
இந்நிலையில், புகைப் பிடிக்கும் பழக்கத்திற்கும், மூளைக்கும் உள்ள தொடர்பு குறித்து, மருத்துவ விஞ்ஞானிகள்ஆய்வு மேற்கொண்டனர். எலிகள் மற்றும் சுண்டெலிகளை புகைத்தலில் இருந்து வெளியாகும் நிகோடின் புகையை சுவாசிக்க வைத்தும், அவற்றின் மூளையில் மரபணு மாற்றம் செய்யப்பட்டும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதன் மூலம் புகைப் பிடிப்பதற்கும், மனிதனின் மூளைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மூளையின் மேற்பரப்பில் உள்ள நுண்ணிய மரபணுக்கள், புகை பிடிப்பதற்கு தூண்டுகின்றன. ‘ஆல்பா 5’ என்று அழைக்கப்படும் இந்த கலங்கள் சிறியதாக இருப்பவர்கள், எளிதாக புகைப் பழக்கத்தை கைவிட முடிகிறது. பெரிதாக உள்ளவர்களுக்கு, புகைப்பழக்கம், மது உள்ளிட்ட எந்த பழக்க வழக்கங்களையும் எளிதாக விட முடியாமல் தவிக்கின்றனர். மூளையின் இந்த பகுதிக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம், புகைப் பழக்கத்தை விட வைக்க முடியுமா என்று மருத்துவ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக