பக்கங்கள்

04 பிப்ரவரி 2011

பங்களாதேசில் சிறுமி பிரம்பால் அடித்துக்கொலை!

பங்களாதேஷ் டாக்காவில் திருமணமான ஆண் ஒருவருடன் கள்ளத் தொடர்பைப் பேணியதாகக் கூறப்படும் 14 வயது சிறுமியொருவர் பிரம்பால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொசாமெட் எனா என்ற அச்சிறுமி 40 வயதான திருமணமான ஆண் ஒருவருடன் உறவு வைத்திருந்தார் எனவும் அதற்குத் தண்டனையாக 100 பிரம்படிகள் வழங்குமாறும் மதகுருமார்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
தண்டனைகள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் சமயம் சுமார் 70 பிரம்படிகள் வழங்கியபோது சிறுமி மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர் இவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சில மணித்தியாளங்களிலேயே உயிரிழந்துள்ளார்.
இவருடன் உறவு வைத்திருந்ததாகக் கூறப்படும் 40 வயதான நபருக்கு 100 பிரம்படிகள் தண்டனையாக வழங்கப்பட்டிருந்த போதும் அவர் தப்பிச்சென்றுள்ளார்.
எனினும் இச்சிறுமி குறித்த நபரால் பாலியல் வல்லுறவுக்குடுத்தப்பட்டதாகவும் இதனை மறைப்பதற்காவே அச்சிறுமி உறவு வைத்திருந்ததாக பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாகவும் சிறுமியின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து அப்பிரதேசவாசிகள் கொந்தளிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இத்தண்டனை வழங்கிய 4 மதகுருமாரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அப்பிரதேச பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் அந்நாட்டு உயர் நீதிமன்றம் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் விளக்கம் கோரியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக