உக்கிரேன் நாட்டை சேர்ந்த "ஒசான மலய" என்ற பெண் எவ்வித மனித நடத்தைகளையும் காட்டாமல் முற்றுமுழுதாக நாய்களின் நடத்தையை காட்டி பார்ப்போரை வியப்பிலும் அதே வேளை சோகத்திலும் ஆழ்த்தி வருகின்றாள். "ஒசான மலய" என்ற பெண் முற்றுமுழுதாக நாய்களின் நடத்தையை காட்டுவதற்கான சோகக்கதை இதுதான்:- 1983 ம் ஆண்டு கார்த்திகை மாதம் பிறந்த இப் பெண், குழந்தை பருவத்தில் இயல்பான மனித சுபாவங்களேயே கொண்டிருந்தாள்.
ஆனால் அக்குழந்தையின் விதி பெற்றோர்களால் மாறியது. இந்தப் பெண் குழந்தை பருவத்திலேயே குடிகார பெற்றோரால் கைவிடப்பட்டாள்.இதனால் தான் அவ் விபரீதம் நடந்தது. பெற்றோரால் கைவிடப்பட்ட அந்தக் குழந்தை பின் நாய் வளர்க்கும் இடம் ஒன்றில் நாய்களோடு நாய்களாக கூட்டிலேயே இருந்து 6 வருடங்கள் தொடர்ச்சியாக வாழ்ந்து இருக்கின்றாள்.இதனால் மனித நடத்தைகளை மறந்து முற்றுமுழுதாக நாயின் நடத்தைகளுக்கு மாறினாள்.
நாய்களைப்போல் குறைப்பது,பாய்வது,நடப்பது,உணவுண்பது மற்றும் நீர் பருகுவது என அனைத்து நடவடிக்கைகளும் நாய்களைப் போலவே செய்யத் தொடங்கினாள். ஆறு வருடங்களுக்கு பின் இப் பெண்ணை இனம்கண்டு தத்தெடுத்த சமூக ஆர்வலர்கள் விஞ்ஞானிகளின் உதவியுடன் அப்பெண்ணை மீண்டும் மனித இயல்புகளுக்கு மாற்ற முயற்சி எடுத்து வருகின்றனர் ஆனால் இன்றுவரை அவ் முயற்சிகள் எதுவும் வெற்றியளிக்கவில்லை. "தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் "என்ற பழமொழிக்கு அமைய இப்போது 27 வயதாகும் இப் பெண்ணின் நடத்தைகள் சற்றும் மாறாமல் இன்றுவரை நாய்களின் நடத்தைகளுடனேயே வாழ்ந்து வருகின்றாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக