பக்கங்கள்

10 ஜூலை 2010

விபசாரத்தில் ஈடுபட்ட பெண்ணை கல்லால் அடித்துக் கொல்ல உத்தரவு!

ஈரான் நாட்டில் உள்ள தாப்ரிஸ் நகரைச் சேர்ந்த பெண், சகீனா முகமதி ஆசியானி. இரண்டு குழந்தைகளுக்கு தாயாரான ஆசியானி மீது கடந்த 2006-ம் ஆண்டில் விபசார வழக்கு தொடரப்பட்டது. இரண்டு ஆண்களுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறி, 99 கசையடி தண்டனை வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், 2007-ம் ஆண்டு மீண்டும் அவர் மீது விபசார வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கல்லால் அடித்து அந்த பெண் கொல்லப்படுவார். இந்த தண்டனையை ஈரான் சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சும் உறுதி செய்துள்ளது. எந்த நேரமும் தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற சூழ்நிலை நிலவுவதால் சர்வதேச மனித உரிமைகள் சங்கம் மற்றும் சர்வதேச பொது மன்னிப்பு சபை போன்றவை அந்த பெண்ணை காப்பாற்ற களம் இறங்கி உள்ளன. மனித உரிமைகள் சங்க வக்கீல் முகமது மோஸ்தபி கூறுகையில், "அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. ஏற்கனவே, தண்டனை அளிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்த போதிலும் விபசார வழக்கு போடப்பட்டது'' என தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஈரான் அதிபர் அகமதினிஜாத்துக்கு அந்த பெண்ணின் மகன் மற்றும் மகள் இருவரும் கருணை மனு அனுப்பி இருக்கின்றனர். மேலும், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளும் மரண தண்டனையை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக, அந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பாக தனித்தனி அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக