின்ஸ்கியும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். கடந்த ஆண்டே இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டதாக வந்த செய்தியை தற்போதைய திருமண அறிவிப்பு பொய்யாக்கியுள்ளது.செல்சியா- மார்க் மெஷ்வின்ஸ்கி ஆகியோர் திருமணம் வருகிற 31 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ரகசியமாக நடந்து வருகிறது.செல்சியா - மார்க் மெஷ்வின்ஸ்கி திருமணம் சுமார் 50 ஏக்கர் வனப்பரப்பில் மிகப் பிரமாண்டமாக நடக்கவிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. இத்திருமண விழாவிற்கு யார், யாரை அழைப்பது என்ற ஆலோசனையும், செல்சியாவுக்கு திருமண ஆடை தைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
13 ஜூலை 2010
மலரும் நாம் தமிழரின் மக்களாட்சி.
கதற கதற என் கண்மணிகளை கற்பழிக்கும்போதுமுத்தமிழே நீ முகத்தை மூடி கொண்டா இருந்தாய்?
கற்பிழந்த கண்ணகியாய் எம்குல பெண்கள் கதறகற்புக்கென்ன விலை என்ற கவர்ச்சி குஷ்புவுடன் தள்ளாத வயதினிலும் தமிழறியா அவளிடம் கனிமொழியோடு கவிதையா கூடி பேசினாய்?
தமிழா தமிழா என்று கூறி தமிழனை நீ அழித்து விட்டாய்!
தமிழனை அழித்து விட்டு செந்தமிழ் வளர்க்க துடிக்கின்றாய்துடிப்பு நடிப்பென அறியா மடத்தமிழனிடம்
உன் திராவிட திமிருடன் திறம்பட நீ நடிக்கின்றாய்நீ நடிகனென்று நித்தமும் கூறிட
மறத்தமிழராய் சீமானின் நாம் தமிழர் வந்து விட்டோம்,
இனி வெகுகாலம் ஆகாது நாம் தமிழர் வெகுண்டு எழ,
தமிழன் எழும் காலம் தமிழன் எழுச்சி நீ கண்டுவாய்பொத்தி
மாரடைத்து எமனிடம் நீ போக
அன்றோடு முடிந்தது உன் மன்னராட்சி
அன்றே மலரும் நாம் தமிழரின் மக்களாட்சி.
தமிழ் நாட்டிலிருந்து தமிழ் தேவன் (நாம் தமிழர்)
10 ஜூலை 2010
விபசாரத்தில் ஈடுபட்ட பெண்ணை கல்லால் அடித்துக் கொல்ல உத்தரவு!
ஈரான் நாட்டில் உள்ள தாப்ரிஸ் நகரைச் சேர்ந்த பெண், சகீனா முகமதி ஆசியானி. இரண்டு குழந்தைகளுக்கு தாயாரான ஆசியானி மீது கடந்த 2006-ம் ஆண்டில் விபசார வழக்கு தொடரப்பட்டது. இரண்டு ஆண்களுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறி, 99 கசையடி தண்டனை வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், 2007-ம் ஆண்டு மீண்டும் அவர் மீது விபசார வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கல்லால் அடித்து அந்த பெண் கொல்லப்படுவார். இந்த தண்டனையை ஈரான் சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சும் உறுதி செய்துள்ளது. எந்த நேரமும் தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற சூழ்நிலை நிலவுவதால் சர்வதேச மனித உரிமைகள் சங்கம் மற்றும் சர்வதேச பொது மன்னிப்பு சபை போன்றவை அந்த பெண்ணை காப்பாற்ற களம் இறங்கி உள்ளன. மனித உரிமைகள் சங்க வக்கீல் முகமது மோஸ்தபி கூறுகையில், "அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. ஏற்கனவே, தண்டனை அளிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்த போதிலும் விபசார வழக்கு போடப்பட்டது'' என தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஈரான் அதிபர் அகமதினிஜாத்துக்கு அந்த பெண்ணின் மகன் மற்றும் மகள் இருவரும் கருணை மனு அனுப்பி இருக்கின்றனர். மேலும், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளும் மரண தண்டனையை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக, அந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பாக தனித்தனி அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
06 ஜூலை 2010
நூற்றி இருபது வயதுப்பாட்டிக்கு புதிதாக பல் முளைத்தது!
தர்மபுரி அருகே 120 வயது பாட்டி இளமையோடு வலம் வருகிறார். தற்போது அவருக்கு புதிய பல் முளைத்திருப்பதால், அவர் மறு பிறவி எடுத்திருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம் முத்தம்பட்டி கோவிந்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி.
அவர் கடந்த 35 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். அவரது மனைவி காவேரியம்மாள் (120). அவர்களுக்கு 10 குழந்தைகள். அதில், ஆறு குழந்தைகள் இறந்து விட்டன. தற்போது, முத்து (85), காளியப்பன் (65), சின்னசாமி (62) என்ற மகன்களும், மாதம்மாள் (60) என்ற மகளும் உள்ளனர். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை 120 பேர்.காவேரியம்மாள் 120 வயதிலும் கைத்தடி ஏந்தி கிராமத்தில் சமையல் செய்து, தனியாக குடித்தனம் நடத்தி வருகிறார். மூன்று தலைமுறைகளை கண்ட காவேரியம்மாள், இது வரையில் மருத்துவமனை பக்கம் ஒதுங்கியது கூட கிடையாது.அவருக்கு தற்போது புதிதாக பல் முளைத்திருப்பதை கண்ட அவரது உறவினர்கள், கிராம மக்கள், அவர் மறு பிறவி எடுத்திருப்பதாக கூறி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று காவேரியம்மாளுக்கு சடங்கு செய்து, அவரிடம் ஆசி பெற்றனர்.கிராமத்தில் எந்த விசேஷம் நடந்தாலும் காவேரியம்மாளிடம் முதல் ஆசி பெற்று செல்கின்றனர். இன்று வரையில் தனக்கு தேவையான சமையல், வீட்டு வேலைகள் வரை அவரே செய்து கொள்கிறார். அவரது மகன்கள், மகள் வீட்டுக்கு அழைத்த போதும், “தன்னால் முடியும் வரையில் சமைத்து சாப்பிடுவேன்’ எனக்கூறி தனியாக குடித்தனம் நடத்தி வரும் காவேரியம்மாள்,
தனது கடந்த கால வாழ்க்கை குறித்து கூறியதாவது:
எனக்கு ஒன்பது வயது இருக்கும் போது துரைசாமியை திருமணம் செய்து வைத்தனர். திருமணத்துக்கு பின் 14வது வயதில் பூப்படைந்தேன். ஆரம்பத்தில் எனது சொந்த ஊரான தர்மபுரி அடுத்த எர்ரப்பட்டியில் குடியிருந்தோம். கோவிந்தாபுரம் வனப்பகுதியில் கட்டைகள் வெட்டும் கூலி வேலைக்கு நானும், என் கணவரும் வந்தோம். தொடர்ந்து வேலை இருந்ததால், கோவிந்தாபுரத்தில் குடியேறி விட்டோம்.
சோளம், தினை, கேழ்வரகு ஆகியவற்றை உணவு செய்து சாப்பிட்டோம். தற்போது, சாதம், களி, மட்டன் சாப்பிடுகிறேன்.கடுமையான உழைப்பும், நல்ல உணவும் என் ஆரோக்கியத்துக்கு காரணம் என நினைக்கிறேன். இது வரையில் ஊசி போட்டதில்லை, மாத்திரைகள் சாப்பிட்டதில்லை. வீட்டில் நான் மூத்தவள் என்பதால், என் மகன்கள் முதல் உறவினர்கள் வரையில் எனக்கு மிகுந்த மரியாதையும், அன்பும் காட்டி வருவது எனக்கு ஆரோக்கியத்தை கொடுத்துள்ளது.
அரிசி சாதம் சமீபத்தில் தான் சாப்பிடுகிறேன். கம்பு, கேழ்வரகு கூழ் தான் எனக்கு முக்கிய ஆகாரம். கிராம மக்களும், உறவினர்களும் நான் மறு பிறவி எடுத்திருப்பதாக எனக்கு சடங்குகள் செய்து, நான் இன்னும் பல ஆண்டு வாழ பூஜைகள் செய்தது மகிழ்ச்சியாக உள்ளது.முதியோர் உதவி தொகைக்கு விண்ணப்பம் கொடுத்தேன். எனக்கு அதிகம் வயதாகி விட்டது எனக்கூறி முதியோர் உதவி தொகை கொடுக்க மறுத்து விட்டனர். அரசு எனக்கு முதியோர் உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
உடல் நல பாதிப்பு டாக்டர் கணிப்பு :
காவேரியம்மாளுக்கு நடந்த சடங்கு, பல் முளைத்திருப்பது குறித்து தர்மபுரி கமலம் மருத்துவனை டாக்டர் சுப்பிரமணியனிடம் கேட்ட போது, “”பெண்கள் இரண்டாம் முறை பூப்படைவது என்பது சாத்தியம் இல்லை. அவருக்கு கர்ப்பப்பையில் கட்டி அல்லது வேறு ஏதாவது கோளாறு இருக்கலாம். அவரது உடல் நிலை நன்றாக இருப்பதால், அதன் பாதிப்பு தெரியாமல் உள்ளது. அதே போல் பல் முளைப்பதும் சாத்தியம் இல்லை.
ஈறுப்பகுதியில் உள்ள சதைகள் தேய்ந்து எலும்புகள் வெளியே தெரிவதை பல் முளைத்திருப்பதாக கூறியிருக்கலாம். உடனடியாக டாக்டரை பார்த்து சிகிச்சையும், ஆலோசனையும் பெறுவது நல்லது,” என்றார்.”அவரது உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உடல் நலப்பாதிப்பு’ என, டாக்டர் கூறியதை காவேரியம்மாளின் உறவினர்களிடம் கூறி, மருத்துவ சிகிச்சை அளிக்க நாம் வலியுறுத்தியதை, அவரது உறவினர்கள் ஏற்று, சிகிச்சைக்கு அழைத்து செல்வதாக கூறினர்.
காவேரியம்மாளுக்கு நடந்த சடங்கு, பல் முளைத்திருப்பது குறித்து தர்மபுரி கமலம் மருத்துவனை டாக்டர் சுப்பிரமணியனிடம் கேட்ட போது, “”பெண்கள் இரண்டாம் முறை பூப்படைவது என்பது சாத்தியம் இல்லை. அவருக்கு கர்ப்பப்பையில் கட்டி அல்லது வேறு ஏதாவது கோளாறு இருக்கலாம். அவரது உடல் நிலை நன்றாக இருப்பதால், அதன் பாதிப்பு தெரியாமல் உள்ளது. அதே போல் பல் முளைப்பதும் சாத்தியம் இல்லை.
ஈறுப்பகுதியில் உள்ள சதைகள் தேய்ந்து எலும்புகள் வெளியே தெரிவதை பல் முளைத்திருப்பதாக கூறியிருக்கலாம். உடனடியாக டாக்டரை பார்த்து சிகிச்சையும், ஆலோசனையும் பெறுவது நல்லது,” என்றார்.”அவரது உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உடல் நலப்பாதிப்பு’ என, டாக்டர் கூறியதை காவேரியம்மாளின் உறவினர்களிடம் கூறி, மருத்துவ சிகிச்சை அளிக்க நாம் வலியுறுத்தியதை, அவரது உறவினர்கள் ஏற்று, சிகிச்சைக்கு அழைத்து செல்வதாக கூறினர்.
05 ஜூலை 2010
மனிதனின் ஆயுட்காலத்தை முன்கூட்டியே அறிந்திடலாம்!!
மரபணுக்களை வைத்து மிக விரைவிலேயே மனிதனின் இறப்பு நேரத்தையும், ஆயுட்காலத்தையும் முன் கூட்டியே சொல்லிவிட முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது குறித்து அமெரிக்காவின் போஸ்டன் மெடிக்கல் சென்டரில் உள்ள நியூ இங்கிலாந்து சென்டினேரியன் ஸ்டடி மையம் விரிவான ஆய்வை நடத்தியது. நீண்டகாலம் வாழும் 1,000 பேரின் ஜீ்ன்களை (மரபணுக்கள்) மையமாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் நீண்ட காலம் வாழ்வோரிடையே வழக்கமாகக் காணப்படும் 150 ஜீன் ஜோடிகள் மார்க் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டன. இந்த ஜீன்களின் ஆரோக்கியம், செயல்பாட்டை வைத்து ஒருவர் எத்தனை காலம் வாழ முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டனர். இதில் 77 சதவீத வெற்றி கிடைத்துள்ளது. ஒருவரி்ன் ஆயுட்காலத்தை நிர்ணயிப்பதில் ஜீன்கள் முக்கிய பங்கு வகித்தாலும், சுற்றுச்சூழல், அவர் வாழும் சூழல் ஆகியவையும் முக்கிய பங்கு வகிப்பதை நாம் மறக்கக் கூடாது என்கிறார் இந்த ஆராய்ச்சிக்கு நிதியுதவி வழங்கிய ஏஜங் டிவிசன் ஆப் ஜீரியாடிரிக்ஸ் மையத்தைச் சேர்ந்த வினிபிரட் ரோஸ்ஸி. நீண்ட நாள் வாழ உதவும் ஜீன்கள் உடலில் இல்லாதவர்களும் சிறப்பான வாழ்க்கை முறை, உடற் பயிற்சி மூலம் தங்கள் வாழ் நாட்களை அதிகரித்துக் கொள்ள முடியும் என்பதும் இந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. முக்கியமாக உணவுக் கட்டுப்பாடு, சைவ உணவு, உடற் பயிற்சி, உடலுறவை கட்டுப்படுத்துதல், எல்லா சூழல்களிலும் மனதை ஒரே நிலையில் வைப்பது போன்றவை மிக முக்கியம் என்கிறார் ரோஸ்ஸி. இதற்கிடையே சீனாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நீண்ட நாள் வாழ்வோரின் உடலில் குறிப்பிட்ட சில ரசாயனங்கள் அதிக அளவில் இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக சீரம் செலினியம், மேங்கனீஸ், இரும்பு, தாமிரம் ஆகியவை அதிகளவி்ல் இருந்ததாக ஆய்வு தெரிவிக்கிறது.
02 ஜூலை 2010
நிச்சயிக்கப்பட்ட மணமகளுடன் உல்லாசமாக இருந்த மணமகன் திடீர் தலைமறைவு!
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மணமகளுடன் உல்லாசமாக இருந்து விட்டு, திருமணம் நடப்பதற்கு முன்னதாக தலைமறைவாகி விட்ட மணமகனை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள். இதனால் இன்று நடக்க இருந்த திருமணம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த விசித்திரமான சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பனங்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகள் முத்துலட்சுமி (வயது 25). சென்னையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் `லேப் டெக்னீசியன்'ஆக வேலை செய்து வருகிறார். இதே மாவட்டம் பாலூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் வினோத்குமார் (25). முத்துலட்சுமி வேலை செய்யும் அதே ஆஸ்பத்திரியில் இவரும் `லேப் டெக்னீசியன்' ஆகவும், `எலெக்ட்ரீசியன்' ஆகவும் வேலை செய்து வருகிறார். இருவரும் ஆம்பூரில் `லேப் டெக்னீசியன்' படிக்கும்போதே பழக்கம் ஏற்பட்டு காதலிக்க தொடங்கினர். கடந்த 7 ஆண்டுகளாக இவர்கள் தீவிரமாக காதலித்து வந்தனர். இதனால், முத்துலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி காதலன் வினோத்குமாரை வற்புறுத்தி வந்தார். ஆனால், திருமணம் செய்து கொள்ள வினோத்குமார் மறுத்து விட்டார். இதையடுத்து முத்துலட்சுமி ஆம்பூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வினோத்குமாரையும், அவரது பெற்றோரையும், புகார் அளித்த முத்துலட்சுமி மற்றும் அவரது பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து முத்துலட்சுமியை திருமணம் செய்ய வினோத்குமார் சம்மதம் தெரிவித்தார். இரு வீட்டார் மற்றும் பெரியோர்கள் முன்னிலையில் 2 பேருக்கும், திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது முத்துலட்சுமியின் பெற்றோர், தங்கள் மகளுக்கு 5 பவுன் நகையும், மாப்பிள்ளைக்கு ஒரு சவரன் சங்கிலியும் போடுவதாக தெரிவித்தனர். அப்போது 02.07.10-ந் தேதி (இன்று) பாலூரில் வைத்து திருமணம் செய்ய தேதி குறிக்கப்பட்டது. 2 பேரின் வீட்டிலும் பத்திரிகைகள் அச்சடித்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கி வந்தனர். இதனால் முத்துலட்சுமி மகிழ்ச்சியுடன் தனது காதலனுடன் சகஜமாக பழகி, பேசி வந்தார். இதைப் பயன்படுத்தி, தனது காதலியும், வருங்கால மனைவியுமான முத்துலட்சுமியை வினோத்குமார் தனது வீட்டிற்கு வரவழைத்து, யாரும் இல்லாத நேரத்தில் ஆசை வார்த்தை கூறி முத்துலட்சுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். முத்துலட்சுமியும், தனது வருங்கால கணவர்தானே என்று கருதி, எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து விட்டார். கடந்த 17-ந்தேதி, வினோத்குமார் முத்துலட்சுமியின் வீட்டிற்கு சென்று திருமண பத்திரிகை கொடுத்தார். அன்று முதல் அவரைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி, தனது காதலனைத் தேடி பாலூருக்கு சென்றார். அப்போது வினோத்குமாரின் பெற்றோர், திருமணம் நடக்க வேண்டும் என்றால், கூடுதலாக 10 பவுன் நகை போட வேண்டும். மணமகனுக்கு மோட்டார்சைக்கிள் வாங்கி கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். இதற்கு முத்துலட்சுமி குடும்பத்தினர், திருமணம் முடிந்தவுடன் பேசிக்கொள்ளலாம், இப்போதைக்கு எங்களால் இவ்வளவுதான் செய்ய முடியும் என்று கூறி விட்டனர். இதனிடையே, இன்று (வெள்ளிக்கிழமை) திருமணம் நடக்க வேண்டிய நிலையில் தலைமறைவான மணமகன் வினோத்குமார் என்ன ஆனார் என்றும் தெரிய வில்லை. அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் முத்துலட்சுமி ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரின் தந்தை சுப்பிரமணி (55), தாய் ராகேல் (42) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மணமகன் வினோத்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)