அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தம்பதியினரின் மகள் செல்சியா. இவருக்கு வரும் 31 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன்னாள் எம்.பி.கள் எட்மெஷ்வின்ஸ்கி, மார்ஜோரி மார்கோலிஷ் தம்பதிகளின் மகன் மெஷ்வின்ஸ்கி.30 வயதான செல்சியாவும் 32 வயதான மெஷ்வின்ஸ்கியும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். கடந்த ஆண்டே இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டதாக வந்த செய்தியை தற்போதைய திருமண அறிவிப்பு பொய்யாக்கியுள்ளது.செல்சியா- மார்க் மெஷ்வின்ஸ்கி ஆகியோர் திருமணம் வருகிற 31 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ரகசியமாக நடந்து வருகிறது.செல்சியா - மார்க் மெஷ்வின்ஸ்கி திருமணம் சுமார் 50 ஏக்கர் வனப்பரப்பில் மிகப் பிரமாண்டமாக நடக்கவிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. இத்திருமண விழாவிற்கு யார், யாரை அழைப்பது என்ற ஆலோசனையும், செல்சியாவுக்கு திருமண ஆடை தைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக