நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.
உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.
1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.
2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.
3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.
4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.
5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.
6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.
7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.
8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.
10. மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.
11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.
12. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.
13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.
14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.
27 பிப்ரவரி 2011
24 பிப்ரவரி 2011
குறைவான உறக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும்!
பின் தூங்கி முன் எழுவதை சிலர் பெருமையாகவே கூறிக்கொள்வது உண்டு. ஆனால் இது 6 மணி நேரத்திற்கும் குறைவாக போனால் மாரடைப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று அபாய சங்கை ஊதுகிறது ஆய்வு ஒன்று!
"நீங்கள் என்ன உண்கிறீர்கள் அல்லது அருந்துகிறீர்கள் என்பது மட்டுமே உங்களது உடல் நலத்தை தீர்மானிக்கப்போவதில்லை; தூக்கமும்தான்!" என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்!
மாரடைப்பு உள்ளிட்ட இருதய சம்பந்தமான நோய்கள் குறித்து சமீப காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தூக்கமின்மையும் அதற்கு ஒரு முக்கிய காரணமாக உருவெடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
லண்டனில் அண்மையில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், இரவில் ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு, இருதய நோயால் அல்லது மாரடைப்பால் உயிரிழப்பதற்கு மற்றவர்களை காட்டிலும் 48 விழுக்காடு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த ஆராய்ச்சி சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் இயந்திர வாழ்க்கையில் உழலும் பின் தூங்கி முன் எழுபவர்களுக்கும் பொருந்தும் என்கிறார்கள் சென்னை மற்றும் மும்பையை சேர்ந்த முன்னணி இருதய நோய் மருத்துவ நிபுணர்கள்!
இது தொடர்பாக மும்பையை சேர்ந்த பிரபல இருதய சிகிச்சை நிபுணரான பின்டோ, பின் தூங்கி முன் எழும் பழக்கமுடைய தமது நண்பரின் 43 வயது மகன் ஒருவர் அதிகாலை 5 மணி அளவில் ஜாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென மார்பை பிடித்து சுருண்டு விழுந்தபடியே உயிரை விட்டதை நினைவு கூறுகிறார்.

23 பிப்ரவரி 2011
குறைவாகப் பேசுங்கள்!
சில பெண்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். இந்த வளவளப் பேச்சினால் நன்மை நடக்குமோ இல்லையோ, நிச்சயமாக தீமைகள் நடக்கும்.
இந்த `வளவள' பேச்சு சில கணவர்களை கடுப்பேற்றி விடும். அதுவே தேவையில்லாத சர்ச்சைகளுக்கு வித்திட்டு விடும். எனவே பெண்கள் அளவோடு பேசுங்கள். அதிகமாக பேசுவதால்தான் அது வாக்குவாதமாக மாறி சண்டையில் முடியும்.
குறைவாக பேசும்போது, உங்கள் பேச்சுக்கு கணவர் மதிப்பு கொடுப்பார். நிறைய பேசுவதை கேட்பதற்கு ஆண்களுக்கு பொறுமை கிடையாது. தேவையில்லாமல் பேசுவதால், தேவையான பேச்சும் கேட்கப்படாமல் போய்விடக்கூடும்.
எதைச் சொன்னாலும் கேட்கவே மாட்டார் என்று புலம்பும் பெண்கள், முதலில் எதையுமே சொல்லாமல் இருந்து பாருங்கள். அப்போதுதான் என்ன நடக்கிறது என்றேத் தெரியவில்லையே என்று கணவராக சில விஷயங்களைக் கேட்கத் துவங்குவார்.
அப்போதும் லபலப என்று எல்லாவற்றையும் கொட்டிவிடாதீர்கள். சிலவற்றை சுருக்கமாகக் கூறுங்கள். சிலவற்றை மறைமுகமாகக் கூறுங்கள். சிலவற்றை மழுப்பிவிடுங்கள். அப்படித்தானே பல ஆண்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த முறையைப் பின்பற்றினால் நீங்கள் பேசுவதை நிச்சயம் கணவர் நிதானமாகக் கேட்கத் துவங்குவார்.
நண்பர்களிடமும் வளவளவென்று பேசுவது உங்கள் மீதான நன்மதிப்பைக் குறைத்துவிடும். எப்போதாவது பேசும் நபருக்குக் கிடைக்கும் மரியாதையை நீங்கள் கவனித்துப் பாருங்கள் அது உங்களுக்கேப் புரியும்.
எனவே அதிகமாகப் பேசுபவர்கள் அதிகமாகக் கேட்பதில்லை. கேட்காததால் பல விஷயங்களை அறிந்து கொள்ளாமல் போகிறார்கள். எனவே குறைவாகப் பேசுங்கள். நிறைவாக வாழுங்கள்.

22 பிப்ரவரி 2011
புகைப்பழக்கத்தை நிறுத்த ஆய்வு.
மருத்துவ சிகிச்சை மூலம் புகைப் பழக்கத்தை விட வைக்க முடியுமா என மருத்துவ விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். புகைப் பிடிக்கும் பழக்கம் காரணமாக உலகளவில் ஆண்டுதோறும், 50 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் 90 சதவீதம் பேர் நுரையீரலில் ஏற்படும் புற்றுநோயின் காரணமாக பலியா கின்றனர். சிலர், அந்த பழக்கத்தை எளிதாக விட்டு விடுகின்றனர். சிலரால் என்ன செய்தும் அந்த பழக்கத்தை விட முடிவதில்லை.
இந்நிலையில், புகைப் பிடிக்கும் பழக்கத்திற்கும், மூளைக்கும் உள்ள தொடர்பு குறித்து, மருத்துவ விஞ்ஞானிகள்ஆய்வு மேற்கொண்டனர். எலிகள் மற்றும் சுண்டெலிகளை புகைத்தலில் இருந்து வெளியாகும் நிகோடின் புகையை சுவாசிக்க வைத்தும், அவற்றின் மூளையில் மரபணு மாற்றம் செய்யப்பட்டும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதன் மூலம் புகைப் பிடிப்பதற்கும், மனிதனின் மூளைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மூளையின் மேற்பரப்பில் உள்ள நுண்ணிய மரபணுக்கள், புகை பிடிப்பதற்கு தூண்டுகின்றன. ‘ஆல்பா 5’ என்று அழைக்கப்படும் இந்த கலங்கள் சிறியதாக இருப்பவர்கள், எளிதாக புகைப் பழக்கத்தை கைவிட முடிகிறது. பெரிதாக உள்ளவர்களுக்கு, புகைப்பழக்கம், மது உள்ளிட்ட எந்த பழக்க வழக்கங்களையும் எளிதாக விட முடியாமல் தவிக்கின்றனர். மூளையின் இந்த பகுதிக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம், புகைப் பழக்கத்தை விட வைக்க முடியுமா என்று மருத்துவ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

19 பிப்ரவரி 2011
தாய்ப்பால் சுரக்க பூண்டு உதவுகிறது!
குழந்தை பெற்ற பெண்கள் தினமும் சத்தான அதே சமயம் உடலுக்கு ஒத்துக் கொள்ளும் உணவை தேர்வு செய்து உண்ண வேண்டும். குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும் என்பதால் பால் சுரப்பதற்கு உதவும் உணவுகளையும் அதிகமாக உண்ண வேண்டும்.
எனவே தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடித்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.
சுறா போன்ற மீன்களுடன் அதிகமாக பூண்டை போட்டு புட்டு செய்து பிள்ளை பெற்றவர்களுக்குத் தருவார்கள். இதுவும் பால் சுரப்பதற்கு உதவி செய்யும்.
தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும். உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு.
இதனால்தான் பிள்ளை பெற்ற பெண்களுக்கு தலைக்கு ஊற்றும் போது நல்லெண்ணையைக் காய்ச்சி அதில் பூண்டு போட்டு அந்த எண்ணெயை தேய்த்து உடல் முழுவதும் மசாஜ் செய்கின்றனர்.
பூண்டிற்கு இத்தகைய மருத்துவ குணம் இருப்பதால் பிள்ளை பெற்ற பெண்கள் பூண்டினை ஏராளமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

17 பிப்ரவரி 2011
படுக்கையறையில் பின்பற்ற வேண்டியவை!
குறட்டை விடுவது, அதிகாலையில் எழுந்து லைட் போடுவது, புரண்டு படுப்பது இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில் சில விதிமுறைகளை பின்பற்றுங்கள்.. படுக்கை அறை இன்பமயமாகும், ரொமான்ஸ் அதிகரிக்கும் என்கின்றனர் குடும்பநல நிபுணர்கள். வீட்டில் உள்ள அறைகளில் பெட்ரூம் முக்கியமானது. தூங்கி ஓய்வெடுப்பதற்கு மட்டும் அல்ல.. மனதை ரிலாக்ஸ் செய்து மகிழ்வதற்கும் ஏற்ற அறை. குறிப்பாக தம்பதிகளுக்கு. ஆனால், அங்கும் சில சிரமங்கள், பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அதை பெரிதுபடுத்தாமல் சமாளிக்க பழகி கொண்டால் ரொமன்ஸ் அதிகரிக்கும். இல்லை என்றால் வாழ்க்கை வெறுப்பாகிவிடும் என்கின்றனர் குடும்ப நல நிபுணர்கள்.
படுக்கை அறை பழக்கவழக்கங்களில் தம்பதியர் இடையே வேறுபாடுகள் இருக்கும். இருவரில் ஒருவர் குறட்டை விடும் நபராக இருக்கலாம். இது மற்றவரின் தூக்கத்துக்கு இடைஞ்சலாக, எரிச்சலாக இருக்கும். சில எளிய வழிகளை பின்பற்றினால் பிரச்னையை சமாளிக்கலாம். நீங்கள் குறட்டை விடும் நபராக இருந்தால், ‘நாசல் ஸ்டிரிப்’ அணியலாம் அல்லது டாக்டரை சந்தித்து நிவாரணம் தேடலாம். பாதிக்கப்படும் நபராக இருந்தால் காதில் பஞ்சை வைத்து அடைத்து கொள்ளலாம் அல்லது மெல்லிய இசையை கேட்படி தூங்கலாம். அதுவும் இல்லையென்றால் கனமான போர்வை இழுத்துப் போர்த்தி படுக்கலாம். அல்பமான குறட்டைக்காக டைவர்ஸ் வரை போவது ரொம்ப ஓவர்.
சிலர் அடித்துப் போட்டாற்போல கொஞ்சம்கூட அசையாமல் தூங்குவார்கள். வேறு சிலர் புரண்டுகொண்டே இருப்பார்கள்.
உருளும் ஆசாமிகளின் பக்கத்தில் படுத்து தூங்குவது கஷ்டமான விஷயம்தான். இதுபோன்ற நபர்கள், பார்ட்னருக்கு தொந்தரவு கொடுக்காமல் தரையில் படுத்து புரள்வது சிறந்தது.சிலர் அதிகாலை 4 மணிக்கே எழுந்திருப்பார்கள். உங்கள் இனியவர்/இனியவள் மிட்நைட் 1 மணிவரை டிவி பார்த்துவிட்டோ, புத்தகம் படித்துவிட்டோ தூங்க செல்லும் நபராக இருக்கலாம். அப்படியிருந்தால் அதிகாலையில் எழுந்திருக்கும் நபர், முதல் வேலையாக வீடு முழுவதும் ட்யூப்லைட் போட்டு அமர்க்களம் பண்ணக்கூடாது. முடிந்த அளவு நைட் லேம்ப் வெளிச்சத்திலேயே தன் வேலைகளை முடிக்க பழகிக்கொள்ள வேண்டும்.
இல்லற இன்பத்துக்குப்பின் சிலருக்கு உடனடியாக தூக்கம் சொக்கும். பார்ட்னர் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க பிரியப்படலாம். ‘குட்நைட்’ சொல்லி அவரை கடுப்பேற்றாமல், உங்கள் தூக்கத்தை அட்லீஸ்ட் 10 நிமிஷமாவது அவருக்காக தியாகம் செய்துவிட்டு பேசிக்கொண்டிருக்கலாம்.
பெரும்பாலும் இதுபோன்ற சின்னப் பிரச்னைகள்தான் விஸ்வரூபமெடுத்து பிரிவு வரை போகிறது.பார்ட்னருடன் மனம் விட்டுப் பேசினால், மென்மையாக எடுத்துச் சொன்னால் சிறிய அளவாக இருக்கும்போதே பிரச்னைகளை அகற்றிவிடலாம். படுக்கைஅறை போல வாழ்க்கையும் இன்பமாகும். ரொமான்ஸ் அதிகரிக்கும் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.

15 பிப்ரவரி 2011
தலை முடியை அழகுடன் பேண சில வழிகள்!
*உங்கள் தலைமுடியை நன்றாக மசாஜ் செய்யுங்கள். கைகளால் முடியை அழுத்தமாகத் தேய்ப்பதற்குப் பெயர் மசாஜ் அல்ல.
விரல் நுனிகளால் தலைமுடியை மெதுவாக தேய்க்கவும். இதனால் தலையில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், தலைமுடி நீளமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் வளரும். எனவே வாரந்தோறும் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யுங்கள்
*சுருட்டை முடி உள்ளவர்கள் முடியை நல்ல முறையில் பராமரித்தால் அழகிய கூந்தலைப் பெறலாம். பெரும்பாலும் சீப்பு உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். சீப்பு உபயோகிக்கும்போது நீங்கள் விரும்பும் வகையில் முடியை அழகுபடுத்த முடியாது. நீங்கள் பயன்படுத்தும் சீப்புகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள். அதில் உள்ள அழுக்கு உங்கள் முடியின் பளபளப்பை மங்கச் செய்துவிடும். .
*பலரும் தலைக்கு எண்ணெய் வைக்கும் பழக்கமே இல்லாமல் இருக்கின்றனர். அதனால் தலைக்கும் மட்டும் பாதிப்பு இல்லாமல், அவர்களது உடல்நிலைக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, வாரத்தில் ஒரு முறையாவது தலைக்கு தேங்காய் எண்ணெய் வைப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதனால் தலை முடியையும், சருமத்தையும் பாதுகாக்க முடியும்.
*உங்கள் தலைமுடியைப் பராமரிப்பதில் சீப்புக்கும் முக்கியப் பங்குண்டு. தலைக்கு குளித்ததும் உடனடியாக உங்கள் சீப்புகளையும் நன்கு கழுவுவது மிக மிக அவசியம். தலைமுடியை சீவும்போது அகலமான பற்களைக் கொண்ட சீப்பு மூலம் சிக்கை அகற்ற வேண்டும். தலைக்கு குளித்தால் முடியை சீப்பு கொண்டு சிக்கு எடுப்பதை விட, கைகளால் முதலில் சிக்கு நீக்கிவிட்டு பின்னர் சீப்பைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

13 பிப்ரவரி 2011
உங்கள் முகம் அழகுடன் மிளிர சிறு ஆலோசனை!
நான் உங்களுக்கு அதிக செலவுயில்லாமல் உங்கள் முகம் கண்ணாடி போல பளபளக்க மாற எளிமையான அட்வைஸ் தருகின்றேன் பாருங்கள்.
ஒரு தக்காளி பழத்தை எடுத்து ரொம்ப சின்னதாக வெட்டி அதை முகம் முழுவதும் தடவிக் கொள்ளுங்கள்.
* பின் சிறிது நேரம் கழித்து ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து சாறு பிழிந்து அதனுடன் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து முகம் முழுவதும் தடவிக் கொள்ளுங்கள். இருபது நிமிடம் அப்படியே காயவிடுங்கள் அதன் பிறகு நல்ல குளிர்ந்த தண்ணிரில் முகத்தை கழுவுங்கள். இப்போது பாருங்கள் உங்கள் முகத்தை நீங்களே வியந்து விடுவீர்கள்.
* முகத்தை முதலில் பால் வைத்து நன்கு துடைக்கவேண்டும். பிறகு கட்டி தயிரில் உப்பு கலந்து முகத்தில் அழுத்தி தேய்க்க வேண்டும். இப்படி தேய்த்தால் முகத்திலும் மூக்குக்கு மேல் இருக்கும் பொடிப்புகள் போகும் இதை வாரத்திற்கு ஒருமுறை செய்து வர பலன் கிடைப்பது உறுதி.

10 பிப்ரவரி 2011
பிஞ்சு மழலைகளின் பெற்றோர் கவனிக்க வேண்டியது!
குழந்தை பிறந்தவுடன் நான்கு நிமிடத்திற்குள் அழ வேண்டும். அழுவதன் மூலம் குழந்தையின் ரத்த ஓட்டம் சீராக மூளையை சென்றடைகிறது.
குழந்தை 6 முதல் 8 வாரத்திற்குள் முகம் பார்த்து சிரிக்கவேண்டும். 12 முதல் 15 வாரத்திற்குள் தலை நிற்கவேண்டும்.
20 வாரத்தில் குப்புறப்படுக்கவேண்டும். 6 மாதத்திற்குள் உட்காரவேண்டும். 8 மாதத்தில் நடப்பதற்கும், ஒரு வருடத்திற்குள் யார் துணையுமின்றி நடக்கவேண்டும்.
இந்த வளர்ச்சி சீராக இருக்கும் பட்சத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சி பெறும்.
இதில் ஏதும் மாறுதல் இருக்கும்பட்சத்தில் மனவளர்ச்சி பாதிப்பு ஏற்படும்.
எனவே மருத்துவரை அணுகி ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளித்தால் குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம்.

08 பிப்ரவரி 2011
பதப்படுத்தப்பட்ட உணவு குழந்தைகளின் மூளை வளர்ச்சியை குறைக்கிறது!
பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை உண்ணும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவாக உள்ளதாக அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
4000 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பதப்படுத்தப்பட்ட உணவு, கொழுப்பு மற்றும் இனிப்புகள் அவர்களின் 8 1/2 வயதில் மூளை வளர்ச்சி குறைபாட்டை உண்டாக்குவதாக அறியப்பட்டுள்ளது. எந்த அளவிற்கு இத்தகைய உணவுகளை அவர்கள் உண்கிறார்களோ அவ்வளவு அவர்களின் பொது அறிவுத்திறன் குறைகின்றது.
ஆனால் பழைய முறைப்படி சமைக்கப்பட்ட இறைச்சி வகைகள், மீன் வகைகள் அவர்களின் அறிவுச் செயல்பாட்டை அதிகரிக்கும். இந்த ஆரோக்கிய உணவு வகைகள் அறிவுத் திறனை 1.20 புள்ளிகள் அதிகரிக்கும். இந்த ஆய்வு முடிவுகள் மிக முக்கியமானதாக அமைகிறது. இதற்கு காரணம் குழந்தைகளின் மூளை வளர்ச்சி முதல் மூன்றாண்டுகளில் வேகமாக இருக்கின்றது.
இதைப்பற்றி ஆய்வு செய்த பிரிஸ்டல் பல்கலைகழக டாக்டர் கேடே நார்த்ஸ்டோன் கூறியதாவது: தற்கால பிரிட்டிஷ் குழந்தைகளின் சத்தற்ற, பதப்படுத்தப்பட்ட கொழுப்பும், இனிப்பும் அதிகமுள்ள உணவு வகையே 8 1/2 வயதில் அவர்களின் அறிவித் திறனுக்கு காரணம் என்கிறார்.
மேலும் ஆரோக்கியமான உணவு வகைகள் அதிகபட்ச மூளை வளர்ச்சிக்கு உதவும். அதே வேளையில் சிறுவயதில் ஆரோக்கியமான உணவு முறை என்பதைப் பற்றிய ஆய்வுகள் இன்னும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வொருவரும் சத்தான உணவுகளை உண்ணும் அதே சமயத்தில் சில விருந்து உணவுகளை உண்பதில் தவறில்லை என்றும் அவர் கூறினார்.
பள்ளிக் குழந்தைகளுக்கு சத்தான உணவு முறைகளை பிரச்சாரம் செய்யும் அமைப்பினர் இந்த ஆய்வு மூலம் மேலும் ஊக்கமடைந்துள்ளனர். ஆயினும் சில நிபுணர்களோ உடனடி உணவு வகைகளை சார்ந்திருக்கும் சில பெற்றோருக்கு இது எரிச்சலூட்டும் என்கிறார்கள்.

05 பிப்ரவரி 2011
பிறக்கப்போகும் குழந்தை ஆணா?பெண்ணா?என்று அறிந்துகொள்வதற்கு!
பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று தெரிந்துகொள்வதில் அனைத்து பெற்றோர்க்கும் ஆசைதான் இருந்தாலும் இது குறித்து வெளியே சொல்லக் கூடாது என்று சட்டம் சொல்கிறது. இருந்தாலும், பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கக் கூடாதா என்று ஏங்கும் குடும்பங்கள் பல. ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுத்துப் பார்த்தால்தான் குழந்தை எது? என்பதை உறுதி செய்ய முடியும். ஆனால், காமசூத்ராவின் தந்தை வாத்சாயனாரோ, சில அறிகுறிகளை வைத்தே பிறக்கப் போகும் குழந்தையை அடையாளம் கண்டு விடலாம் என்கிறார். அவர் கூறிய அறிகுறிகள் இவைதான்…
பெண்ணின் மாதவிலக்கிற்குப் பிறகு ஒற்றைப்படை நாளில் உறவு கொள்ள பெண் குழந்தை பிறக்கும். இரட்டைப்படை நாளில் உறவு கொண்டால் ஆண் குழந்தை பிறக்கும்.
கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆண் என்றால், கர்ப்பிணியின் வலது பக்கம் மார்பகம் பருத்துப் போய் காணப்படும். அந்த மார்பகத்தில் உள்ள பால் கலங்கலாகவும், வெண்மையாகவும் இருக்கும்.
இதேபோல், அந்த கர்ப்பிணியின் சிறுநீர் முந்தைய நிறத்தை இழந்து பல நிறமாக மாறும். அத்துடன், குழந்தை தனது வயிற்றில் வலது பக்கம் இருப்பது போன்று அவளுக்குத் தோன்றும். அவள் படுக்கையில் இருந்து எழும்பும் போதும், அமரும் போதும் வலது கையையே ஊன்றுவாள். அவளது மார்பகப் பாலில் ஒரு துளியை எடுத்து தண்ணீரில் விட்டால் அது மிதக்கும்.
கர்ப்பிணியின் இடது மார்பகம் பருத்துக் காணப்படுவதும், அவளது தேகத்தில் அதிக சோம்பல் ஏற்படுவதும், தின்பண்டங்கள் மீது ஆசை ஏற்படுவதும், அடிக்கடி பொய்ப்பசி தோன்றுவதும் பெண் குழந்தைக்கான அறிகுறிகளாகும். இதேபோல், அவள் படுக்கையில் இருந்து எழும்பும் போதும், உட்காரும போதும் இடது கையையே ஊன்றுவாள்.

04 பிப்ரவரி 2011
பங்களாதேசில் சிறுமி பிரம்பால் அடித்துக்கொலை!
பங்களாதேஷ் டாக்காவில் திருமணமான ஆண் ஒருவருடன் கள்ளத் தொடர்பைப் பேணியதாகக் கூறப்படும் 14 வயது சிறுமியொருவர் பிரம்பால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொசாமெட் எனா என்ற அச்சிறுமி 40 வயதான திருமணமான ஆண் ஒருவருடன் உறவு வைத்திருந்தார் எனவும் அதற்குத் தண்டனையாக 100 பிரம்படிகள் வழங்குமாறும் மதகுருமார்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
தண்டனைகள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் சமயம் சுமார் 70 பிரம்படிகள் வழங்கியபோது சிறுமி மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர் இவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சில மணித்தியாளங்களிலேயே உயிரிழந்துள்ளார்.
இவருடன் உறவு வைத்திருந்ததாகக் கூறப்படும் 40 வயதான நபருக்கு 100 பிரம்படிகள் தண்டனையாக வழங்கப்பட்டிருந்த போதும் அவர் தப்பிச்சென்றுள்ளார்.
எனினும் இச்சிறுமி குறித்த நபரால் பாலியல் வல்லுறவுக்குடுத்தப்பட்டதாகவும் இதனை மறைப்பதற்காவே அச்சிறுமி உறவு வைத்திருந்ததாக பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாகவும் சிறுமியின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து அப்பிரதேசவாசிகள் கொந்தளிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இத்தண்டனை வழங்கிய 4 மதகுருமாரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அப்பிரதேச பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் அந்நாட்டு உயர் நீதிமன்றம் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் விளக்கம் கோரியுள்ளது.

02 பிப்ரவரி 2011
குடல் புற்று நோயை கண்டுபிடிக்கும் சக்தி நாய்களுக்கு உண்டாம்!
மனிதர்களுக்கு குடல் புற்று நோய் ஏற்பட்டு உள்ளதா? இல்லையா? என்பதை 90 சதவீதம் துல்லியமாக கண்டு அறியும் சக்தி நாய்களுக்கு உண்டு என்று மருத்துவ உலகம் கண்டுபிடித்து உள்ளது.
பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த உண்மையை ஒப்புக் கொள்கின்றனர். நாய்களின் உணர் திறன் மனிதர்களின் உணர் திறனை விட 1000 மடங்கு அதிகம்.
எனவே மோப்ப சக்தியால் நாய் குடல் புற்று நோயை அடையாளம் கண்டு விடுகின்றது. நாய்களை கொண்டு இந்நோயை ஆரம்பத்திலேயே அடையாளம் காண முடியும். இதனால் நோயை குணப்படுத்துவது மிகவும் இலகுவாக இருக்கும்.
வேறு உயிர்கொல்லி நோய்களை அடையாளம் காண கூடிய சக்தி நாய்களுக்கு உண்டா? என்பது குறித்து தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)